வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
2007 - ம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது விஜய்யின் 'போக்கிரி.' 'ஆதி' ப்ளாப்பான பிறகு விஜய் அதிக சிரத்தை எடுத்து நடித்த படம் 'போக்கிரி.' பிரபுதேவாவுக்கு இயக்குனராக தமிழில் முதல் படம். தெலுங்கு ரீ-மேக்கான இதன் பாடல்கள் தமிழகம் மட்டுமின்று கேரளாவிலும் சூப்பர் ஹிட்டாயின. பல நேரடி மலையாளப் படங்களின் வசூலை 'போக்கிரி' முறியடித்து கேரளாவில் சாதனைப் படைத்தது. பதினைந்து கோடியில் தயாரான இப்படம் ஏறக்குறைய பத்துகோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது. 2007-ம் வருடத்தில் இதுவரை வெளியான படங்களில் இதுவே அதிகபட்சம். இரண்டாவதாக வருவது ஹரியின் 'தாமிரபரணி.' விஷால் நடித்த இப்படம் ஏழுகோடியில் தயாராகி அதே ஏழுகோடியை லாபமாகஈட்டிய…
-
- 0 replies
- 880 views
-
-
விஷாலின் 'சத்யம்' படத்திலிருந்தும் விலகியிருக்கிறார் த்ரிஷா. அவருக்கு பதில் நயன்தாரா அப்படத்தில் நடிக்கிறார். தாமிரபரணி படத்துக்குப் பிறகு விஷால் 'சத்யம்' படத்தில் நடிப்பதாக இருந்தது. அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் வேடம். முடியை ஒட்ட வெட்டி போலீஸ் கமிஷனர் வேடத்துக்கு தயாரானார் விஷால். அவருக்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தமானார். சில நடைமுறை சிக்கல்கள்.... 'சத்யம்' படம் தள்ளிப் போனது. இந்த இடைவெளியில் ஜி. பூபதிபாண்டியன் சொன்ன 'மலைக்கோட்டை' கதை பிடிக்க, அதற்காக தயாராகி வருகிறார் விஷால். 'மலைக்கோட்டை' தயாரான பிறகே 'சத்யம்'. இந்த திடீர் மாற்றத்தால் 'சத்யம்' படத்திற்கு த்ரிஷா கால்ஷீட் கொடுக்க முடியாத சூழ்நிலை. இதனா…
-
- 1 reply
- 970 views
-
-
இலங்கை அகதியின் காதல் கதை! -ராமேஸ்வரத்தில் ஒரு ஜோடி புறா! Monday, 07 May 2007 இலங்கை அகதிகளின் கண்ணீர் கதையை எந்த படமும் தீர்க்கமாக சொன்னதில்லை. அந்த குறையை போக்க வந்திருக்கிறார் செல்வம். பாரதிராஜா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த இவர், ஜீவா-பாவனா நடிக்க ராமேஸ்வரம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். யாழ்பாணத்தில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வரும் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகளில் ஒரு அகதியாக ஜீவா நடிக்கிறார். யதார்த்தமும், புதுமையும் கலந்த பாத்திரமாக இவரை உருவாக்கியிருக்கிறார் செல்வம். இந்த படத்தை பார்க்கும் உலக தமிழர்கள் ஜீவாவை தங்கள் வீட்டு பிள்ளையாகவே கருதுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் செல்வம். ஜீவாவின் கா…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிவாஜியும் சாவித்திரியும் நடித்த பழைய பாடல் காட்சி ஒன்றைப் பாருங்கள். "இந்தியன்" படத்தில் கமலஹாசன் - மொனிஷா நடித்த "மாய மச்சீந்த்ரா" பாடல் காட்சியில் இதைப் பின்பற்றி(காப்பி அடித்து) காட்சி அமைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறதல்லவா? காதல் காட்சியில் "டெலிபோன் மணி" போல இல்லாமல் சுந்தரத் தமிழில் பேசிக்கொள்கிறார்கள்.
