வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
ஆஸ்கார் படங்களை திருடி எடுக்கும்போது தமிழ்ப்படத்திற்கு எங்கிருந்து ஆஸ்கார் கிடைக்கும்? ப.கவிதாகுமார் இந்தியாவில் எத்தனையோ மொழிகளில் திரைப்படங்கள் வெளியானாலும், தமிழ்மொழியில் வெளியாகும் படத்துடன் முடிந்து போவதில்லை. அப்படம் குறித்த தாக்கங்கள். வெற்றி, தோல்விகளைப் பற்றி அக்கறைப்பட்டு படங்கள் எடுத்த காலம் போய், அடுத்த முதல்வர் கனவோடு படங்கள் எடுக்கும் சமூக அவலம், தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் காணமுடியாததாகும். கடந்த நாற்பதாண்டு தமிழக வரலாறு என்பது திரையுலகத்தோடு பின்னப்பட்டது என்றால் அது மிகையாகாது. அறிஞர் அண்ணா துவங்கிய அப்பயணம் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா எனத் தொடருகிறது. அதன் நீட்சியாக அடுத்த முதல்வர் நான்தான் என்ற விஜயகாந்தின்…
-
- 0 replies
- 1.5k views
-
-
பழம்பெரும் நடிகர் கே.என்.காளை காலமானார் பழம்பெரும் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவருமான கே.என்.காளை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 84 'கிடாரி' படத்தில் மூக்கையா கிழவராக நடித்தவர் கே.என்.காளை. நேற்றிரவு திடீர் மாரடைப்பால் இவருடைய உயிர் பிரிந்தது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர். சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார்கள். மேலும், பல்வேறு திரையுலகினர் கே.என்.காளையின் குடும்பத்தினருக்கு தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்ட…
-
- 0 replies
- 363 views
-
-
தமிழ்த் திரையுலகத்தில் இந்த வாரம்… அஜித்தின் 'விவேகம்' பட முதல் பார்வை வெளியீடு, மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே…' பாடல் வெளியீடு, ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் 'போகன்' படத்தின் வெளியீடு, சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் டிரைலர் வெளியீடு என இந்த வாரத்தில் தமிழ்த் திரையுலகத்தில் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. காற்று வெளியிடை - அழகியே…பாடல் வெளியீடு இயக்குனர் மணிரத்னம் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இருவரது கூட்டணியில் உருவாகியுள்ள 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே…' என்ற பாடல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. வைரமுத்து, மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப…
-
- 0 replies
- 407 views
-
-
‘ஒரு ஊர்ல ஒரு சச்சின்' அல்ல.. ஒரே ஒரு சச்சின்தான்!’ #Sachin a Billion Dreams - படம் எப்படி? கிரிக்கெட்டில் 1989-ல் அறிமுகம் ஆனதில் இருந்து, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றது வரை... கிரிக்கெட்டின் மீது தீராக் காதல்கொண்ட விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கரின் டாக்குமென்டரியாக உருவாகியிருக்கும் 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் என்ன சொல்கிறது? ஒரு கனவு முளைக்கும்போது அதைப் பத்திரப்படுத்தி, பாதுகாத்து, சரியான சமயத்தில் சிறகை மாட்டிப் பறக்கவிடவேண்டும். கனவுகளைச் சுமந்து சிறகை விரித்துப் பறப்பவன், உயரத்தைத் தீர்மானித்துக்கொள்வான். 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ட்ஸ்' திரைப்படம் சொல்வது, சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக…
