ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
தனிமைப்படுத்தப்படுபவர்களை கண்காணிப்பதற்கான கை வளையல் குறித்து அரசாங்கம் கவனம்! தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களை கண்காணிப்பதற்கான பாதுகாப்பான கை வளையல் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களை கண்காணிப்பதற்குப் பயன்படுத்த முடியுமான உபகரணமொன்றைப் பன்னிபிட்டியவைச் சேர்ந்த அமில சமீர ரத்நாயக்க உருவாக்கியுள்ளார். கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய தயாரிப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உபகரணத்தை உயர்ந்த முடிவாக்கத்துடன் தயாரிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறும், இந்த தயாரிப்புக்கு காப்புரிமை அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்க…
-
- 2 replies
- 453 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் காலப்பகுதியில் அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டிய வழிகாட்டுநெறிகள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிருபம் மூலம் அமைச்சுச் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேசச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின்/நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்கள்/ பொது முகாமையாளர்கள் ஆகியோருக்கு நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்று நிருபத்தில், கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் க…
-
- 2 replies
- 584 views
-
-
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்படும் என அரசாங்கம் நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. முன்னதாக மே 11 ஆம் திகதி இரண்டாம் தவணை நடவடிக்கைக்காக பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்தது. இருப்பினும் பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக இரண்டாவது தவணை ஏப்ரல் 20 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைக்காக நாட்டில் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்பு சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. இதேவேளை அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களுக்காக மே 4 ஆம் திகதியும், இறுதி ஆண்டு…
-
- 0 replies
- 313 views
-
-
யாழில் 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே கொரோனா தொற்றியது- வைத்திய பணிப்பாளர் அறிவிப்பு by : Litharsan யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் யாழில் வேறுவழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாகச் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களைச் சந்தித்து கருத்த…
-
- 30 replies
- 2.1k views
-
-
ஆயிரம் ரூபாவை விட மக்களின் உயிர்தான் எமக்கு முக்கியம். எனவே, சம்பள உயர்வு விடயத்தில் எந்தவொரு நொண்டி சாட்டையும் நாம் கூறவில்லை. மக்களுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்போம். என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (18.04.2020) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, " கொரோனா வைரஸின் பிடிக்குள் சிக்கியுள்ள நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர், சுகாதார பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர் என ஒட்டுமொத்த அரச கட்டமைப்பும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதிலும் குறை கண்டுபிடித்து, பிரச…
-
- 2 replies
- 368 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் நீங்கியுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை பொதுத்தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதை தவிர்க்கும்படி, தேர்தல் ஆணைக்குழுவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று (18) மாலை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், மாவை.சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். முறையான தேர்தல் பிரசாரம் இடம்பெற்று தேர்தல் நடத்தப்படுவதே முறையான ஜனநாயக நடைமுறை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் தேர்தல…
-
- 1 reply
- 394 views
-
-
20 ஆம் திகதி முதல் 5 ஆயிரம் பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்! Published by J Anojan on 2020-04-18 11:35:55 எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ரயில்கள் மற்றும் பஸ்களை பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது. அதன்படி ஏப்ரல் 20 முதல் 5000 பஸ்கள் மற்றும் 400 ரயில் சேவைகள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளின் கீழ் வரும் தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் பொது போக்குவரத்தை இயக்க போக்குவரத்து அமைச்சகம் நேற்றைய தினம் தீர்மானம் எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article…
-
- 0 replies
- 344 views
-
-
