வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
தெறி' அப்டேட்ஸ்: 7 பாடல்களும் பின்னணி தகவலும் விஜய் நடிப்பில் உருவாகும் 'தெறி' படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'தெறி' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து வருகிறார். விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும் நடித்திருக்கிறார்கள். விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார். வில்லனாக மகேந்திரன் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டை மார்ச் 20ம்…
-
- 0 replies
- 251 views
-
-
மரணமடைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் உடலில் ‘மெத்தைல்’ கலந்த மது இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மலையாளத்தில் கதாநாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மறுமலர்ச்சி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், ‘ஜெமினி’, ‘மழை’, ‘வேல்’, ‘ஆறு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர், நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை நேற்று திடீரென மோசமாகி மருத்…
-
- 0 replies
- 301 views
-
-
பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார் கேரளாவில் பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார் அவருக்கு வயது 45 கொச்சி மருத்துவமனையில் உடலநலகுறைவால் உயிர் பிரிந்தது... விவரங்கள் விரைவில்... ஜெமினி, வேல், ஆறு போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர். சமீபத்தில் கமலுடன் அவர் சேர்ந்து நடித்திருந்த பாபநாசம் திரைப்படம் கலாபவன் நடிப்புக்காக மிகவும் பேசப்பட்டது தேசிய விருது மற்றும் கேரள அரசின் உயரிய சினிமா விருதுகளை கலாபவன் மணி பெற்றுள்ளார். http://www.vikatan.com/news/india/60124-actor-kalabhavan-mani-died.art
-
- 5 replies
- 879 views
-
-
போக்கிரி ராஜா - திரை விமர்சனம் கொட்டாவி விடுவதே பிரச்சினையாகக் கொண்ட ஒருவனுக்கு அதுவே அபார சக்தியாக மாறினால் என்ன நடக்கும்? அதுதான் ‘போக்கிரி ராஜா’. அடிக்கடி பெரிதாகக் கொட்டாவி விடுவது நாயகன் ஜீவாவின் பிரச்சினை. இதனால் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் கொட்டாவி வர, இதுவே அவரது வேலை பறிபோகக் காரணமாகிறது. அவருடைய வேலை மட்டுமின்றிக் காதலும் இதனால் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் சமூக ஆர்வலர் ஹன்சிகா மோத்வானியின் அறிமுகம் கிடைக்கிறது. சாலையோரங்களில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்பவர்கள் மீது தண்ணீர் அடித்துத் துரத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க உதவுதல் ஆகிய சேவைகளில் ஈடுபட்டு வரும் ஹன்சிகாவுடன் ஜீவாவும் ச…
-
- 0 replies
- 410 views
-
-
பிச்சைக்காரன் - திரை விமர்சனம் அம்மாவைக் காப்பாற்றுவதற்காகப் பிச்சைக்காரனாக வாழும் ஒரு மகனின் கதைதான் இயக்குநர் சசியின் பிச்சைக்காரன். அடையாளம், அந்தஸ்து ஆகியவற்றைத் துறப்பதுடன், தான் எதற்காகப் பிச்சை எடுக்கிறோம் என்பதை ஒருபோதும் வெளியில் சொல்லக் கூடாது ஆகியவை இதற்கான நிபந்தனைகள். அம்மாவுக்காக இவற்றை ஏற்றுப் பிச்சைக்காரனாக மாறும் விஜய் ஆண் டனிக்குத் தொழில் எதிரி, காதல், உள்ளூர் ரவுடிகள் எனப் பல தடைகள். இவற்றைத் தாண்டி நினைத்ததை முடித்தாரா, அவரது அம்மா குணமடைந்தாரா? படம் தொடங்கிய 15 நிமிடங்களுக்குள் பார்வையாளர்களை முழுமையாகத் தன்னுள் ஈர்த்துக்கொள்கிறது இயக்குநர் சசியின் திரைக்கதை. ஒரு கோடீஸ்வரன் பிச்சைக்காரன…
-
- 0 replies
- 383 views
-
-
