ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142678 topics in this forum
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W 15 உணவகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலேயே தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது வழக்கு எண் 6314/23 இன் கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் கொலைக்குச் சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி அன்செல்ம் டி சில்வா ம…
-
-
- 51 replies
- 2.3k views
- 1 follower
-
-
25 JUN, 2025 | 12:04 PM அடுத்த இரண்டு மாத காலத்துக்கு நாட்டில் எவ்வித சூழ்நிலையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவிக்கையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இரண்டு மாத காலப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது. தற்போதைய சூழ்நிலையில், சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எமது அறிக்கையின்படி, தற்போதுள்ள 92 ஒக்டேன் பெற்றோலில் பெருமளவானவை போர் இடம்பெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்…
-
- 0 replies
- 78 views
- 1 follower
-
-
மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு! ஒருவர் கைது! மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை இன்று (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் இன்று (25) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட அவரது தலை முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் அவரது சிலைக்கு அருகில் இருந்து தலைப்பாகம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இலங்…
-
-
- 3 replies
- 179 views
- 1 follower
-
-
25 JUN, 2025 | 10:22 AM மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பாத்திரங்களில் மோசடி செய்து மணலை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் மூன்று கனரக வாகன சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் பகுதியில் இருந்து ஆற்று மணல் ஏற்றிச் சென்ற மூன்று கனரக வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (24) தனங்கிளப்பு பகுதியில் வழிமறித்து சோதனையிட்டனர். இதன்போது, தரை மணலை ஏற்றுவதற்கான அனுமதிப் பத்திரத்தினை பெற்று, பொலிஸார் பார்த்தபோது, அதில் ஆற்று மணலை ஏற்றுவதற்கான அனுமதி என மோசடியாக மாற்றம் செய்து மணலை ஏற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து மூன்று கனரக வாகனங்களையும் கைப்பற்றிய பொலிஸார், அதன் சாரதிகளையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாரதிகளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டம் 3 மாதங்களில் நீக்கப்படும்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்குள் நீக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் தொடர்பாக எழுப்பப்பட்டகேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. நீதி அமைச்சர் தலைமையில் இந்த விவகாரத்தைக் கையாள்வதற்குக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாத காலப்பகுதிக்குள் இந்தச் சட்டத்தை நீக்கமுடியும். அதேபோல் திட்டமிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய சட்டமொன்…
-
- 0 replies
- 88 views
-
-
4 பில்லியன் டொலருக்காக சீனா பறக்கின்றார் அநுர ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் சீனாவுக்குச் செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா சீனா சென்று நாடு திரும்பியுள்ளார். அமைச்சர் வசந்த சமரசிங்க தற்போது சீனாவில் தங்கியுள்ளார். சீனா சென்ற ரில்வின் சில்வா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் சீனா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் திரும்பியுள்ளார் என்று அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. அண்மையில் சீனா சென்று திரும்பிய ஜனாதிபதி மீண்டும் சீனா செல்லவுள்ளமை பேசுபொருளாகியிருக்கின்றது. கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, பொருளாதார நெருக்கடி சமயத்தில் 4 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க சீனா உறுதியளித்திருந்தது…
-
- 0 replies
- 112 views
-
-
உயர்ஸ்தானிகரின் யாழ் விஜயத்தை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள்! ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) இன்று யாழிற்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில் தமிழினப்படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக யாழ் பல்கலைக்கழக முன்றலில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437013
-
- 0 replies
- 79 views
-
-
துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலங்கள் மீட்பு! மிதெனிய, தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டின் நோக்கம், சூப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபர்கள் குறித்த விபரம் இன்னும் வெளியாகவில்லை. எவ்வாறெனினும், மூன்று சிறப்பு புலனாய்வு குழுக்கள் மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. https://athavannews.com/2025/1436982
-
- 0 replies
- 60 views
-
-
