வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
தாங்க்யூ பட் ஸ்பென்சர்! பட் ஸ்பென்ஸரைத் தெரியுமா உங்களுக்கு? பழைய கௌபாய் படங்களைப் பார்க்கிற வழக்கம் உள்ளவர்களால் இவரை மறக்க முடியாது. இவரும் டெரன்ஸ் ஹில்லும் ஜோடி சேர்ந்து கலக்கிய படங்கள் இருபது இருக்கும். லாரல் & ஹார்டி போல கௌபாய் படங்களில் இவர்கள் இணைந்து வந்தால் ரசித்துப் பார்க்கும் கூட்டமே உண்டு. பட் ஸ்பென்ஸர் நேற்று - 27 ஜூன் 2016 - தனது 86வது வயதில் மரணமடைந்தார். கொஞ்சம் குண்டான பட் ஸ்பென்ஸர், ரியல் லைஃபிலும் ஒரு ஜாலியான பேர்வழி. அவர் பெயரிலேயே அது தெரியும். அவரது இயற்பெயர் Carlo Pedersoli. 1951ல் நடித்த முதல் படத்தில் ஆரம்பித்து ஐந்தாறு படங்களில் அந்தப் பெயரில்தான் வலம் வந்தார். ஒரு படத்தில் நடிக்கும்போது, காரணமாக - அது என்ன என்பதை கீழே …
-
- 3 replies
- 707 views
-
-
நடிகை சமந்தாவை பார்க்க தள்ளுமுள்ளு: மதுரையில் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி தனியார் நிறுவன திறப்பு விழாவுக்கு வந்த நடிகை சமந்தாவைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். மதுரை பை-பாஸ் சாலையில் தனியார் அழகு நிலைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகை சமந்தா நிறுவனத்தை திறந்துவைத்தார். அவர் கலந்துகொள்ளும் தகவல் பரவியதால் அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அதனால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. திறப்பு விழாவுக்கு அவர் காரில் வந்து அங்கு இறங்கியபோது இளைஞர்கள் அவரைப் பார்க்க முண்டியடித்தனர். இதனால், கடை முன் தள்ளுமுள…
-
- 2 replies
- 399 views
-
-
தத்துவத் தேரோட்டியின் வித்தகப் பாடல்கள்! ஜூன் 24 : கவியரசர் கண்ணதாசன் 89-வது பிறந்த தினம் திரைப் பாடல்களை ஒரு இலக்கிய வகையாகக் கொள்ள முடியுமா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. அப்படியொரு அங்கீகாரம் திரைப்பாடல்களுக்குக் கிடைக்குமானால் அதில் முதலில் இடம்பிடிப்பவை கவியரசு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களாவே இருக்கும். இது ஒரு ரசிகனின் உணர்ச்சிகரமான வாதம் அல்ல. கண்ணதாசனின் திரைத்தமிழைத் தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்வாங்கிக்கொண்ட தமிழர்கள் தரும் நியாயமான கவுரவம். பாடாத பொருளில்லை கவிதைத் தமிழை எளியமையாகவும் நயத்துடனும் திகட்டத் திகட்டத் திரையில் அள்ளித் தெளித்த முத்தையா கசப்பான…
-
- 1 reply
- 566 views
-
-
ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கில் 'கபாலி' திரையிடல்! பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கில் முதல் இந்திய படமாக 'கபாலி' திரையிடப்பட இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தை தணிக்கை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 15ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இப்படம் பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Gr…
-
- 0 replies
- 362 views
-
-