-
- 0 replies
- 726 views
-
-
``தொகுதிக்கு வராத அரசியல்வாதியும், டிக்கெட் எடுத்துப் படம் பார்க்கும் ரசிகனும்!" - `எம்.எல்.ஏ' படம் எப்படி? #MLAreview காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துதரக் காதலன் கேட்க, பெண்ணுடைய அப்பா பிக்பாஸ் மாதிரி கொடுக்கும் 'எம்.எல்.ஏ ஆகவேண்டும்' என்ற டாஸ்க்கை நிறைவேற்றுகிறாரா ஹீரோ என்பதைப் 'புதுமையான' ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறது, `எம்.எல்.ஏ' திரைப்படம். தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் நடுத்தர வயது இளைஞன், கல்யாண் பாபு (நந்தாமுரி கல்யாணம்). `உண்மைக் காதல்னா உயிரைக் கொடுக்கக்கூடிய' கல்யாண், தன் குடும்பத்தை எதிர்த்து தங்கை மற்றும் நண்பன் வெண்ணிலா கிஷோரின் காதல் திருமணத்தை நடத்தி வைக்கிறார்…
-
- 0 replies
- 510 views
-
-
பூவாக இருந்த ஐஸ்வர்யாவை புயலாக்கி பார்த்துள்ளனர் ராஜஸ்தான் நிருபர்கள் ஐஸ் - அபிஷேக்பச்சன் ஜாதகத்தில் தடைகள் இருப்பதாகவும் அதற்கு பரிகாரம் செய்ய ஐஸ்வர்யா கோயில் கோயிலாக சுற்றுவதாகவும் சமீபகாலமாக பத்திரிகை செய்திகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு நேற்று காலை ஐஸ்வர்யா வந்தார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட நிருபர்கள் ஜாதகம் விஷயம் பற்றி கிளற, திடீரென ஆவேசமடைந்துள்ளார் ஐஸ். "நான் வெளியிடங்களுக்கு செல்லும்போது அந்த பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு செல்வது எனது வழக்கம். இதனை எனது திருமணம் தொடர்பான வதந்திகளுடன் தொடர்புபடுத்தி பேசுவதும் எழுதுவதும் சரியல்ல. நீங்களாக கற்பனை செய்துகொண்டு தப்பு தப்பாக யோசிப…
-
- 0 replies
- 949 views
-
-
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கிறது 'பச்சைக்கிளி முத்துச்சரம்.' சென்னை மல்டிபிளிக்ஸ் தியேட்டர்களில் கௌதமின் இந்தப் படத்திற்கு நேற்று நூறு சதவீத ஆடியன்ஸ். புறநகர் பகுதிகளிலும் கணிசமான கூட்டத்தை காணமுடிந்தது. கௌதம் கதையை நகர்த்தும் விதமும், வசனங்களும், சரத், ஜோதிகா, ஆன்ட்ரியா மற்றும் மிலிந்த் சோமனின் நடிப்பும் ஏ கிளாஸ்! அதிலும், காதில் மூன்று நான்கு வளையங்கள், மூக்குத்தி, பாசிமணி மாலை, அழுத்தமான லிப்ஸ்டிக், கண் நிறைய மை என வித்தியாசமான மேக்கப்பில் வரும் ஜோதிகாவின் தோற்றமும் நடிப்பும் கைத்தட்டல்களை அள்ளுகிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் குறை சொல்ல முடியாதவை. ஆயினும், சரத், ஜோதிகாவிடம் மனைவிக்கு தெரியாமல் உறவ…
-
- 0 replies
- 958 views
-
-
பயணங்கள் முடிவதில்லை, மெல்லத் திறந்தது கதவு, விதி, 24 மணி நேரம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து அக்காலத்ஹ்டில் வெற்றிநடை போட்டவர் மோகன். பல படங்களில் மேடைப் பாடகராக நடித்ததால் 'மைக்' மோகன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். 'உருவம்' படத்தினை அடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் அவரை தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு விடுத்தனர். அதற்கு மறுத்த மோகன், பெரியதிரை தான் என் இடம் என சொல்லி அனுப்பிவிட்டார். பிற ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் குணசித்திர வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளையும் 'நடித்தால் - ஒன்லி ஹீரோ' என தவிர்த்த மோகன், பல வருடங்கள் கழித்து 'அன்புள்ள காதலுக்கு' என்னும் படத்தை இயக்கி நடித்தார். அப்படம் மக்களிடையே வரவேற்…
