வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
ஈழத் தமிழர்களின் முதல் திரைப் படம் '1999'-இப்போது டிவிடி வடிவில்! டொரன்டோ: கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் உருவாக்கத்தில், சர்வதேச அளவில் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்த '1999' திரைப்படத்தின் டிவிடி சமீபத்தில் வெளியிடப்பட்டது. நார்வே தமிழ் திரைப்பட விழா, வான்கூவர் சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படம் இந்த 1999. படத்தின் கதை இது: தாயில்லாத அன்பு என்ற இளைஞன் தந்தையுடன் ஸ்காபுரோவில் வாழ்ந்து வருகிறான். தனிமையில் தள்ளப்பட்டு அன்புக்காக ஏங்கும் இவன், லோக்கல் சண்டைக் குழு ஒன்றில் இணைகிறான். இந்தக் குழுவின் தலைவன் குமார். தம்பியைத் தவிர எந்த உறவுகளுமே இல்லை இவனுக்கு. இ…
-
- 0 replies
- 628 views
-
-
செதுக்கி வைத்த சிற்பம் போல அம்சமாய் இருக்கிறார் கார்த்திகா. இதழ்களைவிட கண்கள் அதிகம் பேசுகின்றன. மெல்லின முகம், வல்லின கண்கள்,இடையின உடல் என நயன்ஸ்-த்ரிஷ்-தமன்ஸ் மேனியாவிலிருந்து விடுபட ஒரு நல்ல சாய்ஸாக வந்திருக்கிறார். முன்னாள் ’கனவுக் கன்னி’நம்ம ராதாவின் செல்ல மகள்தான் இந்த கார்த்திகா. இனி குட்டி ராதாவின் ‘கன்னிப் பேட்டி’. அம்மா ”அம்மாதான் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்.தான் ஒரு பெரிய நடிகைங்கிறதை அவங்க யார்கிட்டேயும் காட்டினது இல்ல.ரொம்ப சிம்பிளாக இருப்பாங்க.சின்ன வயசுல அவங்க நடிச்ச படங்களைப் பார்த்திருக்கேன். அவ்வளவுதான். இங்கே சென்னைக்கும்,ஹைதராபாத்துக்கும் வந்த பிறகுதான் அவங்க எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட் என்பதே எனக்குத் தெரிஞ்சது. அவங்களுக்கு அவ்வளவு புகழ் இர…
-
- 3 replies
- 1.6k views
-
-
கமலிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர், வார்த்தைகளில் வகுப்பெடுக்க ஆரம்பித்தால் அறிஞர்கள்கூட இந்தக் கலைஞானியிடம் காதுகளை கடன் கொடுத்துவிடுவார்கள். போன வாரத் தொடர்ச்சி இதோ.... ‘மன்மதன் அம்பு’ படத்திற்கு நீங்கள் எழுதியவற்றை கவிஞர் வாலியின் வீட்டிற்குப் போய் படித்துக் காட்டி கருத்துக் கேட்டீர்களாமே? ‘‘நிறை குறைகளைத் தெரிந்துகொள்வதற்காக நான் வழக்கமாகச் செய்கின்ற பழக்கம்தான் இது. என்னுடைய பதினாறு, பதினேழு வயதில் எழுதிய கவிதைகளை கவியரசு கண்ணதாசனிடம் படித்துக் காட்டி கருத்துக் கேட்டிருக்கிறேன். அதேபோல் என்னுடைய கவிதைகளை வைரமுத்துவிடம் கூட படித்துக்காட்டுவேன். அவருக்கு வயதானதே என்னுடைய கவிதைகளைப் படித்துதான். கலைஞரிடம் படித்துக்காட்டி இருக்கிறேன். நல்ல வார்த்தைகளை…
-
- 0 replies
- 703 views
-
-
உறவு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர்; திவ்வியராஜன் என்றால் அது மிகையாகாது. அல்பியன் சினிமாவில் பிற்பகல் 3:00 மணி காட்சியைப் பார்த்துவிட்டு ஈழத்து மூத்த நாடக, சினிமாக் கலைஞர் நண்பர் கே.எஸ். பாலச்சந்திரனுடன் காரிலே திரும்பி வரும்போது எங்கள் உரையாடல் உறவு படம் பற்றியதாகவே இருந்தது. அடிக்கடி செல்பேசியில் அவருக்கு அழைப்பு வருவதும் அவர் அற்புதம், அபாரம், எங்கடை கனடிய தமிழ்ப்படத்திற்கு இது ஒரு திருப்புமுனை, நல்ல எதிர்காலம் இருக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வரும்போது எனது கவனம் நெடுஞ்சாலையில் இருந்தாலும் அவரது வார்த்தைகளைக் கிரகித்துக் கொண்டேயிருந்தது. அகஸ்தியர் கை…
