Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்ட 63 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேர் எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார். குறித்த குண்டு தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ…

  2. -எஸ்.நிதர்ஷன் எங்களுடைய சொந்த காணிகளுக்காக நாங்கள் வழக்கு தொடர்ந்த பின்னர் எங்களுடைய வீடுகள் இடித்து அழிக்கப்பட்டதெனத் தெரிவித்த வலி,வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம், அரசாங்கத்தால் அழிக்கப்பட்ட வீடுகளை அரசாங்கமே மீள வழங்க வேண்டுமெனவும் கூறினார். மயிலிட்டி மக்கள் புறா கூடுகளைபோன்ற வீடுகளுக்குள் வாழ்ந்தவர்கள் அல்லவெனவும் வசதியான பாரிய வீடுகளில் வாழ்ந்தவர்களெனவும், அவர் கூறினார். மயிலிட்டி மீன்பிடிதுறைமுகம் 1ஆம் கட்ட புனரமைப்பின் பின்னர் நேற்றய தினம் மயிலிட்டி மக்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், “1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் திகதி நாங்கள் மயிலிட்ட…

    • 0 replies
    • 308 views
  3. Editorial / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை -எஸ்.நிதர்ஷன் தங்களுடைய தலைவிதியை தாங்களே தீர்மானிக்கின்ற ஆட்சி உரிமை தங்களிடம் வழங்கப்பட வேண்டுமென்பதற்காகவே, இந்த அரசாங்கத்துகு கடந்த நான்கு வருடங்களாக தங்கள் ஆதரவைக் கொடுத்தோமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், ஆனால் அவ்வாறான தீர்வுக்கு பல முயற்சிகள் நடந்த போதிலும் அதை முடிவுக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலையில் நீங்கள் ஒரு பிரதமராக அல்லாமல் ஜனாதிபதி வேட்பாளராக அல்லாமல் முக்கியமான கட்சித் தலைவராக எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு உங்கள் கட்சி நிலைப்பாடு என்னவெனவும் வினவினார். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…

    • 0 replies
    • 543 views
  4. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள்! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆலய திருவிழாவை முன்னிட்டு இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய ஆலயத்திறகு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளால் ஆலயத்திற்கு செல்கின்ற அடியவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனையடுத்து பொது மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய ஸ்கானர் இயந்திரங்களை ஆலய சூழலில் பொருத்துவதற்கு நடவடிக்கை ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியிர…

    • 2 replies
    • 864 views
  5. தீவிரவாதத்தை தடுக்க 1.7 பில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம் தீவிரவாத வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், சமூகங்களுக்கிடையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், சமாதானத்தை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 1.7 பில்லியன் ரூபாவை இலங்கைக்கென ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானம் என்பவற்றை மேம்படுத்தல் தொடர்பில் கிரமமாக ஒதுக்கப்படும் நிதியிலேயே இலங்கைக்கு 8.5 மில்லியன் யூரோ, அதாவது சுமார் 1.7 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டிற்குள் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதன் ஊடாக அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும…

  6. சாவகச்சேரியில் பூவரச மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் – கொலையா தற்கொலையா? August 16, 2019 யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை காவற்துறையினர் நேற்று (15.08.19) மீட்டுள்ளனர். சாவகச்சேரி – தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சாரம் மற்றும் சேர்ட் ஆகியன கழற்றப்பட்ட நிலையில் உள்ளாடையுடன் சிறிய பூவரச மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்ட நிலையில், அவர் அந்த பகுதியை சேர்ந்தவர் அல்ல என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேறிடத்தில் இர…

  7. நாடுகடத்தப்பட்டனர் ஆஸிக்கு சட்டவிரோதமாக சென்ற 13 இலங்கையர் சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற 13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். குறித்த 13 பேரும் இலங்கைக்கு விசேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நாடுகடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நாடுகடத்தப்பட்டுள்ள 13 பேரும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். விசேட விமானத்தின் மூலம் அவுஸ்திரேலிய பொலிஸாரின் பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 13 பேரும் விமான நிலைய …

  8. இலங்கையில் தடைச்செய்யப்பட்ட அமைப்பான ஜமாஅத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த மூவரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் பயங்கரவாதி சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/62702