-
- 0 replies
- 424 views
-
-
துணிச்சலான போலீஸ் அதிகாரி உபேந்திரா. அவரைப் பார்த்து போலீஸ் வேலையில் சேர்கிறார் விஷால். தப்பு செய்பவர்களைத் தண்டிக்கிறார். இந்நிலையில் முதல்அமைச்சர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்கிறார். அவரது பதவியை கைப்பற்றும் ஆசையுடன் கோட்டா சீனிவாசராவ் உள்பட 4 மந்திரிகள் காய் நகர்த்துகின்றனர். அடியாட்களை வைத்து சக மந்திரிகள் 3 பேரையும் தீர்த்துக்கட்டச் சொல்கிறார் சீனிவாசராவ். அவர்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால் கொன்றது தனது அடியாள் இல்லை, வேறொரு நபர் என்று தெரிந்ததும் திகிலடைகிறார். திடீர் கொலைகாரனை கண்டுபிடிக்கச் சொல்லி விஷாலுக்கு உத்தரவிடுகிறார். தீவிர வேட்டைக்கு பின் கொலையாளியை பிடிக்கும் விஷாலுக்கு அதிர்ச்சி. அவரை பிடித்து ஜெயிலில் போடுகிறார். இதற்கிடையில் குழந்தைகள் சா…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=2] "ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் போலவே, ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும், "சேட்டை படத்திலும், விமான பணிப் பெண்ணாக நடிக்கிறார் ஹன்சிகா. [/size] [size=2] அதோடு, "கலகல காமெடி, "கிளுகிளு கவர்ச்சி என, புகுந்து விளையாடி இருக்கிறார்.ஏற்கனவே ஆர்யாவுடன் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்துள்ளார் அஞ்சலி. [/size] [size=2] தற்போது குளியல் காட்சி ஒன்றில், அரைகுறை ஆடைகளுடன் ஹன்சிகா நடித்துள்ளார். ஒரு தண்ணீர் தொட்டிக்குள் நீச்சல் அடிப்பது போன்று படமான இந்த காட்சியை, ஒரு நாள் முழுக்க படமாக்கப்பட்டது. குறிப்பிட்ட நபர்களை தவிர யாருக்கும் அங்கே அனுமதி இல்லையாம்.[/size] [size=2] http://pirapalam.net/news/nadikai/hansika-081012.html[/size]
-
- 0 replies
- 510 views
-
-
எஸ்.ஜே.சூர்யா முதன் முறையாக இசையமைத்து, நடித்து இயக்கிவரும் படம் 'இசை'. இப்படத்தின் கதை இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையேயான பகையைப் பற்றியதாம். இதில் ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா ஏ.ஆர்.ரஹ்மான் பாத்திரத்தில் வருகிறாராம். இவருக்கு எதிராக இளையராஜா பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக இருந்ததாம். படத்தின் கேரக்டர்கள் பெயர் கூட இளையராஜா, ரஹ்மான் பெயரைப் போலவே ஒலிக்கும் பெயர்களாக இருந்ததாம். இது என்னடா வம்பாய்ப் போயிற்று என்று பிரகாஷ்ராஜ் பாதியிலேயே விலகிவிட்டாராம். எஸ்.ஜே.சூர்யா மீண்டும் அலைந்து திரிந்து தேடி கதை சொல்லி இப்போது ஒரு வழியாக அவ்வேடத்தில் நடிக்க சம்மதித்திருப்பவர் சத்யராஜ். பிரச்சனைக்குரிய கதையை ஒன்லைனாக வைத்திருப்பதால் படத்தில் ஏதும் சிக்கல் வருமோ என்று பலரும் யோசிக்…
-
- 0 replies
- 353 views
-
-
