வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
திரை விமர்சனம்: இறைவி ஆண்களின் நிதானமின்மையாலும் பொருளற்ற ஆவேசத்தாலும் பாதிக்கப்படும் பெண்களின் கதைதான் ‘இறைவி’. அருள் (எஸ்.ஜே.சூர்யா) திரைப்பட இயக்குநர். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் இவரது படம் வெளியாகாமல் இருக்கிறது. இதனால் அவர் பெரும் குடிகாரராக மாறிவிடுகிறார். இவரது மனைவி யாழினி (கமலினி முகர்ஜி) துயரத்தில் மூழ்குகிறார். அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா) அருளுக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவர் மைக்கேல் (விஜய் சேதுபதி). இவருக்கும் கணவனை இழந்த மலர்விழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மலர்விழியை மைக்கேல் காதலிக்கிறார், ஆனால் மலர்விழிக்கு காதலில் நம்பிக்கை இல்லை.…
-
- 0 replies
- 409 views
-
-
குணச்சித்திர நடிகர் பாலு ஆனந்த் திடீர் மரணம் கோவையை சேர்ந்த திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான பாலு ஆனந்த், இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். 'நானே ராஜா நானே மந்திரி', 'அண்ணா நகர் முதல் தெரு', 'ரசிகன் ஒரு ரசிகை', 'உனக்காகப் பிறந்தேன்' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் பாலு ஆனந்த். இன்றைய தலைமுறைக்கு நடிகராகவும் அறிமுகமானவர் பாலு ஆனந்த். 'வானத்தைப் போல', 'உன்னை நினைத்து' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார். கோவையை அடுத்த காளம்பாளையத்தைச் சேர்ந்த பாலு ஆனந்த், இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் உதவியாளராக 'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்தார். ஆர்.சுந்தர்ராஜனிடம் …
-
- 0 replies
- 670 views
-
-
இது நம்ம ஆளு - திரை விமர்சனம் கல்யாண ஏற்பாட்டுக்குக் குறுக்கே பழைய காதலும் புதிய சந்தேகங்களும் நுழைந்தால் என்ன ஆகும்? அதுதான் ‘இது நம்ம ஆளு.’ ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க் கிறார், சிவா (சிம்பு). ‘சகோ... சகோ’ என்று அவரை சதா வம்புக்கு இழுத்துக் கொண்டே உடன் இருக்கும் நண்பன் வாசு (சூரி). சென்னையில் ஒரு அறை எடுத்துக்கொண்டு வேலைக்குப் போவது, ஊர் சுற்றுவது என்று இருவரும் ஜாலி யாக வலம் வருகிறார்கள். மகன் சிம்புவுக்கு அப்பா ஜெயப்பிரகாஷ் திருவையாறில் வரன் பார்க்கிறார். அவர்தான் மைலா (நயன்தாரா). அவரைப் பார்த்ததும் சிம்புவுக்குப் பிடித்து விடுகிறது. ஆனால் தன் பழைய காதலி பிரியா (ஆன்ட்ரியா) பற்றி நயன் கேட்டதால் சிம்பு…
-
- 2 replies
- 842 views
-
-
மதுரை: தான் இறந்து விட்டதாக செய்தி பரப்பும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நடிகர் செந்தில் மதுரை போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போதுநகைச்சுவை நடிகர் செந்தில் இறந்து விட்டதாகச் செய்திகள் வாட்ஸ் அப்பில் பரவின.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நான் நலமுடன் இருக்கிறேன் என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.பின்னர் அந்த வதந்திகள் பரவவில்லை. இந்நிலையில், மீண்டும் நேற்று(திங்கள்) முதல் வாட்ஸ் அப்பில்,அதே வதந்தி பரவி வருவதாக நடிகர் செந்தில் கூறியுள்ளார்.இது தொடர்பாக மதுரை போலீஸாரிடம் "தான் இறந்து விட்டதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது திமுகவினரின் தூண்டுதல் பேரில…
