ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
(இராஜதுரை ஹஷான்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ஷ தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஹொரணையில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு யாருக்க என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் முழுமையான கவனம் செலுத்தி வருகின்றது. ஐந்து பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து 13 பிரதான நிபந்தனைகளை உள்ளடக்கிய கோவையினை உருவாக்கியுள்ளார்கள். இந்த நிபந்தனைகள் தொடர்பில் பிரதான 3 ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் பேச்சுவார்த்தைகள…
-
- 0 replies
- 280 views
-
-
(இராஜதுரை ஹஷான்) தேசிய மரபுரிமை, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும். நல்லாட்சி அரசாங்கத்தின் முறைக்கேடுகள், ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். வியத்மக அமைப்பின் காரியாலயத்தில் இன்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பலமான அரசியல் சக்தி தோற்றம் பெற வேண்டும். இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பலரது அரசியல் …
-
- 2 replies
- 339 views
-
-
ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம் – ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் கோத்தா கார்வண்ணன்Oct 16, 2019 | 1:57 by in செய்திகள் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், அதனை தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு- ஷங்ரி லா விடுதியில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக, ஐ.நா மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படுவோம். ஆனால், சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை அங்கீகரிக்க முடியாது. அந்த தீர்மானம் நாங்கள் …
-
- 1 reply
- 388 views
-
-
தேர்தலை பகிஸ்கரிப்பது என்பது ஒரு பிழையான நடவடிக்கை-சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்கின்றனர். அதனை நாங்கள் ஏற்கமுடியாது. எம்மிடமுள்ள ஒரேயொரு ஜனநாயக ஆயுதம் வாக்கு.அந்த வாக்கை பயன்படுத்திதான் நாம் நியாயமான முடிவைப் பெற வேண்டும். பல துன்பியல்களை எதிர்கொண்ட சமூகம் ஒரு நிரந்தர தீர்வினை எட்டவேண்டும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.தேர்தலை பகிஸ்கரிப்பது என்பது ஒரு பிழையான நடவடிக்கையாக நான் பார்க்கின்றேன்’ என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ…
-
- 1 reply
- 352 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்காக மொத்தமாக 7 இலட்சத்து 17 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு விணப்பிக்கப்பட்ட 717,918 விண்ணப்பங்களில் 6 இலட்சத்து 39 ஆயிரத்து 515 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், 78 ஆயிரத்து 403 விண்ணப்பங்கள் நிரகாரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் தமது வாக்குகளை இம் மாதம் 31 ஆம் திகதியும், நவம்பர் மாதம் 1 ஆம் திகதியும் வாக்களிக்க முடியும். குறிப்பிட்ட இரண்டு தினங்களில் வாக்களிக்க முடியாதோர் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி அருகில் உள்ள தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவ…
-
- 0 replies
- 306 views
-
-
(நா.தனுஜா) உங்களுடைய ஆசீர்வாதத்தை எனக்கு ஒருமுறை கொடுத்துப் பாருங்கள்.உலகில் மிகவும் அற்புதமான பூமியை உருவாக்கி, நான் உங்களை வழிநடத்திக் காட்டுகின்றேன். இந்த நூற்றாண்டின் சிறந்த பூமியை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து முன்நோக்கிப் பயணிப்போம் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நாட்டுமக்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். 'என்னிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி' என்று குறிப்பிட்டு சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 20 வருடகால எனது அரசியல் பயணத்தில் நான் கூறியவற்றையும், செயற்படுத்தியவற்றையும் பற்றிக் கேட்டுப்பாருங்க…
-
- 0 replies
- 254 views
-
-
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எந்த சர்வதேச தரப்பினரும் தலையிட முயற்சிக்க மாட்டார்கள். நெறிமுறைப்படி அது அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் ‘ தி ஹிந்து’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அவர், ” 2015 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் இந்தியா அல்லது வேறு எந்த நாடும் அவர்களை (எதிர்க்கட்சி கூட்டணியை) ஆதரித்தன என்பதற்கு தனிப்பட்ட முறையில் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் என்ன தவறு நடந்தது என்பதை இப்போது நாங்கள் நன்றாக புரிந்து கொண்டோம். முன்னதாக எங்கள் அரசாங்கத்தை மாற்ற யாரும் செயற்பட்டிருந்தால் நாங்கள் இப்போது நிலைமையை சரிசெய்…
-
- 3 replies
- 983 views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு செல்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்கின்றார் . இன்றும் நாளையும் அங்கு தங்கியிருக்கும் பிரதமர் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்மேலும் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைவிட ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க்கட்சிகளின் ஆதரவைப் பெறுவது தொடர்பில் கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.அத்துடன் நாளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார். இன்றைய தினம் வடமாகாண அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்…
