வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
பட மூலாதாரம்,ILAIYARAAJA_OFFL/INSTAGRAM கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஐம்பதாண்டுகளில், தமிழ்த் திரையிசையில் இளையராஜா தொட்டிருக்கும் உயரங்கள் இதுவரை யாரும் தொடாத ஒன்று. தமிழ்த் திரையுலகில் அவர் ஏன் ஒரு மகத்தான சாதனையாளர்? தமிழ்த் திரையுலகில் எம்.எஸ். விஸ்வநாதனின் தீவிரம் குறைய ஆரம்பித்த 1970களில், இந்தித் திரைப்படப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்த காலகட்டம். 'தம் மரோ தம்' (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா), "ப்யார் திவானா ஹோதா ஹை" (கடி பதங்), 'சுரா லியா ஹை தும்னே ஜோ தில் கோ' (யாதோங் கி பாரத்) போன்ற பாடல்களின் மூலம் ஆர்.டி. பர்மன் தமிழ் மனங்களைக் கொள்ளை கொள்ள ஆரம்பித்திருந்த நேரம். தமிழ்த் திரையுலகிலும்…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
இயக்குநர் சித்திக் : வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 'நேசமணிகளை' உருவாக்கியவர் பட மூலாதாரம்,SIDDIQUE கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக் நேற்று மாரடைப்பால் (ஆகஸ்ட்-8) காலமானார். அவருக்கு வயது 69. விஜய்யின் “பிரண்ட்ஸ்”, “காவலன்”, விஜயகாந்தின் “எங்கள்அண்ணா”, நடிகர் பிரசன்னாவின் “சாது மிரண்டா", நடிகர் அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இயக்குநர் சித்திக்கின் மறைவுக்கு ரசிகர்களும…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை பாடும் இசைக் கலைஞர் - அன்றாட சவால்கள் என்ன? பட மூலாதாரம்,ROJA ADITYA கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் மார்கழியின் வழக்கத்திற்கு மாறான ஒரு பருவநிலையில், கொளுத்தும் வெயிலில், சென்னையில் நடைபெற்ற மார்கழியில் மக்கள் இசை நிகழ்வில், நான்கு பெண்கள் ராப் இசைக்க, "காதல் பண்ணா என்ன? குத்தமா என்ன? காதல் பண்ணா என்ன? பாவமா என்ன?" என்று பாடல் பாடிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். ஆணவப் படுகொலைக்கு எதிராக எழுதப்பட்ட அந்தப் பாடலில் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையையும் அவல நிலையையும் வரிகளாகக் கோர்த்த…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
திரைப் பார்வை: காவிக்கும் கம்யூனிஸ்டுக்கும் இடையே ஒரு காதல்! - ‘ஈட’(மலையாளம்) க ண்ணூர், கேரளத்தின் அரசியல் முக்கியத்துவமிக்க பகுதி. தற்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பகுதியின் வழியாக வலுவடைந்து ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகத்தின் எல்லையிலிருக்கும் இந்தப் பகுதி வழியாக ஆர்.எஸ்.எஸ்ஸும் நுழைந்தது. இந்தப் பகுதியில்தான் இந்த இரு அரசியல் இயக்கங்களுக்கு இடையிலான படுகொலைகளும் அதிகம். இந்த இயக்கங்களுக்கு இடையே நடக்கும் காதல் கதைதான் ‘ஈட’. ‘இங்கு’ எனப் பொருள்தரும் ‘இவிட’ என்ற மலையாளச் சொல்லின் கண்ணூர் திரிபுதான் ‘ஈட’. ஆஎ.எஸ்.எஸ். சில பத்தா…
-
- 0 replies
- 207 views
-
-
லலித் மோதி உறவு: சுஷ்மிதா சென் விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார்? கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 18 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் அழகு ராணிகளில் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடக உலகில் பரவலாக பேசுபொருளாகியிருக்கிறார். 1994இல் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியரான சுஷ்மிதா சென், அதன் பிறகு வெற்றிகரமான பாலிவுட் நடிகையாக தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கினார். 