சமுர்த்தியால் முரண்பாடு; தற்கொலைக்கு முயன்ற பெண்! கிராம மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார். நஞ்சு அருந்திய அவரை உறவினர்கள் உடனடியாக அழைத்துச் சென்று சாவகச்சேரி வைத்தியசாலை அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தென்மராட்சி – கொடிகாமம், பலாவி பகுதியில் இன்று (17) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்ததாவது; பாலாவி பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக உதவிப் பொருட்கள் வழங்கும் செயற்பாடு நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இரண்டு குடும்பங்களுக்கு உதவிப் பொருட்களை வழங்க…
-
- 2 replies
- 453 views
-
-
கிராம உத்தியோகத்தர்கள் ரூ.5,000 வழங்க மீண்டும் தயார் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்திலிருந்து தற்காலிகமாக விலகிய கிராம உத்தியோகத்தர்கள இன்று (18) முதல் குறித்த பணிகளை மீண்டும் தொடரவுள்ளனர். கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலணியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னரே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 52 இலட்சம் குடும்பங்களுக்கு இந்நிதியுதவி வழங்கப்படவுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/கிராம-உத்தியோகத்தர்கள்-ரூ-5-000-வழங்க-மீண்டும்-தயார்/175-248783
-
- 0 replies
- 316 views
-
-
24 மணி நேரத்தில் கொவிட்19 தொற்றாளர் இல்லை கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் கொவிட்19 வைரஸால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் இனங்காணப்படவில்லை என தொற்று நோயியில் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் பூரண குணமடைந்த ஐந்து பேர் நேற்று (16) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 163ஆக காணப்படுகின்றது. இதுவரை இலங்கையில் 238 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது 163 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்…
-
- 2 replies
- 621 views
-
-
வவுனியாவில் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (16) 1,154வது நாளில் தாமது போராட்டத் தளத்திற்கு சென்று, வெளிநாடுகளில் கொரோனாவினால் பலியான இலங்கை தமிழர்களுக்கு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கொரோனாவையும் பொருட்படுத்தாமல் தமது உறவுகளை தேடி தொடர்ந்தும் போராடி வருவதை இந்த அஞ்சலியுடன் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். https://newuthayan.com/புலம்பெயர்-தமிழருக்கு-அ/
-
- 1 reply
- 547 views
-
-
பலாலி முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது?- அங்குள்ளவர்களே பொறுப்பு- சத்தியமூர்த்தி by : Litharsan தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்…
-
- 10 replies
- 1.2k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவளை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 அம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இளைய சகோதரரான ரியாஜ் பதியூதீன் புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரருக்கு மேலதிகமாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/80010
-
- 18 replies
- 1.7k views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய தந்தை மரணம்! காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தேடிய தந்தை ஒருவர் நேற்று (16) காலமானார். முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பை சேர்ந்த பொன்னையா நாகராசா (வயது-61) என்பவரே காலமானார். 2009ம் ஆண்டு யுத்தம் முடியும் தறுவாயில் பொக்கணை பகுதியில் தனது மகனை இவர் இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் யாரையும் நாம் பொறுப்பேற்க இல்லையென இராணுவம் கைவிரித்ததை தொடர்ந்து, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு நீதி வேண்டி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த 10 வருடங்களாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய கோரி, உறவினர்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள் அனைத்திலும் அவர் பங்கெடுத்திருந்தார். …
-
- 3 replies
- 393 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து சுவிஸ் போதகருடன் பழகியவர்களை விரைவாகக் கண்டுபிடித்தன் காரணமாகவும், அவர்களை தனிமைப்படுத்தியும் ஊரடங்கு உத்தரவை நீடித்ததுமே இன்று பாரிய சேதத்தைத் தடுக்க கூடியதாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 15இற்கு உட்பட்டவர்களுடன் யாழ்ப்பாணத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெ…
-
- 12 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி செயலணியின் தலையீட்டின் மூலம் அரசாங்கத்தின் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் திட்டத்தின் மூலம் ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 9 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய திட்டங்களுக்கு அமைவாக நாட்டின் அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பொருட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கமைய மரக்கறி மற்றும் பழங்களை கொள்வனவு செய்வது தொடர்பான விசேட வேலைத்திட்டமொன்றை அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணி தலையீட்டின் கீழ் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு,…
-
- 6 replies
- 824 views
-
-
திரைமறைவு அரசியல் நாடகங்கள்’ க. அகரன் திரைமறைவு அரசியல் நாடகங்களால், மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அச்சமான சூழ்நிலையில், வாழ்வாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள ந…
