ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் By Admin May 10, 2025 யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பழம்வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (8) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பழம் வீதியில் உள்ள வைரவர் ஆலயத்தின் அலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகிறது. அன்றிரவு சுவாமி வெளிவீதியுலாவின் போது வானவேடிக்கைகள் இடம்பெற்ற வேளையில் அதிலிருந்து பறந்த தீப்பொறி அரங்காலய மேற்கூரையில் பட்டு எரிந்துள்ளது. இதனைப் பார்த்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கும், பொலிஸாருக்கும், அரங்காலய நிர்வாகத்தினருக்கும் அறிவித…
-
-
- 4 replies
- 229 views
-
-
Published By: DIGITAL DESK 2 09 MAY, 2025 | 08:42 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சித் சபைகளுக்கான தேர்தலில் வன்னி மாவட்டத்தில் வாக்குகளை பெறுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி அங்கு கசிப்பும் பணமும் விநியோகித்துள்ளது. அதேபோன்று இனவாதத்தை முன்னெடுத்தனர்.இதனை பொறுப்புடன் தெரிவிக்கிறேன் என சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 'அ' அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நாங்கள் நி…
-
- 2 replies
- 297 views
- 1 follower
-
-
09 MAY, 2025 | 05:36 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த வெதுப்பகம் மற்றும் உணவகம் என்பவற்றுக்கு 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் வெதுப்பகப் பொருட்களை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, வெதுப்பகச் சுற்றாடலில் இளையான்கள் பெருக இடமளித்தமை, அழுகிய உருளைக்கிழங்குகளை உணவு தயாரிப்புக்கு களஞ்சியப்படுத்தியமை, வெதுப்பகப் பொருட்களுடன் தொற்று ஏற்படும் வண்ணம் இரசாயன பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தா…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
09 MAY, 2025 | 03:18 PM (எம்.மனோசித்ரா) பிரான்ஸ் கடற்படைக் கப்பலான 'பியூடெம்ப்ஸ் பியூப்ரே' உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை (09) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலானது 80.65 மீற்றர் நீளமும், மொத்தம் 58 அங்கத்தவர்களை கொண்டதாகும். கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் பெர்தியோ டிமிட்ரி பணியாற்றுகிறார். கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் குழுவினர்கள், தேசிய நீரியல் வரைபட அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்திய பின்னர், நீரியல் வரைபட சேவை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த இருதர…
-
- 0 replies
- 447 views
- 1 follower
-
-
சீனாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்த ஜெர்மன் பெண் கைது! ரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக, ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான இளம்பெண்ணிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மடிக்கணினியின் கடவுச்சொல்லை பொலிஸாருக்கு வழங்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சந்தேக நபரான இளம்பெண் சீனாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1431443
-
- 0 replies
- 214 views
-
-
எமிரேட்ஸ் விமான சேவையின் புதிய விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்தது! துபாயின் எமிரேட்ஸ் விமான சேவையின் புதிய விமானம் ஒன்று நேற்றுபிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இரட்டை இயந்திரங்களை கொண்ட இந்த “ஏர் பஸ் ஏ350” AIR BUS A 350 விமானம், மேம்பட்ட தொழில்நுட்பங்களோடும் திறமைகளோடும் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணிகளுக்காக 312 ஆசனங்கள் காணப்படுவதுடன் அவற்றில் 32 வணிக வகுப்பு ஆசனங்களும் , 21 உயரிய வணிக வகுப்பு ஆசனங்களும், 259 பொருளாதார வகுப்பு ஆசனங்களும் அடங்குகின்றன. அத்துடன் விமானத்தின் ஐந்து திசைகளிலிருந்தும் கமராக்கள் உள்ளதுடன், கையடக்கத் தொலைபேசிகளை (மின்னேற்றம்) சார்ஜ் செய்யும் வசதியும், Wi-Fi தொழில்நுட்பமும் உள்ளமையினால் அமெரிக்கா …
-
- 0 replies
- 219 views
-
-
Published By: VISHNU 09 MAY, 2025 | 03:09 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் படைக்கள சேவிதரால் சபையில் இருந்து வெளியேற்பட்டார். பாராளுமன்றம் வியாழக்கிழமை (08) காலை 9.30 மணிக்கு கூடியது முதல் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பல்வேறு விடயங்களுக்கும் ஒழுங்குப்பிரச்சினைகளை எழுப்பி கருத்துக்களை முன்வைத்துக்கொண்டிருந்தார். எனினும் அவருக்கு எதிராக ஏற்கனவே அமுலில் உள்ள அவரின் உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான தடை காரணமாக அவரின் கருத்துக்கள் வெளிவரவில்லை. இவ்வாறாக ஒவ்வொரு விடயங்களுக்கும் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பியும் இடையீட்டு கேள்வி…
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு Published By: Vishnu 09 May, 2025 | 03:16 AM பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் வியாழக்கிழமை (08) மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வழங்கிய ஆணைக்காக அந்த மக்க…
-
- 0 replies
- 156 views
-
-