-
- 0 replies
- 340 views
-
-
உறியடி - திரை விமர்சனம் சாதித் தலைவர்களின் மனதில் எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் அரசியல் வேட்கையையும் சுயநலத்தையும் தோலுரித்துக் கட்ட முயன்றிருக்கும் படம் ‘உறியடி’. இறந்துபோன சாதித் தலைவர் ஒருவருக்குச் சிலை வைப்பதில் கதை தொடங்குகிறது. சிலை வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் மறுப்பு தெரிவிக்கிறார். உடனே அரசியல் கட்சி தொடங்கத் திட்டமிடுகிறார்கள் சாதிச் சங்கத்தினர். சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள மைம் கோபி, ஒரு பொறி யியல் கல்லூரிக்கு எதிரே தாபா (உணவுக் கடை) நடத்திவருகிறார். அதில் மதுபானங்களும் விற்கப் படுகின்றன. இந்தக் கடைக்கு எப்போதும் மது அருந்த வரும் நான்கு மாணவர்களைத் தன் அபாயகரமான அரசியல் சதுரங்கத்தில் பகட…
-
- 0 replies
- 393 views
-
-
இளம் நடிகருடன் விரைவில் திருமணம்: நடிகை சமந்தா அறிவிப்பு இளம் நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் நடிகை சமந்தா பேட்டியளித்துள்ளார். ஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன். திருமணத் தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். திருமணத்துக்க…
-
- 19 replies
- 2k views
-
-
திரை விமர்சனம்: மருது சிறு வயதில் பெற்றோரை இழந்து விடும் விஷால், பாட்டியின் நிழலில் வளர்ந்து ஆளாகிறார். பாட்டி கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார். பாட்டி பக்கத்து ஊர் பெண்ணான திவ்யாவைக் காட்டி அவளைக் காதலித்து கல்யாணம் செய்துகொள்ளத் தூண்டுகிறார். உள்ளூர் அரசியலில் தவறான வழியில் வளர்ந்துவரும் ரவுடி ஆர்.கே.சுரேஷ், திவ்யாவின் குடும்பத்தை அழிக்கத் துடிக்கிறார். ஏன் அப்படித் துடிக்கிறார், திவ்யாவின் குடும்பத்தை விஷால் எப்படிக் காப்பாற்றுகிறார், இதில் பாட்டியின் பங்கு என்ன என்பதற்கெல்லாம் விறுவிறுப் பாகப் பதில் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் முத்தையா. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முந்தைய கதை. திரைக்கத…
-
- 0 replies
- 621 views
-
-
'ஆல் இன் அழகுராஜா' கவுண்டமணி பிறந்த நாள்... ரசிகர்கள் வாழ்த்து மழை! சென்னை: காமெடி கிங், மகான், ஆல் இன் ஆல் அழகுராஜா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று தனது 77 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். கவுண்டமணி பேசிய பல வசனங்கள் காலம் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் #க்ப்ட்கொஉன்டமனி என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் தாண்டி வேறு மொழியில் நடிக்காத கவுண்டமணியின் பிறந்த நாள் இன்று தேசிய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது. http://tamil.fil…