என் இடுப்பை கிள்ளினார்கள்... சிவகார்த்திகேயன் ரெமோ ரகசியம். சென்னை: என்னை நிஜ கதாநாயகி என்று நினைத்து படப்பிடிப்பு தளத்தில் என் இடுப்பை கிள்ளினார்கள் என்று நடிகர் சிவகார்த்திக்கேயன் கூறியுள்ளார். ரெமோ படத்தில் சிவகார்த்திக்கேயன் மூன்று வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் அழகு தேவதையாக காட்சி தருகிறார் சிவகார்த்திக்கேயன். அழகாக கதாநாயகி கீர்த்தி சுரேஷை விட சிவகார்த்திக்கேயன்தான் அழகாக இருக்கிறார். பெண்ணாக நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் அனுபவம் எப்படி இருந்தது என்று போஸ்டர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தொகுப்பாளினி கேட்டார். சூட்டிங் முடிந்து எப்படி வந்திருக்கிறது என்று மானிட்டர் பார்த்துக்கொண்டிருக்…
-
- 1 reply
- 473 views
-
-
தமிழ் சினிமாவில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் விஜய். அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜயின் பிறந்த நாள் இன்று. வழக்கமாக அவரது பிறந்த நாளை ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் தனது பிறந்த நாளை ஹைதராபத்தில் தன்னுடைய 60-வது படத்தின் படப்பிடிப்பில் எளிமையாக கேக் வெட்டி கொண்டாடினார் என கூறி சில புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதில் நடிகர் விஜய் தனது பிறந்த நாளை நடிகை கீர்த்தி சுரேஷ், காமெடி நடிகர் சதீஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகீயோருடன் கொண்டாடியதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படமும் இந்த செய்தியை உறுதிபடுத்துவதாகவே இருந்தது. ஆனால் அந்த புகைப்படம் நடிகர் விஜயின் பிற…
-
- 4 replies
- 1.7k views
-
-
தனுஷால் காயமடைந்த நயன் ஐதராபாத்தில் நடைபெற்ற 63ஆவது பிலிம்;ஃபெயார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா, வணக்கம் சொல்லி கைகுலுக்குவதற்காக சென்ற இடத்தில் மம்முட்டியின் புறக்கணிப்பால் அப்செட்டானது ஒருபுறம் இருக்க, அதே விழாவில் தனுஷின் செயலாலும் காயமடைந்துள்ளாராம். இதை விழா மேடையிலேயே பிரதிபலித்தும் உள்ளார் நயன்தாரா. விடயம் இதுதான்.. தனுஷ் தயாரித்த காக்கா முட்டை சிறந்த திரைப்படமாக தேர்வானதால் அந்த விருதை பெறுவதற்காக தனுஷ் மேடையேறினார். மேலும் காக்கா முட்டை திரைப்படம் பற்றியும்; கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேசின் நடிப்பு பற்றியும் பாராட்டி பேசியுள்ளார். அதேசமயம் அவர் தயாரித்த இன்னொரு திரைப்படமான நானும் ரௌடி தான் திரைப்பட…
-
- 0 replies
- 364 views
-
-
ஸ்டார் ட்ரெக் படங்களில் நடித்த ஆன்டன் எல்சின் விபத்தில் உயிரிழப்பு 27 வயதான ஹாலிவுட் நடிகர் ஆன்டன் எல்சின் விபத்து ஒன்றில் உயிரிழந்த செய்தியை அவருடைய ரசிகர்களும், நண்பர்களும் அதிர்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். பாவெல் செக்கோவ் என்ற கதாபாத்திரத்தில் சமீப ஸ்டார் ட்ரெக் படங்களில் நடித்துள்ள எல்சின், லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவருடைய காரால் நசுக்கப்பட்டு உயிரிழந்தார். செங்குத்தான சாலை ஒன்றில் அந்த கார் பின் நோக்கி கீழே உருண்டு, எல்சினை செங்கல் தூண் மற்றும் வேலி ஒன்றின் மீதும் மோத செய்தது. நிறைய திறமைகளை கொண்ட எல்சின், தாராள இதயம் கொண்டவர் என்றும், வயதுக்கு மீறிய அறிவை கொண்டிருந்தவர் ஆனால் அவரது ந…
-
- 0 replies
- 348 views
-
-
