வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
படிய வாரிய தலை. ஒட்ட வெட்டிய நகம், வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் கலையாத ஓர் ஒழுங்கு... சின்னச் சின்ன விஷயத்துக்கு சிரத்தை எடுப்பவர்கள்தான் சிகரத்தை எட்டுகிறார்கள் என்பதற்கு இன்றளவும் சாட்சி, இயக்குநர் சிகரம் கே.பி.தான்... இவர் கேர்ஃபிரீயாக இருக்கும் ஒரே தருணம் பேரப்பிள்ளைகளோடு அடிக்கும் லூட்டிதான்! குழந்தைகளோடு இருக்கும்பொழுது குழந்தையாகவே மாறிவிடுகிறார். `குசேலன்' என்றதும் இயல்பான கம்பீரம், குறும்பான சிரிப்பு என சிகரம் சிம்மாசனத்தில் அமர்ந்தது... `குசேலன்' எப்படி போய்க் கொண்டிருக்கிறது? அதில் உங்களை நடிக்க அழைத்தார்களாமே? ``நாங்கள் எதிர்பார்த்ததைவிட ரொம்ப பிரமாதமா போய்க்கிட்டிருக்கு. ஏற்கெனவே `கத பறையும் போள்'னு மலையாளத்தில் வந்தாலும், அதில் நிறைய மாற்றம் செய்து …
-
- 0 replies
- 823 views
-
-
கலீவரின் யாத்திரைகளில் வரும் குள்ளர்களின் உலகத்தை போன்று நார்நியாவும் ஒரு மாறுபட்ட அதிசய உலகம். இவ்வுலகத்தில் பேசும் மிருகங்கள், குதிரை உடலோடு தோன்றும் மனிதர்கள், வினோத தோற்ற ஜீவராசிகள் வாழுகிறார்கள். சி.எஸ்.லூயிஸ் என்பவர் எழுதிய குழந்தைகளுக்கான இந்த இலக்கியத்தொடர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக விற்பனை ஆனது. சுமார் நாற்பத்தியொன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காவியம் இது. இவ்வரிசையில் மொத்தமாக ஏழு புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது. பீட்டர், சூசன், எட்மண்ட், லூஸி என்ற முக்கிய நாலு மனித கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மேஜிக்கல் ரியலிஸம் வகையில் எழுதப்பட்ட நாவல் தொடர் நார்நியா. தொலைக்காட்சித் தொடர்களாகவும், மேடை நாடகங்களாகவும், வானொலி நாடகங்களாகவும் புகழ்பெற்ற நார…
-
- 0 replies
- 2.9k views
-
-
பஞ்ச் வசனம் இல்லை, அரசியல் சிலேடைகள் இல்லை. அட, விஜயகாந்த் திருந்திவிட்டாரா என்று பார்த்தால், அதே பழைய கோட், துப்பாக்கியுடன் தனியாளாக வில்லன்களை பந்தாடுகிறார். அயல்நாட்டு வில்லன்கள் உள்நாட்டு வில்லனின் துணையுடன் இந்திய திருநாட்டை நாசம் செய்ய முயல்கிறார்கள். வழக்கம்போல விஜயகாந்த் சம்மர் சால்ட் அடித்து நாட்டை காப்பாற்றுகிறார். பழகிய கதையில் மாதேஷின் திடுக் திருப்ப திரைக்கதை சுவாரஸிய மேற்படுத்துகிறது. பட்டை போட்ட கல்லூரி மாணவனும், கல்லூரி மாணவியும் கொலை செய்யும் போது கொஞ்சம் பதறித்தான் போகிறோம். விஞ்ஞானிகளையும், சாப்ட்வேர் தொழிலதிபர்க…
-
- 7 replies
- 2.7k views
-
-
"வண்ணத்திரை" பகுதியில் யாரும் சொந்தமாக எழுதுவதாக தெரியவில்லை. நான் ஏதாவது எழுதுவோம் என்று நினைக்கிறேன். என்னுடைய வெப்ஈழம் இணையத்தில் அரசியலும், யாழ் களத்தில் பகுத்தறிவு சார்ந்த விடயங்களும் நான் எழுதுவது உங்களுக்குத் தெரியும். ஒரு மாறுதலுக்கு கொஞ்சம் சினிமாவும் எழுதப் போகிறேன். அதற்குள்ளும் அரசியல், திராவிடம், பார்ப்பனியம் என்று ஏதாவது வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. தமிழக சினிமா இவைகளை தவிர்த்துவிட்டு இயங்குவதும் இல்லை. "ரஜினி - கமல்" என்று தலைப்புக் கொடுத்தாகி விட்டது. இவர்கள் இருவரையும் பற்றி எனது மனதில் தோன்றியவைகைளை எழுதுவது என்னுடைய எண்ணம். ஆனால் இவர்களைப் பற்றி மட்டும் எழுதப் போவதில்லை. எழுதுகின்ற பொழுது வருகின்ற அனைத்து எண்ணங்களையும் இதில் சேர்த்துக் கொண…
