வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
' புலி இசை வெளியீட்டு விழா மன உளைச்சலை தந்தது' - டி.ஆர். வருத்தம்! 'புலி ' பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு பிறகு, தான் தொடர்ந்து மன உளைச்சலுக்குள்ளானதாக 'போக்கிரிராஜா' பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டி. ராஜேந்தர், "கதாநாயகியை தொடாமலேயே 35 வருடங்கள் சினிமாவில் இருந்திருக்கிறேன். இதற்கு யாராவது விருது தருவார்கள் என்றால் இல்லை. எனக்கு அப்படி விருதும் தேவையில்லை. நான் விருதுக்காக அலைபவனும் அல்ல" எனக் கூறினார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் பி.டி. செல்வகுமார் தயாரிப்பில் 'போக்கிரி ராஜா' பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர், " 'புலி' பட இசை விழா வெளியீட்டு விழாவுக்கு பிறக…
-
- 0 replies
- 574 views
-
-
'நான் ஈ' பார்ட் 2 எடுக்க திட்டமிட்டு வருகிறோம் என்று ராஜமெளலி சொன்னால் போதும், இந்திய தயாரிப்பாளர்கள் அனைவருமே அவரது வீட்டின் முன் க்யூவில் நிற்பார்கள். இப்போது நிலைமை அப்படி இருக்கிறது. 'நான் ஈ' படத்தின் வெற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாலும், 'நான் ஈ' பார்ட் 2 என்கிற எண்ணம் எதுவுமே படக்குழுவிற்கு இல்லை என்பது தான் ஆச்சர்ய செய்தி. சென்னை பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்த படத்தின் வில்லன் சுதீப் "இயக்குனர் ராஜமௌலி எப்போதுமே ஒரே வேலையை இரண்டாவது முறை செய்ய மாட்டார். அதனால் 'நான் ஈ' பார்ட்-2 வுக்கு சாத்தியமே இல்லை. அதோடு 'நான் ஈ' உருவாக்க பட்ட சிரமங்களை நினைத்துப் பார்த்தால், இனி அப்படி ஒரு படம் செய்ய எனக்கு துணிச்சல் இல்லை" என்று முதல் குண்டை போட்டார். …
-
- 0 replies
- 521 views
-
-
'விவேகம்' டீஸர் வெளியானது: படக்குழுவினருக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து 'விவேகம்' டீஸரில் அஜித் | கோப்பு படம் அஜித் நடித்துள்ள 'விவேகம்' டீஸர் வெளியானது. அதற்கு தமிழ் திரையுலகினர் பலரும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்கள். சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில…
-
- 0 replies
- 396 views
-
-
’பாகமதி’ பாகுபலி 2 திரைப்படத்தை அடுத்து அனுஷ்கா நடித்துள்ள பாகமதி திரைப்படம், ஜனவரி 26ஆம் திகதி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை பில்லா ஜமீந்தார் புகழ் அசோக் இயக்கியுள்ளார். அனுஷ்காவுடன் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷாசரத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். முன்ஜென்மம் மற்றும் ஹாரர் கலந்த திரில்லர் கதையில் பாகமதி உருவாகியிருக்கிறது. பாகமதி டிரைலருக்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிரைலர் வெளியான மூன்று நாட்களில், பாகமதி தெலுங்கு டிரைலரை 77 இலட்சம் பேர் பார்த்துள்ளனர், 1.29 இலட்சம் பேர் லைக் செய்துள்ளன…
-
- 0 replies
- 290 views
-
-
இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை இந்திய ஜனாதிபதி வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை இந்திய ஜனாதிபதி கோவிந்த் வழங்கியுள்ளார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவிலேயே இவ்வாறு வழங்கப்பட்டள்ளது இசைஞானிஇளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று மாலை பத்ம விருதுகள் வழங்கும் விழா ஆரம்பமாகிய நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா…
-
- 0 replies
- 186 views
-
-
