ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142635 topics in this forum
-
யாழ். போதனா வைத்தியசாலைக்கு 208 பெரும்பான்மையின தாதியர்கள் புதிதாக நியமனம் 28 MAY, 2025 | 03:54 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் புதன்கிழமை (28) நியமனம் வழங்கப்பட்டுள்ளன. தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ் மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத…
-
- 5 replies
- 362 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 29 MAY, 2025 | 01:21 PM தபாலக ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (29) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நீர்கொழும்பு பிரதான தபால் நிலையம் மூடப்பட்டிருந்தது. அங்கு ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கவில்லை. முதியோர் கொடுப்பனவை பெறுவதற்காக வருகை தந்த பல முதியவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணக்கூடியதாக இருந்தது. இருவரது குரல் பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை நகரில் உள்ள உப தபாலகங்கள் வழமை போன்று திறக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது. https://www.virakesari.lk/article/215978
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல் May 29, 2025 10:57 am யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. யாழ். மாவட்டத்தை சகல வழிகளிலும் கட்டியெழுப்புவதற்கான மேற்படி வேலைத்திட்டத்துக்கு ‘மீண்டெழும் அலைகள்‘ பெயர் சூட்டப்பட்டுள்ளது. தூரநோக்கை அடிப்படையாக கொண்டு செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2025 மற்றும் 2035 காலப்பகுதியை மையப்படுத்தியதாகவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில…
-
- 1 reply
- 171 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு, கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தம் நிறைவடைந்தமை தொடர்பில் எமக்கு பெரு மகிழ்ச்சியிருக்கிறது. அவ்வாறில்லை எனில் இன்று இந்த நாடு இந்தளவிற்கும் எஞ்சியிருக்காது. நிச்சயம் பிளவு ஏற்பட்டிருக்கும். எவ்வாறிரு…
-
-
- 3 replies
- 342 views
- 1 follower
-
-
விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் கைது! கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் பணிப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான தென்னாப்பிரிக்கப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 49 வயதான சந்தேக நபர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணித்த விமானத்தில் சந்தேக நபர் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாகவும், விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 204 views
-
-
தெற்குக் கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான விபரம் வெளியானது! தெற்குகடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளில்778கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டது இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இரண்டு போதைப்பொருள் கடத்தல் படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தது. இதன்போது படகில் இருந்து 11 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் இதேவேளை கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களுடன் இரண்டு படகுகள் இன்று காலை திக்கோவிட்ட துறைம…
-
- 2 replies
- 229 views
-
-
தென் மாகாணத்தில் விசேட மோட்டார் சைக்கிள் படை! சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) கித்சிரி ஜெயலத் தலைமையில் ஒரு சிறப்பு மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்தப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பி ஓடும் சந்தேக நபர்களை, குறிப்பாக துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில், விரைவான நடவடிக்கைகளை இந்தப் பிரிவு நோக்கமாகக் கொண்டுள்ளது. உயர்மட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பல சந்தேக நபர்கள் தலைமறைவாக இருந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் வெளி…
-
- 0 replies
- 176 views
-
-
Published By: DIGITAL DESK 3 29 MAY, 2025 | 11:16 AM எமது நாட்டில் மாத்திரம் தினமும் 520 மில்லியன் ரூபாய் சிகரெட் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. அத்தோடு, கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு புகைத்தலினால் கிடைத்த வரி வருமானம் ரூபா பில்லியன் 92.9 ஆகும். ஆனால் அதே ஆண்டு அரசாங்கத்திற்கு புகைத்தலினால் ஏற்பட்ட சுகாதார செலவீனங்கள் ரூபா பில்லியன் 214 ஆகும். இது எமது நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரிய பொருளாதார நட்டமாகும் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் இதனை தெரிவித்துள்ளது. எமது நாட்டில், …
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ? வி.ரி.சகாதேவராஜா மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலை கொண்டிருப்பது முறையாகுமா? தேவையா? அது இன சௌஜன்யத்தை, நல்லிணக்கத்தை பாதிக்கும். எனவே அச்சிலை அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார். கல்லாற்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்... பெரிய கல்லாறு பாலத்தின் அருகே பிரதான வீதியில் இராணுவ சூழல் இருந்த காலகட்டத்தில் இந்த புத்தர் சிலை ஒரு தனியார் காணியில் வைக்கப்பட்டிருக்கின்றது . சின்னவத்தை பிரதேச பிக்கு ஒருவரினால் இந்த சிலை அடாத்தாக அந்த காணி…