-
- 2 replies
- 3k views
-
-
கலைவாணரின் மனிதநேயத்தை போற்றி வளர்த்த மதுரம் எனும் மங்கை ; நினைவுநாள் சிறப்பு பகிர்வு விதிப்பயனால் சத்தியவான் இறந்துவிடுவான் என்று தெரிந்தும் அவனை மணக்க முடிவெடுத்தவள் புராண காலத்து சாவித்திரி. விதியின்படி அந்த நாளில் பாம்பு தீண்ட பரிதாபமாக இறந்தான் சத்தியவான். விதியை நொந்து சும்மா இருந்தவிடாமல் எமலோகம்வரை சென்று தன் கணவனின் உயிரை மீட்டதாக நீள்கிறது சத்தியவான்- சாவித்திரி கதை. நவீன காலத்திலும் சாவித்திரி போன்று துாக்குக்கயிற்றில் தொங்கவிருந்த தன் கணவனின் உயிரை லண்டன் பிரிவியு கவுன்சில் வரை சென்று மீட்டார் ஒரு நவீன சாவித்திரி. 40 களில் நிஜமாய் நிகழ்ந்த இந்த கதையின் நாயகி டி.ஏ .மதுரம். கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் துணைவியார். இன்று அவரது நினைவுநாள். எல…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறைக் கைதி ரஜினி!- கபாலியின் 5 ரகசியங்கள் நான்கு இயக்குநர்களில் தேர்வான ரஞ்சித் ஆரம்பத்தில் ரஜினியிடம் சுந்தர்.சி, ராகவேந்திரா லாரன்ஸ், கெளதம் வாசுதேவ் மேனன், பா. ரஞ்சித் ஆகியோர் கதை சொன்னார்கள். சுந்தர்.சி ரஜினிக்கான முழுக்கதை, திரைக்கதையை தயார் செய்யவில்லை ஒன்லைன் கதை மட்டுமே சொன்னார். அடுத்து ராகவேந்திரா லாரன்ஸ் சொன்ன கதை ரஜினிக்கும், தயாரிப்பாளர் தாணுவுக்கும் ரொம்பவே பிடித்து இருந்தது. முதல் பிரிண்ட் அடிப்படையில் தனக்கு உரிமை தரவேண்டும் என்று ராகவேந்திரா நிபந்தனையை முன் வைத்ததால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கெளதம் மேனன் சொன்ன கதை இருவருக்கும் பிடித்து பூஜை போடுவதற்கு நல்ல நாளும் குறிக்கப்பட்டது. திடீரென கெளதம் மேனனுக்கு குட்பை …
-
- 0 replies
- 441 views
-
-
பொன்ட் கேர்ளாக நடிக்க தீபிகா, பிரியங்கா போட்டி? 2016-05-22 10:39:53 பொலிவூட் திரையுலகின் முன்னிலை நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா இருவரும் ஹொலிவூட்டிலும் கால்பதித்துள்ள நிலையில் ஜேம்ஸ் பொன்ட் திரைப்படத்திலும் நடிப்பதற்கு முயற்சிக்கின்றனராம். 33 வயதான பிரியங்கா சோப்ரா நடித்த குவான்டிகோ தொடர் அமெரிக்கத் தொலைகாட்சியொன்றில் ஒளிபரப்பாகுகிறது. ட்வைன் ரொக் ஜோன்ஸன் கதாநாயகனாக நடிக்கும் பே வோட்ச் திரைப்படத்திலும் பிரியங்கா நடிக்கிறார். 30 வயதான தீபிகா படுகோனே வின் டீஸல் கதாநாயகனாக நடிக்கும் “எக்ஸ் எக்ஸ் எக்ஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்…
-
- 1 reply
- 358 views
-
-
இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்பட கதாநாயகியான நடிகை ஜெயகெளரி; சினிமா நடிப்புக்கு முழுக்கு போட வைத்த பயங்கர அனுபவம் “ஏன் திடீரென சினிமா உலகை விமர்சனம் செய்கிறீர்கள்? எனக் கேட்டோம். “எனக்கு தமிழ் சினிமாவில் ஆழமாக காலூன்ற வாய்ப்புக்கள் கிடைத்தன. நான் நடிக்க இணங்கிய எனது இரண்டாவது படம் குத்துவிளக்கு. அப்போது நான் யாழ். நகரில் நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டு இருந்தேன். என்னைத் தேடி இரு பிரபலங்கள் எனது வீட்டுக்கு வருகைத் தந்துள்ளனர். குத்து விளக்கு படம் விடயமான விபரங்களை தெரிவிக்க, எனது பெற்றோரும் இவ்விருவர் மீதும் நம்பிக்கை கொண்டு சம்மதம் தெரிவித்து விட்டனர். பின்னர்…