பிலிம்பேர் விருது: தமிழில் விருது பெற்றவர்கள் விவரம் இந்தியத் திரையுலகில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் மிக முக்கியமான விருதுகளில் ஒன்று பிலிம்பேர் விருதுகள். இதில் தென்னிந்தியாவுக்கென்று தனியாக விருது வழங்கும் விழாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதற்கான விழா தென்னிந்திய மாநகரங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த விதத்தில் 63வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் சனிக்கிழமை பிரம்மாண்டாமாக நடைபெற்றது. அதில் தமிழ்த் திரையுலகில் விருது பெற்றவர்கள் விவரம்... சிறந்த படம் - காக்கா முட்டை சிறந்த இயக்குனர் - மோகன் ராஜா (தனி ஒருவன்) சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (…
-
- 0 replies
- 280 views
-
-
ஷாருக்கான் எங்கு பேசினாலும் அவர் தனது பேச்சுக்களில் ஒரு தத்துவமிக்க, மேலாண்மை கருத்துக்கள் நிறைந்ததாக இருக்கும். அப்படி தான் இந்த மாதம் துபாயில் நடந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல தனது நகைச்சுவையான பாணியில் தனது பேச்சை துவங்கினார் ஷாருக். அதில் தனது தந்தை தனக்கு அளித்த ஐந்து பரிசுகள் தன்னை வாழக்கையின் அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றதாகவும், முன்னேற அவை ஒவ்வொன்றும் பாடங்களை கற்றுத்தந்ததாகவும் கூறினார். ஷாருக்கான் ''ஹாய் அனைவருக்கும் வணக்கம், இங்குள்ள யாரவது என் உரை பிடிக்கவில்லை என்றால் பாதியில் எழுந்து செல்லலாம். ஃபீல் ஃப்ரீ. ஏனென்றால் ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும். வாழ்க்கையில் என் தந்தை எனக்கு தந்த ஐந்து பரிசுகள் என்னை வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய செய்ய…
-
- 0 replies
- 422 views
-
-
போர்க்களத்தில் ஒரு பூ: இசைப்பிரியாவின் தாயாருடன் பேசி சுமுகத்தீர்வு காண உத்தரவு இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போர் மற்றும் இலங்கை இராணுவத்தினரால் இசைப்பிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களை மையமாக வைத்து ‘போர்க் களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்தை இயக்குநர் கே.கணேசன் இயக்கினார். இப் படத்தை ஏ.சி.குருநாத் செல்லசாமி தயாரித்துள்ளார். இந்த படத்தில் பாலியல் காட்சிகள் மற்றும் இந்திய, இலங்கை தொடர்பான பிரச்சினைகள் இடம்பெற்றிருப்பதால் அதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கடந்த ஆண்டு மறுத்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் இப்படத்தை வெளியிடஅனுமதிக்கக…
-
- 0 replies
- 374 views
-
-
மும்பை, இந்தி நடிகை அலிஷாகானின் ஆபாச படம் இணையதளத்தில் வெளியானதால் அவரை வீட்டில் இருந்து விரட்டி விட்டனர். இதனால் அவர் சாப்பாட்டுக்கு கூட வழி இன்றி ரோட்டிலும், கோவில்களிலும் படுத்து தூங்குகிறார். இந்தி நடிகை டெல்லியை சேர்ந்த மாடல் அழகி அலிஷாகான். இவர் ‘மை ஹஷ்பன்ட் வைப்’ என்ற இந்தி படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் அலிஷாகான் இளைஞர் ஒருவருடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். தன்னுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞரே அந்த வீடியோவை வெளியிட்டு விட்டதாக அந்த புகாரில் கூறி இருந்தார். அனாதையாக சுற்றுகிறார் …
-
- 0 replies
- 635 views
-
-