சந்தானம் ஜோடியாக மாராத்தி நடிகை தமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறையவே திறமைகளை தந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்,அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் படும் ரஜினிகாந்த்தை தொடர்ந்து இப்பொழுது மராத்தி theatre மூலம் அறிமுகமாகி , தமிழ் திரை உலகில் கால் பதிக்க வருகிறார் புது முக நாயகி வைபவி ஷண்டிலியா. கெனன்யா films தயாரிப்பில் புதிய இயக்குனர் பால்கி இயக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் நாயகியாக வைபவி ஷண்டியலா நடிக்கிறார். 'வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம். மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதா நாயகி தேடி வந்தோம். இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது இ…
-
- 3 replies
- 525 views
-
-
தமிழரான "கொட்டாலங்கோ லியோன்" வை கொண்டாடுவோம். டி கார்ப்பியோ அவார்ட் வாங்கியதை எதோ நம் பங்காளி அவார்ட் வாங்கியது போல் கட் அவுட் வைத்து எல்லாம் கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள் இந்தியாவல் இருக்கும் உலக சினிமா ரசிர்கள். இதே போல் நேற்று நடந்த 88வது ஆஸ்கர் நிகழ்ச்சியில் விருது வாங்கிய மேலும் சில இந்திய வம்சாவளிகளை இந்த கொண்டாட்டத்தில் மறந்து விட்டோம்.. அவர்களை பற்றிய ஒரு சிறு தொகுப்பு.. ஆசிப் கபாடியா: இந்தியா வம்சாவளியை சேர்ந்த இவர் இயக்கிய 'எமி வைன்ஹாவுஸ்' எனும் ஆவணப்படம், இந்த வருடத்தின் சிறந்த ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2011'ல் இறந்த புகழ் பெற்ற ஜாஸ் பாடகி எமி வைன்ஹாவுஸ்'ன் சுய சரிதை தான் இந்த ஆவண படம். இதே படம் கிராமி விருது விழாவில் சிறந்த இசை பட…
-
- 2 replies
- 1.3k views
-
-
நடிகையர் திலகம் சாவித்திரி- கற்பனையையும் மீறிய வாழ்க்கை செ. சுரேஷ் தமிழக மக்களுக்கும் சினிமா நடிக நடிகையருக்கும் இடையான உறவை எளிதில் விளக்கிவிட முடியாது. ஒரு நடிகரை அல்லது நடிகையை ஏன் கொண்டாடுகிறார்கள் என்றோ, அப்படிக் கொண்டாடப்படுபவர்கள் எந்த கணத்தில் வரலாற்றின் மறதிக் குழிக்குள் வீசப்படுவார்கள் என்றோ, அப்படி வீசப்பட்டவர்கள் சில காலங்கள் கழித்து, அவர்களில் எவர் மீண்டும் கண்டடையப்பட்டுக் கொண்டாடப்படுவார்கள் என்றோ ஒருபோதும் கணிக்க முடியாது. இது ஒருபுறமிருக்க ரசிகர்களின் ஆதரவு இருந்தும், புகழின் உச்சத்தை அடைந்தும், அங்கு நிலைத்திருக்க முடியாமல் வீழ்ந்து மறைந்தவர்களும் உண்டு. இந்த வரிசையில் முக்கியமான, அற்புத கலைஞர்களும் உண்டு. நடிகர்களில் தியாகராஜ பாகவதர், சந…
-
- 0 replies
- 5.3k views
-
-
விஜய் சேதுபதியின் அடுத்த படமாகிய காதலும் கடந்து போகும் படத்தின் Trailer பார்க்க இங்கே கிளிக் செய்யவும். Trailer
-
- 0 replies
- 353 views
-
-
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது: 'ஸ்பாட் லைட்' வென்றது! (படங்கள்) அமெரிக்கா: சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'ஸ்பாட் லைட்' திரைப்படம் வென்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 88வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 88-வது ஆஸ்கார் விருது போட்டியில்,சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த டைரக்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஏராளமான நடிகர், நடிகைகள் குவிந்துள்ளனர். இதில், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை 'ஸ்பாட் லைட்' திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை 'தி பிக் ஷார்ட்' திரைப்படம் வென்றுள்ளது. எ…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஆஸ்கர் மேடையில் மீண்டுமொரு கலகக்குரல்! : அதிரவைத்த டிகாப்ரியோ “இந்த மாலைப் பொழுதில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை அவர் சொல்லச் சொன்னார். அதாவது, தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதைப் பெற வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்!” - இது மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சாஷீனின் குரல். ஆம். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை புறக்கணித்த கலைஞன், 'நான் ஏன் விருதை மறுக்கிறேன்...?' என்று எழுதிய நீண்ட கடிதத்தின் ஒரு சிறு பகுதி இது. மார்லன், நமது முந்தைய தலை…