-
- 4 replies
- 1k views
-
-
மூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்! வணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது. அதன்படி நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினருக்கு சொந்தமான 'சாந்தி தியேட்டர்' நேற்றுடன் தன் பொழுதுபோக்கு பணியை நிறுத்திக்கொண்டது. 1952 ல் பகுத்தறிவு பேசிய பராசக்தி திரைப்படத்தில், 'சக்ஸஸ்... சக்ஸஸ்...' என கலைஞரின் வசனம் பேசி அறிமுகமான அந்த புதுமுக நடிகருக்கு, அன்றுமுதல் வாழ்வின் அத்தனை விஷயங்களும் சக்ஸஸ்தான். நடிக்கத்துவங்கிய சில படங்களிலேயே, வெற்றிகரமான நடிகராக பரிமளித்த அவரது ஆசைகளில் ஒன்று, தான் சம்பாதித்த பணத்தில் தியேட்டர் கட்டுவது. நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படு…
-
- 1 reply
- 935 views
-
-
படு ஹாட்டாக போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்! (Photos) உலக நாயகனின் மகள் என்ற பெருமைக்கு இணையாக கலை ஞானமும் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இசையில் பெரிதாய் கலக்குவார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், புலிக்கு பிறந்தது பூனை ஆகாதே, என்பதற்கு எடுத்துக் காட்டாக நடிப்பில் களமிறங்கினார் ஸ்ருதி. ஆனால், ஸ்ருதி தந்தையை விட படு ஹாட்டாக மாறி வருகிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தெலுங்கு, இந்தி படங்களை காட்டிலும், ஆங்கில இதழ்களுக்கு இவர் கொடுக்கும் கவர் போட்டோ போஸ்கள் மிக ஹாட்டாகவும், செக்ஸியாகவும் இருக்கின்றன. இந்த வகையில் சமீபத்தில் ஜி.கியூ எனும் ஆங்கில இதழின் மே மாத பிரதிக்கு ஸ்ருதி ஹாசன் கொடுத்துள்ள போஸ் தாறுமாறு…. …
-
- 12 replies
- 1.5k views
-
-
சமந்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! சமீபத்தில் வெளிவந்த தெறி படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை சமந்தா. தமிழ் மாத்திரமின்றி தெலுங்கிலும் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். ''இன்று நிம்மதியாகத் தூங்குவேன். இந்தக் கோடைக் காலத்தின் இறுதிப் படமும் வெளியாகிவிட்டது. கடந்த 8 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. சோர்வினால் மிகவும் முடியாமல் போன நாட்களும் உண்டு. எவ்வாறாயினும் அந்த இக்கட்டான நிலைமைகளைச் சமாளித்துவிட்டேன். இந்தச் சமயத்தில் எனக்கு ஆதரவளித்த என் குடும்பத்துக்கு நன்றி. இக்காலங்களில் நான் நல்ல மகளாக, நண்பியாக இருக்கவில்லை. இதனை நிவர்த்தி ச…
-
- 1 reply
- 558 views
-
-
நயன்தாராதான் எனக்குப் போட்டி!- சமந்தா சிறப்பு பேட்டி தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம்வந்தாலும் சென்னை பேச்சையும், அவருடைய நட்பு வட்டத்தையும் இன்னும் மறக்கவில்லை சமந்தா. சென்னை வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து… சென்னையில் உங்களை எந்தவொரு திரைப்பட நிகழ்ச்சிகளிலும் காண முடியவில்லையே? உண்மைதான். மே மாதத்தில் 6-ம் தேதி ‘24', 13-ம் தேதி ‘ஆ ஆ', 20-ம் தேதி ‘பிரம்மோற்சவம்' ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. ஆகையால் அடுத்தடுத்துப் பட வேலைகள் என ஓடிக்கொண்டே இருக்கிறேன். அதனால்தான் சென்னைக்கு வந்த…