இயக்குனர்: மணிகை தயாரிப்பு : P.அருமைச்சந்திரன் நடிகர்கள் : நந்தா,சரண்,யாஷிகா, இசை : சித்தார்த் ஹீரோக்கள் 2 பேர் ,ஹீரோயின் 1 ஆள் என்றதுமே அது முக்கோணக்காதல் கதைதான் என நினைத்துப்பார்த்தால் ம்ஹூம்..சம்திங்க் டிஃப்ரண்ட்தான்.. எல்லாம் இடைவேளை வரைதான்.அதற்குப்பிறகு.... காதல் கோட்டை படத்தின் ஒன்லைன் தான் கதை.அதுல பாக்காமயே 2 பேரு லவ் பண்ற மாதிரி இதுல பாக்காமயே நண்பர்கள் ஆன 2 ஆண்களின் கதை. நெட் செண்ட்டர் (சுத்த சைவம்) என போர்டை பார்த்ததுமே காமெடி களை கட்டப்போகிறது என்பது தெரிந்து விடுகிறது.ஹீரோவும்,காமெடியனும் நெட் செண்ட்டர் வைத்திருப்பவர்கள் என கதைக்களன் வைத்தது இயக்குநரின் புத்திசாலித்தனம். ஹீரோ எது செய்தாலும் அல்லது என்ன சொன்னாலு…
-
- 0 replies
- 980 views
-
-
செவ்வாய்க்கிழமை, 24, மே 2011 (8:29 IST) செல்வராகவனுக்கு பதில் கமல்ஹாசன் டைரக்டு செய்கிறார் கமல்ஹாசன் நடிக்கும் `விஸ்வரூபம்' என்ற புதிய படத்தை செல்வராகவன் டைரக்ஷனில், டெலி போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டது. செல்வராகவன் இப்போது, அவருடைய தம்பி தனுஷ் நடிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் `பிஸி'யாக இருப்பதால், `விஸ்வரூபம்' படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு வருகிறது. தனுஷ் படத்தை முடிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று செல்வராகவன் உறுதியாக கூறிவிட்டார். அதுவரை கமல்ஹாசனை காத்திருக்க வைப்பதில், தயாரிப்பாளருக்கு உடன்பாடு இல்லாததால், `விஸ்வரூபம்' படத்தை கமல்ஹாசன் டைரக்ஷனில் தயாரிக்க முடிவு செய்தா…
-
- 0 replies
- 909 views
-
-
சிம்புவுடன் நடிப்பதால் ஒரு பிரச்சினையும் இல்லை. அவருடன் நடிப்பதற்காகப் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் 'டன்லப்' நமீதா. சிம்புவுடன் ஜோடி சேர ஒரு பக்கம் முன்னணி நடிகைகள் பயந்து, பின்னங்கால் பிடறியில் பட தெறித்து ஓடுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் சிம்புவுடன் நடிப்பதில் ெபருமை என்று கூறி மாறி மாறி புகழாரம் சூட்டும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிம்புவுடன் இணைந்து நடிக்க புக் ஆகியுள்ள வேதிகாவும், நமீதாவும் மாறி மாறி சிம்புவைப் பற்றி சிலாகிக்கிறார்கள். முதலில் வேதிகா, சிம்புவைப் பற்றி வியர்க்க விறுவிறுக்கப் பாராட்டினார். இப்போது நமீதாவின் டர்ன், அவரும் சிம்பு அபாரம், அற்புதம் என அசத்தலாக பாராட்டியுள்ளார். நமீதா உள்ளிட்ட ஐந்து நாயகிகளுன…
-
- 0 replies
- 809 views
-
-
தமிழ் சினிமாவில் சாதி பற்றி அற்புதமான ஆவணப்படம்
-
- 0 replies
- 468 views
-
-
நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம் - நயன்தாரா . சமீபத்தில் இடம்பெற்ற சினிமா விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நயன்தாரா காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இரசிகர்கள் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும்? சமீப காலமாக ஜோடியாக சந்தோஷமாக படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோஷமாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோஷத்தைவிட இப்போது நிம்மதியாக உணர்கிறேன் எனக் கூறியுள்ளார். http://www.vanakkamlondon.com/நிம்மதி-யாரிடம்-இருந்து/
-
- 0 replies
- 328 views
-
-
''வில்லுக்கு விஜயன்னு சொல்வாங்கள்ல... இனிமே விஜய்னு மாத்திக்கலாம்!'' - பன்ச் டயலாக்குடன்தான் வரவேற்கிறார் பிரபுதேவா. காத்திருக்கவைக்காமல் வந்து வரவேற்கிற அபூர்வங்களில் ஒருவர். கைகள் மொபைலைச் சுழற்ற, நிமிஷத்துக்கு ஒரு பொசிஷன் மாறி அமர்கிற அதே துறுதுறு தேவா! ''வில்லுன்னா, வேகம். அதுவும் இது விஜய் எடுக்குற வில்லு. இன்னிக்கு விஜய் தமிழ்நாட்டோட பெரிய மாஸ் பாஸ். அதான், படத்தில் அவர் பேரே 'புகழ்'னு வெச்சோம்!'' எனப் புன்னகைக்கிறார் முழுமையாக படிக்க மற்றும் படங்களை பார்வையிட......... http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=258