-
- 0 replies
- 925 views
-
-
சன் டிவி நிஜம் 10-11-2010 நடப்பதில் விண்ணன் பாருங்கள் வீடியோhttp://www.kadukathi.com/?p=1244
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழனின் பிரச்சனைகளில் அக்கறை கொள்ளும் படைப்புகளாகவே இயக்குனர் தங்கர்பச்சானின் படைப்புகள் அமையும். மீண்டும் காவிரி பிரச்சனையில் தன்னுடைய கருத்தை ரொம்பவும் வலியோடு வெளிப்படுத்தி இருக்கிறார் தங்கர் பச்சான். இவர் இப்போது பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இயக்கி முடித்திருக்கும் 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் விடமாட்டோம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு இப்படி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இதுபற்றி இன்னும் தமிழகத்தில் எந்த தலைவரும், வாய் திறக்காமல் இருப்பது வியப்பாகவே இருக்கிறது என்று வார்த்தைகளால் வெடித்தார் தங்கர்.ஒரு திரைப்பட கலைஞன் என…
-
- 1 reply
- 535 views
-
-
அஜீத்தின் பிரியாணி ட்ரீட்டில் அசந்து போயிருக்கிறது மங்காத்தா டீம். இந்த தீபாவளியை மங்காத்தா குழுவினருடன் கொண்டாடி இருக்கும் அஜீத், தானே தயாரித்த பிரியாணியை எல்லோருக்கும் வழங்கியதுதான் இதில் ஆச்சரியம். 'அசல்' படத்தின் படுதோல்விக்குப் பின்னர் ரொம்பவும் அப்செட்டான அஜீத் 'நான் கார் ரேசில் கலக்கப் போகிறேன் என கிளம்பிவிட்டார். ஆனாலும் அவரை விடாமல் இழுத்துவந்து 'மங்காத்தா'வில் நடிக்க வைத்திருக்கிறார்கள் தயாநிதி அழகிரியும் வெங்கட் பிரபுவும். ராத்திரி பகல் பார்க்காமல் இதுவரைக்கும் காட்டாத அஜீத்தை இதில் காட்டுவோம் என்ற தீர்மானத்தோடு உழைத்து வருகிறார் வெங்கட் பிரபு. தீபாவளியைத் தொடர்ந்து (நவம்பர் 7) தன் பிறந்த நாளையும் அஜீத்துடன் கொண்டாடி இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த தீபாவள…
-
- 0 replies
- 703 views
-
-
மைனா - தன் முகவரியை தேடி அலைந்த மைனா இன்று ராட்சஸ சிறகுகள் விரித்து வெற்றி வானில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதுவரை ஆறு படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் தன் ஏழாவது படத்தில் முதல் முறையாக வெற்றியின் விரல்களை முத்தமிட்டுள்ளார். மைனா ரீலிசுக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்திய படம். இந்தப் படம் பார்த்ததும் நான் இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னதும்... தூங்க முடியாத அளவிற்கு அப்படி என்ன படம் ? என்று கேள்விகள் கிளம்பின. மைனா இசை வெளியீட்டில், படம் பார்த்ததும் ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியில் நான் நிம்மதியாக தூங்கினேன் என்று கமல்ஹாசன் சொன்னார். இதன் சிறப்புக் காட்சியில், படம் பார்த்து வெளியே வந்த பாலா என்னால் பேச முடியவில்லை தொண்டை அடைக்கிறது என்று ச…
-
- 0 replies
- 663 views
-
-