-
- 0 replies
- 342 views
-
-
முதன் முதலாக தமிழில் வெளிவந்திருக்கும் டைம்மிஷின் சப்ஜெக்ட் திரைப்படம் ! ஈராஸ், ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனங்களின் பங்களிப்புடன விக்ரம்.கே.குமாரின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2 டி படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் ”24 ” படத்தில் சூர்யாவுக்கு சைன்டிஸ் அப்பா, வாட்ச் மெக்கானிக் மகன், வில்லன் சகோதரர் ‘கம் ‘பெரியப்பா… என மூன்று கேரக்டர்கள், எண்ணற்ற கெட்-அப்புகள்… கதைப்படி, இரட்டை பிறவிகளான சூர்யா சகோதரர்களில் இரண்டாமவரான சையின்டிஸ் டாக்டர் சேதுராமன், தன் பல வருட ஆராய்ச்சியின் விளைவாக, ஒரு டைம் மிஷினை கைக் கெடிகார வடிவில் கண்டுபிடிக்கிறார். 24 மணி நேரங்கள் முன்னோக்கியும், பின்னோக்கியும் அதை கட்டி இருப்பவரை அழைத்து சென்று சம்பந்தபட்டவர் விரும்பிய நிகழ்வுகளை மாற…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் முதல் சினிமா வெளியான அன்று என்ன நடந்தது? #ராஜா ஹரிச்சந்திரா இந்திய சினிமா சகாப்தத்தின் வயது 103 முடிந்து, 104ல் அடியெடுத்துவைக்கிறது. ஆம், இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா” வெளியான நாள் இன்று. 1913ஆம் ஆண்டு மே 3ம் தேதி கருப்பு வெள்ளையில் புராணக்கதையாக இந்தியமக்களுக்கு அறிமுகமான மந்திரமில்லா மாயலோக ஆச்சரியமே இந்த முதல் திரைப்படம். நாடகங்களை மட்டுமே பார்த்துப் பழகிய இந்திய மக்கள், முதன் முதலாக ராஜா ஹரிச்சந்திரா படத்தை வெள்ளைத்திரையில் பார்த்த போது, அவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? அளவிடமுடியாத ஆச்சரியங்களால் நிறைந்திருந்திருக்கக்கூடும். இணையம், செல்போன், மல்டிஃப்ளக்ஸ் திரையரங்குகள், நவீன சவுண்ட் சிஸ்…
-
- 0 replies
- 652 views
-
-
திரை விமர்சனம்: களம் ஒரு பழைய ஜமீன் வீட்டை அபகரிக்கும் ரியல் எஸ்டேட் தாதா (மதுசூதன் ராவ்), அமெரிக்கா விலிருந்து திரும்பும் தனது மகனுக்கு (அம்ஜத் கான்) அதைப் பரிசாக அளிக்கிறார். அம்ஜத், தன் மனைவி (லட்சுமி ப்ரியா), பத்து வயது மகள் ஆகியோருடன் அந்த வீட்டில் வசிக்கத் தொடங்குகிறார். அங்கே அமானுஷ்ய சக்திகள் இருப்பதை லட்சுமிப்ரியா உணர்கிறார். முதலில் அதை நம்ப மறுக்கும் அம்ஜத், பிறகு கண்கூடாகக் கண்ட பிறகு அந்த வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்கிறார்கள். மந்திர வாதி சீனிவாசனும் கலை யரங்கத்தின் பொறுப்பாளர் பூஜாவும் அவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள். அந்த அமானுஷ்ய சக்திகள் யார்? அம்ஜத் குடும்பத்தால் வெளியேற முடிந்ததா? படத்தின் தி…
-
- 0 replies
- 317 views
-
-