  9. யாழ்.கலாசார மத்திய நிலையப் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் பிரதமர் யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற யாழ்.கலாசார மத்திய நிலையப் புனரமைப்பு பணிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். வடக்கிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்.வந்துள்ள பிரதமர் பல இடங்களிற்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார் அந்தவகையில் அவரது விஜத்தின் மூன்றாம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் கலாசார மத்திய நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போது புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு அவை குறித்து ஆராய்ந்துள்ளார். மேலும் புனரமைப்புடன் தொடர்புடைய இந்த…

  10. கூட்டமைப்பின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார் விஜயகலா! ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கிவரும் ஆதரவுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வலி வடக்கில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் மக்களிடம் கையளித்திருக்கின்றார்கள். அதற்…

  11. மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டத்துக்கு புறம்பாக ஆரம்பிக்கப்பட்டதற்கான தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ள போதிலும், அந்த நிறுவனம் மீது அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆகவே உடனடியாக இந்த தனியார் பல்கலைகழகத்தை அரசுடமையாக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பகல் 2 மணிக்கு மாபெரும் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். இந்த மாபெரும் மக்கள் பேரணிக்கு ஆயிரக் கணக்கான தமிழ், சிங்கள மக்களை மட்டக்களப்பு கிரான் சந்தியில் அணித்திரளுமாறு அழைப்பதாகவும் இந்த பேரணியில் புதிய 'நாட்டை பாதுகாக்கும் அமைப்பை' மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ராஜகிரியவில் அமைந்து…

    • 0 replies
    • 376 views
  12. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வவுனியாவுக்கு வருகை தந்ததை அடுத்து, காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது https://newuthayan.com/story/16/பிரதமர்-வருகையை-அடுத்து.html

    • 4 replies
    • 1.3k views
  13. சம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா – போட்டுடைத்தார் சுமந்திரன் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு கேடு நேராதவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இருக்கும் எதிர்பார்க்க கூடாது என்ற கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனின் தீர்மானத்தினால் அமெரிக்க அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் களுவாஞ்சிக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த மக்கள் தெளிவூட்டல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,“இலங்கைக்கான விஜயத்…

  14. பௌத்த மதகுரு ஒருவர், 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (12.08.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல - மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பௌத்த மதகுரு எனவும் சுறுலு மஹா முனியாவ என்ற விகாரையின் விகாராதிபதி எனவும் தெரியவருகின்றது. குறித்த மதகுரு, கடந்த எட்டாம் திகதி தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பெயரில் பௌத்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவு…

    • 10 replies
    • 1.7k views
  15. பலவந்தமாகவோ அல்லது அநாவசியமான வகையிலோ புதிதாக எந்தவொரு மத ஸ்தலங்களை ஸ்தாபிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் யாழ் ஆதீனத்துடனான சந்திப்பின்போதே இதனை கூறினார். மதங்களுக்கியடையில் தற்போது காணப்படும் புரிந்துணர்வு அற்ற தன்மையினை இல்லாது செய்யும் பொறுப்பினை மத சபைகளுக்கு பொறுப்பாக்குவதாகவும், மத தலங்களை புனர் நிர்மானம் செய்வதற்கும் , பாதுகாப்பதற்கும் தொல்பொருள் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. இளம் தலைமுறையினரும், சிறுவர்களம் சிறந்த மத கொள்கை, சிறந்த அபிவிருத்தி செயற்திட்டம் உள்ளிட்ட விடயங்களுக்கு ஈடுப்படு…

    • 3 replies
    • 601 views
  16. ஈஸ்டர் தாக்குதலுடன் தோடர்புபட்ட குற்றவாளிகள் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுவார்கள். சந்தேக நபர்கள் எவராக இருந்தாலும் கைதுகள் தொடரும். இந்த அமைப்பின் பின்னணி குறித்த புலனாய்வுத்துறை தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றது எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக. நல்லூர் கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு விடயங்கள் மற்றும் வடக்கின் இராணுவ குவிப்புகள் குறித்த விமர்சனங்களுக்கு பதில் கூறும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில். ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு மாதங்கள் கடந்தாலும் இன்னமும் கைதுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற…

