Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 15 May, 2025 | 04:38 PM நாட்டில் நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் GPS மற்றும் CCTV கருவிகள் விரைவில் பொருத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்ப இணைப்புகள் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளில் இணைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேருந்து ஓட்டுநர்களை கண்காணிக்கவும் அதனூடாக வீதி விபத்துக்களை குறைக்கவும் இந்த இணைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். ஓட்டுநர்கள் சோர்வாக இருக்கிறார்களா, தூக்கத்தில் பேருந்தை செலுத்துகிறார்களா, பணியில் ஈடுபடும்போது கைப்பேசி பயன்படுத்துகிறார்களா போன்ற விடயங்களை கண்டறிய இந்த தொழில்நுட்ப அமைப்புகள் உதவும். தற்போது ஓட்டுந…

  2. 15 May, 2025 | 04:55 PM தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று (14) காலை ஆரம்பமான ஊர்தி பவனி இன்று வியாழக்கிழமை (15) கிளிநொச்சியை சென்றடைந்தது. இதன்போது பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த ஊர்தி பவனி ஆரம்பமாகியுள்ளது. இந்த பவனி வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பயணித்து, இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையும். "தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்”, “தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்" போன்ற…

  3. 15 May, 2025 | 05:36 PM வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று (15) நடைபெற்றது. அதன் பின்னர் கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், வவுனியா மாநகர சபையில் சங்கு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும். அதேபோல வவுனியா தெற்கு, வடக்கு, செட்டிகுளம் பிரதேச சபைகளில் இலங்கை த…

  4. குமுதினி படுகொலையின் 40ஆண்டு நினைவுதினம் இன்று! குமுதினி படுகொலையின் 40ஆண்டு நினைவுதினம் இன்று நெடுந்தீவு இறங்குதுறைமுகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. குமுதினி நினைவேந்தல் குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், நெடுந்தீவு இறங்குதுறையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள் மத தலைவர்கள் மற்றும் நெடுந்தீவு மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். கடந்த 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி காலை 7.30மணியளவில் நயினாதீவிற்கு அண்மித்த பகுதியில் குமுதினிப் படகில் சென்ற பயணிகள் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர். இச…

  5. Published By: RAJEEBAN 15 MAY, 2025 | 12:36 PM இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் ஆவணத்தை ஆதாரங்களுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சிடம் கையளித்துள்ளது. இது தொடர்பில் ஐடிஜேபி மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததை குறிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை நாங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டியமைக்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணத்தினை மக்னிட்ஸ்கி தடைகளிற்காக பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய சர்வதேவ அபிவிருத்தி…

  6. உள்ளூராட்சி உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு! உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்களை இந்த வார இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு இலங்கைத் தேர்தல் ஆணையகம் அனைத்து அரசியல் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அந்தந்த கட்சிகள் மற்றும் குழுக்களிடமிருந்து தகவல் கிடைத்தவுடன் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டார். மே 6 அன்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் வென்ற இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடைமுறையை கோடிட்டுக் காட்டும் முறையான எழுத்துப்பூர்வ அறிவிப்பு அனைத்து அங்க…

  7. யாழ் . பல்கலையில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்” adminMay 15, 2025 முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்” கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. . பல்கலை பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. தமிழினம் பட்ட அவலங்களையும், சோகங்களையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து செல்லும் முகமாக இக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும், பிள்ளைகளை அழைத்து வந்து கண்காட்சியை காண்பித்து, தமிழினத்தின் அவலங்களை பெற்றோர் எடுத்து கூற வேண்டும் என மாணவர்கள் கோரியுள்ளனர். https://globaltamilnews.net/2025/215527/

  8. வீதி விபத்துக்களில் 965 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் வீதி விபத்துகளில் இந்த இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தக் காலகட்டத்தில், 902 போக்குவரத்து விபத்துகளும் பதிவாகியுள்ளன. இதன்போது, 1,842 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை பல விபத்துகளுக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர். போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த காவல்த…