-
- 33 replies
- 6.5k views
-
-
வெகுவிரைவில் வெண்திரையில் இன்றைய இளம் கதாநாயகனின் நடிப்பில் நான் அவன் இல்லை
-
- 18 replies
- 4.9k views
-
-
சிம்புவுடன் நடிப்பதால் ஒரு பிரச்சினையும் இல்லை. அவருடன் நடிப்பதற்காகப் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் 'டன்லப்' நமீதா. சிம்புவுடன் ஜோடி சேர ஒரு பக்கம் முன்னணி நடிகைகள் பயந்து, பின்னங்கால் பிடறியில் பட தெறித்து ஓடுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் சிம்புவுடன் நடிப்பதில் ெபருமை என்று கூறி மாறி மாறி புகழாரம் சூட்டும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிம்புவுடன் இணைந்து நடிக்க புக் ஆகியுள்ள வேதிகாவும், நமீதாவும் மாறி மாறி சிம்புவைப் பற்றி சிலாகிக்கிறார்கள். முதலில் வேதிகா, சிம்புவைப் பற்றி வியர்க்க விறுவிறுக்கப் பாராட்டினார். இப்போது நமீதாவின் டர்ன், அவரும் சிம்பு அபாரம், அற்புதம் என அசத்தலாக பாராட்டியுள்ளார். நமீதா உள்ளிட்ட ஐந்து நாயகிகளுன…
-
- 0 replies
- 809 views
-
-
சிறுவர், சிறுமியருக்கு செக்ஸ் கல்வியை அவசியம் அறிமுகப்படுத்த வேண்டும். எது சரி, எது தவறு என்று அவர்களுக்கு விளக்கிக் சொல்ல வேண்டியது அவசியம் எனறு நடிகை குஷ்பு கூறியுள்ளார். கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை, ஆனால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறப் போய் பெரும் சர்ச்சையில் சிக்கினார் குஷ்பு. செருப்பு, விளக்குமாறுகளுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் தான் பேசியதற்காக மன்னித்து விடுமாறு கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டார் குஷ்பு. அந்த சர்ச்சை அத்தோடு ஓய்ந்தது. இப்போதெல்லாம் தமிழகத்திற்குள் எங்காவது பேச நேரிடும்போது படு ஜாக்கிரதையாக பேசி வருகிறார் குஷ்பு. ஆனால் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செக்ஸ் கல்வி குறித்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
பில்லா ரஜினிக்கு காணிக்கை-அஜீத் நான் நடித்து பில்லா படத்தின் ரீமேக்கை சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் காணிக்கையாக்குகிறேன் என்று அஜீத் கூறியுள்ளார். தல அஜீத்துக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி நேற்று பத்திரிக்கையாளர்களை அழைத்து விருந்து வைத்து சிறப்புப் பேட்டி கொடுத்தார் அஜீத். இதுவரை இல்லாத அளவுக்கு மனம் திறந்து படு ரிலாக்ஸ்டாக பேசினார் அஜீத். அவர் இப்படிப் பேசிய ரொம்ப நாட்களாகி விட்டதால் பத்திரிக்கையாளர்களும் படு ஜாலியாக பல கேள்விகளைக் கேட்டனர். அத்தனைக்கும் படு நிதானமாக பதிலளித்தார் அஜீத். பில்லா ரீமேக் குறித்துத்தான் அனைவரும் ஆவலோடு கேட்டார்கள். இன்னும் பில்லா படத்தின் பிரமிப்பே ரசிகர்களிடம் உளள நிலையில் அந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டிய…
-
- 5 replies
- 1.9k views
-
-