மாயையை தோற்றுவிக்கும் கஜேந்திரகுமார்: ஆளுங்கட்சி விசனம் May 9, 2025 10:55 am ” வடக்கு மக்களின் காணி உரிமையை தேசிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தும். எனவே, சில விடயங்கள் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாயையை தோற்றுவிக்கின்றார்.” -என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., அரசாங்கம்மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘ அரசாங்கமும், இராணுவமும் இணைந்து வடக்கில் இனவாதத்தை பரப்புவதாக கஜேந்திரகுமார் எம்.பி. குற்றஞ்சாட்டினார். இனவாதத்தை தோற்கடித்த அரசாங்கம்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும் என்பதை கூறிக்கொள்கின்றேன். அதேபோல வடக்கு, கிழக்…
-
- 0 replies
- 179 views
-
-
இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது May 9, 2025 9:08 am ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் பயிற்சி அமர்வின் போது புறப்பட்ட பெல் 212 ரக ஹெலிகாப்டர் மதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்துள்ளனர். இதுவரை விமானிகள் உட்பட 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இலங்கை விமானப்படையின் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மீட்புபணியின் போது இரண்டு விமானிகள் உட்பட பயணித்த…
-
- 4 replies
- 479 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதியின் 23 வெளிநாட்டு பயணங்களுக்கு பாரிய செலவு! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 1.27 பில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சரின் கூற்றுப்படி, முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க 2022 இல் 4 வெளிநாட்டுப் பயணங்களையும், 2023 இல் 14 வெளிநாட்டுப் பயணங்களையும், 2024 இல் மேலும் 5 வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டார். 2022 ஆம் ஆண்டில் 63 மாநில அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களில் பங்கேற்றதாகவும், 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 252 மாநில அதிகாரிகள் பங்கேற்றதாகவும், 2024 ஆம் ஆண்டில் 111 மாநில அதிகாரிகள் சுற்றுப்பயணங்களில் பங்கேற்றதாகவு…
-
- 2 replies
- 272 views
-
-
08 MAY, 2025 | 06:29 PM தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசியல் இருப்புக்காகவே தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாக சில குழுக்கள் போலி பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றன என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பொதுத் தேர்தல் என்பது வேறு, உள்ளூராட்சி சபைத் தேர்தலென்பது வேறு. எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுடன்தான், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவை ஒப்பிட வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் 2018 தேர்தலில் வடக்கில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் தேசிய மக…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
பாகிஸ்தானுக்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து – ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்! பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கான அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை லாகூர் மற்றும் கராச்சிக்கான அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பிராந்தியத்தில் பல விமான இரத்துகள் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்தது. லாகூர் மற்றும் கராச்சி விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள், பயண அட்டவணையை மாற்றுவது அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான மேலதிக தக…
-
- 0 replies
- 149 views
-
-
கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகள் ! Published By: Vishnu 08 May, 2025 | 10:29 AM (ஆர்.ராம்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில், திருகோணமலையில் தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. அதேபோன்று அம்பாறையில் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி ஆகியன தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. எனினும், திருகோணமலை, அம்பாறையின் சிங்களப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியே …
-
- 0 replies
- 232 views
-
-
இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி, வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினர் நேற்று (07) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவை பெயரிடப்பட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அண்மையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், நாட்டின் அரசியலமைப்பிற்கும் சர்வதேச சட்டத்திற்கும் முரணானது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு இன்னும் தெரிவ…
-
- 0 replies
- 208 views
-
-
பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ஆயுதப் படைகள் துல்லியமான தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்படி தகவலை வெளியிட்டிருக்கும் கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம், மேலும் தெரிவித்துள்ளதாவது; இன்று அதிகாலை இந்திய பாதுகாப்பு படையினர் ‘ஒபரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின. இந்த தாக்குதலில் மொத்தமாக ஒன்பது (9) பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை, அத்த…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