-
- 29 replies
- 7.9k views
-
-
அப்பா விட்டு சென்ற இடத்தை நிரப்புவேன்...'' -விசாலி கண்ணதாசன் Saturday, 05.17.2008, 06:27am (GMT) கவிஞர் கண்ணதாசன் 1981-ல் மரணம் அடைவதற்கு முன், அவர் கடைசியாக எழுதிய படம், `மூன்றாம்பிறை.' ``கண்ணே கலைமானே'' என்ற பாடல்தான், அவர் கடைசியாக எழுதியது. அந்த பாடலுக்கு, இளையராஜா இசையமைத்து இருந்தார். சமீபத்தில் இளையராஜா, கண்ணதாசனின் மகளான விசாலி கண்ணதாசனை அழைத்து, ``தனம் என்ற படத்துக்காக, நீதான் ஒரு பாடல் எழுத வேண்டும்'' என்று அன்பு கட்டளையிட்டார். திருமணத்துக்குப்பின் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த விசாலி கண்ணதாசன், இளையராஜாவின் அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்டு, `தனம்' படத்துக்காக, ``கண்ணனுக்கு என்ன வேண்டும்?'' என்று தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறார். விசா…
-
- 0 replies
- 2.2k views
-
-
இந்திரலோகம் என்ற எண்ணெய் கொப்பரையில் விழுந்து, தனது வழக்கமான அலப்பறையை தொலைத்தவர் வடிவேலு. “வேணாம்டா இந்த ஹீரோ பொழப்பு” என்று விலகி வேறு திசையில் ஓட ஆரம்பித்தவரை, மறுபடியும் லகான் போட்டு இழுத்திருக்கிறது ஒரு கதை. புரபஷனல் கொலைக்காரன் ஒருவன், கொலை செய்யப்போகிற இடத்தில் எல்லாம் எக்குதப்பாக எதையாவது செய்து மாட்டிக் கொள்வானாம். பிறகென்ன...? தர்ம அடிதான்! படம் முழுக்க இப்படி நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டதுபோல் எக்கச்சக்க நகைச்சுவை. கேட்டவுடன் பிடித்துப் போக, தனது விரதத்தை முடித்துக் கொண்டாராம் வடிவேலு. இந்த கதையில் ஹீரோவாக நடிக்க ரெடி என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரு கதையை சொல்லி வடிவேலுவின் வைராக்கியத்தை பொடி பொடியாக்கியவர் ராஜு ஈஸ்வரன் என்ற இயக்குனர். சின…
-
- 0 replies
- 978 views
-
-
சுசி.கணேசன் இயக்கிய 'பைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகமானவர் கனிகா. அதற்குப் பிறகு தமிழ், மலையாள மொழிப்படங்கள் சிலவற்றில் நடித்தவர், தற்போது 'பழஸிராஜா' என்ற மலையாளப் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். கனிகா தமிழில் நடித்த குறிப்பிடத்தகுந்த படம் என்று 'வரலாறு' படத்தைச் சொல்லலாம். அதன்பிறகு வாய்ப்புகள் அதிகம் அவருக்கு வரவில்லை. இந்நிலையில் கனிகாவுக்கு அவர் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். அடு்த்தமாதம் பதினாறாம் தேதி கனிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகன் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார். பெயர் ஷியாம் ராதாகிருஷ்ணன். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கனிகா-ஷியாம் ராதாகிருஷ்ணன் திருமணம் நடைபெறுகிறது. Cinesouth…
-
- 0 replies
- 899 views
-
-