-
- 1 reply
- 355 views
-
-
நகைச்சுவை நடிகர் குமரி முத்து காலமானார்! சென்னை: நகைச்சுவை நடிகர் குமரி முத்து உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். நகைச்சுவை நடிகர் குமரி முத்து, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று காலை குமரி குத்துவின் உயிர் பிரிந்தது. நடிகர் குமரி முத்து முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தனது வித்தியாசமான சிரிப்பினால், மக்…
-
- 12 replies
- 4.1k views
-
-
13வது முறையாக ஆஸ்கர் விருதை மிஸ் செய்த ஒளிப்பதிவாளர்: தொடரும் ஆஸ்கர் சோகம்! திரை உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஹாலிவுட் நகரத்தின் டால்பி தியேட்டரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உலகின் உட்ச நட்சத்திரங்கள்பங்கேற்றுள்ள இவ்விழாவில் யார் விருதுகளை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் 13 முறை இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 13வது முறையாகவும் ஏமாற்றமடைந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரோஜர் டீகின்ஸ். இங்கிலாந்தைச் சார்ந்த முன்னனி ஒளிப்பதிவாளரான ரோஜர் டீகின்ஸ்(66). புகழ்பெற்ற ஜேம்ஸ்பான்ட் படமான ‘ஸ்கைஃபால்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களின் காட்சிகளை அழகாக்கியது இவர் சிந்தைதான். கடந்த 1994ம் ஆண்டு ‘சஷான்…
-
- 1 reply
- 313 views
-
-
தாரை தப்பட்டை: காட்சிகளின் வன்முறை சுகுமாரன் 'சேது’ (1999)வைத் தவிர இயக்குநர் பாலாவின் எந்தப் படத்தையும் தனிப்படமாக எடுத்துக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட படத்தைப் பற்றி மட்டுமே பேசுவது சற்றுச் சிரமமானது. அவரது சமீபத்திய படமான ‘தாரை தப்பட்டை’யும் பார்வையாளனுக்கு நேரும் இந்த இக்கட்டிலிருந்து விடுபட்டதல்ல. புதிய படத்தைப் பார்க்கும்போது அவரது முந்தைய படங்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. முந்தைய படங்களின் சாயல் புதிய படத்தை ரசிக்கவிடாத வகையில் நிழலாடுகின்றன. கதை அமைப்பு, காட்சி நகர்வு, கதாபாத்திரச் சித்திரிப்பு உட்படப் பல அம்சங்களிலும் பழைய ஏதேனும் படத்தை நினைவுறுத்துகின்றன. ‘தாரை தப்பட்டை’யிலும் இந்த சங்கடத்தைப் பார்வையாளன் உணர்கிறான். இதன்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆறாது சினம் - திரை விமர்சனம் குடும்பத்தை இழந்த வேதனையால் குடிநோயாளியாக மாறிவிட்டவர் முன்னாள் காவல்துறை அதிகாரியான அரவிந்த் (அருள்நிதி). ஒரு தொடர் கொலை வழக்கைப் புலனாய்வு செய்யும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார் மாவட்ட காவல்துறை அதிகாரி ராதாரவி. அமைச்சரின் எதிர்ப்பையும் மீறி ஒரு குடிகாரரிடம் ஏன் அந்த வழக்கை ஒப்படைத்தார்? கொலைகாரனை அருள்நிதி எப்படிக் கண்டுபிடிக்கிறார்? இந்தக் கொலை வழக்கு அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா, இல்லையா என்பதுதான் ஆறாது சினம் படத்தின் கதை. அதிரடியான என்கவுன்ட்டர் காட்சியுடன் தொடங்கிறது படம். ஒரு ரவுடிக் கும்பலைத் தனது குழுவுடன் வேட்டையாடுகிறார் அருள்நிதி. காட்சிப்படுத்தலில் எந்தப் புத…
-
- 0 replies
- 404 views
-
-