'அனுபவத்தைவிட சிறந்த ஆசிரியன் இல்லை' என்பார்கள். அந்த வகையில் காலம் என்ற பள்ளிக்கூடம் சிம்புவுக்கு நிறையவே பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அரையாண்டு இடைவெளிக்கு மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டார் சிம்பு. 'காள' படத்திற்காக ஹேர் ஸ்டைல் மாற்றியிருக்கும் சிம்புவிடம் அணுகுமுறை, பேச்சு என எல்லாவற்றிலும் மாற்றங்கள். "ஒரு கேப்பிற்கு பிறகு வர்றேன். புதுசா நடிக்க வந்த மாதிரி பிரஷ்ஷா.... இருக்கு. காலையில் ஏழு மணிக்கெல்லாம் படப்பிடிப்புக்கு வந்துடுறேன். ஊர்வன, பறப்பன, நடப்பனன்னு நான்வெஜ் அயிட்டங்களை ப்ரியாமா சாப்பிட்ட நான் இப்போ சுத்த சைவத்துக்கு மாறிட்டேன். கோபமெல்லாம் குறைந்து மனசுல ஒரு குளிர்ச்சி இருக்கு. என்னையே எனக்கு பிடிச்சிருக்கு இப்போ." தவத்திலிருந்து எழுந்துவந்த ச…
-
- 0 replies
- 869 views
-
-
'எனக்கு பொண்ணு பார்க்குறாங்க சார்...' முகத்தின் கூடுதல் பளபளப்பிற்கு காரணம் கேட்டபோது ஸ்ரீகாந்த் சொன்ன பதில் இது. கடைசியாக நடித்த சில படங்கள் ஸ்ரீகாந்துக்கு தோல்வியை தர துவண்டுபோய்விட்டார் மனிதர். அடுத்த படம் கொடுத்தால் அது சூப்பர் ஹிட்டாகதான் இருக்கவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார். தெலுங்கில் செல்வராகவன் இயக்கிவரும் 'ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தமே வேறுலே' படத்தில் நடித்து வரும் ஸ்ரீகாந்தி இடையில் சென்னைக்கு வந்திருந்தார். 'என்ன ஸ்ரீ தமிழ்ல உங்கள ஆளையே கானோமே? "கெட்ட நேரம்னு வந்தா அது சூப்பர் ஸ்டாரையே தூக்கி விசிடும் சார். இதுல நானென்லாம் எம்மாத்திரம். போனதெல்லாம் போகட்டும் அடுத்து நடக்கப் போறது நல்ல காரியமா இருக்கட்டும். இடைப்பட்…
-
- 0 replies
- 759 views
-
-
முற்றிலும் வித்தியாசமான ஒரு கற்பனையுடன், படு கலகலப்பான ஒரு கதையை படமாக்கியுள்ளார் மலையாள இயக்குநர் வினயன். அற்புதத் தீவு என்ற பெயரில் வந்திருக்கும் இப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம். டப்பிங் படம் என்று கூற முடியாத அளவுக்கு படு ஜாலியாக போகிறது அற்புதத் தீவு. முற்றிலும் சிறுவர்களை குறி வைத்து அதுவும் கோடை விடுமுறையில் வந்துள்ள இப்படம் சிறுவர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. வாமனபுரியில் அற்புதத் தீவு கதை ஆரம்பிக்கிறது. அது ஒரு சபிக்கப்பட்ட பூமி. அங்கு இருக்கும் ஆண்கள் எல்லாம் குள்ளர்கள். பெண்கள் மட்டும் நார்மல் உருவத்தில் இருக்கிறார்கள். அந்த அற்புதத் தீவின் மன்னர் மணிவண்ணன். அவரது மகள் மல்லிகா கபூர். ஒரு நாள் இந்தியக் க…
-
- 1 reply
- 895 views
-
-
