Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேர்தலுக்கு முன் யாழ் , கிளிநொச்சியில் காணிகளை விடுவிக்க கூடிய சாத்தியம் adminApril 22, 2025 நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கேட்ட போது, மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் மிக உறுதியாக உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிப்போம். யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்புடைய காணிகள் தவிர மீதமுள்ள காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். அதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் …

  2. யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் adminApril 22, 2025 யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒரு சில வாரங்களில் ஆரம்பிக்கப்பட ஏதுவாக யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவித்தலை விடுத்திருந்தார். அதன்போது, கடவுச்சீட்டு அலுவலகத்துக்காக மாவட்டச் செயலகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே, கடவுச்சீட்டு அலுவலக…

  3. அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கார்டினல் மெல்கம் ரஞ்சித்! போப் பிரான்சிஸின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது திடீர் மறைவு, வத்திக்கானின் அடுத்த பிரதிநிதி யார் என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், திங்கட்கிழமை (21) காலமான போப் பிரான்சிஸுக்குப் பின்னர், இலங்கையின் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தை அடுத்த போப்பாக தேர்வு செய்ய பல சர்வதேச ஊடகங்கள் பெயரிட்டுள்ளன. சாத்தியமான வாரிசுகளின் தொகுப்பில், வொஷிங்டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கார்டினல் லூயிஸ் டேகிள், பிரான்சின் கார்டினல் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கார்டினல் பியட்ரோ பரோலின் போன்ற பிற முக்கிய நபர்களுடன் கார்டினல் மெல்கம் ரஞ்சித்தும் பெய…

  4. கெஹெலியவுக்கு எதிரான வழக்கு – சட்டமா அதிபரின் கோரிக்கை! தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றை அமைக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். தலைமை நீதிபதியிடம் எழுத்துப்பூர்வ கடிதம் மூலம் சட்டமா அதிபர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு 2024 செப்டெம்பரில் பிணை வழங்கப்பட்டது. இரண்டு மூத்த அரச அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்கி 22,500 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை ஒரு மருந்து நிறுவனம் இறக்குமத…

  5. 21 Apr, 2025 | 03:08 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் தலைவர் என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஜனாதிபதி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏழு வேண்டுகோள்களை விடுத்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான முழுமையான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்…

  6. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர. “உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை ஜனாதிபதி உரிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்தாவிடின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்” என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி வழங்கிய போலி வாக்குறுதியாகவே இது கருதப்படும் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக வெளிப்பட…

  7. பாக்கு நீரிணை ஒற்றைக் காலுடன் நீந்திக்கடந்து சாதனை படைத்த இந்தியப் பெண் Vhg ஏப்ரல் 19, 2025 பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக்கு நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெலி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் . இதுவரை 30 இற்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ் கோடிக்கோ அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மார…

  8. 21 APR, 2025 | 05:35 PM 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது, தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் தங்களது ஆளடையாளத்தை உறுதி செய்துக்கொள்வதற்கு பின்வரும் அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும். 1. தேசிய அடையாள அட்டை 2. செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் 3. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு 4. தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் அடையாள அட்டை 5. ஆட்பதிவு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தகவல்கள் உறுதிசெய்யும் கடிதம் https://www.virakesari.lk/article/212570

  9. வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிப்புறங்களில் வேலையின்போது அதிகளவு தண்ணீர் குடிப்பதும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுப்பதும் அவசியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பத்தில் தகிக்கும் வடக்கு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  10. 21 APR, 2025 | 10:52 AM முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (21) காலை ஆஜராகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212502

  11. ருத்தித்துறை, தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி ஒருவர் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்றைச் சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது-69) என்பவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலையில் பலமுறை தாக்கப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுநிலை ஆசிரியையான சகோதரியுடன் குணதேவி ஒரே வீட்டில் வசிந்து வந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினமான நேற்றுக் காலை 7 மணியளவில் சகோதரி அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக குணதேவி தேவாலயத்துக்குச் செல்ல…

  12. 21 Apr, 2025 | 06:27 PM வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க, அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வ…

  13. 21 Apr, 2025 | 05:00 PM அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன் கருதியும், அவர் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தித் தரவேண்டும் என உதயகலாவின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (21) தனது பேத்தியாரான அருனோதயநாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வமக்கள் கட்சியின் உருவாக்கத்தால் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் தனது தாயார் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார். எமது தாயார் அரசியல் சூழ்ச்சி காரணமாக சிறையில் இருப்பதால் நான்கு ச…

  14. 21 Apr, 2025 | 12:27 PM முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக திங்கட்கிழமை (21) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ''அரசே சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலை கட்டுப் படுத்தி நீரியல் வளங்களைப் பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்து'' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிவந்த நிலையில் அண்மைக் காலமாக கடலிலும் நந்திக் கடல் களப்பு உள்ளிட்ட இழப்பு பகுதிகளிலும் சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மிகவ…