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனைப்படைத்திருக்கும் இசைக்குயில் பி.சுசீலா, இத்துடன் நிற்காமல் தனது "பி.சுசீலா டிரஸ்ட்" என்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வறுமையில் இருக்கும் பாடகர்களுக்கு மாத பென்ஷன் வழங்கி வருகிறார். தற்போது இந்த டிரஸ்டின் மூலம் பத்து பேருக்கு பென்ஷன் உதவியை கொடுத்துவரும் இவருக்கு இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் இருக்கிறார். வறுமையில் இருக்கும் பாடகர்களுக்கு உதவும் பி.சுசீலா, அதே சமயம் இந்த டிரஸ்ட்டின் மூலம் ஆண்டுதோறும் மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தி, சாதித்த பாடகர்களுக்கு "பி.சுசீலா விருது" என்பதையும் கொடுத்து வருகிறார். 2008ஆம் ஆண்டில் எஸ்.ஜானகிக்கு இந்த பி.சுசீலா விருது வழங்கப்பட்டது. அ…
-
- 0 replies
- 602 views
-
-
தனது அடுத்த படம் "தலைவன் இருக்கிறான்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கமல்ஹாஸன். கமல் இப்போது மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தனது அடுத்த படம் 'தலைவன் இருக்கின்றான்' என அறிவித்துள்ளார் கமல்ஹாஸன். இந்தப் படத்தை தானே இயக்கலாம் அல்லது தனக்கு நெருக்கமான இயக்குநர் இயக்கவும் வாய்ப்புள்ளது என அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரபல மலையாள நாளிதழுக்கு கமல் அளித்துள்ள பேட்டியில், "இப்போது எனது அடுத்த படத்தின் கதை குறித்த வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்தப் படத்துக்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலில் "தலைவன் இருக்கிறான்" என்றுதான் வைத்தேன். இலக்கணப்படி "தல…
-
- 2 replies
- 804 views
-
-
இதன் முதல் கட்டமாக சல்மான்கானுடன் ரெடி படத்தில் படுக்கையறை மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளாராம். படம் வெளியாவதற்கு முன்பு இந்தக் காட்சிகளை வெளியிட்டு, மார்க்கெட்டில் புதிய வாய்ப்புகளை பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக மும்பை பத்திரிகைகள் கிசுகிசுக்கின்றன. வாய்ப்புக் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால் கவர்ச்சி ஆயுதத்தை முழுசாகப் பிரயோகிப்பது நடிகைகள் வழக்கம். அசினும் இதற்கு விலக்கில்லை. கஜினி மூலம் இந்திக்கு போன முதல் படத்திலேயே இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். அது படு தோல்வி அடைந்தது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது. ஆரம்பத்தில் கஜினி வெற்றி தந்த மிதப்பில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன…
-
- 0 replies
- 651 views
-
-
இளைய தளபதி விஜய் – தீவாளி வீடியோ தொலைக்காச்சி நிகழ்சி http://www.kadukathi.com/?p=1221
-
- 0 replies
- 887 views
-
-
இராவணன் முழு நீள திரைப்படம் இணையத்தில் பார்க்காதவர்கள் பார்வைக்கு http://www.kadukathi.com/?p=1211
-
- 6 replies
- 1.3k views
-
-
ஜெயா டிவி கிங்க்ஸ் இன் கான்செர்ட் 05-11-10 தீவாளி SPL http://www.kadukathi.com/?p=1205
-
- 0 replies
- 653 views
-
-
நடிகர் கருணாஸ் இலங்கைக்கு போக முயன்றாரா? அல்லது போய் வந்தாரா? அது தவறா? தவறில்லையா? என்று ஆயிரத்தெட்டு விமர்சனங்களும் கேள்விகளும் இன்னும் நெருக்கி கொண்டிருக்கின்றன அவரை. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் 135 ஈழ அகதிகள் முகாமிலிருக்கும் இளைஞர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நன்றாக படிக்கக் கூடிய மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களின் உயர் கல்விக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் கருணாஸ். சென்னை, மதுரை, திண்டுக்கல், கோவை என்று பல்வேறு கல்லு£ரிகளில் எம்பிஏ, எசிஏ என்று படித்துவரும் இவர்கள் அனைவருமே தீபாவளி கொண்டாட்டத்திற்காக சென்னை வந்திருந்தார்கள். கருணாஸ் அண்ணன்தான் எங்களை படிக்க வச்சிட்டு இருக்காரு. நாங்கள் வேலைக்கு போய் இவரை போல இன்னும் ஏராளமான ஈழ மாணவர்களுக்கு கல்வி கொடுப்போம் என…