அதியமான் ப 2000-க்குப் பின் பிறந்தவர்களுக்கு இளையராஜாவின் இசை பரிச்சயமாக சற்று காலம் பிடித்திருக்கும். ஏனென்றால் அந்த வயதுக்காரர்களின் வாக்கிடாக்கிகளிலும், டேப் ரெக்கார்டர்களிலும் பெரும்பாலும் ரஹ்மானும், யுவனுமே குடியிருந்தனர். எனக்கு இளையராஜாவின் இசை முதன்முதலில் அறிமுகமானது ‘ஜனனி... ஜனனி’ பாடலின் மூலமாகத்தான். தினமும் பள்ளிவிட்டு வரும் சமயம் மாலை நேரங்களில் என் அம்மா அதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அதை பாடியவர் யார் என்றெல்லாம் தெரியாமலேயே நிறைய நேரங்களில் மனதிற்குள்ளேயே அதை நான் முணுமுணுத்திருக்கிறேன். இளையராஜா முதன்முதலில் ஒரு நவீன கடவுள் வாழ்த்துப் பாடல்…
-
- 0 replies
- 682 views
-
-
கடந்த சில நாட்களுக்கு முன், சுந்தர்.சி.யுடன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறீர்களா என்று கேட்டதற்கு... “சுந்தர்.சி.யே இந்த செய்தியைப் படித்ததும் சிரித்துவிட்டார் என்றும் இது தவறான செய்தி. சுந்தர்.சி.யுடன் தான் நடிக்கவில்லை!” என்றும் மறுப்பு தெரிவித்தார் ஹன்ஷிகா. ஆனால் தற்போது சுந்தர்.சி இயக்கும் அரண்மனை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதை ட்விட்டர் இணையதளத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறார் ஹன்ஷிகா. தனது வழக்கமான காமெடி பாணியிலிருந்து விலகி இதனை ஒரு த்ரில்லார் படமாக இயக்கவிருக்கிறார் சுந்தர்.சி. ஹன்ஷிகா தவிர இதில் லட்சுமிராய், ஆண்ட்ரியா ஆகியோரும் நடிக்க, இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கும் இந்தப்படத்தில், தான் வித்தியாசமான கேரக்ட…
-
- 0 replies
- 739 views
-
-
டெல்லி: இலங்கை யில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திப் பட விழாவில் பங்கேற்கச் செல்லும் ஷாருக் கானும், சல்மான் கானும், இலங்கை கிரிக்கெட் [^] அணியினரை எதிர்த்து கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளனராம். இதில் கிடைக்கும் நிதியை, இலங்கை அரசு, முன்னாள் சிறார் போராளிகளின் நலனுக்காக செலவிடப் போகிறதாம். இந்தித் திரைப்படங்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட விருதுதான் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா. இதில் மருந்துக்குக் கூட இந்தியாவின் எந்த மொழிப் படத்துக்கும் விருது தர மாட்டார்கள். முற்றிலும் இந்தி மட்டுமே இதன் முக்கியப் புள்ளியாக உள்ளது. வெளிநாடுகளில் மட்டுமே இந்த விழாவை நடத்தி வருகிறார்கள். இந்த முறை கொழும்பில் ஜூன் 3ம்தேதி முதல் 5ம் தேதி வரை விழாவை நடத்தவுள்ளனர். இந்த விழ…
-
- 0 replies
- 2.2k views
-
-
சினிமா விமர்சனம் - குலேபகாவலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGULOBAKAVALI நடிகர்கள் பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, முனீஸ்காந்த், சத்யன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு இசை விவேக் - மெர்வின் …
-
- 0 replies
- 398 views
-
-
