ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நீதிபதியும் எழுத்தாளரும் கைது! இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பொலன்னறுவை – கதுருவெல காதி நீதிமன்றத்தின் நீதிபதியும் எழுத்தாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளால் இன்று (04) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் தங்களது அலுவலகத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். விவாகரத்து வழக்கு ஒன்று தொடர்பில் விரைவாக தீர்ப்பை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கதுருவெல…
-
-
- 2 replies
- 191 views
-
-
Published By: VISHNU 04 JUL, 2025 | 10:25 PM நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒருபுறம், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், மறுபுறம், பொருளாதாரத்தை விரிவுபடுத்தி கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து, அவர்களை பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார். அலரி மாளிகையில் வெள்ளிக்கிழமை (04) பிற்பகல் நடைபெற்ற "சமூக சக்தி" தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
Published By: VISHNU 04 JUL, 2025 | 09:22 PM முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததாக தெரியவந்துள்ளது. கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219209
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 04 JUL, 2025 | 08:54 PM லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று வெள்ளிக்கிழமை (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார். இந்த நன்கொடை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது 04 JUL, 2025 | 10:55 AM முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (04 ) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது அன்புக்குரியவர்களுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான சோளங்களை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் எஸ்.எம் சந்திரசேன கைதுசெய்யப்பட்டுள்ளார். எஸ்.எம் சந்திரசேன இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்த போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/219154
-
- 2 replies
- 196 views
-
-
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா தொடக்க நிகழ்வு; மக்கள் அவதானம்! தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா”வின் (City of Dreams Sri Lanka) 2025 ஆகஸ்ட் 2 அன்று அதிகாரப்பூர்வமான ஆரம்ப விழா தனிப்பட்ட அழைப்பின் பேரில் மாத்திரம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா, பிரமாண்டமான திறப்பு விழாவிற்கான அங்கீகரிக்கப்படாத டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அழைப்பின் பேரில் மட்டுமே என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். மேலும் எந்த மூன்றாம் தரப்பினரும் டிக்கெட்டுகளை வழங்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்கவோ அங்கீகரிக்கப்படவ…
-
- 1 reply
- 174 views
-
-
முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா! ஒருவர் உயிரிழப்பு ,ஒருவர் படுகாயம்! முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது. தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Athavan Newsமுள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா!...முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர…
-
- 0 replies
- 126 views
-
-
மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை! செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான தகவலை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அத்துடன் மொரட்டுவ பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள், தனியார் துறையுடன் இணைந்து இந்த மென்பொருளை உருவாக்க ஒத்துழைத்து வருவதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த மென்பொருள் பொதுமக்கள் பாவனைக்கு விடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய மென்பொருள் பேசும் சிங்கள உள்ளடக்கத்தை சில நொடிகளில் தமிழில் மொழிபெயர்க்கும் திறனைக் கொண்டிருக்…
-
- 0 replies
- 131 views
-
-
சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம் புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரக்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. து.திசாளன் (வயது-19), க.பிரவீன் (வயது-18) என்ற இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். விபத்துத் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்து வருகின்றனர். அதிவேக மோட்டார் சைக்கிளொன்றை நேற்றுமுன்தினம் கொள்வனவு செய்து விட்டு, அதில் நேற்றுப் பயணித்த நிலையிலேயே இந்தக் கோரவிபத்து சம்பவித்துள்ளமை குற…
-
- 5 replies
- 460 views
-
-