-
- 0 replies
- 982 views
-
-
குசேலன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கதாநாயகடு படமும் தோல்வி அடைந்துள்ளதால், நஷ்ட ஈடு கோரி தெலுங்கு வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, குசேலன் படத்தை தயாரித்தன. இதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். இதே படத்தை, கதாநாயகடு என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தனர். கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தை அஸ்வினி தத் தயாரித்தார். மேலும் வாசிக்க ( படம் இணைப்பு ) http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=289
-
- 0 replies
- 1k views
-
-
நடப்பதெல்லாம் கனவா அல்லது நிஜமா? என்று புலம்பும் அளவுக்கு பவர்ஸ்டாரின் பாப்புலாரிட்டி இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே பற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. போகின்ற இடமெல்லால் “நான் என் ஆசைத்தம்பி டைரக்டர் ஷங்கரிடம் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன், ஆனால் அவர் அண்ணே... நான் உங்களோட தீவிரமான ரசிகன் என்று என்னுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்” என போகிற போக்கில் அதிர்ச்சி குண்டுகளை தூக்கி போட்டு விட்டுப்போகும் பவர்ஸ்டார் புத்தாண்டிலும் ஒரு அதிர்ச்சி குண்டைத்தான் தூக்கிப் போட்டிருக்கிறார். ஆமாம், ‘நண்பன்’ படத்திற்கு பிறகு டைரக்டர் ஷங்கர் டைரக்ட் செய்து வரும் ‘ஐ’. படத்தில் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஒரு ரோபோ கெட்டப்பில் வருகிறார் என்பது தான் அந்த வெடிகுண்டு. ஏற்கனவே இந்தப…
-
- 0 replies
- 802 views
-
-
நாடகமாடிய விஜய் - அமலா போல் கடந்த பத்து பதினைந்து நாட்களாக தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோராலும் 'என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா...' என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த அமலா போல்-விஜய் திருமண முறிவு விவகாரம் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. இவருவரும் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய நீதிமன்ற படிகளில் ஏறிவிட்டார்கள். இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் அளித்திருந்த மனுவில் உள்ள ஒரு வசனத்தை படித்ததும் மெல்லிய அதிர்ச்சி ஒன்று நமக்கு ஏற்படுகின்றது. 'எங்கள் இருவருக்கும் 2014 ஜூன் மாதம் 10 திகதி திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2015 மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் பிரிந்து தனித்…
-
- 0 replies
- 459 views
-
-
உலக வரைப்படத்தில் ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடுதான் அல்ஜீரியா. கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த காட்டு நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆதி பழங்குடியினர் மட்டுமே தங்களுக்கான வாழ்விடமாக புழங்கி வந்தனர். காலமெனும் மேகங்கள் அந்த காட்டுப்பகுதியின் மேல் மெல்ல கடந்து போக மொராக்கோ துனிஷியா வழியாக வந்த ஆப்பிரிக்கர்களும் ரோமர்களும் காஸ்தானியர்களும் இதர ஐரோப்பியர்களும் இந்த இடத்தைப் பண்படுத்தி நிலங்களாக மாற்றி பண்ணைகளாகவும் வசிக்கத் தகுந்த பூமியாகவும் மாற்றி வந்தனர். இந்நிலையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு அரேபியர்களின் குடியேற்றம் பெரு வாரியாக நிகழ்ந்தது. மக்களில் பலர் இஸ்லாமியர்களாக மாறினர். இதனிடைய…
-
- 0 replies
- 2.8k views
-
-
படமாளிகையில் படம் வெளியிட முன்பு எப்படி இணையத்தில் படத்தை வெளியிடுகிறார்கள்??