-
- 0 replies
- 916 views
-
-
n எனக்கு மிகப் பிடித்திருந்தது பேட்டியின் இறுதிப் பகுதி தான்.. முக்கியமாக கடவுள், மதம் சம்பந்தமான கேள்விக்கான பதில் .. பகுதி 1 http://www.youtube.com/watch?v=66WuNg0XplE பகுதி ௨ http://www.youtube.com/watch?v=VDS__mpTxQo பகுதி 3 http://www.youtube.com/watch?v=7hbr-h-tc1w மிச்ச பகுதிகள் இன்னும் தரவேற்றப் படவில்லை போலிருக்கு... வந்தவுடன் இணைக்கின்றேன்
-
- 4 replies
- 873 views
-
-
சன் டிவிக்கு ரஜினி வழங்கிய சிறப்பு தீபாவளி பேட்டி!http://www.kadukathi.com/?p=1194
-
- 2 replies
- 697 views
-
-
************************************************************************************************************ *** இந்த திரைப்படம் கனடாவில் கார்த்திகை 6, 7 திகதிகளில் தாயக மாணவர்கள் *** **** கல்வி மேம்பாட்டுக்காக திரையிடப்படுகின்றது. *** ***** Dates: November 06 & 07 and 13 &14 (Sat and Sun) *** ****** Time: 1:30 PM Place: Woodside Cinema. Tickets: $10 *** ************************************************************************************************************* இந்தப் ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
எந்திரன் திரைப்பட உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் இப்போது வெளியாகியுள்ளன அவற்றில் சிலவற்றை தற்போது உங்களின் பார்வைக்காக இங்கே கொடுத்துள்ளோம்... படங்களைப்பார்வையிட..... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5290
-
- 1 reply
- 767 views
-
-
நயன்தராபிரபுதேவா கள்ளத்தொடர்பை எதிர்த்தும் இருவரும் ஒன்றாக சுற்றக்கூடாது என்று கோரியும் பிரபுதேவா மனைவி ரம்லத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபுதேவாவின் சொத்துகள் அனைத்தையும் முடக்க வேண்டும் என்றும் அவர் கூடுதலாக மனு சமர்ப்பித்துள்ளார். இவ்வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பிரபுதேவா, நயன்தாராவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது. ஆனால் இருவரும் அதனை வாங்கவில்லை. பிரபுதேவா மும்பையில் படப்பிடிப்பில் உள்ளார். நயன்தாராவும் சென்னையில் இல்லை எனக் கூறப்பட்டது. இதனால் மீண்டும் அவர்களுக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என ரம்லத்தின் சட்டத்தரணி ஆனந்தன் வலியுறுத்தினார். அதன்படி 2 ஆவது அழைப்பாணை அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பிரபுதேவாவும் நயன்தாராவும் சமீபத…
-
- 0 replies
- 677 views
-
-