ரஜினிகாந்த்தின் சிவாஜி பட கேசட்டுகளை பஸ் டிரைவர்களுக்கு இலவசமாக வழங்கி தங்களது தலைவரின் பாடல்களை ஒலிக்கச் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். சிவாஜி பட பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி விட்டன. எங்கு பார்த்தாலும் சிவாஜி பட பாட்டாகவே இருக்கிறது. இந்த நிலையில் தங்களது தலைவரின் பாடல்களை மேலும் பிரபலப்படுத்த முடிவு செய்த சிவகாசி நகர ரஜினி ரசிகர்கள் வித்தியாசமான ஐடியாவை அமல்படுத்தியுள்ளனர். கை நிறைய கேசட்டுகளுடன் பேருந்து நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்த பேருந்துகளில் ஏறி, டிரைவர்களுக்கு கேசட்டுகளை இலவசமாக வழங்கி அண்ணே, மறக்காம தலைவர் பாட்டை ஒலிக்க விட்டபடியே வண்டியை ஓட்டுங்கள் என்று அன்பொழுக கேட்டுக் கொண்டனர். அதேபோல, கண்டக்டர்களுக்கும் ஒரு பிரதியைக் கொடுத்…
-
- 17 replies
- 3k views
-
-
நடிப்பில் சின்னதாக ரவுண்டு கட்டி விட்ட எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். வாலி மூலம் அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.ஜே.சூர்யா. அஜீத்துக்கும் அந்தப் படம்தான் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து குஷி மூலம் விஜய்க்கு பிரேக் கொடுத்தார். அதற்கு முன்பு வரை தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த விஜய், குஷிக்குப் பிறகுதான் மார்க்கெட் குஷியேறி பெரிய நடிகராக அவதாரம் எடுத்தார். இதையடுத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான படம் நியூ. இப்படத்தில் அஜீத்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென சூர்யாவுக்கே நடிக்கும் ஆசை வந்ததால், அஜீத்திடம் சொல்லி விட்டு அவரே ஹீரோவாக நடித்தார். படம் வெள…
-
- 25 replies
- 3.5k views
-
-
ஆகாத வேலையில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. நடிகர் அப்பாசுக்கு இது தெரியவில்லை. ஆர்வக் கோளாறில் இடது கையை உடைத்துக் கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் அப்பாஸை பார்ப்பது அரிது. தெலுங்கு பக்கம் அடிக்கடி இவர் தலையை காண முடிகிறது. 'ருத்ரமணி' என்றொரு தெலுங்கு படம், அப்பாஸ் ஹீரோ. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. சண்டைக்காட்சியொன்றில் அப்பாஸ் வில்லன் நடிகர் சத்யபிரகாஷுடன் மோத வேண்டும். ஸ்டண்ட் மாஸ்டர் பிரகாஷ் அப்பாஸ் பல்டி அடிக்க வேண்டிய ஒரு காட்சியில் டூப்பை பயன்படுத்தலாம் என்றிருக்கிறார். அப்பாஸ் அதனை மறுத்துள்ளார். படத்தின் இயக்குனர் கலீல் கூறியதையும் அப்பாஸ் கேட்கவில்லை. நானே பல்டி அடிக்கிறேன் என அடம்பிடித்திருக்கிறார். விளைவு ரொம்ப மோசம். அப்பாஸ் அட…
-
- 4 replies
- 1.5k views
-
-
நடிகை காயத்ரி ஜெயராமுக்கும், அவரது அந்தமான் காதலர் சமீத்துக்கும் வருகிற 13ம் தேதி அந்தமானில் கல்யாணம் நடைபெறுகிறது. ஒரு சோப்பு கம்பெனி நடத்திய மிஸ் சென்னை அழகிப் போட்டியில் வென்று அப்படியே மாடலிங்கில் நுழைந்து, மனதைத் திருடி விட்டாய் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் காயத்ரி ஜெயராம். முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார். குறிப்பாக மஞ்சக் காட்டு மைனா பாட்டில் அவர் போட்ட ஆட்டமும், குலுங்கிய குலுக்கலும் காயத்ரிக்கு ரசிகர் வட்டத்தை சேர்த்து விட்டது. இந்தப் படத்தின் மூலம் பிரபு தேவாவின் காதல் வலையிலும் அவர் விழுந்ததாக கூறப்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாகவும், ஆனால் திடீரென பிரபு தேவா கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாகவும் பரபரப்பு எழுந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