  9. தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவு இல்லை!; ஈ.பி.டி.பி. அதிரடி தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முயலும் தேசிய மக்கள் சக்திக்கோ, சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாத தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், காத்திரமான எதிர்தரப்பாக உள்ளூராட்சி சபைகளை எதிர்கொள்ளவே கட்சி தீர்மானித்து இருப்பதாகவும் தெரிவித்தார். யாழ் ஊடக மையத்தி்ல் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எமக்கு வாக்களித்த அனைவருக்கும் முதலில் எமது நன்றிகளை தெரிவித…

  10. நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற விவாத தொடக்கத்தில் சிறப்பு அறிக்கையை வெளியிட்டபோது பிமல் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கம் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கை அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக ஸ்வஸ்திகா அருள்லிங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அது குறித்து முறைப்பாடுகள் வந்துள்ளதாக…

  11. நான்கு இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி எஸ்.சதீஸ் நீர்கொழும்பு- வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார், கடற்படையினரின் உதவியோடு நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். சடலங்களாக மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர். உதயகுமார் ஸ்ரீதரன் (வயது 17), ஸ்ரீகாந்த் சரண் ராஜ் (வய…

    • 3 replies
    • 272 views
  12. இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை- அலி சப்ரி Published By: Rajeeban 14 May, 2025 | 10:51 AM இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கனடாவின் ஒன்டாரியோவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு இனப்படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்ற விடயங்களால் நான் திகைப்பும்; கவலையுமடைந்துள்ளேன். ஒரு விடயத்தை நான் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன்,…

  13. உலக சதுரங்கப் போட்டியில் இணுவில் சிறுமிக்கும் இடம்! நிதி அனுசரணைக்கு தந்தை கோரிக்கை இணுவில் பகுதியை சேர்ந்த தர்சன் கஜிசனா என்ற சிறுமி, 8 வயதுக்குக்கு உட்பட்டோருக்கான உலக சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். இது தொடர்பில் அவருடைய தந்தை நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது: எட்டு வயதுக்குட்பட்ட உலக சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிக்கு எனது மகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் அல்பேனியாவில் நடைபெற்ற மேற்காசிய இளையோர்களுக்கான தொடரிலும் எனது மகள் விளையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், நிதி அனுசரணை இல்லாத காரணத்தால் அதில் எனது மகள் கலந்துகொள்ளவில்லை. கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடத்தை பெற்று, இலங்கையின் 8 வ…

  14. 10 MAY, 2025 | 03:56 PM இளைஞனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் தரம் 5 மாணவர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்தும் பிரபல ஆசிரியரான 'டீச்சர் அம்மா' என அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோ என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, டீச்சர் அம்மா என்பவர் இளைஞன் ஒருவனின் ஆண் உறுப்பில் பலமாக தாக்கியதால் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து டீச்சர் அம்மா பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நிலையில் டீச்சர் அம்மாவின் கணவரும் முகாமையாளரும் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதி…

  15. Published By: VISHNU 14 MAY, 2025 | 07:32 PM யாழ். நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ளதையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமி கர்ப்பமாகி 5 மாதங்களான நிலையில் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த சிறுமியை பல தடவைகள் துஷ்பிரயோகம் செய்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virak…

  16. நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் விபத்து - 13 பேர் உயிரிழப்பு, 30 பயணிகள் காயம். விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் விபத்தில் இறந்த எட்டு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை அதன்படி பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1431577

  17. உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு வெசாக் தினத்தில் ஜனாதிபதி அழைப்பு! புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, ஞானத்தை வளர்த்து, நான்கு உன்னத உண்மைகளைப் புரிந்துகொண்டு, அனைத்து பாவங்களையும் அழித்து உண்மையான ஞானம் பெற்றது, இந்த புனித வெசாக் தினத்தில் ஆகும். அவர் அனைத்து துன்பங்களையும் தாங்கி, ஆயுள் முழுவதும் தன்னலமற்ற பக்தி செயல்கள் மூலம் புரிந்து கொள்ளப்பட்ட தர்மம், உலகில் வசிக்கும் அனைத்து மக்களின் ஆன்மீக நல்வாழ்விற்கும் ஒரு காரணியாக…