  15. புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்! புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிவிட்ட ஜனாதிபதி, வணக்கத்திற்குரிய புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார் அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயம் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அத்துடன் கருணை, நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் அவரது மரபு எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் சுட்ட…

  16. இலங்கை போக்குவரத்து சபைக்கு 1300 மில்லியன் ரூபா வருமானம்! ஏப்ரல் பண்டிகை காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) 1300 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. 2025 ஏப்ரல் 10 முதல் 19 வரையிலான காலக் கட்டத்தில் இந்த வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு முகாமையாளர் எச்.பியதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை சாதாரண பேருந்து கட்டணங்களின் கீழ் இயங்கிய நேரத்தில் இந்த வருமானம் ஈட்டப்பட்டது. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. https://athavannews.com/2025/1429001

  17. அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 462 மில்லியன் ரூபா வருமானம்! தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலப் பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலமாக 462 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருமானம் 9 முதல் 19 ஆம் திகதி வரையிலான 10 நாட்களில் மட்டுமே பதிவானதாக நெடுஞ்சாலை செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் துணை பணிப்பாளர் ஜெனரல் ஆர்.ஏ.டி. கஹடபிட்டிய கூறியுள்ளார். குறித்த காலகட்டத்தில் 1.3 மில்லியன் வாகனங்கள் அதிவேக வீதிகளில் பயணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தங்கள் கிராமங்களுக்குச் சென்ற மக்கள் அதிவேக வீதிகளை பயன்படுத்துவதால், இன்றும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் குறித்த வீதிகளை பயன்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது. நெடுஞ்சாலைகளுக்கு நுழைவதற்கு முன், உங்கள்…

  18. 21 APR, 2025 | 09:02 AM ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 6வது வருட நிறைவை முன்னிட்டு இன்று காலை 8.45 முதல் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் இல்ல தொடர்பாடல் பணிப்பாளர் அனைத்து இலங்கை மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட நாட்டின் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 6 …

  19. அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் இலங்கை அதிகாரிகள் சந்திப்பு! இலங்கை தூதுக்குழு ஒன்று செவ்வாய்க்கிழமை (22) அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீரை சந்திக்க உள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்த கட்டணங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே இந்த சந்திப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. சண்டே டைம்ஸ் செய்தியின்படி, அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடனான கடிதப் பரிமாற்றத்தின் விளைவாக இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அனில் ஜெயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சகம், வர்த்தக அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் …

  20. Published By: VISHNU 21 APR, 2025 | 02:14 AM யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆலய சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்க…

  21. 15 APR, 2025 | 11:46 AM யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியே செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டுகிறார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுமார் 600க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் யாழ். செம்மணியில் புதைக்கப்பட்டமை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த பகுதி மறைக…

  22. Published By: DIGITAL DESK 2 20 APR, 2025 | 09:29 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது நல்லாட்சி அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்களே தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி ராஜபக்ஷவினரை பேசி திரிவதால் ட்ரம்ப் வரியினை அகற்றப்போவதில்லை அதனை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு வேலைத்திட்டமொன்றுடனான நோக்குடன் செல்லவேண…

  23. Published By: VISHNU 20 APR, 2025 | 09:20 PM யாழ்ப்பாணத்தில் 69 வயதான மூதாட்டி ஒருவர் பொல்லினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் திருடும் நோக்குடன் சென்ற இளைஞனே மூதாட்டியை தாக்கி படுகொலை செய்துள்ளார் எனும் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் இரண்டு மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். அதில் ஒருவர் 20ஆம் திகதி காலை உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு சென்றுள்ளார். மற்றையவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அந்நிலையில் இரு மூதாட்டிகளும் தேவாலயத்திற்கு சென்றுள்ளார்கள் என நினைத்து , இளைஞன் வீட்டினுள் களவுக்கு சென்றுள்ளார். அவ்வேளை வீட்டில் இருந்த…

  24. Published By: DIGITAL DESK 2 20 APR, 2025 | 09:17 PM பொலிஸ் திணைக்களத்தின் நிருவாக கட்டமைப்பினை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் வடமாகாண வலய குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இவ் அலுவலகமானது, வியாழக்கிழமை (17) பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரியவினால் திறந்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சீ.ஏ.தர்மபால உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/212476

  25. நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம் - வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி Published By: DIGITAL DESK 2 20 APR, 2025 | 09:12 PM நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம் என அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தின் வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) ஊடக சந்திப்பின் போதே தெரிவித்தார். இவர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த என்ற ரீதியில் இலங்கையில் சுதேச மருத்துவம் இருக்கின்றது. இந்த கற்கை நெறியை நிறைவுசெய்து தமிழ், சிங்களம், முஸ்லிம் என 1700 பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர். இதைவிட 600 பேர் இறுதிப் பயிற்சி நிலையில் இருக்கின்றனர். இதே நேரம் மருத்துவப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.