    • 2 replies
    • 396 views
  17. நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முக்கியஸ்தருமான ம.திலகராஜ், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) நேற்று (14) சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திலகராஜ் எம்.பி, இலக்கியங்கள் ஊடாகப் பல தொடர்புகள் தனக்கு கிழக்கு மாகாணத்தில் இருப்பதாகவும் அண்மையில் தான் வாசித்த நூல்களில் சந்திரகாந்தனின் “வேட்கை” நூல் வித்தியாசமானத் தெரிந்ததாகத் தெரிவித்தார். அத்துடன், அவரை விடுதலைப் போராட்டக…

    • 0 replies
    • 428 views
  18. யாழ். சாவக்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட குணநலம் பெறும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்துள்ளார். வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (15) யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார். இதன் தொடராக தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி உதவியினால் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அமைக்கப்பட்ட குணநலம் பெறும் நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி…

    • 2 replies
    • 661 views
  19. கொழும்பு, கிரான்ட்பாஸ் மாதம்பிட்டிய பொது மயானத்துக்கு அருகில் வைத்து பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த இருவரை கத்திகளால் தாக்கி கொலை செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் போது பாதாள உலக குழு உறுப்பினரான 39 வயதான ஆனமாலு ரங்க மற்றும் 22 வயதுடைய இளைஞன் ஒருவாத் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்த, குறித்த பகுதியில் தேடுதல மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை ஊடகப்பேச்சா…

  20. புர்காவுக்கு முற்றாக தடையை ஏற்படுத்தாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் அதனை தடைசெய்யும் வகையில் சட்டமியற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் நீதி அமைச்சு ஆலோசனை கோரியுள்ளது. நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஆள் அடையாளம் தெரியாதவகையில் தலை, முகத்தை மூடி ஆடை அணிவது தடைசெய்யப்பட்டிருக்கின்றது. குறித்த தடையானது அவசரகால சட்டம் நீக்கப்பட்ட பின்னரும் சட்ட ரீதியில் நிரந்தரமாக தடையை ஏற்படுத்தும் வகையில் அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால் அமைச்சரவைக்கு கடந்த இரண்டு வரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இர…

    • 1 reply
    • 370 views
  21. நல்லூரில்... வழிபாடுகளை, மேற்கொண்டார் ரணில்! வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதற்கமைய நல்லூர் ஆலயத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை சென்ற அவர், நல்லூர் ஆதீன கர்த்தாவுடன் சந்திப்பினை மேற்கொண்டார். அதன்பின்னர் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து ஆதீனத்தில் இந்துமத தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டார். இந்த விஜயத்தின்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர், பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி, மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் எ…

  22. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்தமை சரியான தீர்மானமே என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நாட்டினுள் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் கட்சியால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் எனவும், மற்றையவர் தன்னை தானே தெரிவு செய்து கொண்ட வேட்பாளராக தென்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/222162/ஜனாதிபதி-வேட்பாளர்-…

    • 10 replies
    • 1.1k views
  23. எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளதனால் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாது என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்வாறு அவரது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பதவி ரத்தாகும் போது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது . #மகிந்த ராஜபக்ஸ #சுதந்திரக் கட்சி #உறுப்புரிமை #ரத்து …

  24. August 15, 2019 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு இன்று காலை திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கண்காணிப்பு பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸவை மகிந்த களமிறக்கியதற்கு ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பலர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக கோத்தாபயவின் பிரவேசம் நாட்டை பேரழிவிற்கு இட்டுச…

  25. சிறிலங்கா படைகளுக்கு அவமானம் – சரத் பொன்சேகா சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கும், முன்னாள் விமானப்படைத் தளபதி றொஷான் குணதிலகவுக்கும் அளிக்கப்பட்டுள்ள உயர் பதவிகள் பாதுகாப்பு படையினருக்கு அவமானம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “வசந்த கரன்னகொடவுக்கு அட்மிரல் ஒவ் தி பிளீட் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. குறைந்தது ஒன்பது நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களுக்கு கட்டளையிடும் அதிகாரிக்கு மட்டுமே வெளிநாடு நாடுகள் இத்தகைய பதவியை வழங்குகின்றன. சிறிலங்கா கடற்படை…

    • 1 reply
    • 806 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.