Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2020இல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 10000 வீடுகள் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டளவில் பெருந்தோட்ட பகுதிகளில் 10000 வீடுகள் தோட்டத் தொழிலாளர்களுக்காக அமைத்துக் கொள்ளப்படும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தோட்ட தொழிலாளர்களின் லயக்குடியிருப்பை மாற்றி அவர்களுக்கு தனியான வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு நாம் எடுத்த முயற்களுக்கு ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள். இதற்காக மலையக மக்களின் சார்பில் நாம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்…

    • 0 replies
    • 280 views
  2. அமெரிக்காவுடனான உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது கூட்டு எதிரணி அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “நெறிமுறையற்ற உடன்பாடுகளை அடுத்த 90 நாட்களுக்குள் அங்கீகரிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த உடன்பாடுகளை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்க அரசாங்கம் முற்படும் போது, கூட்டு எதிரணி அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும். …

    • 0 replies
    • 264 views
  3. 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம்.. July 5, 2019 இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம் செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் வரை, 1,008,449 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம் செய்துள்ளதாகவும் இதில் 97,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சீனாவில் இருந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏனையவர்கள் இந்தியா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் மாலைத்தீவில் இருந்து இலங்கைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது சுற்றுலாப்…

  4. தமது காணிகளை அடையாளப்படுத்தி அளவீடுகளை மேற்கொள்ள முடியும் - ஆளுநர் சுரேன் ராகவன் தமது காணிகளை அடையாளப்படுத்தி அளவீடுகளை மேற்கொள்ள முடியும் என ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம். யாழ். வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பங்குபற்றலுடன் நேற்று ஆரம்பமானது. இந்த 62 ஏக்கர் காணிகளை நான்கு வலயங்களாக பிரித்து, அவற்றினை அளந்து அப்பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்…

  5. பொலிசாரின் துப்பாக்கி அபகரிப்பு ; மட்டக்களப்பில் குவிக்கப்பட்ட இராணுவத்தினரால் பதற்றம் - இது வரை இருவர் கைது மட்டக்களப்பு புதுநகர் திமிலைதீவு பிரதேசத்தில் போக்குவரத்து பொலிசார் இன்று பகல் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டர் சைக்கிளில் சென்ற இருவருக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கைதுப்பாக்கியை குறித்த இருவரும் பறித்துச் சென்றதையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மட்டு தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள புதுநகர் திமிலைதீவு ஆலயத்துக்கு அருகில் சம்பவமினமான இன்று வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் வீதி போக்குவரத்து பொலிசார் இருவர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில…

  6. 2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சொத்து மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை வழங்குமாறு நாடாளுமன்ற செயலாளரிடம் கோரியுள்ளது. அதிகாரம்கொண்ட அதிகாரி ஊடாக இன்று முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இந்த விபரங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் 3000 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்திருப்பதாக றிசாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்காக இந்த விபரங்களை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கோரியுள்ளது. ஆனாலுமும், 1975ம் இலக்க சொத்து பொறுப்புகள் சட்டத்தின் 1ம் சரத்தின் படி, சொத்துப்பொறுப்பு விபரங்களை வெளிய…

    • 0 replies
    • 300 views
  7. July 4, 2019 தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் இரகசியத்திட்ட நோக்கத்துடன் பௌத்த தேரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும், தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தி ஆலயத்திற்கான தமிழ் மக்களின் ஆதரவுப் பலத்தினை ஆக்கிரமிப்பாளர்களுக்கு காண்பிக்கும் முகமாக “தமிழர் திருவிழா” எனும் தொனிப்பொருளில் நாளை மறுதினம் (06) அதே ஆலயத்தில் 108 பானைகளை வைத்து பொங்கல் விழாவை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்றைய தினம், சிங்கள பௌத்த மயமாக்கலினால் பறிபோய்கொண்டிருக்கும் எ…

  8. பௌத்த தேரர்களின் அரசியல் செயற்பாடுகள் குறித்து அலிஸாஹிர் மௌலானா அதிருப்தி! இலங்கையின் சட்டம் – ஒழுங்கு ஸ்தீரமான நிலையில் இருக்கும்போது, தேரர்கள் சட்டத்தை கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வேண்டும் என்றே சில அரசியல்வாதிகள் நாட்டின் தற்போதைய நிலையை பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கப்பார்க்கிறார்கள். காவியுடையில் வரும் சிலர் போர்க்குரல் செய்கின்றார்கள். இவை மிகவும் அசிங்கமான, அநாகரீகமான விடயங்களாகும். போர்த்திக்கொண்டு இருக்கும் பிக்குகளை …