Pray for me, brother - ஏ.ஆர். ரஹ்மானின் சமீபத்திய இசை ஆல்பம். இதன் ஒவ்வொரு ப்ரெமிலும் ஏழ்மையின் துயரத்தையும், பிரமாண்டங்களின் வசீகரத்தையும் நீங்கள் காணலாம். இந்த ஆல்பத்தை உருவாக்கியதற்கு பின்னால் ஏ.ஆர். ரஹ்மான் என்ற இசை மேதையின் இளகிய மனம் இருப்பது பலருக்கு தெரியாது. பிரமாண்டமான கட்டிடங்கள், அதற்கு கீழே ஏழ்மையின் சுருக்கம் விழுந்த வயோதிக பெண்மணி, ஏக்கத்துடன் பார்க்கும் எத்தியோப்பிய சிறுமி அல்லது போரில் பாதிக்கப்பட்ட ஏதேனும் ஓர் இளைஞன்.... Pray for me, brother - பாடலில் இந்தக் காட்சிகளே திரும்பத் திரும்ப வருகிறது. இதன் பின்னணியில் பிராத்தனையின் ஓர்மையோடு ஒலிக்கும் ப்ரே ஃபார் மி பிரதர், ப்ரே ஃபார் மி சிஸ்டர் என்ற குரல் உள்ளத்தை சில்லிட வைக்கிறது. வெர்ட்டி…
-
- 2 replies
- 2k views
-
-
கமல் ஸ்ரீதேவிக்குப் பிறகு அனைவர் கருத்தையும் கவர்ந்த ஜோடி பிரபு - குஷ்பு. நெடிய இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒரே படத்தில்! 'வேகம்' என்ற புதிய படம் இந்த பழைய ஜோடியை ஒன்று சேர்க்கிறது. படத்தின் நாயகன் அஷ்வின். விஸ்காம் ஸ்டூடண்ட். இப்படிச் சொன்னால் தெரியாது. நாடக நடிகரும் அம்மா விசுவாசியுமான எஸ்.வி.சேகரின் மகன் என்றால் சட்டென்று புரியும். (வாரிசு அரசியலை மேடையில் வறுத்து எடுக்கும் சேகருக்கு இந்த கலை வாரிசு மட்டும் தப்பாக தெரியவில்லையா?). அப்பாவை போல மகன் அஸ்வினுக்கு காமெடியில் கவனம் இல்லை. ஆக்ஷன் ஹீரோவாவதே இவரது லட்சியம். இதற்காக கராத்தே எல்லாம் படித்து உடம்பை பிட்டாக வைத்துள்ளார். தெலுங்கு நடிகை அர்ச்சனா இவருக்கு ஜோடி. படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய திருநாட்டின் நீண்ட நாள் பிரச்சனை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அபிஷேக்பச்சன் நேற்றுமாலை ஐஸ்வர்யாராயின் கழுத்தில் தாலி கட்டி, இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா மாட்டார்களா என்ற நீண்ட நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர்கள் திருமணம் ஜுஹு பகுதியில் அமிதாப்பச்சனுக்கு சொந்தமான பிரதிக்ஷா பங்களாவில் நடந்தது. மணமகள் ஐஸ்வர்யாராய் காக்ரா உடை அணிந்திருந்தார். மணமகன் அபிஷேக் ஷெர்வானி. பங்களாவுக்கு சிறிது தூரம்வரை காரில் வந்த அபிஷேக் பின் குதிரையில் ஏறிக் கொண்டார். அதற்குமுன் உற்சாக மிகுதியில் சிறிது நேரம் நடனம் ஆடினார். பதினொரு புரோகிதர்கள் மந்திரம் சொல்ல திருமண சடங்கு நடந்தது. முன்னதாக பிரதிக்ஷா பங்களாவின் வெளியே ஜானவி கபூர் என்ற நடிகை கையை கிழித்து தற்கொ…