46 வயதாகும் இவர், சுமார் 36 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் 'ஆர்யா' என்ற வெப்சீரிஸ் தொடரில் அவர் நாயகியாக நடித்திருந்தார். அது டிஜிட்டல் உலகிலும் ஓடிடி உலகிலும…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE கட்டுரை தகவல் எழுதியவர்,கவியரசு வி பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாவல்களைத் தழுவி வெற்றிமாறன் உருவாக்கிய படங்கள் அனைத்தும் விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் வெற்றியடைந்தவை என்பது தமிழ் சினிமா அறிந்ததுதான். இருப்பினும் அவருடைய படங்கள் அவை தழுவி எடுக்கும் புனைவுகளுக்கு முழுதும் நியாயம் செய்தனவா என்ற கேள்வி தொடர்ந்து விவாதமாக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஜெயமோகனின் ‘துணைவன்’ என்னும் சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ள இந்தப் படம், விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் ரசிகர்களிடை…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
இயக்குநர் ஆன் ஹங் ட்ரான். பாலைவனத்தில் உச்சபட்ச தாகத்தோடு நடந்து செல்பவனுக்கு கைகளில் அள்ளிப் பருக சில்லென்று சிறு ஊற்றுநீர் கிடைத்தால் எப்படியிருக்கும்... அப்படி வியட்நாம் மக்களுக்கு கிடைத்தவர்தான் இயக்குநர் ஆன் ஹங் ட்ரான் (Anh Hung Tran). போர் முடிந்த பிறகு கூட அதையே நினைத்துக்கொண்டு அதையே படமாக எடுத்துக்கொண்டு அதன் இழப்புகளையே எந்நேரமும் அதன் வலியையே ரணங்களையே பேசிக் கொண்டிருந்தவர்களின் போக்கை மெல்ல மெல்ல மாற்ற வழி அமைத்தவர் ஆன் ஹங் ட்ரான். ஆரம்ப காலங்களில், அதாவது 30-களில் பெரும்பாலான வியட்நாம் படங்கள் கேலிக்கூத்து காமெடிகளாக இருக்கும். நீண்ட இடைவெளிக்கு, அதாவது போருக்குப் பிறகு வந்த படங்கள் போரின் ரணங்களையே பேசிக்கொண்டிருக்கும். சினிமா எ…
-
- 0 replies
- 200 views
-
-
“ ‘மா’ குறும்படம் நயன்தாரா மேடத்துக்குப் பிடிச்சிருந்தது... அதனால என் கதைல நடிக்கிறாங்க!” ‘லட்சுமி’ குறும்பட இயக்குநர் சர்ஜூன் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய குறும்படம் 'லஷ்மி'. இயக்குநர் சர்ஜூன் எடுத்து இருந்த இந்தக் குறும்படத்தில் துணை நடிகை லட்சுமி நாயகியாக நடித்திருந்தார். ஒரு நடுத்தர வீட்டுப் பெண்ணின் வாழ்க்கை முறையைப் பேசியிருந்த இந்தப் படத்தை பற்றிப் பலரும் விவாதித்தனர். எதிர்மறையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றிருந்தாலும், படத்தைப் பார்த்தவர்கள் எண்ணிக்கை என்னமோ அதிகம்தான். இதற்கிடையில் சர்ஜூன் தனது அடுத்த குறும்படமான 'மா' படத்தைச் சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டார். கெளதம் வாசுதேவ் மேனனின் 'ஒன்றாக' நிறுவனம் தயாரித்திர…
-
- 0 replies
- 199 views
-
-
சினிமா என்பது சிலரை மட்டும் உச்சத்தில் வைத்துவிட்டு பலரை அனாதையாய் , ஏழைகளாய், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாய் படுகுழியில் தள்ளிவிடுகிறது. அதில் கனகாவும் ஒருவர், தனது தாயாரின் இறப்போடு அரைநிலை மனநிலைபாதிக்கப்பட்டவராக, கிடைத்த ஒருசில சினிமா வாய்ப்புக்களும் இல்லாதுபோக தன்னை தனிமை சிறையில் தானே அடைத்துக்கொண்டு வெளியுலக தொடர்புகள் எதுவுமே வைத்துக்கொள்ளாது ஒரு பாழடைந்த பங்களாவில் வாழ்ந்தார் கனகா. நீண்ட நாட்களின் பின்னர் நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்தபோது இப்படியிருந்தார். பெயரை மட்டும் குறிப்பிடாது விட்டிருந்தால் இவர் யாரென்று ஊகிப்பதே மிக கடினமாகியிருக்கும் பலருக்கு.