திரை விமர்சனம்: மனிதன் சில்லறை வழக்கில் சிக்கியவருக்கு பெயில் வாங்கித்தரக்கூட வக்கற்ற ஒரு கற்றுக்குட்டி வழக்கறிஞர், இந்தியாவின் நம்பர் ஒன் வழக்கறிஞரைத் தோற்கடிக்க நடத்தும் தர்ம யுத்தம்தான் ‘மனிதன்’. பொள்ளாச்சி வழக்கறிஞர் சக்தியின் (உதயநிதி ஸ்டாலின்) திறமையின்மையை மீறி அவரைக் காதலிக்கிறார் முறைப்பெண் ப்ரியா (ஹன்சிகா). சக்தியின் அசட்டுத்தனங்களும் தோல்விகளும் அவரது காதலில் நெருடலை ஏற்படுத்த, தன்னை நிரூபித்துக்காட்டச் சென் னைக்கு வருகிறார் சக்தி. இவர் வந்த நேரத்தில் மாநிலமே எதிர்பார்க்கும் ஒரு வழக்கு பரபரப்பா கிறது. குற்றம் சுமத்தப்பட்ட பெரிய இடத்துப் பையன் விடுவிக்கப்படுகிறார். தனது வாதத் திறமையால் அவரை விடுவித்தவர் இந்தியா …
-
- 1 reply
- 371 views
-
-
உலகநாயகன் மற்றும் சங்கருடன் கைகோர்த்த ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் முன்னணி சிங்கள திரைப்பட நடிகரும் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க தென்னிந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களை சந்தித்துள்ளார். தனது அடுத்த பட தயாரிப்பு குறித்த கலந்துரையாடலுக்காக இந்தியா சென்ற ரஞ்சன் ராமநாயக்க அங்கு உலக நாயகன் கமலஹாசன் மற்றும் தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் சங்கரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ள ரஞ்சன் ராமநாயக்க தனது வாழ்க்கையில் அடுத்து தான் நடிக்க போகவுள்ள படமானது மிகவும் பிரமாண்டமாக அமையவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.…
-
- 0 replies
- 338 views
-
-
-
- 0 replies
- 607 views
-
-
முதலிடம் பிடித்த நயன்தாரா சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்று தென் இந்திய நடிகைகளில் யாருக்கு முதல் இடம் என்ற கருத்துக்கணிப்பை ரசிகர்களிடம் நடத்தியது. இதில் நயன்தாரா முதல் இடத்தை பிடித்துள்ளார். திரை உலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைப்பவர்கள் எல்லோரும் ஜெயிப்பதில்லை. ஹீரோயின் ஆனவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வருவதில்லை. வந்தாலும் ஒரு சில ஆண்டுகளில் ரசிகர்கள் அவர்களை மறந்து விடுவார்கள். இந்த வரம்புகள் அனைத்தையும் உடைத்து எறிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் கொடி கட்டி பறப்பவர் நய…
-
- 0 replies
- 315 views
-
-
சிறுவர்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜங்கிள் புக் திரைப்படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. ஓநாய் ஒன்றினால் வளர்க்கப்படும் சிறுவனை அடிப்படையாகக் கொண்ட படம் இது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளிச் சிறுவனான நீல் சேத்தி இப் பாத்திரத்தில் நடித்துள்ளான். பென் கிங்ஸ்லி, இத்ரிஸ் எல்பா, ஸ்கார்லெட் ஜொஹான்சன் முதலான புகழ்பெற்ற ஹொலிவூட் நட்சத்திங்கள் விலங்கு பாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளனர். ஜோன் பவ்ரியோ இயக்கிய இப் படம் டிஸ்னி நிறுவன வெளியீடாகும். அவுஸ்திரேலியா, இந்தியா, ஆர்ஜென்டீனா, ரஷ்யா, மலேஷியா முதலான நாடுகளில் ஏப்ரல் 8 ஆம் திகதி இப் படம் வெளியாகியிருந்தது. …
-
- 2 replies
- 440 views
-