-
- 0 replies
- 843 views
-
-
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்பதை தப்பாக புரிந்து கொண்டுள்ளார் ஹாலிவுட்டின் முன்னணி நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவரது அந்நிய குழந்தை ஆசை இவரவது குடும்ப வாழ்வுக்கே கோடாலியாகும் என பயப்படுகிறார்கள் ஜோலியின் நண்பர்கள். ஏஞ்சலினா ஜோலி ஹாலிவுட்டின் ஹாட் கேக். சில வருடம் முன்பு ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் பிராட் பிட்டை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பே ஏஞ்சலினா ஜோலி ஒரு குழந்தைக்கு தாய். எப்படி? வேறு கல்யாணம் ஏதேனும்? இல்லை. ஜோலி அனாதை குழந்தைகளின் தேவதை. உலகம் முழுக்க உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு டாலர்களை அள்ளி வீசும் ஹாலிவுட் வள்ளல். கம்போடியா சென்ற போது அனாதை சிறுவன் ஒருவனை தத்தெடுத்து அம்மாவானார். வியட்நாம் சென்ற போது இன்னொரு குழந்தை. இதற்குப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இப்படியொரு அடியை சமீபகாலமாக தமிழ் சினிமா சந்தித்ததில்லை. வெளியான அனைத்து படங்களும் மண்ணை கவ்விய அவலம் கொஞ்சம் அதிசயம் தான். புத்தாண்டுக்கு முன்னால் வெளியான சீனு ராமசாமியின் 'கூடல்நகர்' சோபிக்கவில்லை. பத்திரிகைகள் தாராளமாக பாராட்டிய பிறகும் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் எட்டிப் பார்க்காதது ஆச்சரியம். பி அண்டு சி யிலும் இதன் கலெக்ஷ்ன் சுமார் ரகம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது சேரனின் 'மாயக்கண்ணாடி', ஜீவாவின் 'உன்னாலே உன்னாலே.' நகரத்துக்கும் சேரனுக்கும் சம்பந்தமில்லை என்பதை போட்டு உடைத்திருக்கிறது 'மாயக்கண்ணாடி.' கலையும் இல்லாமல் கமர்ஷியலும் இல்லாமல் தியேட்டரில் ரசிகர்களை படம் பயமுறுத்துவதால் இன்டர்வெல்லிலேயே எகிறுகிறார்கள் ரசிகர்கள். 'உள்ளம் கேட்குமே' ஜீவாவின் …
-
- 2 replies
- 1.4k views
-
-
'அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமானவர் சமிக்ஷா. அழகு, இளமை இரண்டையும் பிரம்மா அபிரிதமாக அள்ளிக் கொடுத்த நடிகை. அஷ்டலட்சுமிக்கு மட்டும் ஏனோ இவரை இஷ்டப்படவில்லை. சமிக்ஷாவின் அறிமுகப்படம் தவிர்த்து வேறு படங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. பிற மாநிலங்களிலும் வரவேற்பில்லை. இதனால் புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார் சமிக்ஷா. விரைவில் தாலிகட்டி தமிழ்திரையிலிருந்து விலக தீர்மானித்துள்ளார் இவர். இவரை திருமணம் செய்து கொள்ள இருக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்பது சஸ்பென்ஸ். சமிக்ஷாவின் காதலர் என்ற ஒரே தகவல் மட்டும் லீக் ஆகியுள்ளது. பெயரையோ போட்டோவையோ கண்ணில் காண்பிக்க மாட்டேன் என சமிக்ஷா அடம்பிடிக்கிறார். தற்போது 'தீ நகர்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் சமிக்ஷா. தவ…