-
- 0 replies
- 430 views
-
-
முல்லைத்தீவு – நீராவியடி விகாரை பகுதியில் கண்காணிப்பு கெமராக்களை பொருத்த பொலிஸார் தடை முல்லைத்தீவு – நீராவியடி குருகந்த ரஜமஹா விகாரையின் பாதுகாப்பு கருதி அந்த விகாரையின் விஹராதிபதி மினிதுபுர ரத்தனதேவ கீர்த்தி தேரர் சி.சி.ரி.வி கண்காணிப்பு கெமராக்களை பொருத்துவதற்கு எடுத்த நடவடிக்கைக்கு பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.விகாரைகளில்கண்காணிப்பு கமராக்களை பொருத்த அனுமதிக்க முடியாது எனவும் அதனால் அதனை அகற்றுமாறும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தாக விகாரையின் தற்காலிக பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் சி.சி.டி.வி கெமராக்களை பொருத்த வெலிஓயாவிலிருந்து இரண்டு பேர் வருவதாக விகாரையின் தலைமை தேரர் தன்னிடம் கூறியதாக குறித்த தற்காலிக பாதுகாவலர் கெலும் பண்டார தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 221 views
-
-
யாழில் கிளைமோருடன் 19 வயது இளைஞன் கைது! யாழ்ப்பாணத்தில் கிளைமோர் குண்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்தே நேற்றிரவு(செவ்வாய்கிழமை) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள சந்தே நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/யாழில்-கிளைமோருடன்-19-வயது/
-
- 0 replies
- 409 views
-
-
(இரா.செல்வராஜா) தோட்ட நிர்வாககங்களும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து முதல் முறையாக தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களுக்கு வழமையாக பத்தாயிரம் ரூபாவையே தீபாவளி முற்பணமாக தோட்ட நிர்வாகங்கள் வழங்கி வந்தன. இதுவும் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே தொழிலாளர்களுக்கு இப்பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. தோட்ட உட்கட்டமைப்பு , மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேயிலை சபையிடமிருந்து ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க அனுமதி அளிக்கப…
-
- 4 replies
- 743 views
-
-
சஜித்தே அனைத்து இனத்தவரையும் இலங்கையராக கருதுகிறார் ஜனாதிபதி தேர்தலில் முப்பத்தைந்து வேட்பாளர்கள் இடம் பெற்று தேர்தல் ஆணை க்குழுவுக்கும், அதன்மூலம் திறைசேரிக்கும், மேலதிக செலவை ஏற்படுத்தி இருந்தாலும், இறுதி சுற்றுக்கு வரப்போவது இரண்டு பேர்தான். அந்த இரண்டு இறுதிச்சுற்று வேட்பாளர்களில் முதலாமவர் சஜித் பிரேமதாச ஆவார். அந்த இரண்டு இறுதிச்சுற்று வேட்பாளர்களில் சஜித்தே அனைத்து இனத்தவரையும் இலங்கையராக கருதுகிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இந்நாட்டின் சிங்கள மக்களுடன், தமிழ், முஸ்லிம் மக்களும் நம்பிக்கையுடன் இலங்கையர் என்ற அடிப்படையில் கரம் கோர்த்துக்கொண்டு, அவருடன் பயணிக்க ம…
-
- 0 replies
- 303 views
-
-
தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு! தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மற்ற…
-
- 6 replies
- 1.9k views
-
-
மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட மயிலவெட்டுவானில் ஆற்று மணல் அகழ்வதுற்கு அனுமதி வழங்கக் கூடாதெனக் கோரி, இன்று (15) கவனயீரப்புப் போராட்டம் நடைபெற்றது. மயிலவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மயிலவெட்டுவான், உப்போடை வீதியில் நடைபெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில், பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர். மயிலவெட்டுவான் வீரக்கட்டு பகுதியில் ஆற்று மணல் அகழ்வதற்கு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் 10 பேர் உட்பட 25 பேருக்கு விசேட அனுமதி நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கியுள்ளமையைக் கண்டித்து, இந்தக் கவனயீர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மணல-அகழவதறக-அனமத-வழஙகக-கடதன-பரடடம…
-
- 0 replies
- 262 views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது . புதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த விஜயரட்ணம் தனுசன் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தர் கடந்த 07.10.2019 இரவு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று சாப்பாடு வாங்கிவருவதாக மனைவிக்கு சொல்லிவிட்டு சென்ற நிலையில் வீடுதிரும்பவில்லை இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் என்பன அருகில் உள்ள ஒழுங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன . தனது கணவர் காணாமல் போனது பற்றி கருத்து தெரிவித்த மனைவி கராத்தே வகுப்புகள…
-
- 22 replies
- 1.8k views
-
-
Tuesday, October 15, 2019 - 8:58am கடந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் போசணைமிக்க பகல் உணவை தாம் ஜனாதிபதியானதும் நாட்டின் சகல பாடசாலைகளிலுமுள்ள மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மற்றும் பகலுணவு வழங்கும் திட்டத்தை கடந்த அரசாங்கம் நிறுத்தியதாக குறிப்பிட்ட அவர், அதனை தாம் மீண்டும் வழங்கப் போவதாக தெரிவித்துள்ளார். பலாங்கொடை நகரில் நேற்று (14) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்ட…
-
- 0 replies
- 446 views
-
-
