Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 27 MAY, 2025 | 03:10 PM யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை, கழிவகற்றல் முகாமைத்துவம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினருடனான விரிவான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (26) பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உட்கட்டுமானம் மற்றும் சுற்றுலாத்துறைகளை விருத்தி செய்வது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் உலக வங்கி கடந்த இரண்டு மாதங்களாக பொருத்தமான திட்டங்கள் தொடர்பில் களத்தரிசிப்புக்கள் செய்து ஆராய்ந்து அடிப்படைத் தரவுகளை பெற்றிருந்தது. இதன் இறுதி அங்கமாக துறை சார்ந்து காணப்படும் அபிவ…

  2. 27 MAY, 2025 | 02:33 PM (எம்.மனோசித்ரா) அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 4 மாகாண சபைகள் மற்றும் 2 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி…

  3. Published By: VISHNU 20 MAY, 2025 | 07:50 PM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. https://www.virakesari.lk/article/215275

  4. மன்னாரில் இந்திய - இலங்கை அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு Published By: VISHNU 27 MAY, 2025 | 04:27 AM இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் திங்கட்கிழமை (26) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட கடன் உதவி ஆகிய உதவித்திட்டங்கள் மூலம் ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட குறித்த வீடுகள் திங்கட்கிழமை (26) மாலை வைபவ ரீதியாக த…

  5. 25 MAY, 2025 | 10:01 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு புதன்கிழமை (28) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறது. இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையிலேயே உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்வதாக தெரிவித்தள்ள சீன தரப்பு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் பொருளாதார வர்த்தக துறைசார்ந்த பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இலங்கை - சீன வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் மா…

  6. இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ‘கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு’ தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரைக்குமான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் காலி முகத்திடல் தொடக்கம் புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரைக்கும் 400 மீற்றர் தூரமான வலயத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமை…

  7. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2025 | 02:20 PM சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிவப்பு எச்சரிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் 12:30 மணிமுதல் புதன்கிழமை (28) பிற்பகல் 12:30 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அ ம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரப் பகுதிகளில் மணிக்கு 50 தொடக்கம…

  8. 27 MAY, 2025 | 12:56 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான பல நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலையில் உள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் திருகோணமலை தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்தௌபீக் மற்றும், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக திருகோணமலை மாவட்ட குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஆகியோர் கையொப்பமிட்டனர். குறித்த ஒப்பந்தத்தில் மூதூ…

  9. 27 MAY, 2025 | 02:05 PM நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சியை ஆலய சம்பிரதாய முறைப்படி ஆலய கணக்குப்பிள்ளை யாழ். மாநகர சபையினருக்கு இன்றைய தினம் (27) வழங்கிவைத்தார். நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பெருவிழாவுக்கான ஆலயச் சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதித் தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் பெருவிழா …

  10. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2025 | 01:40 PM (எம்.மனோசித்ரா) வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக வினைத்திறனான சட்டரீதியான ஒழுங்குமுறையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய – பசுபிக் வலயத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் நிதிச் செயற்பாட்டு செயலணியால் தயாரிக்கப்பட்ட நிதித் தூய்மையாக்கல், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் விரிவாக்க நிதியிடலுக்கு எதிராக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தராதரங்களை பயனுள்ள வகையில் அமுல்படுத்துதல் மற்றும் வலுவுறுத்தலுக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. மேலும், குறித்த செயலணியின் உறுப்பு நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ற வகையில் நிதி செயற்பாட்டு செயலணியின் தராதரங்க…

  11. வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர். 2025 முதல் மே 25 ஆம் திகதி நிலவரப்படி பதிவான 1,062 வீதி விபத்துக்களின் மூலமாக இந்த இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதேநேரம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான 2,064 வீதி விபத்துகளில் சுமாமர் 7,000 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து பதிவான வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1433399

  12. Published By: VISHNU 27 MAY, 2025 | 04:18 AM குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடலானது திங்கட்கிழமை (26) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குச்சவெளி வெளிக்கள போதனாசிரியர் நவசீலன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய உட்பட குச்சவெளி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். https://www.virake…

  13. Published By: VISHNU 27 MAY, 2025 | 04:02 AM யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கஜன் ஜனுயா (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதன்போது அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியவேளை அது அவரது ஆடையிலும் பட்டு தீப்பற்றியது. பின்னர் அவர் குளியலறைக்குள் சென்று தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு, எரிகாயங்களுக்கு பற்பசை பூசியுள்ளார். இதன்போது அங்கு வந்த கணவர் அயல்வீட்டு பெண்ணொருவருடன் அவரை யாழ்ப்பாணம் வைத்…

  14. இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சிக்குன்குனியா May 27, 2025 9:58 am நாட்டில் தற்போது சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் விரிவான நுளம்பு கட்டுப்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்தைச் சுற்றியுள்ள சூழலை நுளம்புகள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வாரத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது ஒதுக்கி, தங்கள் வீடுகள், அலுவலக வளாகங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் சிறப்பு வேண்டுகோளையும் விடுத்தார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டு, நுளம்புகள் இனப்பெருக்கம் …