-
- 8 replies
- 1.6k views
-
-
பனங்காய்ப் பணியாரம் இனிய யாழ்கள உறவுகளுக்காக எனது சித்திரை இளவேனில் கொண்டாட்டப் பணியாரம் http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=24 சுவைக்கலாம் வாங்க... உங்கள் கருத்தை அள்ளி வழங்கி உலகம் எங்கும் சுவையூட்டுக. அன்புடன் தமிழ்வானம்
-
- 14 replies
- 3.3k views
-
-
அமெரிக்க நடிகருடன் கட்டிப் பிடித்து முத்தம்: நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக ரசிகர்கள் போராட்டம் போபால், ஏப்.17- லண்டனில் சேனல் 4 என்ற தொலைக் காட்சி நிறுவனம் நடத்திய `பிக்பிரதர்' நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டார். அப்போது அவரை போட்டியில் கலந்து கொண்ட ஆங்கில நடிகைகள் நிறவெறி பாகுபாட்டுடன் நடத்தியது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த பரபரப்பு ஷில்பா ஷெட்டிக்கு சாதகமாக அமைந்தது. அவர் போட்டியில் வெற்றி பெற்று கோடிக்கணக்கான பரிசினை வென்றார். உலகம் முழுவதும் புகழ் பெற்றார். இப்போதும் அவர் ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளார். ஆனால் இந்த பிரச்சினை அவருக்கு எதிராக கிளம்பி, போராட்டத்தை தூண்டி உள்ளது. டெல்லிய…
-
- 53 replies
- 8k views
-
-
கிராமபுர சினிமா கொட்டகைகள்..., அப்புறமாய் நகர்புர உச்ச நுட்ப தியேட்டர்கள்..., இன்று வீட்டுக்கு வீடு ஹோம் தியேட்டர்கள்..., அதையும் தாண்டி இப்போது புதிதாய் கண்ணுக்குள் "சினிமா" அதாவது Video Eyewear or iWear எனப்படும் Personal Virtual Theater-கள்.கண்ணில் மூக்கு கண்ணாடி போடுவது போல் இந்த கையடக்க கருவியை கண்ணில் அணிந்து விட்டால் அக்கம் பக்கம் யாரையும் தொல்லைபண்ணாமல் பெரும் ஸ்கிரீனில் படம் பார்ப்பது போல் படம் பார்க்கலாம்,பாட்டு பார்க்கலாம்,கேட்கலாம், அட வீடியோ கேம் கூட ஆடலாம்.இந்த video goggle-வுடன் ஒரு ஹெட் போனும் ஒரு Video Player-ம் (like DVD player or Video iPod) தேவை.Icuiti, ezVision, myvu போன்ற பிராண்டுகள் மார்கெட்டில் கிடக்கின்றன.இனிமேல் இந்த மாதிரி video glasse -களை அணிந…
-
- 4 replies
- 1.1k views
-
-
வதந்தியில் தொடங்கிய அபிஷேக் - ஐஸவர்யாராயின் திருமணம் ஜெயத்தில் முடிய இன்னும் இரு தினங்களே காத்திருக்கிறது. காஸ்ட்லியான அழைப்பிதழ்கள், ரகசியமான நிகழ்ச்சி ஏற்பாடுகள் என பாலிவுட் ரசிகர்களின் லப்டப்பை எகிற வைத்துள்ள இத்திருமண விழா மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. வரும் 18-ந் தேதி மெகந்தி அணிவிக்கும் நிகழ்ச்சியும் மறுநாள் திருமணமும், 20 - ந் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய திரையுலகமே திரண்டு இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துச்சொல்ல காத்திருந்தாலும் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு திருமண ஏற்பாடுகளை செய்துவரும் அமிதாப்பச்சன் நேற்று …
-
- 1 reply
- 972 views
-