ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
நெல்லியடியில் விடுதி சுற்றிவளைப்பு யாழில் பெரும் பரபரப்பு 2 FacebookTwitter அங்கு பொதுமக்கள் நுழைவதற்கு தடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விவரங்களைக் கூறுவதற்கு பொலிஸார் மறுத்துவருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. நெல்லியடி மாலு சந்திப் பகுதியில் வெடிபொருள் உள்ளதென இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து தேடுதல் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. நெல்லியடிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படை, இராணுவம், பொலிஸார் இணைந்து குறிப்பிட்ட பகுதி ஒன்றைச் சுற்றிவளைத்துள்ளனர். https://newuthayan.com/story/13/நெல்லியடியில்-விடுதி-சுற.html அவர்களுக்கு …
-
- 0 replies
- 650 views
-
-
கண்டி நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் ஆனையிறவு இராணுவ முகாமுக்கு அருகில் மறித்து சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றது. இதேவேளை பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளை இறக்கியும் சோதனை மேற்கொள்ளப்படுவதுடன் , பஸ்களும் சோதனையிடப்படுகின்றது. http://www.virakesari.lk/article/54512
-
- 0 replies
- 428 views
-
-
(நா.தனுஜா) நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களுடன் நல்லுறவைப் பேணிவருபவர்கள் என்பதுடன், ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயலாற்றி வருகின்ற இனத்தவர்களாவர். ஆனால் முஸ்லிம் சமூகத்திற்குள்ளே அடிப்படைவாதத்தைப் புகுத்தி, தீவிரவாதத்தை பரப்பும் நோக்கிலே சிலர் செயற்பட்டு வருவதாக நாங்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தோம். அதனைக் கருத்திற்கொள்ளாமல் நாங்கள் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்டினார்கள். அந்த அலட்சியத்தின் விளைவால் இன்று அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன என்று பொதுபலசேனா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை அடுத்து பொதுபலசே…
-
- 0 replies
- 321 views
-
-
மானிட்டரிங் பிரிவு பிபிசி படத்தின் காப்புரிமை fb screenshot …
-
- 0 replies
- 699 views
-
-
மட்டக்களப்பு சீவோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது இக் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்க்கொண்டவர் காத்தான்குடி 6ம் பிரிவு தைக்கா வீதியைச் சேர்ந்த முகமட் காசிம் முகமட் றில்வான் என அடையாளம் காணப்பட்டதுடன் இவர் தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் கடந்த 2007 ம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனவும் பொலிசாரால் தேடப்பட்டு வந்துள்ளவர் எனவும் கடந்த 12 திகதி வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு நாடுதிரும்பிய இவர் கடந்த 16 ம் திகதி காத்தான்குடியில் வாழ்ந்து வந்த மனைவி மற்றும் 4 வயதுடைய ஒரு குழந்தையையும் காத்தான்குடியில் இருந்து…
-
- 3 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை Reuters முழுவதும் வெடிபொருள் நிரப்பிய ஒரு லாரியும், ஒரு வேனும் இலங்கை தலைநகர் கொழும்புவிற்குள் நுழைந்திருப்பதாக கொழும்பு நகர காவல் நிலையங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பிபிசி செய்தியாளர் அஸம் அமீன் பகிர்ந்துள்ள ட்வீட். இத்தக…
-
- 0 replies
- 210 views
-
-
தேவாலயங்களில் வாழிபாடுகள் மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் April 23, 2019 பாதுகாப்புக்காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகள் மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதனால் மீள் அறிவித்தல் வரும்; வரை தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களின் பங்குத்தந்தையர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இலங்கையில் தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில் 310 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 500 க்கும் அதிகமான …
-
- 0 replies
- 422 views
-
-
தேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும் April 23, 2019 தேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது குறித்த வலியுறுத்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் ஸ்ரீசுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார் http://globaltamilnews.net/2019/119119/
-
- 0 replies
- 589 views
-
-
யாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில். நைஜீரியா பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது நபர்களை யாழ்ப்பாண காவல்துறையினர் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். யாழ். நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கி இருந்தவர்களையே இன்று செவ்வாய்க்கிழமை மதியம் யாழ்.காவல் நிலையத்திற்கு அழைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அவர்களின் ஆவணங்களையும் பரிசோதித்து வருகின்றனர். விசாரணைகளின் ஊடாக அவர்களின் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மீது சந்தேகம் இல்லை என்பது உறுதியானால் அவர்களை விடுதலை செய்…