கணிதன் - திரை விமர்சனம் போலிச் சான்றிதழ்களின் பின்னணியில் இருக்கும் அரசியல், அதிகாரவர்க்கத்தினரின் கூட்டு பற்றியும் அதன் நுண் அரசியலையும் அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்திருக்கும் படம்தான் ‘கணிதன்’. அதிகம் பிரபலமாகாத ஒரு சேனலில் செய்தியாளராகப் பணிபுரிகிறார் கவுதம் (அதர்வா). பிபிசி சேனலில் புலனாய்வுச் செய்தியாளராக வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அவர் லட்சியம். அந்த லட்சியம் நிறைவேறும் சமயத்தில், போலிச் சான்றிதழ் மூலம் கல்விக் கடன் பெற்றதாக அதர்வாவை போலீஸ் கைது செய்கிறது. அவர் படித்து வாங்கிய பட்டங்களை நீதிமன்றம் ரத்து செய்கிறது. பெருத்த அவமானத்துடன் ஜாமினில் வெளியே வரும் அதர்வா, செய்தியாளருக்குரிய புலனாய்வு மூளையை வைத்து எ…
-
- 0 replies
- 284 views
-
-
சர்ச்சைகளுக்கு மத்தியில் 88 ஆவது ஒஸ்கார் விருது விழா இன்று 2016-02-28 11:14:37 88 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா இன்று இரவு, அமெரிக்காவின் ஹொலிவூட் நகரில் நடைபெறவுள்ளது. 2015 ஆம் ஆண்டு வெளியான ஹொலிவூட் திரைப்படங்கள் இவ்விருதுக்கு கருத்திற்கொள்ளப்படும். அக்கடமி ஒவ் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அன்ட் சயன்ஸ் (AMPAS) எனும் அமைப்பினால் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இதனால் அக்கடமி அவார்ட்ஸ் (அக்கடமி விருதுகள்) என இவ் விருதுகள் குறிப்பிடப்படுகின்றன. மொத்தமாக 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. சிறந்த வெளிநாட்டு…
-
- 0 replies
- 663 views
-
-
ஆஸ்கர் விருதுகளில் இனப் பாகுபாடு சர்ச்சை: வில் ஸ்மித் புறக்கணிப்புக் குரலால் பரபரப்பு 73-வது கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் மனைவியுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்கர் விருது தெரிவுப் பட்டியலில் அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் அடுத்த மாதம் (பிப்ரவரி) ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என ஹாலிவுட் திரை நட்சத்திரம் வில் ஸ்மித் அறிவித்துள்ளார். ஏபிசி என்ற தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் வில் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கெனவே, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட், இயக்குநர…
-
- 2 replies
- 499 views
-
-
-
- 10 replies
- 1.2k views
-
-
மலையாள கரையோரத்தில் நடிகர் விக்ரமின் மதிப்பை உயர்த்திய வீடியோ! அண்மையில் மலையாள திரையுலகினருக்கான 'ஏசியாநெட் ' பட விருதுவிழா நடைபெற்றது. விழாவில் ப்ரித்விராஜ், மோகன்லால், நிவின்பாலி, மியா ஜார்ஜ், ஆஷா சரத் உள்ளிட்ட பல மலையாள திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக விக்ரம் மற்றும் த்ரிஷா கலந்துகொண்டு மலையாள நடிகர், நடிகைகளுக்கு விருதுகளையும் வழங்கினர். நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. விழாவில், நிவின்பாலி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார் விக்ரம். அந்த நேரத்தில் விக்ரம் அருகில் வந்த கேரள ரசிகர் ஒருவர், விக்ரமை தழுவி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அப்போ…
-
- 2 replies
- 525 views
-
-
இதுவரை யாரையும் லவ் பண்ணலை... சொல்கிறார் தமன்னா மும்பை: இந்தி இயக்குநர் சாஜித் கானின் அடுத்தடுத்த 2 படங்களில் நடித்த தமன்னா இயக்குனரை ரகசியமாக சந்தித்து, காதல் வளர்த்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. மேலும் தமன்னா-சாஜித் கான் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் இந்தக் காதல் விவகாரங்கள் குறித்து நடிகை தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார். Read more at: http://tamil.filmibeat.com/heroines/tamanna-explain-about-her-love-rumors-038945.html சிங்கன்கள் ட்ரை செய்யலாம். http://tamil.filmibeat.com/heroines/tamann…