ஜீவன் உண்மையிலேயே மச்சக்காரர். சினேகா, நமிதா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா என டாப் ஹீரோயின்களுடன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி. இவர்கள் அனைவரும் 'நான் அவனில்லை' என்ற ஒரே படத்தில் ஜீவனுடன் நடிப்பதுதான் விசேஷம். ஆனால், நாம் சொல்ல வந்த 'மச்சக்காரன்' வேறு. இதுவும் ஜீவன் சம்பந்தப்பட்டதுதான். 'கள்வனின் காதலி' என்ற அபாயகரமான படத்தை இயக்கிய தமிழ்வாணன் அடுத்து எடுக்கப் போகும் ஏடாகூட படம் 'மச்சக்காரன்'. கதையே ஒரு விதமாக இருக்கிறது. வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காத ஒருவன். எல்லாமே கிடைத்த ஒருத்தி. இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் என்னவாகும்? இந்த கேள்விக்கான பதிலே 'மச்சக்காரன்'. இதில், எதுவுமே கிடைக்காதவன் ரோலில் ஜீவனும், எல்லாமே கிடைத்த ஒருத்தியாக காம்னாவும் நடிக்கிறார்…
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பைத் தட்டிக் கேட்குமா கோடம்பாக்கம்? வெடிக்கிறார் சசிகுமார் இரா.சரவணன் ''நீங்க அழுதால் ஆறுதல் சொல்லி உங்கக் கண்ணீரைத் துடைப்பேன். தேற்ற முடியாத துயரம் என்றால், உங்களோடு சேர்ந்து நானும் அழுவேன். இதுதான் என் குணம், இயல்பு. மத்தபடி ஒருத்தனோட கண்ணீரை விற்கவோ, வெகுஜனப் பார்வைக்கு வைக்கவோ என்னால முடியாது. 'போராளி’ங்கிற தலைப்பை வெச்சுக் கிளம்புற பரபரப்பை நான் பயன்படுத்திக்க விரும் பலை. எந்த எதிர்பார்ப்பும் ஏற்படுத்தாமல், துடைச்சுப்போட்ட மனசோடுதான் ரசிகர் களை நான் எதிர்கொள்ள விரும்புறேன். 'ஈழத்து சோகங்களை நாசூக்காச் சொல்லி இருக்கேன்’, 'இலைமறை காயா விளக்கி இருக்கேன்’னு சொல்லி, தூண்டில் வீச நான் விரும்பலை. மழைக்கான அறிகுறி தெரிஞ்ச தும் பாதுகாப்பான இடத்துக்கு உணவைத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஷாருக்கான் நடித்து சூப்பர்ஹிட் படமாக பேசப்பட்ட `ஓம் சாந்தி ஓம்' படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்வற்கு பலத்த போட்டி இருக்கிறது. தமிழில் ரீ-மேக் பண்ணுகிற ஐடியாவில் மாதவன், ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறாராம். ரைட்சுக்காக அவர் கேட்ட தொகையில் மாதவன் மயக்கம் போட்டு விழுந்தது தனிக்கதை. ஆனாலும் படத்தை வாங்கி தமிழில் எடுப்பது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறாராம் மாதவன். காரணம் சமீபத்தில் அவர் நடித்த நேரடிப் படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இப்போது ரீ-மேக் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால், அதுபோன்ற படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்று மாதவன் தீர்மானித்திருப்பதுதானாம்.
-
- 0 replies
- 890 views
-
-
நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமி அண்ணாதுரை, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சானியா மிர்சா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேப்போன்று மயில்சாமி அண்ணாதுரை, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சானியா மிர்சா உள்ளிட்டோருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்ம விபூஷண் நடிகர் ரஜினிகாந்த் (கலை - சினிமா), டெல்லியை சேர்ந்த யாமினி கிருஷ்ணமூர்த்தி (கலை - பரதநாட்டியம்…
-
- 0 replies
- 474 views
-
-
வணக்கம் உறவுகளே IBCஇல் ஒளிபரப்பாகும் யாழினி தொடரை பார்க்கும் நண்பர்கள் யாராவது இருக்கின்றீர்களா? அப்படி இருந்தால் அந்த நாடகம் பற்றிய உங்களின் கருத்துக்களை இங்கே ஒரு சில வரிகளில் பதிய முடியுமா?