-
- 0 replies
- 390 views
-
-
குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலிகள் தொடர்கின்றன…. April 23, 2019 யாழ் மாவட்ட செயலக ஊழியர்கள்… கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலாவது குண்டு வெடித்த காலை 8.45 மணிக்கு மாவட்ட செயலக ஊழியர்கள் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடை பிரார்த்தித்து 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள். அதேவேளை தேசிய துக்க தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக மாவட்ட செயலகத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. தேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை (பெரிய கோவில்) தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. இவ் அஞ்சலி நிகழ்வ…
-
- 0 replies
- 657 views
-
-
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலய சூழலில், பெரும் சோகம் பரவிக்கிடக்கிறது.. April 23, 2019 சோகத்தில் ஆழ்ந்தது கட்டுவாப்பிட்டிய ஆலயம் ! தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களின் நல்லடக்க ஆரதனை வழிபாடுகள் இன்று நீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியொங்கும் பெரும் சோகம் பரவிக்கிடக்கிறது.. கடந்த 21 ஆம் உயிர்ப்பு ஞாயிறு தினத்தை கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் கொண்டாடி திருப்பலிப் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை, 3 தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொற்கொள்ளப்பட்டது. இதில் இதுவரை 310 பேர் கொல்லப்பட்ட நிலையில் 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். …
-
- 0 replies
- 700 views
-
-
இலங்கைத் தாக்குதல்கள் – குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உலகநாடுகள் உதவவேண்டும்- UN.. April 23, 2019 இலங்கையில் தேவாலயங்கள் ஐந்து நட்சத்திர விடுதிகள் வேறு மூன்று பகுதிகளில் இடம்பெற்ற கோழைத்தனமான கொடுரமான பயங்கரவாத தாக்குதல்களை ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் மிகக்கடுமையான விதத்தில் கண்டித்துள்ளனர் என பாதுகாப்பு சபையின் தலைவர் கிறிஸ்டொப் ஹெகுஸ்கென் தெரிவித்துள்ளார் குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் வெளியிட்டுள்ளனர். பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் சர்வதேச சமாதானம் மற்றும் பா…
-
- 0 replies
- 321 views
-
-
நீர்கொழும்பில் 6 பாகிஸ்தானிய பிரஜைகள் கைது… April 23, 2019 நீர்கொழும்பில் 6 பாகிஸ்தானிய பிரஜைகளை கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த 6 பாகிஸ்தானிய பிரஜைகளும் வீசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், கைதுசெய்யப்பட்ட 6 பாகிஸ்தானிய பிரஜைகளிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/2019/119052/
-
- 0 replies
- 417 views
-
-
மாலை 6.15க்கு விளக்கேற்றி வெள்ளைக் கொடி பறக்க விடுமாறு வேண்டுகோள் April 23, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதனையடுத்து இன்று தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சகல வீடுகளிலும் மாலை 6.15 அளவில் விளக்கேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சகல வீடுகள், வாகனங்களிலும் வெள்ளைக் கொடியைப் பறக்க விடுமாறும், உள்நாட்டு அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பான சுற்றுநிரூபமானது அமைச்சால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. http://globaltamilnews…
-
- 0 replies
- 321 views
-
-
கொள்ளுப்பிட்டி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான பொதி….. April 23, 2019 கொழும்பை அண்மித்த பகுதிகளில் காவற்துறையினரால் சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதி ஒன்று இருப்பதாக காவற்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பொதியை காவற்துறையினர் சேதனையிட்டு வருவதால் கரையோர ரயில் சேவையில் தாமதமேற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. http://globaltamilnews.net/2019/119038/
-
- 0 replies
- 185 views
-
-
மன்னாரில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு April 23, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று செய்வாய்க்கிழமை (23) காலை 8.30 மணிக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தேசிய துக்க தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதோடு, அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் மாவட்டச் …
-
- 0 replies
- 213 views
-
-