-
- 0 replies
- 199 views
-
-
பட மூலாதாரம்,X/ V CREATIONS AND KAVITHALAYA PRODUCTIONS கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஆளவந்தான் (2001), முத்து (1995) திரைப்படங்கள் நேற்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, வடிவேலு, மனோரமா உள்ளிட்டோர் நடிப்பில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் முத்து. ஜனரஞ்சகமான இத்திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைத்தது. அதேபோல, 2001-ஆம் ஆண்டு கமல்ஹாசனின் இருவேறுபட்ட நடிப்பில் வெளிவந்த திரைப்…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_ 4 மணி நேரங்களுக்கு முன்னர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான மாரீசன் திரைப்படம் இன்று (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வடிவேலு, ஃபகத் ஃபாசில், கோவை சரளா, லிவிங்ஸ்டன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'மாமன்னன்' படத்தில் எதிரும் புதிருமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில், இந்தப் படத்தில் இணக்கமாக இருப்பது போன்ற காட்சிகளைக் கண்ட ரசிகர்களுக்கு படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இருவரும் தங்களுக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களை கச்சிதமாக கையாளக் கூடியவர்கள் என்பதும் எதிர்பார்ப்புக்கான மற்றொரு காரணம். இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ம…
-
- 1 reply
- 199 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய சிம்ஃபொனி வரும் மார்ச் 8-ஆம் தேதி லண்டன் நகரில் வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனி என்றால் என்ன? 'சிம்ஃபொனி' இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்? கேள்வி: சிம்ஃபொனி என்றால் என்ன? பதில்: சிம்ஃபொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஒரு ஒத்திசைத் தொகுப்பு. இந்த இசைத் தொகுப்பு, பல பகுதிகளை, பெரும்பாலும் நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். இந்தப் பகுதிகள் movements என்று குறிப்பிடப்படுகின்றன. அத…
-
- 2 replies
- 197 views
- 1 follower
-
-
பாட்டல் ராதா: விமர்சனம்! Jan 26, 2025 மதுப்பிரியர்களின் மனதை அசைத்தால் நன்று! ’இருபது வருஷத்துக்கு முன்னால இவ்வளவு பேர் குடிச்சாங்களான்னு தெரியலை’, ‘முப்பது வருஷத்துக்கு முன்னால இவ்ளோ கடைகள் கிடையாது தெரியுமா’, ‘நாப்பது வருஷத்துக்கு முன்னால எல்லாம் குடிக்கறவனை கேவலமாதான் நினைப்பாங்க’, ‘பொடி போடுறது, போயிலை போடுறதையே மோசமான பழக்கங்களா நினைச்ச காலம் ஒண்ணு உண்டு’. கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இப்படிப் போதை குறித்த கருத்துகள் மாறி வந்திருப்பதைக் காண முடியும். Bottle Radha Movie Review ‘மது குடிக்காதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்’ என்கிற நிலையை இன்று அது அடைந்திருக்கிறது. இந்தச் சூழலில், குடியின் தீமைகளை விளக்…
-
- 0 replies
- 197 views
-
-
இஷா கோபிகரை நினைவூட்டும் ‘என் சுவாசக் காற்றே’! 26 Feb 2025, 8:10 PM சில திரைப்படங்கள் சில நினைவுகளின் எச்சங்களாகத் திகழும். அப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்களே அதனை மறந்திருந்தாலும், அதனைப் பார்த்து ரசித்தவர் மனதில் கோடானுகோடி எண்ணங்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். எந்தவொரு கலைப்படைப்புக்கும் அது பொருந்தும். அந்த வகையில், ‘என் சுவாசக் காற்றே’ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மீதமிருக்கிறது. அந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தந்த பாடல்களைக் கேட்டுவிட்டு, ‘மிஷன் இம்பாஸிபிள்’ டாம் க்ரூஸ் போன்று அரவிந்த் சாமி சாகசம் செய்யும் ஸ்டில்களை பார்த்துவிட்டு ஆவலோடு அப்படத்தைக் காண தியேட்டருக்குச் சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. வீணான ‘காஸ்ட்டிங்’! ஒரு அழகான…
-
- 0 replies
- 194 views
-
-
தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு எடுத்துச்செல்லும் ‘பொடி எழுத்துக்கள்’: சப்-டைட்டில் தொழில்நுட்பமும், சுவாரசியங்களும்! ரஜினி படம் ஒன்று வெளியாகிறது என்றால் எதிர்பார்ப்பு, பரபரப்பு எல்லாம் சகஜம்தான். இம்முறை சற்று கூடுதலாக அமெரிக்கா, இங்கி லாந்து உள்ளிட்ட நாடுகளில் 500 திரைகள், இலங்கை, ஆஸ்திரேலியா, அரபுதேசத்தில் 175 திரைகள், மலேசியா, சிங்கப்பூரில் 200 திரைகள், இதர நாடுகளில் 25 திரைகள் என்று 1,000 வெளிநாட்டுத் திரைகளில் தோன்றப் போகிறார் ‘கபாலி’. இன்றைய சினிமா வர்த்தகத்தில் வெளி நாட்டு வசூல் என்பது மிக முக்கிய அங்கமாக மாறியிருக்கிறது. சல்மான் கானின் ‘சுல்தான்’ இந்திப் படம் உள்நாட்டில் 350 கோடிகள் வசூல் சாதனை என்றால் வெளிந…
-
- 0 replies
- 194 views
-
-
இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை இந்திய ஜனாதிபதி வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை இந்திய ஜனாதிபதி கோவிந்த் வழங்கியுள்ளார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவிலேயே இவ்வாறு வழங்கப்பட்டள்ளது இசைஞானிஇளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று மாலை பத்ம விருதுகள் வழங்கும் விழா ஆரம்பமாகிய நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா…
-
- 0 replies
- 193 views
-
-
'ஸ்க்விட் கேம் படமாக்கப்பட்டபோது 9 பற்களை இழந்தேன்'- விரைவில் வெளியாகும் இரண்டாம் பாகம்; தொடரின் இயக்குநர் கூறுவது என்ன? பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, கொரிய நாடகமான ஸ்க்விட் கேம் 2021-இல் வெளியிடப்பட்டபோது உலகளவில் பேசப்பட்டது எழுதியவர், ஜீன் மெக்கென்சி பதவி, சோல் செய்தியாளர் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பிரபலமான கொரிய வெப் சீரிஸான ‘ஸ்க்விட் கேமை’ உருவாக்கியவர் அந்த தொடரின் படப்பிடிப்பின் போது மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார், படப்பிடிப்புத் தளத்தில் அவருக்கு ஆறு பற்கள் உடைந்தன என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதைப்பற்றி அவரிடமே கேட்டபோது, "ஆறு அல்ல, எட்டு-ஒன்பது பற்கள் உடைந்திருக்கலாம்," என…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் தொடரும் சந்தேகம் - உடல்கூராய்வில் நடந்ததாக பிணவறை ஊழியர் வெளியிட்ட தகவல்கள் படக்குறிப்பு, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக கூப்பர் மருத்துவமனை யில் அவரது உடல் கூராய்வு செய்யப்பட்டபோது உடனிருந்ததாக கூறப்படும் ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல்கள் சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாகியிருக்கின்றன. கூப்பர் மருத்துவமனையின் பிணவறை ஊழியர் எனக் கூறும் ரூப்குமார் ஷா என்பவர் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில், "சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடலைப் பார்த்தபோது அது (எனக்கு) தற்கொல…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
வணக்கம், இப்படத்தை முழுமையாக பாருங்கள். இப்படத்தின் தயாரிப்புச் செலவை மீட்டெடுக்க நன்கொடை தாருங்கள். அந்த உதவி நாங்கள் மேலும் இத்தகையப் பணிகளைச் செய்ய உதவும். நன்றி Ramana Communications presents Thirukkural FULL MOVIE | IlaiyaRaja Musical | A.J. Balakrishnan | திருக்குறள் விமர்சனங்கள் தினமலர் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "படத்தின் முடிவில் வரும் போர்க்களக் காட்சிகள் மற்றும் மதுரை இலக்கியச் சங்கத்தில் திருவள்ளுவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஆகியவற்றை இயக்குநர் பாலகிருஷ்ணன் காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாக இருந்தது" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[5] இந்து தமிழ் திசை வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "திருக்குறளின் மேன்மையை சிறந்த பொழுதுபோக்குப் படமாகக் கொ…
-
- 0 replies
- 191 views
-
-
பணத்துக்காக நான் படம் பண்ண வரல -- மணி ரத்தினம்
-
- 0 replies
- 191 views
-
-