‘போனோமா-சிரிச்சோமா-வந்த உடனே மறந்தோமா’ வகையில் அடுத்த படம் ‘முத்தின கத்திரிக்கா’ - விமர்சனம் ஒரே ஆளாய் கட்சி ஆரம்பித்து, ஒரே ஆளாய் அதை ஒப்பேற்றிக் கொண்டிருக்கும் சுந்தர்.சிக்கு நாற்பது வயதாகியும் திருமணமாகவில்லை. பூனம் பாஜ்வாவைப் பார்த்து காதலில் விழும் அவருக்கு, பெண் கேட்கப் போன இடத்தில் அதிர்ச்சி. அதோடு மட்டுமல்லாமல், ‘கவுன்சிலராகக் கூட வக்கில்ல’ என்று பூனம் பாஜ்வாவின் அப்பா ரவி மரியா சொல்லிவிட, எம்.எல்.ஏ. ஆக ஐடியா செய்கிறார். பழைய பாட்டு புத்தகத்தில் போட்டிருக்கிற மாதிரி.. ‘மீதியை வெள்ளித்திரையில் காண்க!’ பேய்ப் படங்கள், ஆர்ட் படங்கள் என்று மாறி மாறி ட்ரெண்டில் இருக்கும் தமிழ் சினிமாவில் இப்போது காமெடி படங்களின் காலம். படத்தில் ஒரு காட்…
-
- 2 replies
- 1k views
-
-
திரை விமர்சனம்: எனக்கு இன்னொரு பேர் இருக்கு தாதா என்று நம்பப்படும் ஒரு சாதாரண மனிதன், தாதாக்களின் உலகில் பெறும் அனுபவங்கள்தான் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம். சென்னை ராயபுரத்தைத் தன் கைக்குள் வைத்திருக்கும் ராயபுரம் நைனா (சரவணன்), தன் மகள் ஹேமாவை (ஆனந்தி) ஒரு தாதாவுக்குக் கட்டிக்கொடுத்து அவரை அடுத்த நைனாவாக்க நினைக்கிறார். நைனாவின் ஆட்கள் சில தற்செயலான நிகழ்வுகளால் ஜானியை (ஜி.வி. பிரகாஷ்) பெரிய தாதாவாக நினைத்துவிடுகிறார்கள். அவர் கள் பரிந்துரையை நைனாவும் ஏற்கிறார். ஆனால், பிரகாஷோ ரத்தத்தைக் கண்டாலே வலிப்பு வந்துவிடும் விசித்திர நோயாளி. எனினும், ஆனந்தியை ஒரு கடை யில் சந்தித்து மனதைப் பறி கொடுக்கும் பிரகாஷ் …
-
- 0 replies
- 295 views
-
-
கபாலி அதிரடியால் கலங்கிப்போன யூடியூப் கபாலி டீசர் எப்போதும் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். ரஜினிகாந்த் பழைய ஸ்டைலில் பழைய டைட்டிலில் ஒவ்வொரு அசைவிலும் மிரட்டுகிறார்.இந்த டீசர் லைக்ஸ் 1.5 லட்சத்தை தாண்ட ஹிட்ஸ் மட்டும் காட்டாமலேயே இருக்கிறது. ஏனெனில், பலரும் டீசரை பார்வையிடுவதால் சில மணி நேரம் கழித்து தான் யூடியூப் சரியான எண்ணிக்கையை பதிவேற்றும் என கூறப்பட்டுள்ளது. தற்போது கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே தன் டுவிட்டர் பக்கத்தில் கபாலி 1 மணி நேரத்தில் 1 மில்லியன் ஹிட்ஸை எட்டியிருப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் வேதாளம், தெறி என அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது…
-
- 5 replies
- 920 views
-
-
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் திருலோகச்சந்தர் மறைவு திருலோகச்சந்தர் | கோப்புப் படம்: ஆர்.ரகு பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் வயது மூப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. ஏ.சி.திருலோகச்சந்தர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 65 படங்களை இயக்கியவர். அன்புள்ள அப்பா, என்னைப் போல் ஒருவன், பத்ரகாளி, டாக்டர் சிவா, எங்க மாமா, தெய்வ மகன், இரு மலர்கள், அதே கண்கள், ராமு, அன்பே வா உள்ளிட்ட பல படங்கள் திருலோகச்சந்தர் இயக்கிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கவை. தன் திரையுலக அனுபவங்களைத் தொகுத்து நெஞ்சில் நி…
-
- 2 replies
- 1.1k views
-
-
ரஜினியின் உடல்நிலையை முன்வைத்து பரவும் வதந்திகள்: குடும்பத்தினர் விளக்கம் நடிகர் ரஜினிகாந்த் | கோப்புப் படம்: கே.பாக்கிய பிரகாஷ். ரஜினியின் உடல்நிலை குறித்து வெளியான வதந்திகளுக்கு அவருடைய குடும்பத்தினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். 'கபாலி' படத்தின் பணிகள் முடிந்தவுடன் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு ஒய்வுக்கு சென்றார் ரஜினி. ஆனால், ரஜினி ஒய்வுக்கு செல்லவில்லை, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியானது. உடல்நிலை வதந்தி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், "அப்பாவுடன் அமெரிக்காவில் ஊர்சுற்றி வருகிறேன்" என்று அவருடைய ஐஸ்வர்யா தனுஷ் புகைப்படத்துடன் பகிர்ந்தார். ஆனால், பலரும் அவர் பதிந்திருக்கும் புக…