-
- 0 replies
- 244 views
-
-
பிரபல கன்னட நடிகை யமுனா. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். யமுனாவை பெங்களூர் போலீசார் விபசார வழக்கில் கைது செய்தனர். அவருடன் மேலும் சில அழகிகளும் கைதானார்கள். யமுனா பற்றி ஏற்கனவே போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டு இருந்தன. ஆந்திரா போலீசாரும் யமுனா விபசாரத்தில் ஈடுபடுவதாக தகவல் அனுப்பினர். இதைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் பொறி வைத்து கைது செய்தனர். யமுனாவிடம் விசாரணை நடத்தியபோது விபசாரத்தில் ஈடுபடும் மேலும் நடிகைகள் பற்றிய தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. வேறு மொழிப் படங்களில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். அந்த நடிகைகளின் பெயர் பட்டியலையும் அளித்துள்ளாராம். அவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் தயாராகி வர…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி
-
- 0 replies
- 330 views
-
-
கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = ‘தனம்’- தமிழ் சினிமாவின் துணிச்சல் வே.மதிமாறன் நாடகம், சினிமாவில் - கலைவடிவம் என்ற பேரில் பார்ப்பனிய - இந்து மதத்தின் புராணக் குப்பைகளை நியாயப்படுத்தியும், இதுபோதாதற்கு காங்கிரஸ் சார்பு கலைஞர்கள் ‘சுதந்திர போராட்ட நடவடிக்கைகள்‘ என்கிற கவுரமான பெயரில் பார்ப்பனிய, இந்து மத பிரச்சாரங்களுக்கு பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்தும், தங்கள் ‘கலை சேவை‘யை செய்து கொண்டிருந்தார்கள். இப்படியாக, தமிழ்நாடெங்கும் ஒரே பஜனை சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில், நடிகவேள் எம்.ஆர். ராதா தமிழக நாடக மேடையெங்கும் சமரசமே இல்லாமல் பெரியாரின் ஒற்றைப் போர்வாளாக சுழன்று கொண்டிருந்தார். ஆனால் திரைத்துறையில் இந்த எதிர்ப்புக் குரல் மிக காலதாமதமாகத…
-
- 0 replies
- 1.1k views
-
-
ட்யூட் சர்ச்சை: இளையராஜா அளவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் போன்றோருக்கு காப்புரிமை பிரச்னை வராதது ஏன்? பட மூலாதாரம்,Mythri Movie Makers கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் 'ட்யூட்' திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 28) இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'பாடல்களை நீக்குவதற்கு ஒன்பது வாரம் அவகாசம் வேண்டும்' என்று படக்குழு முன்வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார். இளையராஜா பாடல்களில் காப்புரிமை சர்ச்சை தொடர்வதன் பின்னணி என்ன? ஆந்திராவை சேர்ந்த 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 'ட்யூட்' படம் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் ந…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் ஹிந்திப்பதிப்பின் படப்பிடிப்பு இன்று மும்பையில் துவங்கியது. இதில் விஜய்யின் ரோலில் அக்ஷ்ய் குமாரும், காஜல் அகர்வாலின் ரோலில் சோனாக்ஷி சின்காவும் நடிக்கின்றனர்.. துப்பாக்கி படத்தின் ரிலீஸ் அன்றைய விமர்சனத்திலேயே முருகதாஸுக்கு அடுத்த ஹிந்திப்படத்திற்கு அமர்க்களமான கதை இது என நமது தளத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதேபோல உடனடியாய் ஹிந்திப்பட ரீமேக் வேலையில் இறங்கிவிட்டார் அவர். ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கஜினியின் ஹிந்திப்பதிப்பு பல ரெகார்ட்டுகளை உடைத்து முதல் முதலில் 100 கோடி வசூல் பழக்கத்தில் உண்டுபண்ணியது. அதனால் அவரது இரண்டாவது ஹிந்திப்படமான இதற்கு இப்பொழுதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உண்டாகிவிட்டது. முருகதாஸ் இத…