கமல் - ஷங்கர் கூட்டணியில் 'இந்தியன்' இரண்டாவது பாகம்! அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த 1996-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் 'இந்தியன்'. இந்தப் படத்தில் கமல்ஹாசன் வயதான தோற்றத்திலும் இளமையான ஒரு வேடத்திலும் நடித்திருப்பார். கமல்ஹாசனின் அட்டகாசமான நடிப்பாலும் விறுவிறுப்பான திரைக்கதையாலும் படம் பட்டிதொட்டி எங்கும் தெறி ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடித்ததுக்காக கமல்ஹாசனுக்குத் தேசிய விருதும் கிடைத்தது. இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று வெகுநாள்களாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்தப் படத்துக்குச் சம்பந்தப்பட்ட தரப்பு இதுநாள் வரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்ப…
-
- 0 replies
- 190 views
-
-
பட மூலாதாரம்,VIJAYSETHUPATHI FB கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,இலங்கையில் இருந்து பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பைலட் பிரேம்நாத், நங்கூரம், தீ, மோகனப் புன்னகை போன்ற இலங்கை - இந்திய கூட்டு தயாரிப்பில் உருவான சுமார் 10திற்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட வரிசையில் 800 திரைப்படமும் இடம்பிடிக்கின்றது. இலங்கையிலிருந்து உருவான பிரபல்யங்களுக்கு மத்தியில், இலங்கையின் விளையாட்டுத்துறையில் பாரிய சவால்களுக்கு மத்தியில் தனக்கென்று இடத்தை பிடித்து, வரலாற்றில் இடம்பிடித்தவர் முத்தையா முரளிதரன். 1972ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி இலங்கையின் மலையக பகுதியான கண்டியில…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
டிசம்பர் 9: திரை – ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ? PrakashDec 07, 2022 09:23AM இந்த மாதம் 9ஆம் தேதி அன்று மட்டும் திரையரங்குகளில் 5க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாக உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் கடைசி மாதமான டிசம்பரில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதேபோலத்தான் இந்த ஆண்டும் ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன. இதில், கடந்த டிசம்பர் 2ஆம் தேதி மட்டும் விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி., விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, மஞ்சக்குருவி, தெற்கத்தி வீரன் உள்ளிட்ட படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில், திரையுலகில் டிசம்பர் 9ஆம் தேதி ஒரு முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி, அந்த த…
-
- 0 replies
- 186 views
-
-
பட மூலாதாரம்,NUTAN AUDIO KANNADA படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட கன்னட மொழி திரைப்படம் 'லவ் யூ' கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 21 மே 2025, 03:08 GMT செயற்கை நுண்ணறிவின் பயன்கள் குறித்து பல்வேறு பட்டியல்கள் போடப்பட்டாலும், வருங்காலத்தில் எந்தெந்த துறைகளில், எத்தனை பேரின் வேலைகள் இந்த தொழில்நுட்பத்தால் பறிபோகும் என்ற அச்சமே ஏ.ஐ (AI) தொடர்பான விவாதங்களின் முக்கிய அம்சமாக உள்ளது. அப்படியிருக்க, முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட ஒரு கன்னட மொழி திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. 'லவ் யூ' எனப்படும் அந்த திரைப்படம், வெறும் 10 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்டது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படத்தில், ஏஐ இசையம…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,JANASENA PARTY/FACEBOOK படக்குறிப்பு, நடிகர் பவன் கல்யாண் கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 30 ஜூலை 2023, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் (ஃபெஃப்சி) (Film Emloyees Federation Of South India) புது விதிகள் குறித்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்தது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, ஃபெஃப்சி புதிய விதிகளை அறிவித்திருந்தது. தமிழ் திரைப்படங்களில், தமிழ் தொழில…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-