-
- 0 replies
- 464 views
-
-
திரை விமர்சனம்: ஒரு நாள் கூத்து மூன்று பெண்களின் திருமண வாழ்க்கை தொடங்குவதற்கு முன் நடக்கும் கூத்துதான் ‘ஒரு நாள் கூத்து’. மென்பொருள் துறையில் வேலை செய்யும் உயர்தட்டு வர்க்கத்துப் பெண் (நிவேதா பெதுராஜ்), பண்பலை வானொலித் தொகுப்பாளராக இருக்கும் நடுத்தர வர்க்கத்துப் பெண் (ரித்விகா), அப்பா, அம்மாவுக்குக் கீழ்ப்படிந்து பொறுமை காக்கும் கிரா மத்துப் பெண் (மியா ஜார்ஜ்) ஆகியோர் தங்கள் திரு மணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மூவ ருக்கும் மூன்று விதமான பிரச்சினைகள். அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்பதுதான் படம். திருமணத்துக்கு முந்தைய பரபரப்புகள், நடை முறைச் சிக்கல்கள…
-
- 1 reply
- 770 views
-
-
அடுத்த சன்னி லியோன் ஸ்ருதி? சமீபகாலமாக ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சி எல்லை விரிந்து கொண்டே போகிறது என்று பொலிவூட்டில் சந்தோஷமாக சொல்கிறார்கள். சினிமாவில் மட்டுமின்றி வெளியே பத்திரிகைகளுக்கு போஸ் கொடுக்கும்போதும், பொது நிகழ்ச்சிகளிலும் மிகவும் தாராளமாக கேமரா கண்களை தன் உடலுக்குள் ஊடுருவ அனுமதிக்கிறார் என்கிறார்கள். GQ magazine என்கிற பத்திரிகைக்கு அவர் கொடுத்த போஸ்கள் ஹொலிவூட்டையே அசைத்துப் பார்க்கக்கூடிய அளவுக்கு கவர்ச்சியின் உச்சம். அவருடைய லேட்டஸ்ட் பொலிவூட் படமான ‘ராக்கி ஹேண்ட்சம்’ திரைப்படத்திலும் ‘திறந்த’ மனதோடு திறமை காட்டியிருக்கிறார். …
-
- 1 reply
- 427 views
-
-
"சந்தானத்துக்கும் எனக்கும் தெய்வீக நட்பு"-ஆஷ்னா சவோி ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ என்று அடுத்தடுத்து சந்தானத்துக்கு ஜோடி போட்டு நடித்த ஆஷ்னா ஜாவேரி, முதன்முறையாக சந்தானம் இல்லாத படத்தில் நடிக்கிறார். “ஏன் சந்தானத்தை கைவிட்டு விட்டீர்கள்? என்கிற கேள்வியோடு நேர்காணலை ஆரம்பித்தோம். ஹலோ பிரதர்! நான் சந்தானத்தோடு மட்டும்தான் நடிப்பேன்னு நீங்களா முடிவெடுத்துட்டா எப்படி? இஷ்டத்துக்கும் மனசுக்கு தோணினதை எல்லாம் எழுதிக்க வேண்டியது. உங்க மூக்கையெல்லாம் உடைக்கிற படமா நான் இப்போ நடிக்கிற ‘மீன் குழம்பும் மண்பானையும்’ இருக…
-
- 0 replies
- 371 views
-
-
தமிழ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கபாலி பாடல்கள் தமிழ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கபாலி பாடல்கள் வெளியாகியுள்ளது. 1) தீம் மியூசிக் நெருப்புடா என ஏற்கனவே தீயை பற்ற வைத்த தீம் சாங், பலரின் எதிர்ப்பார்ப்பாக தற்போது வெளிவந்துள்ள கபாலி ஆல்பத்தில் ஹிட் ஆவது இந்த தீம் மியூஸிக் தான். 2) உலகம் ஒருவனுக்கா சூப்பர் ஸ்டார் படம் என்றாலே ஓப்பனிங் சாங் தான் செம்ம மாஸ். அதிலும் தத்துவங்களை அள்ளி தரும் பாடலாக அமைந்துள்ளது. 3) வானம் பார்த்தேன் சூப்பர் ஸ்டார் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மெலடி பாடல் 4) வ…
-
- 0 replies
- 510 views
-
-