-
- 0 replies
- 624 views
-
-
சிக்கலில் தவிக்கும் சினிமா உலகம் - எப்படி இருக்கும் எதிர்காலம்? கே.ஜி.மணிகண்டன், அலாவுதின் ஹுசைன் ‘சமூகத்தின் பிரச்னை களைத் தீர்ப்பேன்’ என்ற அறைகூவலுடன் சினிமா விலிருந்து முதல்வர் வேட்பாளர்கள் அரசியலுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவோ, ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி, டிக்கெட் கட்டணம், கந்து வட்டி விவகாரம், கியூப், யு.எஃப்.ஓ கட்டணங்கள் என்று பல பிரச்னைகளின் சிக்கலில் தவிக்கிறது. கந்துவட்டிப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமாரின் மரணம், ‘புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை’ என்ற தயாரிப்பாளர்களின் முடிவு, ‘திரையரங்குகள் மூடப்படும்’ என்ற அறிவிப்பு... என்னதான் ஆச்சு நம்ம தமிழ் சினிமாவுக்கு? டிக்கெட் விலை, பார்க்கிங் கட்டணம், ஆன்லை…
-
- 0 replies
- 533 views
-
-
ரஜினி மகள் சவுந்தர்யா ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. சவுந்தர்யா தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்கு சென்றார். சவுந்தர்யா தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ரஜினி மகளை பார்க்க முண்டியடித்தனர்.பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து தப்பித்து தேர்வுக் கூடத்துக்கு சென்றார். அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும் சவுந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் சவுந்தர்யா அதிருப்தி அடைந்து தேர்வு எழுத முடியாமல் தவித்தார். பின்னர் அவர் அந்த க…
-
- 0 replies
- 513 views
-
-
அநீதி விமர்சனம்: இயக்குனர் வசந்தபாலனின் வெம்மையான உலகம்! christopherJul 23, 2023 17:46PM வெயில், அங்காடித்தெரு படங்களில் நம்மை உணர்வெழுச்சிக்கு ஆளாக்கியவர் இயக்குனர் வசந்தபாலன். வாழ்வின் துன்பமான, அவலமான, திரும்பிப் பார்க்க விரும்பாத, மனதைப் பிறாண்டுகிற நிகழ்வுகளைக் காட்சிகளாகவும் கதைகளாகவும் உருமாற்றும் படைப்பாளிகளில் ஒருவர். அவரே தயாரிப்பாளர்களில் ஒருவராகி, இயக்கியுள்ள படம் ‘அநீதி’. இடைப்பட்ட காலத்தில் ரசிகர்களின் அபிமானத்தை அள்ளத் தவறிய வசந்தபாலன், இதில் அதனைச் சாதித்திருக்கிறாரா? விரக்தியின் விளிம்பில்..! ஒரு கால் செண்டரில் வேலை பார்த்த திருமேனி (அர்ஜுன் தாஸ்), அது பறி போனவுடன் உணவு டெலிவரி செய்யும் வேலையை மேற்கொள்கிறார். நிறுவனம் தரும் நெருக்க…
-
- 0 replies
- 385 views
-
-
திரை விமர்சனம் - மாலை நேரத்து மயக்கம் பெற்றோரின் விருப்பத்துக்காக விருப்பமில்லாத திருமண உறவில் சிக்கிக்கொள்கிறார் மனோஜா (வாமிகா). இவரது கணவன் பிரபு (பாலகிருஷ்ணா) கூச்ச சுபாவம் கொண்டவர். நாகரிகம், நாசூக்கு அறி யாதவர். ஆனால் தன் மனைவி மீது உயிராக இருக்கிறார். மனோஜாவோ பிரபுவை வெறுத்து ஒதுக்குகிறார். இவர் களது திருமணம் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால் முறிந்துபோகிறது. பிரிந் தவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. கீதாஞ்சலி செல்வராகவனின் இயக் கத்தில் வந்திருக்கும் இப்படம், அம்மா வும் மகளும் பேசிக்கொள்வதை இயல் பாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்கு கிறது. பிறகு, திருமண முறிவின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. பிடிக்காத த…
-
- 0 replies
- 483 views
-