-
- 0 replies
- 153 views
-
-
28 May, 2025 | 04:18 PM சர்வதேச தொழிலாளர் தாபனம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினதும் நோர்வே அரசாங்கத்தினதும் பங்காண்மையுடன் GROW வடக்கில் புதிய கருத்திட்டத்தினை ஆரம்பிக்கின்றது. பணிபுரிவதற்காக மீள் எழுச்சி தன்மைமிக்க வாய்ப்புக்களை உருவாக்கல் (Generating Resilient Opportunities for Work) - இது, இலங்கையின் வட மாகாணத்தில் வாழும் விளிம்புநிலைச் சமுதாயங்களின் வாழ்வாதாரங்களையும் காலநிலை மீள் எழுச்சி தன்மையினையும் சமூக வலுவூட்டலையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிலைமாற்றமிக்க 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் முன்னெடுக்கப்படுகின்றது. 75,000 இற்கும் மேற்பட்ட பெண் தலைமைக் குடும்பங்களையும் 21,000 இற்கு மேற்பட்ட அங்கவீனமானவர்களையும் கொண்டுள்ள வட மாகாணம் பல வருட மோதலைத்…
-
- 1 reply
- 195 views
-
-
உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலை- மக்களைக் குழப்பும் செயற்பாடுகளை கைவிட வேண்டும்! உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலையினை அமைத்து சட்ட விரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும். அரசாங்கம் விழிப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாது விட்டால் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை தமிழ்அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார். கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் 10 வீட்டுத்திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவ…
-
- 0 replies
- 218 views
-
-
28 May, 2025 | 06:15 PM மன்னார் மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் இன்று (28) நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இக்கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலின் கீழ், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உப்பாலி சமரசிங்க தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், காதர் மஸ்தான், ரவிகரன், முத்து முஹம்மட், ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது மாவட்ட அபிவிருத்தி சார்ந்த…
-
- 0 replies
- 144 views
-
-
28 MAY, 2025 | 03:22 PM (எம்.நியூட்டன்) அநுர அரசும் ஏனைய அரசுகளைப் போன்றே தமிழ் மக்களின் கொலைகளுக்கு தீர்வினை வழங்குவதில் இருந்து விலகிச் செல்கின்றது. யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவது என்பதும் இனப்படுகொலை தான் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாசன் தெரிவித்தார். அத்துடன், மிகப்பெரும் இனப்படுகொலை இலங்கையில் இடம்பெற்றது. அதற்கு போதியளவு அதாரமும் இருக்கின்றது. இதை அனுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ் ஊடக அமையத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கனடாவில் அமைக்கப்படுள்ள இனப்படுகொலை நினைவுத் தூபி தமிழ் மக்களுக்கான நீதிகோரலுக்கான உலகின் அங்கீகாரமா…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2025 | 05:37 PM இலங்கையின் ஓய்வூதியத் திணைக்கள தரவுகளை க்ளோக் ரான்சம்வேர் (Cloak ransomware) குழுவால் திருடப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு தளமான FalconFeeds.io தெரிவித்துள்ளது. இந்த குழுவால் ஏதேனும் தரவு திருடப்பட்டதா அல்லது மீட்டெடுப்பதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டாலும், ஓய்வூதியத் திணைக்களம் சைபர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பகிரங்கமாக எந்தவொரு அறிவிப்பும் விடுக்கவில்லை. அண்மைய அச்சுறுத்தலைத் தொடர்ந்து அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு ஆலோசகர் அசேல வைத்தியலங்கார வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, …
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
28 MAY, 2025 | 08:45 PM தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் வாழ்க்கை பயணத்துக்கு மாறாக, பொது மக்களின் நலனுக்கான பயணத்தை அனைத்து பிரஜைகளும் தொடர வேண்டுமெனவும், கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் 75 வருட வாழ்க்கை மற்றும் 64 வருட துறவு வாழ்க்கை அதற்கு தகுந்த எடுத்துக்காட்டாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை ருஹூனு மாகம்புர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (28) நடைபெற்ற "கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் 75 ஆவது ஜனன தின" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒழுக்கயீனத்தின் எல்லை வரை சென்றுகொண்டிருந்த நாட்டை மீண்டும் ஒழுக்க நிலைக்கு கொண்டுச் செல்லவதற்கான வேலைத்திட்டத்தில், மகா சங்கத்தினருக்கு பெரும் பொறுப்பு உள…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ். வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, இந்த வர்த்தமானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வடக்கில் …
-
-
- 12 replies
- 764 views
- 1 follower