திரை விமர்சனம்: வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் காவல் துறை வேலையை லட்சியமாகக் கொண்ட நிக்கி கல்ரானி, காத லிக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் பணத் தைத் தொலைத்துவிட்டு அல்லா டும் விஷ்ணு விஷால், இரு வருக்கும் இடையில் ஏற்படும் காதல், உள்ளூர் எம்.எல்.ஏ. நடத்தும் இலவசத் திருமண நிகழ்ச்சியில் ஒரு ஜோடி குறைந்ததால் நடிப்புத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ளும் சூரிக்கு ஏற்படும் அவஸ்தைகள்... இவை ஒரு புறம். நெடு நாட்கள் கோமாவில் இருந்து இறந்துபோகும் ஒரு அமைச்சர் சேர்த்துவைத்திருக்கும் 500 கோடி ரூபாய் குறித்த ரகசியம் எம்.எல்.ஏ. ‘ஜாக்கெட்’ ஜானகிராமனுக்கு (ரோபோ சங்கர்) மட்டும்தான் தெரியும். அவரோ விபத்தில் சிக்கிப் பத்து…
-
- 1 reply
- 440 views
-
-
இசைத் துறையில் அதிகபட்ச தேசிய விருதுகளை வென்ற ஒரே இசையமைப்பாளர் இளையராஜாதான். இதுவரை 5 முறை அவர் தேசிய விருதுகளை வென்றுள்ளார். மூன்று படங்களுக்கு பொதுவான இசையமைப்பாளருக்குரிய விருதினையும், இரு படங்களுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதுகளையும் வென்றுள்ளார். சலங்கை ஒலி என்ற பெயரில் தமிழில் வெளியான படம் சாகர சங்கமம். கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமல் - ஜெயப்ரதா நடித்த தெலுங்குப் படம். இந்தப் படத்தின் இரு ஹீரோக்கள் இளையராஜாவும் கமல்ஹாசனும். வான் போலே வண்ணம் கொண்டு..., தகிட ததிமி, மௌனமான நேரம், நாத விநோதங்கள்... என இளையராஜா இசையில் வெளியான அத்தனைப் பாடல்களும் இந்திய திரையுலகையே தென்னகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தன. முதல் தேசிய விருதினைப் பெற்றார்…
-
- 1 reply
- 638 views
-
-
கிறிஸ்தவ திருச்சபையின் விரோத போக்கினால், தன்னுடைய பாட்டி மது ஜ்யோத்சனா அகோரியின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வேதனை தெரிவித்துள்ளார். பிரியங்கா சோப்ராவின் பாட்டி கடந்த ஜூன் 3-ம் தேதி இறந்துபோனார். தன் இறப்புக்கு முன், தன்னுடைய சொந்த ஊரான ஆட்டமங்கலத்தில் உள்ள சர்ச்சில் தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்பதை அவரின் கடைசி ஆசையாக வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து அவரின் உடல் கேரள மாநிலம் குமரகத்தில் உள்ள அவரின் சொந்த கிராமத்துக்கு எடுத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது. ஜூன் 5-ம் தேதி மும்பையில் இருந்து கோட்டயத்துக்கு உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் ஆட்டமங்கலத்தில் அடக்கம் செய்ய, அங்கிருந்த திருச்சபை அதிகாரிகள் எதிர்ப்பு…
-
- 0 replies
- 386 views
-
-
மக்களைக் கவர்ந்தவரின் மரணம் சொன்ன செய்தி! #சாவித்திரி எனும் இறைவி! தமிழ்த்திரையுலகில் 1950 மற்றும் 60களில் சுண்டி இழுக்கும் தன் அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை சாவித்திரி. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலதரப்பட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்ற அவரது அந்திமகாலம் மிக சோகமான ஒரு திரைப்படத்திற்கான கதை போன்று கண்ணீரை வரவழைப்பவை. வெற்றிகரமான நடிகையாக உலாவந்த தேர்ந்த நடிகையான சாவித்திரி நடிப்புத் தொழிலில் தன் சம்பாத்தியத்தில் வாங்கிக்குவித்த பங்களாக்கள், கார்கள், நகைகள் என அனைத்தையும் எதிர்காலத்தில் தன் பலஹீனங்களால் இழந்து வீதிக்கு வந்தவர். தெலுங்கு திரையுலகில் இன்றும் கதாநாயகர்களுக்கு நிகரான மரியாதையுடன் அணுகப்படும…
-
- 0 replies
- 2.5k views
-