பகிடிவதை சம்பவம்; தென்கிழக்கு பல்கலையில் 22 மாணவர்கள் இடைநீக்கம்! பகிடிவதை சம்பவத்தைத் தொடர்ந்து 22 மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் இருந்து தென்கிழக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர். இது தொடர்பில் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், புதிய மாணவர்கள் குழு ஒன்று கொடூரமான பகிடிவதை செய்யப்படுவதைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த இடைநீக்கங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆரம்பகட்ட உள் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களை இடைநீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது என்றார். இடைநீக்கம் செய்யப்பட்ட நபர்கள் பொறியியல் பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளைச் சேர்ந்த மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத…
-
- 0 replies
- 54 views
-
-
17 JUN, 2025 | 02:06 PM வடபகுதியில் பல மனிதபுதைகுழிகள் உள்ளதாக வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத வாய்மொழிமூலதகவல்களை அடிப்படையாக வைத்து அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் பல மனித புதைகுழிகள் குறித்து வாய்மொழி மூல உறுதிப்படுத்தப்படாத தகவல்களே வெளியாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை கார்பன் பரிசோதனைக்காக புளோரிடாஅனுப்பவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217712
-
-
- 14 replies
- 725 views
- 2 followers
-
-
இலங்கையின் விமானங்கள் வழமைக்குத் திரும்பின General24 June 2025 மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக, நேற்றைய தினம் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்ட அனைத்து ஸ்ரீலங்கன் விமான சேவை விமானங்களும் தற்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளன. இந்தநிலையில், இன்று மாலை முதல் இந்த விமானங்கள் மீண்டும் தமது சேவைகளை வழமை போன்று முன்னெடுத்துள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார். இதனிடையே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 80 சதவீத விமான சேவை நடவடிக்கைகள் தற்போது வழக்கம் போல இடம்பெறுவதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்பாட்டுக் குழுவின் தலைவர் ரோஷனி மாசகோரல தெரிவித்துள்ளார். எனினும், …
-
- 0 replies
- 130 views
-
-
24 JUN, 2025 | 05:43 PM ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "தையிட்டி விகாரைப் பிரச்சினையை அரசியல் கண்ணோக்கில் பார்க்கக் கூடாது. பிரஜைகளுக்கும் விகாரைக்கும் இடையிலான பிரச்சினையாக மாத்திரம் பார்த்தால் தீர்வினை பெற்றுக்கொள்ளலாம். அகற்றினால் பிரச்சினை வரும்" என அண்மையில் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய ஆலோசனை குழு கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, அவரது …
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
24 JUN, 2025 | 05:11 PM யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பிரபல என்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்தஹ் 12 ஆண்டுகளாக என்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணராக கடமையாற்றி வந்த கோபி சங்கர், பல்வேறு அமைப்புக்களின் ஆலோசகராகவும், என்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார். இடமாற்றம் பெற்று செல்லும் வைத்திய நிபுணருக்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பிரியாவிடை வைபவம் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/218347 @நிழலி அண்ணை கதைகள் வருமா?
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 24 JUN, 2025 | 05:11 PM இந்திய மீனவர்களின் அத்துமீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (24) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் இன்று ஊடகங்களிடம் கருத்…
-
- 0 replies
- 73 views
- 1 follower
-
-
இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்பவர் நேற்று (30) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டு அடித்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும், சம்…
-
- 1 reply
- 273 views
- 1 follower
-
-
24 JUN, 2025 | 03:38 PM இலங்கையில் வாழும் தனிநபரொருவரின் மாதாந்த செலவு தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் தனிநபரொருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் வாழும் தனிநபரொருக்கு தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு 16,318 ரூபா தேவைப்படுவதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளின் அடிப்படையில் தனிநபரொருவரின் மாதாந்த செலவுகள் பின்வருமாறு, 2012 - 2013 ஆம் ஆண்டுகளில் 5,223 ரூபாய் 2016 ஆம் ஆண்டில் 6,117 ரூபாய் 2019 ஆம் ஆண்டில் 6,966 …
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