-
-
28 MAY, 2025 | 10:50 AM மிகவும் இயற்கையான நிகழ்வான பெண்களின் மாதவிடாய் சுழற்சி தொடர்பில் சமூகத்தில் இருந்து எழும் களங்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். "மாதவிடாய் வறுமைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கான திட்டம்" என்ற தலைப்பில் மே 27 அன்று கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற 'Period Pride 2025' மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பெண்களின் மாதவிடாய் என்பது அவமதிக்கப்படக்கூடிய ஒரு விடயமல்ல, இது ஒரு இயற்கையான நிகழ்வு. மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் வறுமை…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
28 MAY, 2025 | 10:45 AM மன்னார் - நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் செவ்வாய்க்கிழமை (27) நேரடியாகச்சென்று பார்வையிட்டார். இந்நிலையில் அப்பகுதி மக்களின் இடர்பாடுகளை கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறிப்பாக வங்காலை பகுதியில் கடலரிப்பு நிலமைகள் அதிகரித்துள்ளதால் கடல்நீர் கடற்கரையோர கிராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதிமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
2021 உடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக உயர்வு! 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு இந்த நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவு மிகக் குறைந்த அளவில் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த பணவீக்கத்தால் மக்கள் தற்போது பயனடைந்து வந்தாலும், 2021 உடன் ஒப்பிடும்போது நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ள…
-
- 0 replies
- 167 views
-
-
28 MAY, 2025 | 10:39 AM தெற்கு கடற்பகுதியில், ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை கடத்திய இரண்டு மீன்பிடி படகுகளுடன் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மாத்தறை தெவுந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து 450 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215871
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2025 | 01:51 PM திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது. திருகோணமலை தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். திருகோணமலை முதலாவது மாநகர சபைக்காக தமிழ் அரசுக் கட்சி சார்பில் 9 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 6 உறுப்பினர்களும், ஜனநாயக…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
துப்பாக்கி கேட்ட அர்ச்சுனா – வேண்டாமென்ற சஜித்! தனக்கு பாதுகாப்பு தேவையென எவரேனும் எம்.பி கோரிக்கை முன்வைத்தால் அது தொடர்பில் ஆராய்வதற்காக அந்த கோரிக்கையை தேசிய பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதன்போது எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வேளையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் தமக்கு பாதுகாப…
-
- 0 replies
- 245 views
-
-
Published By: VISHNU 28 MAY, 2025 | 03:19 AM (எம்.ஆர்.எம்.வசீம்) கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 40பேரை கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது சிறையில் இருப்பவர்கள் சிலரும் அந்த பட்டியலில் இருக்கின்றனர் என தேசிய சுதந்தி முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றின் பாேதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரச நிறுவனங்களின் அதிகாரிகளை கைதுசெய்து சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் அந்த அரசாங்கத…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
விரைவாக புனரமைக்கப்படும் கடவுசீட்டு அலுவலகம்! adminMay 28, 2025 யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வரும் கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய தினம் (27.05.25) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சகிதம் பார்வையிட்டார். இதன் போது இதுவரை நடைபெற்ற வேலைகளின் முன்னேற்றத்தினை அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். மேலும், கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அமைக்கப்படவுள்ள கொட்டகை மற்றும் கடவுச்சீட்டு அலுவலகத்தில் கடமையாற்றவுள்ள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி விபரங்களை அமைச்சரிற்கு மாவட்ட செயலர் எடுத்துக்கூறினார். https://globaltamilnews.net/2025/216069/
-
- 0 replies
- 191 views
-
-
போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு! adminMay 28, 2025 யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுன்னாகம் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவரது உடைமையில் இருந்து 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர். தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை போதை பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் தான் உடைமையில் வைத்திருக்க வில்லை எனவும், தனது சொந்த பாவனைக்காகவே வைத்திருப்பதாக கூறியுள்ளார் அதனை அடுத்து அவரை காவற்துறையினர் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி…
-
- 0 replies
- 201 views
-