தமிழ் திரையுலகில் இனி அமலா அலை அடித்தாலும் ஆச்சர்யமில்லை! மைனா படத்திற்கு பிறகு முக்கியமான படங்களில் எல்லாம் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் அமலா. களவாணி பட இயக்குனர் சற்குணம் இயக்கவிருக்கிற புதுப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பது தெரிந்தது. இப்போது மேலும் ஒரு முக்கியமான படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் இவர். மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில்தான் இந்த சந்தர்ப்பம். விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இன்னொரு முக்கியமான கதாபாத்தில் நடிக்க அமலாவை கேட்டாராம் விஜய். இது விக்ரமின் ஒப்புதலோடுதான் நடந்திருக்கிறது. சிந்து சமவெளி பார்த்த பின் இந்த கதாபாத்திரத்தற்கு இவர் பொருத்தம் என்றாராம் வ…
-
- 7 replies
- 1.6k views
-
-
மௌனம் பேசியதே முழு நீள திரைப்படம் http://www.kadukathi.com/?p=1181
-
- 0 replies
- 841 views
-
-
தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தை சன் பிக்ஸர்ஸ்தான் வெளியிட்டது. சன் வெளியீடாக வராமல் போயிருந்தால் அந்தப் படம் பப்படம் ஆகியிருக்கும். இதனாலேயே தனுஷின் அடுத்த படமான குட்டியையும் சன்னிடம் விற்க முயன்றனர். ஆனால் குட்டியை வாங்கவில்லை சன். ஜெமினி நிறுவனமே தனியாக ரிலீஸ் செய்து கையை சுட்டுக் கொண்டது (இன்றைக்கு சன்னுடன் நெருக்கமாக உள்ளது ஜெமினி!) அடுத்து உத்தமபுத்திரன் படம் வெளியாகிறது. இந்தப் படத்தை சன் பிக்ஸர்தான் வெளியிடும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் படத்தில் அவ்வளவாக சன்னுக்கு திருப்தியில்லையாம். மேலும் எந்திரனையே தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் தொடர வைக்கும் பணிகளில் சன் பிக்ஸர்ஸ் தீவிரமாக உள்ளதால், உத்தமபுத்திரனை வாங்க மறுத்துவிட்டார்களாம். சமீபத்த…
-
- 0 replies
- 722 views
-
-
ஒரே மேடையில் பத்துப் பெண் குழந்தை களுக்குத் திருமணம் செய்து வைத்த தகப்பனின் திருப்தியில் இருந்தார் பாரதிராஜா. அரைகுறை ஆடையோடு ஆடும் குத்துப் பாட்டோ துதிப்பாடல்களோ இல்லாமல் இயக்குநர்கள் சங்க 40-வது ஆண்டு விழாவை நடத்தி அட்ட காசப்படுத்தி விட்டனர். இன்னமும் தமிழ்சினிமா படைப்பாளிகளின் கையில்தான் இருக்கிறது என்பதை உணர வைத்தது இந்த விழா. பாரதிராஜாவிடம் பேசினோம். உதவி இயக்குநராக நீங்கள் சேர்ந்த அந்த நாளும், இன்று இயக்குநர் சங்கத் தலைவராக இருந்து விழாவை நடத்தி முடித்த இந்த நாளும் உங்களுக்குள் எந்த மாதிரியான மன உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது? ‘‘நான் ‘நிழல்கள்’ படத்துக்காக விருது வாங்கினபோது ‘நீங்கள் சங்கத்துல சேரணும்’ன்னு சொன்னாங்க. அப்பதான் அப்படி ஒ…
-
- 0 replies
- 669 views
-
-
சென்னை முழுக்க அடைமழை! காலை பதினோரு மணிக்கு சந்திப்பு என்றார் உலகநாயகன் கமல்... வருவாரா? மாட்டாரா? நெஞ்சுக்குள் பூவா தலையா? விழுந்து கொண்டிருந்தது. ஏ.வி.எம். வாசலில் வந்து நிற்கிறது கமலின் வெள்ளை நிற கார். தனது ‘மன்மதன் அம்பு’க்காக கல்லூரி மாணவனைப் போல் உடம்பை களை ஏற்றிக் கொண்டு ஜொலிக்கிறார். விஜய் டி.வி.யின் ‘காஃபி வித் அனு’ தீபாவளி நிகழ்ச்சிக்காக ரசிகர்களைச் சந்திக்க வந்திருந்தார். அங்கே பேசியதில் இருந்து... உங்களுடைய சொந்த வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்றத் தாழ்வுகள். ஆனால் எப்படி தன்னம்பிக்கை குன்றாமல் நிற்கிறீர்கள்? ‘‘ஒவ்வொரு வளர்ச்சிக்கும், ஒவ்வொரு வயதிற்கும் ஒரு தேவை இருக்கிறது. தேவை வரும்போது அழுகை வரும். தேவை பூர்த்தியாகிவிட்டால் அழுகை வராது. எல…
-
- 2 replies
- 1.5k views
-