      • Like
    • 4 replies
    • 199 views
  18. குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! adminMay 14, 2025 குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது. மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம், மற்றும் தேவசபை ஆலயம் என்பவற்றில், படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகள் சம நேரத்தில் காலை 08 மணிக்கு இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. 1985.05.15 அன்று காலை பல கனவுகளுடன் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி குமுதினி…

  19. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு 15 ஆம் திகதி ஆரம்பம்! adminApril 30, 2025 யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் நல்லூர் பிரதேச சபையின் பிரதிநிதிகள், சட்டமருத்துவ அதிகாரிகள், பொலிஸார், என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் முறையிட்ட தரப்புகள் கலந்த…

  20. உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு. ”இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களினாலேயே நிகழ்கின்றன” என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் கருத்துத் தெரிவிக்கையில் ”2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாட்டு மக்களில் 34.8 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களில் 64 சதவீதமானோர் இதற்கு எவ்வித மருந்துகளையும் பயன்படுத்தவில்லை எனவும் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2…

  21. பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த கொடூர தந்தை 13 May, 2025 | 10:15 AM யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறமாகவும் இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 6 வயதான சிறுமி உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியுள்ளது. குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறுமிக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளத…

  22. 13 MAY, 2025 | 04:51 PM புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுவாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றைய தினம் (13) வேலணை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தினை சமூக மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்தன. இதில் சமூக மட்ட அமைப்பினர், கல்விமான்கள், கட்சி சார்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பறையொலி எழுப்பி, "பாலியல் வன்புணர்வுக்கு எதிராக ஒன்றிணைவோம், பாலியல் வன்புணர்வுக்கு எதிரான நீதிக்கு சட்டவாக்கத் துறையே கவனம் …

  23. Published By: DIGITAL DESK 2 13 MAY, 2025 | 04:00 PM (எம்.மனோசித்ரா) இலங்கையின் ஊழல், மோசடிகளுக்கு ஜப்பான் இரையாகியுள்ளது. முதலீட்டு வாய்ப்புக்களை ஆராயும் போது இலங்கை முக்கிய இடத்தில் காணப்படுகின்ற போதிலும், நியாயமான நம்பிக்கை மிக்க, வெளிப்படை தன்மையுடைய வர்த்தக சூழலை இங்கு அவதானிக்கக் கூடியதாக இல்லை என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாடா தெரிவித்துள்ளார். எனவே முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்கு அதற்கு பொறுத்தமான ஊழல் அற்ற வெளிப்படை தன்மையுடனான வர்த்தக சூழலை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜப்பான் தூதுவர் வலியுறுத்தியுள்ளார். பாத்பைன்டர் அமைப்பினால் திங்கட்கிழமை (12) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வட்டமேசை கலந்துரையாட…

  24. 13 MAY, 2025 | 05:36 PM (எம்.நியூட்டன்) நூலகம் ஒன்று எவ்வளவு தூரத்துக்கு முக்கியமானது என்பதை நாங்கள் யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இன்று உங்கள் பாடசாலைக்கு நன்கொடையாக அமைத்து வழங்கப்பட்டுள்ள நூலகத்தை உரிய வகையில் பயன்படுத்தி உங்கள் கிராமத்துக்கும் - சமூகத்துக்கும் நற்பெயரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட 'மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்' செவ்வாய்க்கிழமை (13) திறந்துவைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் ந.வில்லியம் சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு…

  25. Published By: DIGITAL DESK 2 13 MAY, 2025 | 02:22 PM யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு, தேசிய மின்விநியோக கட்டமைப்புடன் இணைக்கப்படாத பிரதேசமாகும். எனவே, இப்பகுதிக்கு மின் விநியோகம் மின்பிறப்பாக்கிகள் மூலமாகவே நடைமுறையில் இருக்கின்றது. இந்தநிலையில், கடந்த வாரம் முக்கிய மின்பிறப்பாக்கி ஒன்று திடீரென பழுதடைந்தது. இதன் காரணமாக நெடுந்தீவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. கடந்த 10ஆம் திகதி இரவு ஏற்பட்ட மின்தடை காரணமாக, நெடுந்தீவு வைத்தியசாலையில் டார்ச் லைட் உதவியுடன் அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து வைத்தியசாலை நிர்வாகம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அமைச்சர் ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.