பிரபல தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எந்த முன் அனுமதியும் பெறாமல் தங்கள் நிறுவன முத்திரை மற்றும் பெயரை பயன்படுத்தி வருவதாக அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் அகாடமி குற்றம் சாட்டியுள்ளது. தங்களது டிரேட் மார்க்கை தவறாக பயன்படுத்திவருவதால் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துளளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. திரைப்படத்துறையில் உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பெருமைக்குரிய ஆஸ்கர் விருதுகளை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்கர் அகாடமி என்ற நிறுவனம் வழங்கிவருவது தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்த நிறுவனத்தின் டிரேட் மார்க் சின்னத்தை அனுமதியில்லாமல் ரவிச்சந்திரன் பயன்படுத்தி வந்தததாக எழு…
-
- 0 replies
- 784 views
-
-
காதலை கடைசி வரை சொல்லாமலே ரசிகர்களின் மனதை கனப்படுத்தும் நடிப்பை வெளிபடுத்தி வெற்றி பெற்றவர் நடிகர் முரளி. தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களி்ல் நடத்துள்ளார். அதில் பல படங்கள் வெள்ளி விழாப் படங்கள். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார் முரளி. இதனால் சினிமாவில் அவருக்கு பெரிய இடைவெளி விழுந்தது. இந்நிலையில் தற்போது மறு அவதாரம் என்ற படத்தின் மூலம் மறு பிரவேசம் செய்கிறார் முரளி. ஹீரோயினாக விலாசினி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் டத்யா எனும் புதுமுகம் அறிமுகமாகிறார். பிரபல இயக்குனர்கள் பலரிடம் பணியாற்றிய கே.பாலேந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார். அண்ணன் தங்கை பாசம்தான் படத்தின் மையக் கரு. சைடில் ரொமான்ஸ், சண்டை போன்ற மசாலா…
-
- 2 replies
- 1.4k views
-
-
சென்னை : படத்தின் சில காட்சிகளை பார்த்தபோதே பிரம்மித்து விட்டேன் என்று முதல்வர் கருணாநிதி முதல் அதிரடி நாயகன் ஜாக்கிசான் வரை பாராட்டிய தசாவதாரம் படத்தின் கதை........... வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7017.html
-
- 3 replies
- 2.7k views
-
-
ஆபாச உடை அணிந்து தசாவதாரம் பட விழாவுக்கு வந்திருந்ததாக மல்லிகா ஷெராவத் மீது கூறப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. கடந்த 25ம் தேதி சென்னையில் நடந்த தசாவதாரம் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு நடிகை மல்லிகா ஷெராவத் கவர்ச்சிகரமான உடை அணி வந்திருந்தார். இது மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததாகவும், தமிழ் கலாசாச்சரத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கனிராஜன் என்பவர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரை பரிசீலித்த பெரியமேடு போலீஸார் தற்போது மல்லிகா மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முன்னதாக இந்தப் புகார் குறித்து பெரியமேடு காவல்நிலைய…
-
- 39 replies
- 9.3k views
-
-