Published By: VISHNU 03 JUL, 2025 | 08:04 PM (செ.சுபதர்ஷனி) நாட்டில் வருடாந்தம் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், அவர்களில் 35 சதவீதமானோர் அதாவது 800 பேர் சிறுவர் புற்றுநோயாளர்கள் என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் இந்திரா டிரேடர்ஸ் தனியார் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுவர் நோயாளர்களுக்கான ஐந்து மாடிக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (3) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அமைச்சர், மருத்துவமனை கட்டுமானப்பணிகளால் சுகாதார அமைச்சு பல கடுமையான பிரச்சின…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம்! - திலகநாதன் 04 JUL, 2025 | 02:46 AM வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் 3ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. வவுனியா மாவட்டத்தில் வாழ்கின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கும் காணியற்ற மக்களுக்கும் புதிதாக திருமணம் முடித்து காணிகள் அற்ற குடும்பங்களினதும் நன்மை கருதி அவர்களுக்கான ஒரு தீர்வினை வழங்…
-
- 0 replies
- 126 views
-
-
ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் காலமானார் 04 JUL, 2025 | 06:03 AM கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக வியாழக்கிழமை (03) காலை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த நடராசா கிருஸ்ணகுமார் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரையும் புலிகளின் குரல் வானொலி வர்த்தக சேவையான தமிழீழ வானொலி ஆகியவற்றின் அலுவலக செய்தியாளராகவும் நிகழ்சிகள் பலவற்றுக்கு குரல் வழங்குபவராகவும் பல்வேறு நெருக்கடிகள் விமானக் குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் என்பன வற்றுக்கு மத்தியில் செய்தி செய்தியாளராக பணியாற்றியவர். குறிப்பாக பல்வேறு பட்டவர்களுடைய உறவினையும் தொடர்புகளையும் பேணிய நல்ல ஒரு செய்தி தொடர்பாளராகவும் 2010ம் ஆண்டு முதல் தினக்குரல் வலம…
-
- 0 replies
- 147 views
-
-
IMF க்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும் இலங்கை அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை இலங்கை அதிகாரிகளால் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று கூறும் நாணய நிதியம், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் கலந்துரையாடலுக்கு பின்னர், துணை முகாமைத்துவப் பணிப்பாளரும் தற்காலிக தலைவருமான கென்ஜி ஒகமுரா வெளியிட்ட அறிக்கையில் பின்வரும…
-
- 0 replies
- 128 views
-
-
அம்ஷிகா விவகாரத்தில் தாமதம் ஏன்? பம்பலப்பிட்டி ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் 10 ஆம் வகுப்பு மாணவி 15 வயது தில்ஷி அம்சிகாவின் துயர தற்கொலை தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு உரையாற்றிய CTU பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பல உயர் மட்ட விவாதங்கள் மற்றும் பொதுமக்களின் கோபத்திற்குப் பிறகும், இந்த வழக்கில் பொலிஸார் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். 2024 ஒக்டோபரில் தனது முன்னாள் கணித ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, தில்ஷி அம்ஷிகா ஏப…
-
- 0 replies
- 103 views
-
-
வடக்கு மக்களின் நம்பிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்; நீதியமைச்சர் தெரிவிப்பு! வடக்கு மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கினர். அம்மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என்று நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்குரிய முயற்சிகள் தொடரும். இந்த விடயத்தில் கடந்தகால அரசுகளை விட எமக்கே கூடுதல் பொறுப்பு உள்ளது. கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் கூட வடக்குக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வித பாகுபாடும் க…
-
- 0 replies
- 96 views
-
-
சிறுவர்களின் 2 என்புத்தொகுதிகள் செம்மணியில் நேற்று அடையாளம் இதுவரை 40 என்புத்தொகுதிகள் அடையாளம் யாழ்ப்பாணம்- செம்மணிப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது சிறுவர்களின் என்புத்தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இரு சிதிலங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் எட்டாம் நாள் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே, சிறுவர்களின் என்புத்தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இரு என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டன. மேலும் நான்கு மண்டையோடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணிப் புதைகுழியில் இதுவரை 40 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்…
-
- 0 replies
- 85 views
-
-
வவுனியாவில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை! வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்ற வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் பிரதாபன் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்களைக் கருத்தில் கொண்டு தனியார் கல்வி நிலையஙகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பலரும் சுட்டிக் காட்டியிருந்ததாகவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்க…
-
- 0 replies
- 81 views
-
-
சுங்க வருவாய் ரூ.1 டிரில்லியனை விஞ்சியது! 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் ஒரு டிரில்லியன் ரூபாவையும் விஞ்சியுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் சிவலி அருக்கோட தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசாங்கம் நிர்ணயித்த முழு ஆண்டு இலக்கை (ரூ.2.115 டிரில்லியன்) நாங்கள் தாண்டிவிடுவோம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார். Athavan Newsசுங்க வருவாய் ரூ.1 டிரில்லியனை விஞ்சியது!2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் ஒரு டிரில்லியன் ரூபாவையும் விஞ்சியுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் சிவலி அருக்கோட தெரிவித்தார…