07 MAY, 2025 | 04:48 PM குற்றச் செயல்கள் இடம்பெறும் போது சம்பவ இடத்தில் இருக்கும் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீங்கள் இருக்கும் இடத்தில் ஏதேனுமொரு குற்றச் செயல் இடம்பெற்றால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 5 விடங்களை உடனடியாக செய்யுங்கள் ; 1. குற்றச் செயல் இடம்பெற்ற இடத்தில் எவரேனும் காயமடைந்திருந்தால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவும். 2. உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கவும். 3.பொலிஸ் அதிகாரிகள் வரும் வரை குற்றச் செயல் இடம்பெற்ற இடத்திற்கு எவரையும் அனுப்ப வேண்டாம். 4. மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருந்தால் குற்றச் செயல் இடம்பெற்ற இடத்திற்குள் செல்லாமல் சற்று தள்ளியிருந்து அந்த இடத்தை பாதுகாக்கவும். …
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
07 May, 2025 | 03:43 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகிய போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கெஹெலிய ரம்புக்வெல்லவை கொழும்பு பிரதான நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்ல கைது | Virakesari.lk
-
- 0 replies
- 245 views
-
-
07 May, 2025 | 05:18 PM நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கிறார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று (7) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியானது வடக்கு, கிழக்கிலே அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. நாடு யாரிடமாவது இருக்கட்டும், தமிழர் தாயகம் தமிழரசோடு என்பது நாங்கள் தேர்தல் பரப்புரை காலத்தில் சொன்னதற்கமைய வடக்கு, கிழ…
-
- 0 replies
- 273 views
-
-
07 May, 2025 | 06:04 PM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை. தமிழ் மக்கள் தேசிய அரசியலில் எம்முடன் கைகோர்த்ததை போன்று பிரதேசவாரியான அரசியலிலும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் புதன்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பாரம்பரியமான அரசியல் கட்சிகளை காட்டிலும் ஒப்பீட்டளவில் வெற்றிப்பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஆளும் தரப்பு 150 உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள…
-
- 1 reply
- 282 views
-
-
(நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைப் பிரதிநிதிகள், சர்வதேச தராதரங்களுக்கு அமைவான புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வதற்கு அவசியமான கால எல்லை குறித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின்கீழ் இயங்கும் ஆட்சியியல் நிர்வாகம், சட்டவாட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பணிக்குழுவின் 8 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (5) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது ஊழலை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள், தொழிலாளர் உரிமைகள் உள்ளடங்கலாக மனித உரிமைகளை உறுதிப்படுத்தல், சிறுபான்மையினர், பெண்கள் மற…
-
- 0 replies
- 126 views
-
-
07 May, 2025 | 06:57 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாகவே ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு தேர்தல் ஒன்றில் யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி நாடுபூராகவும் மொத்தமாக 4இலட்சத்தி 88ஆயிரத்தி 406 வாக்குகளை பெற்றுள்ளது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 9.17வீதமாகும். இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தையும் வெற்றிகொள்ள முடியவில்லை. மொத்தமாக 381 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந…
-
- 0 replies
- 118 views
-
-
07 May, 2025 | 07:02 PM (எம்.மனோசித்ரா) உள்ளுராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் ஊடாக அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அத்துடன் உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சகல எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி வலுவான பொது எதிரணியை உருவாக்க மக்கள் வழங்கிய ஆணையை முழு மூச்சுடன் முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உள்ளராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர் புதன்கிழமை (7) விசேட அறிவிப்பை வெளியிட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதி…
-
- 0 replies
- 112 views
-
-
3000 நாட்களை எட்டிய காணாமல் போன உறவுகளின் போராட்டம்! தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 3000 நாளை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இறுதிப்போரின்போதும்,அதற்கு முன்னரும் காணாமல் போன தமது உறவுகளின் உண்மைநிலையினை வலியுறுத்தி தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 3000 நாட்களை கடக்கின்ற நிலையில் அவர்களது போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து செல்கின்றது. இதனையடுத்து இன்றையதினம் அவர்களால் கவனயீர்ப்பு…
-
- 0 replies
- 120 views
-
-
Published By: RAJEEBAN 07 MAY, 2025 | 12:07 PM ஆறாயிரம் ஏக்கர் தமிழர் நிலத்தினை அபகரிக்கும் அரசாஙகத்தின் முயற்சிக்கு எதிராக மே 29 ம் திகதி இடம்பெறவுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என இலங்கை தமிழரசுகட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரிந்துவிட்டது உடைந்துவிட்டது என சொல்கின்ற செய்திகளை எல்லாம் கடந்த காலத்திலே நான் மறுத்துவந்திருக்கின்றேன். நாடாளுமன்றத்தின் இறுதிவரைக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பாக இயங்கினோம் நாடாளுமன்ற தேர்தலிலே அவர்கள் தனித்து போட்டியிட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலிலே தனித்து போட்டியிடக்கூடாதுஇஇந்த தேர்தலில்தான் தனித்து…
-
- 1 reply
- 162 views
- 1 follower
-