வைர சுரங்கத்துக்காக ஒரு கூட்டம் மக்களை அடிமையாக்கி வைத்திருக்கும் வில்லன். வில்லனிடமிருந்து தனது அப்பாவையும், அப்பாவி ஜனங்களையும் காப்பாற்றும் ஹீரோ. காப்பாற்றும் வேலைகளுக்கு நடுவில் வில்லனின் அழகான தங்கையுடன் காதல். முடிவில் எல்லோரும் எதிர்பார்த்த சுபம்! பழைய பிளாக் அண்டு ஒயிட் ஜெய்சங்கரின் கெளபாய் ஸ்டைல் கதைதான் குருவி. விஜயின் அப்பா மணிவண்ணன் தனது மூன்று மனைவிகளையும், ஒரு டஜன் பிள்ளைகளையும் அம்போவென விட்டுவிட்டு தலைமறைவாகிறார். கடன் தொல்லைக்குப் பயந்து ஓடிப்போனார் என்று நினைத்திருக்க, மலேசியாவில் தான் சந்தித்த தாதா கோச்சாதான் (சுமன்) தனது அப்பாவை அடிமையாக்கி வைத்திருக்கிறான் என்ற விவரம் விஜய்க்கு தெரிய வருகிறது. அப்பாவை காப்பாற்ற வைரச் சுரங்கம் இருக்கும் ஆந்திரா கட…
-
- 27 replies
- 7.5k views
-
-
சப் டைட்டில்கள் போடப்படும் உலகத் திரைப்படம் என்றாலே நமக்கு அலர்ஜி. ஆயினும் எப்போதாவது பரங்கிமலை ஜோதி உள்ளிட்ட திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி ஹவுஸ்புல் ஆகும்போது மழைக்கு பள்ளிக்கூடத்தில் ஒதுங்குவதைப் போல உலகத் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் பக்கமாக ஒதுங்குவதுண்டு. கடந்த வாரம் சென்னை பிலிம் சேம்பரில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த படவிழா பக்கம் இதுபோல ஒதுங்க வேண்டியிருந்தது. அன்று திரையிடப்பட்டிருந்த படம் "WE FEED THE WORLD". உலகமயமாக்கல், பொருளாதார சீர்த்திருத்தங்கள், நவீன விவசாயமுறைகள் ஆகியவை இயற்கையையும், இயற்கையோடு இயைந்து வாழ்தவர்களையும் அச்சுறுத்துகிறது என்ற தனது வாதத்தை அழுத்தமாக பதிவுசெய்த ஆவணப்படம் இது. 'உலகம் சுற்றும் வாலிபன்' …
-
- 0 replies
- 865 views
-
-
ஒரே படத்தில் ஜெயம் ரவி, ஜீவா! சத்யம் திரையரங்கில் கூடியிருந்தவர்களுக்கு சந்தோஷ செய்தி ஒன்றை கூறினார் ஜெயம் ரவி. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை விரைவில் இயக்க உள்ளாராம் ஜெயம் ரவி. இதில் தன்னுடன் நடிக்க ஜீவாவை கேட்டிருக்கிறார். அவரும் ஈகோ எதுவும் பார்க்காமல் கதையை கேட்டு உடனே ஓ.கே. சொல்லியிருக்கிறார். சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் நடைபெற்ற 'தெனாவட்டு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்தத் தகவலை வெளியிட்டார் ஜெயம் ரவி. பிறகு பேசிய ஜீவா இதனை ஆமோதித்ததுடன் தெனாவட்டு படப்பிடிப்பில் நடந்த தீ விபத்தை ஹாஸ்யத்துடன் சொல்ல முயன்றார். (காமெடி இன்னும் ஜீவாவுக்கு முழுதாக கைவரவில்லை) ராம. நாராயணன் ஆடியோவை வெளியிட ஜெயம் ரவி, ரமேஷ், ஜீவன், சீமான், சுப்ரமணியம் சிவா, நா.…
-
- 0 replies
- 825 views
-
-
முன்னணி வார இதழ் ஒன்றில் வந்திருக்கிறது அந்த கட்டுரை. தன்னை மனித நேய காவலராக காட்டிக் கொள்ளும் இயக்குனர் பார்த்திபனின் தாயார் கொடுத்திருக்கும் பேட்டி அது. இரண்டு மகன்களாம் இவருக்கு. தந்தையை இழந்த அவர்களை பாடுபட்டு வளர்த்தது இந்த தாய்தான். பார்த்திபன், பாபு என்ற இருமகன்களில் பாபு எங்கே போனார் என்பதே தெரியவில்லை. உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? என்பதே தெரியாமலிருக்கிற சூழ்நிலையில், மூத்த மகனான பார்த்திபன் தனது அம்மாவை வீட்டிலிருந்து அனுப்பி பல வருடங்கள் ஆகிவிட்டதாம். தான் இன்னார் என்றே சொல்லாமல் எங்கெங்கோ தங்கியிருந்த இந்த தாய், ஒரு கட்டத்தில் அநாதை