-
- 0 replies
- 60 views
-
-
03 Jul, 2025 | 07:14 PM யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார். குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்களில் சிலர் தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு! | Virakesari.lk
-
- 2 replies
- 1.7k views
-
-
03 Jul, 2025 | 04:46 PM இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்கவேண்டியது அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கடமை என நாங்கள் கருதுகிறோம். எனவே, இவற்றை கருத்தில்கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் எமது கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்டத் தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (3) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட பிராந்திய மீனவர்களின் பாரிய பிரச்சினையாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை காணப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற கச்சத்தீவு மீட்பு போராட்டம் மற்றும் இந்…
-
-
- 1 reply
- 150 views
-
-
Published By: DIGITAL DESK 2 03 JUL, 2025 | 05:05 PM அரசாங்கத்தின் 15 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொஸ்வத்த பகுதியில் புதன்கிழமை (02) தீப்பந்தங்களை கையில் ஏந்தி மக்கள் போராட்ட இயக்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மின்கட்டணத்தை கணிசமானளவு குறைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதாக உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் மக்கள் போராட்ட இயக்கத்தினரால் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை வேளையில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்று மின்சாரக்…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
03 Jul, 2025 | 11:13 AM எல்.எம்.டி. சஞ்சிகையின் "அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் " பட்டியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. பொரும்பாலான பயணிகளின் மனதை வென்ற நம்பகமான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை காணப்படுகிறது. LMD வர்த்தக சஞ்சிகையின் விரும்பத்தக்க அதிக தரம் கொண்ட விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை காணப்படுகிறது. சஞ்சிகை ஊடாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து நாடளாவிய ரீதியில் உள்ள பல மக்கள் அறிந்து கொண்டனர். LMD என்பது இலங்கையின் பிரபல வர்த்தக சஞ்சிகையாகும். பயணிகளுக்கு நம்பகமான சேவையை வழங்குவது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை பெருமை கொள்கிறது. ஒவ்வொரு பயணிகளின் பாதுகாப…
-
- 0 replies
- 127 views
-
-
03 Jul, 2025 | 02:24 PM நாட்டில் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இந்நோய் கொடிய வைரஸ் நோய் தாக்கத்தினால் சுமார் 67,000 பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அராசங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிப் பொருட்களைப் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு முற்றாக தடை தடை விதித்தல் உட்பட கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில்,மேல், ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட பல மாகாணங்களில் இந்த வைரஸ் நோ…
-
- 0 replies
- 93 views
-
-
03 Jul, 2025 | 05:40 PM நாட்டில் நாய்க்கடி அதிகரிப்பதற்கு, அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கை மற்றும் கால்நடைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பொதுமக்களிடம் புரிதல், போதிய கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு இன்மையே முக்கிய காரணம் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க, 2000 ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சு ரேபிஸ் வைரஸ் எனப்படும் விசர் நாய் கடி நோயை ஒழிக்க நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விசர் நாய் கடி கட்டளைச் சட்டத்தின் படி, தெருநாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களைப் பிடிக்கவோ அல்லத…
-
- 0 replies
- 113 views
-
-
மாணவி டில்சி அம்ஷிகாவின் மரணம் : விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் அமைதிப் பேரணி 03 JUL, 2025 | 04:57 PM கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள தொடர்மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி டில்சி அம்ஷிகாவின் மரணம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்று வியாழக்கிழமை (3) அமைதிவழிப் பேரணியொன்று நடத்தப்பட்டது. இந்தப் பேரணி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு, கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. கடந்த மே மாதம் பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்ற டில்சி அம்ஷிகா என்ற மாணவி கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடியில் இருந்து கீழே குதித்து உயிர்மாய்த்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesa…
-
- 1 reply
- 126 views
-