-
- 5 replies
- 795 views
-
-
பீப் பாடல் சர்ச்சை: கோவை போலீசாரிடம் சிம்பு ஆஜர்- 'இறைவன் பார்த்துக் கொள்வான்' என பேட்டி! பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு கோவை காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, என் மீது எந்த தவறும் இல்லை, இதற்கு மேல் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடிகர் சிம்பு பாடி இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாகக் கூறப்படும் ‘பீப்’ பாடல் இணையதளத்தில் வெளியானது. இது பெண்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட கலாச்சார சீர்கேடு பாடல் என்று கூறி பல்வேறு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல்வேறு பெண்கள் அமைப்புகள்,மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் தொடர்ச்சியான போராட்டத்தில் குதித்தனர். ஊ…
-
- 2 replies
- 419 views
-
-
விஜயகாந்த்துக்கு அடிக்கும் பழக்கம் எஸ்.ஏ.சி-யிடம் இருந்து வந்தது: ராதிகா பரபரப்பு பேச்சு 'நையப்புடை' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த்துக்கு அடிக்கும் பழக்கம் இயக்குநர் எஸ்.ஏ.சி-யிடம் இருந்து வந்தது என்று ராதிகா சரத்குமார் குறிப்பிட்டார். விஜயகிரண் இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய், சாந்தினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'நையப்புடை'. தாஜ்நூர் இசையமைத்திருக்கும் இப்படத்தை காஸ்கோ வில்லேஜ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ராதிகா சரத்குமார் கலந்து கொண்டு இப்பட…
-
- 0 replies
- 445 views
-
-
அடுத்தடுத்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற வெற்றிப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஜெயம் ரவி, ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற வித்தியாசமான வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் சக்தி செளந்தர ராஜனுடன் இணைந்திருக்கும் படம் என்பதே ‘மிருதன்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கவைத்தது. தமிழின் முதல் ஜாம்பி (zombie) வகைப் படம் என்ற அறிவிப்பு, எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது. மிகக் கடுமையான உழைப்பில் இந்தப் படத்தைத் உருவாக்கி இருக்கிறது ‘மிருதன்’ படக்குழு என்பதை ட்ரைலரிலேயே உணர முடிந்தது. படத்தில் அந்த எண்ணம் உறுதியாகிறது. அந்த உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்குமா? ஊட்டியில் ஒரு தொழிற்சாலையின் விஷக் கழிவு கலந்த நீரைக் குடிக்கும் நாய் ஜாம்பியாக உருவெடுக்கிறது. அந்த நாய் ஒரு மனி…
-
- 1 reply
- 1.1k views
-
-
‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ் திடீர் நிறுத்தம் தமிழில் தொடர்ந்து 36 ஆண்டு களாக வெளியாகிவந்த ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ், தனது வெளி யீட்டை திடீரென நிறுத்திவிட்டது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் 1980-ம் ஆண்டு ஜனவரியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டது. முதல் இதழை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் வெளியிட்டார். ஒரு லட்சம் பிரதிகள் விற்ற முதல் சினிமா பத்திரிகை என்ற பெருமை இந்த இதழுக்கு உண்டு. இந்த இதழ் சார்பில் தென்னிந்திய திரைக் கலைஞர் களுக்கு ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்’ வழங்கப்பட்டு வந் தன. இந்த விருதை திரையுல கினர் பெருமையாக கருதினர். தொடர்ந்து 36 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருந்த இந்த இதழ், திடீரென நிறுத்தப் பட்டுவிட்டத…
-
- 0 replies
- 331 views
-