ஆசிரமத்தில் கூட இருந்திருக்கிறார். “எத்தனையோ பஸ் பிடிச்சு அவனை பார்க்க அவனோட ஆபிசுக்கு போவேன். சார் பிசியா இருக்காரு என்ற…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒரு காலத்தில் கவுண்டமணி இருந்தாரே.. அதே அளவு பிஸியாக இருக்கிறார் வைகை புயல் வடிவேலு. தினமும் குறைந்தது 3 படங்களின் சூட்டிங்குகளில் தலையைக் காட்ட வேண்ட அளவுக்கு மனிதர் மிக பிஸி. இப்போது ஒரே நேரத்தில் வெடிகுண்டு முருகேசன், அழகர்மலை, சேவல், காத்தவராயன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, குசேலன் உள்பட ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந் நிலையில் தான் நடிக்காத ஒரு படத்தில் நடித்ததாக விளம்பரம் கொடுத்து மோசடி நடந்துள்ளதாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் வடிவேலு. அவர் அளித்துள்ள புகாரில், `பச்சை நிறமே' என்ற படத்தில் நான் நடித்திருப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை. பணமும் வாங்கவில்லை. …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.பி.எல்லின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் சிலரது 'தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கேற்ப' நடந்து கொள்ள நான் மறுத்து விட்டதாலேயே என்னை டிஸ்மிஸ் செய்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர் என நயனதாரா பகீர் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதர்களாக முன்னணி நட்சத்திரங்கள் விஜய் மற்றும் நயனதாரா நியமிக்கப்பட்டனர். இதற்காக விஜய்க்கு ரூ.1 கோடியும், நயனதாராவுக்கு ரூ.40 லட்சமும் சம்பளமாக வழங்க இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இதில் நயனதாராவுக்கு ரூ.20 லட்சம் அட்வான்ஸாக வழங்கியிருந்தனர். ஆரம்பத்தில் அணியை அறிமுகப்படுத்தும் நிகழ்சிகளில் பங்கேற்ற நயனதாரா, பின்னர் ரஜினியின் குசேலன் ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் சென்றுவிட்டார். இடைவிடாத படப்…
-
- 6 replies
- 1.9k views
-
-
பட்டு மேனியை பஞ்சராக்கவிருந்த தீ விபத்திலிருந்து உயிர் தப்பினார் நமீதா. சென்னை நுங்கம்பாக்கத்தில் சொகுசு பங்களா ஒன்றில் குடியிருந்து வருகிறார் நமீதா. பெற்றோர்கள் குஜராத்தில் வசிப்பதால் நமீதாவின் வீட்டில் வேலைக்காரர்கள் மட்டும் உள்ளனர். நமீதா தனது பாதுகாப்புக்காக, ராட்சத உயரத்தில் மூன்று வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார். இவை தவிர, வீட்டு வாசலில் கூர்க்காவும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார். நமீதா, காலையில் படப்பிடிப்புக்கு சென்றால், மாலையில்தான் வீடு திரும்புவார். அவர் இப்போது, 'இந்திர விழா' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படப்பிடிப்பு முடிந்து, இரவு 8 மணி அளவில் வீடு திரும்பிய நமீதா, படுக்கை அறையில் உள்ள 'ஏர் கண்டிஷன்' மிஷினை 'ஆன்' செய்தார். சீ…
-
- 13 replies
- 2.5k views
-
-