-
- 2 replies
- 1k views
-
-
“கொரோனா வைரஸ் தாக்கம் அபாயம் உள்ள மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று. இங்கு அதிகளவான மக்கள் வசிக்கின்றனர். இந்த ஆபத்தான நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டுமாயின் சரியான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டும். அதனால் சரியான நிலமை ஏற்படும் வரை ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டியுள்ளது” என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். “பாதுகாப்புத் தரப்பினரின் அறிவித்தல்களையும் சுகாதாரத்துறையினரின் அறிவுரைகளையும் கேட்டு மக்கள் வீடுகளுக்குள் இருக்கவேண்டும்” எனத் தெரிவித்த அவர், “நோய் அறிகுறிகள் இருந்தால் எந்தவொரு அச்சமுமின்றி பரிசோதனைகளை முன்னெடுக்க முன்வரவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். யா…
-
- 3 replies
- 467 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் பண்டாரநாயக்க மாவத்தையில் அடையாளம் காணப்பட்ட 59 வயதான கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் 2 ஆவது மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் புதிதாக 4 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 3 பெண்கள் உள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு, புனாணை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். மற்றையவர் ஏற்கனவே அ…
-
- 0 replies
- 470 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் உள்ளிட்ட உற்பத்திகளில் யாழ் மாவட்டத்தின் நுகர்ச்சிக்கு மேலதிகமானவற்றை யாழ் மாவட்டத்திற்கு வெளியே எடுத்துச்சென்று விற்பனைசெய்ய அனுமதி வழங்கப்பட வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி யாழ்ப்பாண மாவட்ட செயலரிடம் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள கோரிக்கையில், கொரோனாவின் தாக்கத்தினால் முடங்கியுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதார நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் உள்ளிட்ட பலர் மக்களை உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்குமாறும் அனைவரையும் தங்களது வீடுகளில் வீட்டுத்தோட்டங்களை மேற்கொள்ளுமாறும் ஊக்கப்படுத்தி வருகின்றோம். இந்த நிலையில் உள்ள…
-
- 0 replies
- 322 views
-
-
>உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு வழங்கும் நிதியை நிறுத்த வேண்டாம் என வெளிநாட்டு நண்பர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு விடுத்த கோரிக்கையை போல், அப்பாவி மக்களுக்கு முறையாக 5000 ரூபா சென்றடைய வேண்டும் என உள்நாட்டு நண்பர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விட வேண்டும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கொரோனா ஒழிப்புக்காக, அரசாங்கத்துக்கு அரசை சுற்றி இருக்கும், சுகாதார துறைக்கு, பாதுகாப்பு, பொலிஸ் துறைக்கு, நாம் எமது முழுமையான ஆதரவை, தருகிறோம். இது தொடர்பில் சந்தேகமோ விவாதமோ வேண்டாம். எமக்கு நாட்டின் மீது இருக்கின்ற பற்றின் காரணத்தால் இதை செய்கிறோம். ஆனால், அந்த ஆதரவு கொரோனாவை ஒழித்து அதை எம் மண்ணில் இருந்த…
-
- 0 replies
- 270 views
-
-
உலகின் பல நாடுகளிலும் 59,000க்கும் அதிகமான இலங்கையர்கள் பாதிக்கப்பட்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனரென, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 21,575 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ளனரென்றும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிவாரண உதவிகள் வேலைத்திட்டத்தின் கீழ், இவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/59-000-இலங்கையர்கள்-வெளிநாடுகளில்-சிக்கியுள்ளனர்/175-248732
-
- 0 replies
- 325 views
-
-
எம்.றொசாந்த் கோப்பாய் பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய மற்றும் உரிய அனுமதி இன்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட என்ற குற்றச்சாட்டில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கோப்பாய்-பகுதியில்-50-பேர்-கைத…
-
- 0 replies
- 369 views
-
-
வவுனியாவில் மீண்டும் இரத்த மாதிரிகள் சேகரிப்பு! by : Litharsan வவுனியாவில் கொரோனோ வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் சேகரிக்கும் செயற்பாடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார வைத்திய அலுவலகத்தால் இரண்டாம் கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் யாழ்பாணத்தில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்துகொண்ட மற்றும் வேறு பகுதிகளில் தொடர்புகளைக் கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனோ வைரஸ் தாக்கம் இருக…
-
- 0 replies
- 465 views
-
-
20 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து;அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மட்டும் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ரயில்வே துறை, இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும் மோட்டார் வாகன பதிவு துறை அதிகாரிகள் கலந்து க…
-
- 0 replies
- 254 views
-