  9. இலங்கையில் சைலன்ஸ் குழு இணையக் கொள்ளை!- ரஷ்யா எச்சரிக்கை இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய ஆசிய நாடுகளை இலக்கு வைத்து சைலன்ஸ் குழு இணையக்கொள்ளை நடத்துவதற்கு முனைவதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவை தலைமையகமாகக் கொண்ட குரூப்-ஐ.பி என்ற நிறுவனம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சைலன்ஸ் என அடையாளப்படுத்தப்பட்ட இணையக்கொள்ளையில் பயிற்றப்பட்ட குழுவொன்று வங்கிகள் மீது இணையத்தாக்குதல்களை நடத்தி வருவதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முன்னதாக இந்த குழுவினர், ரஷ்யா, முன்னாள் சோவியத் நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலுள்ள வங்கிகளை குறிவைத்து செயற்பட்டிருந்தன எனவும் தற்போது ஆசிய நாடுகளை இலக்கு வைத்திருப்பதாகவும் குரூப்-ஐபி நிறுவனம் குறிப்பிட்டுள…

  10. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கூறப்படும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர், தமிழர்களுக்கு எவ்வாறான தீர்வை முன்வைக்கப்போகிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இதனைத் தெரிவித்துள்ளார். இல்லாவிட்டால், தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் முன்வைக்கும் கொள்கைக்கு அமைய, தமிழ் மக்கள் விரும்பினால் வாக்களிக்கும் நிலையை கொண்டிருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/219634/தமிழர்களு…

  11. எம்.ஆர்.எம்.வஸீம்) சரணாகதி என்ற பெயரில் முஸ்லிம்கள் நாட்டுக்குள் வருவதை உடனடியாக தடைசெய்யவேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸலநாயக்க, நாட்டில் தற்போது மாறிவரும் இன, மத அடிப்படையிலான மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 2050 ஆகும்போது சிங்கள பெளத்தர்கள் சிறுபான்மையாகும் அபாயம் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார். பொரளையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பரிமாற்று கேந்திர நிலையதில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். …

  12. போர்க்குற்றவாளிகள் தேர்தலில் நின்றால் படுதோல்வி அடைவார்கள் என இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். போர்க்குற்றவாளிகள் என்று ரணில் விக்கிரமசிங்க யாரைக் குறிப்பிடுகிறார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். இப்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய விடயத்தில் ஒரு சட்ட விவகாரம் எழுகிறது. அதாவது போர்க்குற்றவாளிகள் தேர்தலில் இறங்கினால், படுதோல்வியடைவார்கள் என்று பிரதமர் கூறியிருப்பதற்குள் போர்க்குற்றவாளிகள் யார் என்பது அவரால் இனங் காணப்பட்டுள்ளது. எனவே போர்க்குற்றம் இழைத்தவர்கள் மீது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி அவர்கள் இழைத்த போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தாதது எதற்…

    • 0 replies
    • 464 views
  13. முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் ஹெக்டர் தர்மசிறி, ஆறு ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் மூன்று வருட சிறைத்தண்டனைக்கு ஆளாகியுள்ளார். கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ன நேற்று அவருக்கு இந்த சிறைத் தண்டனையை வழங்கினார். அத்துடன் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மேற்படி ஊழல் குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இலஞ்ச ஆணைக்குழு அவர் மீது 15 ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. எனினும் 6 குற்றச்சாட்டுகளில் மட்டுமே அவரை நீதிபதி குற்றவாளியாகத் தீர்ப்பளித்ததுடன் ஏனைய 9 குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுதலை செய்தார். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொர…

  14. நா.தனுஜா) சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டி அறவீட்டுடன் கடன்களை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட கருத்தை இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் முற்றாக மறுத்துள்ளது. இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக சவுதி அரேபிய அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டியுடனான கடன்களை வழங்கி வருகிறது என்று கடந்த மாதம் 13 ஆம் திகதி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார கூறியிருந்தார். இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்து கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையி…

  15. (எம்.மனோசித்ரா) முஸ்லிம் சமூகத்தின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காகவே பொதுபல சேனா அமைப்பினால் எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டியில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்ட கிளை குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 7 ஆம் திகதி பொது பல சேனா அமைப்பு கண்டியில் மாநாடோன்றினை ஏற்பாடு செய்துள்ளமை அனைவரும் அறிந்த விடயமாகும். அந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக அற…

  16. July 4, 2019 வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பங்குபற்றலுடன் இன்று ஆரம்பமானது. …

  17. தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த ஏழு பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வெளியேறியுள்ளனர். இவ்வாறு சிகிச்சை பெற்று வெளியேறிய மாணவர்கள் அனைவரும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட மாணவர்கள் எனவும் கடந்த செவ்வாய்கிழமை(2) இரவு சுமார் ஒன்பது மணியளவில் குறித்த பீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்யும் தேர்தல் முடிவு தொடர்பாக எழுந்த பிரச்சினை ஒன்றை அடுத்தே கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதில் குறைந்த பட்சம் 7 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையி…