ஒருவேளை தாங்க முடியாத கஷ்டத்தில் எழும் மனிதக் குரல் கடவுளின் காதில் விழுந்தால்... ஒருவேளை அந்தக் கடவுள் பூமிக்கே வந்துவிட்டால்... ஒருவேளை அந்தக் கடவுள், தன் கடவுள் தன்மையை இழந்து மனிதனைப் போலவே திருவல்லிக்கேணி மேன்ஷனில் பத்துக்குப் பத்து இருட்டறையில் கஷ்டப்பட நேர்ந்தால்.... அடடா... 'ஒருவேளை' என்ற இந்த வார்த்தைதான் ஒரு படைப்பாளியை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது பாருங்கள்! இந்த ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு இயக்குநர் சிம்புதேவன் விளையாடி இருக்கும் 'சிலம்பாட்டம்தான்' அறை எண் 305-ல் கடவுள். இந்த சிலம்பத்தில் வேகம் இல்லாவிட்டாலும், பார்ப்பவர்களைச் சிந்திக்க வைக்கிற விவேகம் உள்ளது. கடவுள், அறை எண் 305-க்கு வந்த கதை: ராசுவும் (சந்தானம்), மொக்கைய…
-
- 5 replies
- 2.5k views
-
-
முதல் கல்யாணத்தின் தோல்வியால் நான் உடைந்து போய் விடவில்லை. கண்டிப்பாக இன்னொரு கல்யாணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் சொர்ணமால்யா. சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சி மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே அறிமுகமானவர் சொர்ணமால்யா. அதன் பிறகு பெரும் பாப்புலர் ஆன சொர்ணமால்யா மணிரத்தினத்தின் அலைபாயுதே மூலம் சினிமாவுக்கும் வந்தார். டிவியில் இருந்தவரை அமைதியான பிரபலமாக அறியப்பட்ட சொர்ணமால்யா சினிமாவுக்கு வந்த பிறகுதான் பல மாற்றங்களில் சிக்கினார். 2002ல் கல்யாணம் செய்த சொர்ணமால்யா, அடுத்த ஆண்டே விவாகரத்து செய்தார். அதன் பின்னர் முழு நேர நடிகையாக மாறினார். ஆனால் அவருக்கேற்ற ரோல்கள் கிடைக்கவில்லை. இதனால் அவரது திரை வாழ்க்கை அமைதியான கடல் போல காணப்பட்டது. இடைய…
-
- 10 replies
- 3.9k views
-
-
'குருவி'யை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு 'சிங்கம்' என பெயரிடப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள 'குருவி' படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது லண்டன் கருணாஸின் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம். அதற்கு முன்பாக தனது கம்பெனிக்கு நடித்துக் கொடுக்கும்படி உதயநிதி கேட்டுக்கொண்டதால் லண்டன் கருணாஸூக்கு தந்த கால்ஷீட்டை உதயநிதிக்கு கொடுத்தார் விஜய். இப்போது 'குருவி' படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு காத்திருப்பதால் லண்டன் கருணாசுக்கு கால்ஷீட்டுக்களை ஒதுக்கியுள்ளார் விஜய். பிரபுதேவா இயக்கவுள்ள இப்படத்திற்கு 'சிங்கம்' என பெயரிடப்பட்டுள்ளது.'போக்கிரி', 'குருவி' படங்களில் நயன்தாராவுக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு போனதால் இம்முறை நயன்தாராவுக்கு தனக்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
சரோஜா படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. சென்னை 28 படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் இயக்குகிற படம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய படம் போலவே நகைச்சுவைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை எடுத்து வருகிறார் வெங்கட். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சரோஜா படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜின் பிடிவாதம் யூனிட்டையே வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அது சண்டைக்காட்சியாம். அடிவாங்க வேண்டிய பிரகாஷ்ராஜ், அதன் பின் அதே வேகத்தோடு கீழே விழுவது போல் காட்சி. டைரக்டர் காட்சியை விளக்கியதும் டென்ஷன் ஆகிவிட்டாராம் பிரகாஷ்ராஜ். நான் எவ்வளவு பெரிய ஆள். எனக்காக எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் தெரியுமா? யாரோ ஒரு புதுமுகம் அடிக்க, நான் கீழே விழ வேண்டுமா? …