  15. இலங்கைத் தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுப்புடன் பேசமுன்வர வேண்டும் : கருணா அம்மான் kugenMay 27, 2025 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி விட்டுக் கொடுப்புடன் மக்கள் சார்ந்து தீர்மானம் எடுப்பார்களாக இருந்தால் மட்டக்களப்பில் குறைந்தது பத்து சபைகளில் எந்த பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவு, ஏனைய இனத்தவர்களின் ஆதரவு இல்லாமல் தனித் தமிழ் உறுப்பினர்களாக ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. கட்சிக் கொள்கைகளுக்கு அப்பால் மக்களை முன்நிறுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிகளின் கொள்கைகளும் தமிழ் மக்களின் நலனை நோக்காகக் கொண்டே அமைகின்றன என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் இணைத்தலைவருமான கருணா அம்மான் (வி…

  16. வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சரவைத் தீர்மான அறிவிப்பில் நீக்கம் குறித்து பிரஸ்தாபிக்க வேண்டும் - சுமந்திரன் Published By: VISHNU 27 MAY, 2025 | 04:41 AM (நா.தனுஜா) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றவா என அவதானிப்போம். அவ்வாறு வெளியிடப்படாதவிடத்து நாளைய தினம் (28) மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் …

  17. 26 MAY, 2025 | 04:05 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரி பழைய மாணவரும் வைத்தியருமான சசிகரனின் ஒழுங்கமைப்பில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்புடன் குறித்த நிகள்வு நடைபெற்றது. இதன் போது பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொற்றா நோய்கள் மற்றும் வீதி விபத்து தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. தொற்றா நோய்கள் தொடர்பான கருத்தமர்வை வைத்தியர் சிவரஞ்சனியும், வீதி விபத்துகள் தொடர்பான கருத்தமர்வை குழந்தை சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் சயந்தனும் மேற்…

  18. கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதற்காக ஹக்கீமும் அதாவுல்லாவும் பொது இணக்கப்பாடு! May 26, 2025 மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவை களமிறக்குவதற்கு தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணங்கியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச்சின்னத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவை முதலமைச்சர் வேட்ப…

  19. 26 MAY, 2025 | 06:54 PM ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் செலுத்துமாறு திங்கட்கிழமை (26) ஏறாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் ஏறாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததனர். இந்நிலையில், கடை உரிமையாளருக்கு அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் உப்பு தயாரிக்கப்படும் இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொது சுகாதார பரிசோகருக்கு நீதிமன்றம…

  20. இந்த வருடம் அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மலையக மாணவர்களில் 60 பேருக்கு நம்பிக்கை கல்வி நிதியம் (Good Hope Education Fund) மூலம் நிதி உதவி வழங்கப்படவுள்ளதென நிதியத்தின் செயலாளர் பேராசிரியர் த.தனராஜ் தெரிவித்தார். இந்த நிதி வழங்கும் நிகழ்வு ஜூன் முதலாம் திகதி அட்டன் வெப்ஸ்டர் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் (Webster International School) நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் திரு மு. நித்தியானந்தன் கலந்துகொள்கிறார். 1960-களில் பட்டயக் கணக்காளர்களான பி. கந்தசாமி, எஸ். சொக்கலிங்கம் மற்றும் கே. வீரையா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியம், 1983 ஆம் ஆண்டு செயலிழந்து பின்னர் 2010 ஆம் ஆண்டில் இது மீண்டும் செயற்பாட்டுக்கு வந…

  21. Published By: DIGITAL DESK 2 26 MAY, 2025 | 03:31 PM இலங்கையிலுள்ள சிறுவர் மற்றும் இளைஞர் சமூகத்தினரின் உள ஆரோக்கியம் மற்றும் சமூக நலன்களுக்கு, சர்வதேச லயன்ஸ் கழகம் ஆதரவு வழங்கும் என சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் பெப்ரிசியோ ஒலிவேரா ( Fabrício Oliveira) தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் திங்கட்கிழமை (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பெப்ரிசியோ ஒலிவேரா மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயல்படுத்தப்படும் நிவாரணத் திட்டங்கள் மற்றும் கல்வ…

  22. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (23) மாலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த களுத்துறை - வெலிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த மாணவி தனது கல்லூரி விடுதியினுள் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன உளைச்சலுக்குள்ளாகி மாணவி உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என மாணவியின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். மாணவி உயிரை மாய்த்துக்கொண்டமைக்கான காரணத்தை கண்டறிய கல்வி அமைச்சினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு…

  23. அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை’ – பொலிஸார் மறுப்பு May 26, 2025 2:57 pm இலங்கையின் பிரபல கடலோர சுற்றுலா தலமான அறுகம் குடாவில் பொது இடங்களில் பிகினி (நீச்சல் உடை) அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர். “அறுகம் குடாவில் உள்ள உள்ளூர் சமூக மக்கள்” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவால் வெளியிடப்பட்ட ஒரு பதிவைத் தொடர்ந்து வார இறுதியில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தப் பதிவு, “உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க” பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. “அறுகம் குடாவிற்…

  24. இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இரு அமைச்சுகளினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந…

  25. 26 May, 2025 | 06:53 PM யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் பெண் ஒருவரிடம் 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கனடா வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி செய்த மற்றொரு பெண் நேற்று கைது செய்யப்பட்டார். 2023ஆம் ஆண்டு, கட்டைக்காடு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரிடம், அவரது கணவரை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி சந்தேகநபர் பணத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் தொடர்பை துண்டித்ததையடுத்து தாம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண், பண பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தால் பயணத்தடை விதிக்கப்பட்டதுடன் பிடிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.