  18. ரிஷாத் பதியுதீனை பாதுகாப்பது யார் ? - எஸ்.பி. திஸாநாயக்க (எம்.ஆர்.எம்.வஸீம்) ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாங்கள் தெரிவித்திருக்கும் கொலை, ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள், அவரை கைதுசெய்வதற்கு போதுமானதாகும். ஆனால் அவரை கைதுசெய்ய விடாமல் யார் தடுக்கின்றார் என்பதை தேடிப்பார்க்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். பொரளையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பரிமாற்று கேந்திர நிலையதில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். ரிஷாத் பதியுதீனின் மனைவியின் வங்கிக்கணக்கில் 5கோடி ரூபா பரிமாற்றப்பட்டுவந்மை தொடர்பில் தற்போது விசாரணை இடம்பெற்று வருகின்றது. என்றாலும் இவ்வளவு பா…

  19. சிறிகஜன் தொடர்பில் விசாரணை…. July 4, 2019 புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிக் காவற்துறைப் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது. புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிக் காவற்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் …

  20. வறட்சியால் வெகுவாக குறைந்து வரும் உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக மட்டக்களப்பு, உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் வெகுவான குறைந்து வருவதைக் காணமுடிகிறது. இதனால் நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் நீரைப் பெற்று மேற்கொள்ளப்பட்டு வரும் பல ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். உன்னிச்சை குளத்தில் இருந்தே மட்டக்களப்பு மாவட்டத்தின் பல நகரப் பிரதேசங்களுக்கும் நீர் விநியோகம் செய்யப்படுகின்ற அதேவேளை, அக்குளத்தின் வலதுகை, இடதுகை வாய்க்கால்கள் ஊடாக வயல் நிலங்களுக்கும், நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வருகின்றது. ஜனவரி மாத காலப்பகுதியில் 33அடி நீர்மட்டம் இருந்தபோதிலும் தற்போது சுமார்…

  21. தோட்டத்தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்துடன் 50 ரூபாவை இணைத்து வழங்கும் விடயம் தொடர்பான பிரச்சினையை தீர்க்க பிரதமரினால் மூவரடங்கிய விசேட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தையடுத்தே பிரதமர் இந்நடவடிக்கையினை எடுத்துள்ளார். http://thinakkural.lk/article/31180

  22. திருக்­கோவில் பிர­தேச மக்­களின் வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­படும் அச்சம் அம்­பாறை திருக்­கோவில் பிர­தே­சத்தில் மக்­களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய நிர்­மா­ணிக்­கப்­பட்ட சாகாமம் குள­மா­னது தற்­போது ஏற்­பட்­டுள்ள வரட்­சியின் கார­ண­மாக வரண்ட நிலையில் காணப்­ப­டு­கின்­றது. இந்­நிலை தொட­ரு­மானால் பொரு­ளா­தார ரீதி­யான வீழ்ச்­சியை திருக்­கோவில் பிர­தேச மக்கள் எதிர்­கொள்ள வேண்டும் என விவ­சாய அமைப்­புக்கள் அச்சம் வெளி­யிட்­டுள்­ளன. இப்­பி­ர­தே­சத்தில் வாழும் சுமார் 33 ஆயிரம் மக்கள் சனத்­தொ­கையில் பெரும்­பா­லான மக்கள் தமது ஜீவ­னோ­பாய தொழி­லாக விவ­சாயம், மீன்­பிடி மற்றும் கால்­நடை வளர்ப்பு ஆகி­ய­வற்றை மேற்­கொள்­கின்­றனர். இந்­நி­லையில் இவ் நீர்ப் பற்­றாக்­குறை பிரச்­சினை…

  23. லொறி - டிப்பர் வாகனம் விபத்து ; இருவர் உயிரிழப்பு! கிளிநொச்சி - யாழ்ப்பாண வீதியில் பளை இத்தாவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறியொன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் குறித்த இரு வாகனங்களில் சாரதிகளே உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/59688

  24. 8 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் ; ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு பருத்தித்துறையில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று நிராகரித்தது. பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன், சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். பருத்தித்துறையில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவியை மலசல கூடத்துக்க…

  25. முப்பது வருடங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்கப் போகின்றது. மக்களைப் பிரித்து அரசியல் செய்து வயிறு வளர்க்க தோல்வியடைந்த அரசியல் கட்சியொன்று முயற்சிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார். மீண்டும் குடும்ப ஆட்சியை ஏற்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் அதிகார சபையின் பிரதான கூட்டம் நீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் அமைந்துள்ள ஜம்போ கார்ட்ன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளர் தர்மப்பிரிய விஜேசிங்க தலைமையில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் உரையாற்றும் போ…

    • 1 reply
    • 355 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.