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 04:53 22 வருடங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதியின் பிரதம அமைப்பாளராகச் செயற்பட்ட வாகரை பிரதேச சபை பிரதித் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான டி.எம்.சந்திரபாலன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். புதிய ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் இணைந்துள்ளதாக, அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மட்டு-கல்குடா-சு-க-அமைப்பாளர்-சஜித்துக்கு-ஆதரவு/73-240043
-
- 1 reply
- 338 views
-
-
ரஞ்ஜன் அருண் பிரசாத் Image caption அஜந்தா பெரேரா இலங்கையில் இந்த ஆண்டு (2019) நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில், சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார். அரசியலில் பெண்களின் பிரவேசம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக கடந்த காலங்களில் பெரிதும் பேசப்பட்ட பின்னணியிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச கட்சி சார்பில் சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா போட்டியிடவுள்ளதாக அந்த கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க…
-
- 5 replies
- 1.1k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு மாத்திரம் 668.2 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இவ்வாறு ஆணைக் குழு அனுமதியளித்துள்ள நிதியில், சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள 45.8 மில்லியன் ரூபா நிதியும் உள்ளடங்கியுள்ளது. எவ்வாறாயினும் சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு தேவை…
-
- 1 reply
- 266 views
-
-
கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் சிறிசேன – சந்திரிகா குற்றச்சாட்டு Oct 15, 2019 | 2:50by கி.தவசீலன் in செய்திகள் தனிப்பட்ட நலன்களுக்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “நாட்டின் அதிபர் உள்ளிட்ட சந்தர்ப்பவாத தலைவர்கள், கட்சியின் 95 வீதமான அமைப்பாளர்களின் கருத்துக்களை நிராகரித்து, தனிப்பட்ட இலாபத்துக்காக சதிகாரர்களுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்றுள்ளனர். …
-
- 2 replies
- 517 views
-
-
கோத்தா, மகிந்தவுடன் சுமந்திரன் நடத்திய பேச்சு தோல்வி Oct 15, 2019 | 2:39by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கோத்தாபய ராஜபக்சவிடம் கோரப்பட்டிருந்தது. எனினும், இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றிருந்த மகிந்த ராஜபக்ச, இடையில் தலையிட்டு,தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை …
-
- 3 replies
- 414 views
-
-
(நா.தனுஜா) ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை மையப்படுத்தி பொதுமக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திருக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய, வேட்பாளர்களும் நடைமுறைச் சாத்தியமான தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் திகதி நெருங்கும் நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் நன்கு சிந்தித்துத் தீர்மானிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டிருக்கின்றார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: 'எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்கள் வேட்பாளர்களின் தேர்தல் வ…
-
- 1 reply
- 188 views
-
-
(நா.தனுஜா) வேறொருவரால் அதிகாரம் செலுத்தப்படக்கூடிய, பிறிதொருவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு செயற்படக்கூடிய கைப்பொம்மை ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்படும் போது என்னைக் கட்டுப்படுத்தக்கூடிய, என்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வல்லமை அன்றாடம் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்துகின்ற சாதாரண மக்களாகிய உங்களுக்கு மாத்திரமே இருக்கின்றது என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரணியகல மக்கள் முன்நிலையில் தெரிவித்தார். நாட்டை ஆட்சி செய்யும் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு ஒரு சட்டமும், சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு வேறொரு சட்டமும் இருக்க முடியாது. அவ்வாறானதொரு யுகம் காணப்பட்டது. ஆனால் என்னை ந…
-
- 0 replies
- 259 views
-
-
ஐந்து தமிழ்க் கட்சிகள் கையெழுத்திட்ட பொது உடன்பாட்டு ஆவணம் Oct 15, 2019by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள் ஐந்து தமிழ் கட்சிகளால் கையெழுத்திடப்பட்டுள்ள பொது இணக்க ஆவணம்- தமிழ் தேசம், அதன் இறைமை, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, சமஷ்டித் தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்து, தயாரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் ஒழுங்கமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த பொது உடன்பாட்டு ஆவணத்தில் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகிய 5 தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நேற்று கையொப்பமிட்டனர். இந்த ஆவ…
-
- 1 reply
- 602 views
-
-
யார் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்கப் போவதில்லை. எனவே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ் மாவட்ட சங்கத் தலைவி சுகந்தினி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்தே போராடி வந்தோம். நாம் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. இந்நிலையில் ஏனைய பகுதிகளிலுள்ள 8 தலைவிகளும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக அதிகாரிகளைச் சந்திக்க கொழும்பிற்கு சென்றார்கள் அதற்கான ஆதாரங்கள் …
-
- 0 replies
- 269 views
-