-
- 0 replies
- 836 views
-
-
ஆட்டோகிராப் 2ம் பாகத்தை எடுக்கவிருக்கும் சேரன், அதில் கோபிகா நடித்த கேரக்டரில் நடிக்க உதயதாராவை அணுகியுள்ளாராம். ஆட்டோகிராப் மூலம் ஹீரோவா அவதாரம் எடுத்தவர் சேரன். அதில் அவரது நடிப்பு மட்டுமன்றி கதையும், கோபிகா உள்ளிட்டோரின் நடிப்பும் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் ஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார் சேரன். இதில் ஸ்னேகா, மல்லிகா ஆகியோர் கேரக்டர்களில் அவர்களே நடிக்கவுள்ளனர். ஆனால் கோபிகாதான், 2ம் பாகத்தில்நடிக்க முடியாது என்று கூறி விட்டார். கல்யாணமாகப் போவதை காரணம் காட்டி நடிக்க மறுத்து விட்டாராம் கோபிகா. பலமுறை சேரன் கோரியும் கூட கோபிகா தனது நிலையிலிருந்து இறங்கி வரவில்லையாம். இதையடுத்து தற்போது உதயதாராவை அணுகியுள்ளாராம் சேரன். கோ…
-
- 0 replies
- 809 views
-
-
விஜய், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள குருவி, மே 3ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் முதல் தயாரிப்பில், தரணி இயக்கத்தில் உருவாகியுள்ள கில்லி படமான குருவியின் ஆடியோ சமீபத்தில் ரிலீஸாகி பாட்டுக்கள் ஹிட் ஆகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் படம் மே 1ம் தேதி திரைக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 3ம் தேதிக்கு மாற்றியுள்ளனர். மே 2ம் தேதி அகில இந்திய பந்த் ஒன்றை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதையடுத்து மே 3ம் தேதிக்கு பட ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர். படம் முழுக்க முடிந்து விட்டது. சின்னச் சின்ன நகாசு வேலைகளையும் முடித்து விட்டனர். தற்போது பிரசாத் லேப்ஸ் பிரிண்ட் போடும் வேலையில் மும்முரமாக…
-
- 0 replies
- 671 views
-
-
தசாவதாரம் பட ஆடியோ விழாவுக்கு வந்தபோது, நான் இந்திய நடிகர்களைப் புறக்கணித்ததாகவும், இந்திய உணவு, இந்திய தண்ணீரைக் கூடக் குடிக்காமல் புறக்கணித்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் வேதனை தருவதாக நடிகர் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். கடந்த 25ம் தேதி சென்னையில் நடந்த தசாவதாரம் பட ஆடியோ விழாவில் ஜாக்கி சான் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். விழாவுக்கு வந்த சான், இந்திய உணவுகளை புறக்கணித்ததாகவும், தண்ணீர் கூட குடிக்கவில்லை, கூடவே கொண்டு வந்திருந்தார். நடிகர்களுடன் பேசவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் ஜாக்கி சான். இதுதொடர்பாக தனது இணையதளத்தில் மறுப்பு வெளியிட்டுள்ளார் ஜாக்கி. அதில் ஜாக்கி சான் கூறியிருப்பதாவது: என்னால் மறக்க…
-
- 0 replies
- 659 views
-