கனடா புறப்பட்டார் பிரதமர் ஹரிணி! கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) அதிகாலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றார். தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக பொதுநலவாய கற்றல் (COL) ஆளுநர்கள் சபையில் பங்கேற்பதற்காக இன்று (24) அதிகாலை கனடாவுக்குப் புறப்பட்டார். பொதுநலவாய கற்றல் (COL) ஆளுநர்கள் சபைக் கூட்டம் ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வான்கூவரில் நடைபெறும். இந்த உச்சிமாநாடு முதன்மையாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி, உயர்கல்வி, ஆசிரியர் கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் தொழில்முறைக் கற்றலை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு ஆகிய முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும். புதுமை மற…
-
-
- 2 replies
- 233 views
-
-
Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 04:20 PM யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ அவர்களினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. மருதலிங்கம் பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218011
-
-
- 8 replies
- 396 views
- 1 follower
-
-
இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்! அனுராதபுரம் பகுதியில் திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலையில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தியை தேடும் நடவடிக்கை நேற்று (01)மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு அவரைப் போல தோற்றமளித்த ஒரு பெண்ணையும் மற்றொரு ஆணையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள் மற்றும் இரண்டு சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை. இதேவேளை, கம்பஹா – உக்கல்பொட பகுதியில், பொலிஸ் துப்பாக்கிச் சூ…
-
-
- 7 replies
- 311 views
- 1 follower
-
-
சாவகச்சேரி பிரதேச சபை தமிழரசிடம்! adminJune 24, 2025 யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனும் முன்மொழியப்பட்டனர். இதில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனுக்கு ஆதரவாக, அகி…
-
- 0 replies
- 223 views
-
-
இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக இராணுவத்தினர் கூறி 06 மாதங்கள் கடந்தும் சுதந்திரமாக செல்ல அனுமதியில்லை 24 JUN, 2025 | 10:27 AM யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. அந்நிலையில் யுத்தம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 2002ஆம் ஆண்டு கால பகுதியில், மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரன் இராணுவ தரப்புகளுடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்…
-
- 0 replies
- 159 views
-
-
பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை இளங்குமரன் எம்பி பார்வையிட்டார் 24 JUN, 2025 | 11:11 AM பலாலி பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகம் தற்போது துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த யுத்தத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த நிலையில், துறைமுகத்தினதும் அதனை சூழவுள்ள பகுதிகளின் நீர்ப்பாதைகள் மற்றும் அடித்தளங்கள் மோசமாக சேதமடைந்திருந்தன. மேலும், கடல் பகுதியில் பலத்த கற்கள் காணப்படுவதால், அப்பகுதியிலுள்ள கடற்தொழிலாளர்கள் படகுகளை கடலுக்குள் செலுத்தும்போது கடலின் ஆழம் சரிவர இல்லாததுடன், அடிக்கடி படகுகள் சேதமடைவது போன்ற இடர்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து, பல ஆண்டுகளாகக் கடற்தொழிலாளர்கள் துறைமுக பகுதிகளை புனரமைக்கக் கோரி வந்த…
-
- 0 replies
- 130 views
-
-
பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் - நேரில் சென்ற நல்லூர் தவிசாளர் தலைமையிலான குழு 24 JUN, 2025 | 11:12 AM யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதிக்கு திங்கட்கிழமை (23) நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர். நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பூம்புகார் பகுதி மக்கள் உரிய அடிப்படை வசதிகள் இன்றி, பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கடற்தொழில் செய்வோர், உரிய தொழில் உபகரணங்கள் இன்றியும் , மீன் பிடி துறைமுக வசதிகள், படகுகளை நிறுத்தி வைப்பதற்கான உரிய வசதிகள் இன்றி சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் இது தொடர்பில் பூம்புகார் கடற்தொழில் சங்க பிரதிநிதிகளின் அழைப்பினை ஏற்று , நல்ல…
-
- 0 replies
- 88 views
-
-
யாழில். வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு! யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதமாகவும் அவர் தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும், சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 11 குடும்பங…
-
- 0 replies
- 103 views
-
-
மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்! மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஐந்து சர்வதேச விமானங்களை மஸ்கட், ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் உள்ள மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாதிக்கப்பட்ட விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சரியான வழித்தடங்களை CAASL குறிப்பிடவில்லை. ஆனால் பயணிகள் நிகழ்நேர புதுப்பிப்புகளுக்கு விமான நிறுவனத்தைத் தொட…
-
- 0 replies
- 95 views
-