-
- 0 replies
- 579 views
-
-
[size=2] கவர்ச்சி நடிகை சுஜிபாலா & இயக்குநர் ரவிக்குமாரின் காதல் தற்போது முறிந்துள்ளது. ‘உண்மை’ என்ற தலைப்பில் படம் இயக்கி வரும் புதிய இயக்குநர் ரவிக்குமாருக்கும் அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்தது. [/size] [size=2] இருவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இடையில் திடீரென தற்கொலை முயற்சி மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் சுஜிபாலா. ஆனால் நான் மாத்திரை மாற்றி சாப்பிட்டேன் என சமாளித்தார். ஆனால் அவரது தற்கொலை முயற்சியில் இருந்த உள் குத்து விவகாரம் தற்போது வெளியாகிஉள்ளது. [/size] [size=2] இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.[/size][size=2] இரு …
-
- 0 replies
- 458 views
-
-
சென்னை 28 (2ம் பாகம்) - திரை விமர்சனம் விளையாட்டையும் நட்பையும் மைய மாக வைத்து ‘சென்னை 600028’ படத்தை எடுத்த இயக்குநர் வெங் கட்பிரபு, அதே விஷயங்களை வைத்து மீண்டும் களம் இறங்கியிருக்கிறார். இம்முறை அவர்கள் ஒன்றிணைவது தேனியில் நடைபெறும் ரகுவின் (ஜெய்) திருமணத்துக்காக. குடும்பத்துடன் தேனி செல்லும் நண்பர்கள் அங்கே மணப்பெண் (சனா அல்ஃதாப்) வீட்டில் தங்குகிறார்கள். அந்த ஊரில் எலியும் பூனையுமாக இரண்டு கிரிக்கெட் அணிகள். உள்ளூர் அடாவடி இளைஞரான மருதுவை (வைபவ்) கேப்டனாகக் கொண்டது முதல் அணி. அவரது அணியிடம் தொடர்ந்து தோற்றுவரும் இரண்டாவது அணியின் கேப்டன் அரவிந்த் (அரவிந்த் ஆகாஷ்). …
-
- 0 replies
- 343 views
-
-
தனது நீச்சல் குள படங்களை இணையத்தில் வெளியிட்ட ‘போங்கு’ பட நாயகி தனது நீச்சல் குள படங்களை ‘போங்கு’ பட நாயகி ரூஹி சிங் இணையத்தில் வெளியிட்டு சூடேற்றியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம். ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக தயாராகும் படம் `போங்கு'. தாஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி வரும் இப்படத்தில் `சதுரங்க வேட்டை' புகழ் நட்டி கதாநாயகனாகவும், ரூஹி சிங் கதாநாயகியாகவும் நடிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகியான இவர் ‘காலண்டர் க…
-
- 0 replies
- 525 views
-
-
கோயிலாக வாழ்ந்த வீட்டை விட்டுக் கொடுத்தார் நடிகர் சிவகுமார்! 'காக்கும் கரங்கள்' மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் சிவகுமார், தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அனைவராலும் புகழப்படுபவர். பல தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்த சிவகுமார், சென்னையில் முதல் முறையாக தி.நகர் பகுதியில் தனக்கான வீட்டைக் கட்டினார். கடந்த 40 வருடங்களாக அந்த வீட்டில்தான் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். இவரின் பிள்ளைகளாக சூர்யா, கார்த்தி, பிருந்தா இந்த வீட்டில்தான் பிறந்தார்கள். தன் பேரப் பிள்ளைகளையும் இந்த வீட்டில்தான் கொஞ்சி மகிழ்ந்தார். இன்று தன் மகன் சூர்யாவுக்காக அவர் வசித்த வீட்டை விட்டுக்கொடுத்துள்ளார் சிவகுமார். சிவகுமார்…
-
- 0 replies
- 535 views
-
-
“பிக் பாஸ் வீட்ல எல்லாரையும் நம்பி ஏமாந்துட்டேன்..!’’ - சக்தி #VikatanExclusive “பிக் பாஸ் ஆரம்பிக்குறதுக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் எனக்கு வாய்ப்பு வந்துச்சு. இந்த குறுகிய காலத்துல யார்கிட்டயும் எதையும் டிஸ்கஸ் பண்ண முடியல. மொதல்ல தயக்கமா இருந்தாலும் அந்த நேரத்துல மீடியா வெளிச்சம் வேணும்னு தோணுச்சு. நான் இதுக்கு முன்னாடி ஹிந்தி, இங்கிலிஷ் பிக் பாஸ் பார்த்ததில்லை. என்னோட மனைவிதான் எனக்கு மிகப்பெரிய பக்க பலம். அப்பாகிட்ட நான் பிக் பாஸ்க்கு போறேன்னு சொன்னேன். அவர் உன் இஷ்டம்னு சொல்லிட்டாரு. எல்லாத்தயும் என் இஷ்டத்துக்கு பண்ண விடுற அன்பான அப்பா" என்று குடும்பத்தைப் பற்றி பேசும் போது நெகிழ்கிறார் சக்தி. இந்த பிக் பாஸ் சினிமா குடும்பத்தோட ஒரு மீட்...! …
-
- 0 replies
- 2.5k views
-