அவசர கால சட்டத்தை அமுல்படுத்தவதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது April 23, 2019 அவசர கால சட்டத்தை அமுல்படுத்தவதற்காக வர்த்தமானி அறிவித்தலினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு காவல்துறையினருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட த…
-
- 0 replies
- 179 views
-
-
கொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் உயிரிழப்பு! கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ஷேக் ஹசீனாவின் உறவினரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் சலீமின் பேரன் ஜயான் சவுத்ரி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷேக் ஹசீனாவின் உறவினர்களான, தாய், தந்தை, இரு மகன்கள் என கொழும்பிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றிருந்தது. இதன்போது சிறுவனின் தந்தை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக…
-
- 0 replies
- 697 views
-
-
வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் நிலைமைகளை விளக்கிய சிறிலங்கா பிரதமர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கிக் கூறியுள்ளார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சிறிலங்கா பிரதமர் விளக்கிக் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களால் சிறிலங்காவின் சுற்றுலாத் துறைக்கு ஏற்படக் கூடிய பாரிய இழப்புக் குறித்தும், அதனை சரி செய்வது குறித்தும் வெளிநாட்டுத் தூதுவர்களின் …
-
- 1 reply
- 425 views
-
-
தற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் சிக்கியது கொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல், தாக்குதல் நடத்திய நபர்களால் பயன்படுத்தப்பட்ட தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டை, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் சிறப்பு அதிரடிப்படையினரும் முற்றுகையிட்டனர். அப்போது, அங்கிருந்த ஒரு தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்தார். அதில், மூன்று காவல்துறை அதிகாரிகளும், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். அந்த வீட்டில் நடத்தப்பட்ட தேடு…
-
- 0 replies
- 753 views
-
-
கடந்த சில ஆண்டுகளில் நடந்த மோசமான வன்முறையாக ஞாயிறன்று நடந்த இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் கருதப்படுகின்றன. இதில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்களுக்கு பின்னால் என்டிஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இருக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் சிலரும், ஊடக செய்திகளும் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஏற்கனவே புலனாய்வுத்துறை, இந்த அமைப்பு குறித்து எச்சரிக்கை விடுத்ததாக இலங்கை தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் ஃபெர்ணான்டோ ட்விட்டரில் ஒரு ஆவணத்தை ஏப்ரல் 21ஆம் தேதி பதிவிட்டிருந்தார். அப்படியொரு கடிதம் வந்தது உண்மைதான் என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ரஜித செனரத்ன குறிப்பிட்டார். ஆனால், இத்தாக்குதல்களை நடத…
-
- 0 replies
- 721 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளுக்கு உதவ அமெரிக்கா புலனாய்வு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக பாதுகாப்பு துறை செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார். அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ என அழைக்கப்படும் சமஸ்டி விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் விசாரணைகளுக்கு உதவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்துலக காவல் துறையினர் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவ தயாராகவுள்ளதாக இன்டர்போல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http:…
-
- 2 replies
- 868 views
-
-
தேசிய சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் சகல முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து சீன ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சீன ஜனாதிபதி ஸீ ஸின்பிங் அனுப்பிவைத்த செய்தியில், குண்டுவெடிப்பு சம்பவங்களை கேள்வியுற்று அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்கள் நலமடைய பிரார்த்திப்பதாகவும், மக்களின் துன்பங்களில் என்றும் பங்கெடுக்க தயாரென்றும் குறிப்பிட…
-
- 0 replies
- 373 views
-
-
யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதனால் யாழ்ப்பாணம் - அராலி வீதிக்கும், நாவாந்துறை வீதிக்கும் இடையே பொலிஸ் தடை போடப்பட்டு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு அமர்ந்துள்ளார். தான் மின்குமிழ் விற்பனை முகவர் எனவும் அதனை யாழ்ப்பாணத்தில் விநியோகிப்பதற்கு இங்கு வந்துள்ளதாகவும் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்…
-
- 0 replies
- 846 views
-
-
மாவென்னல பௌத்த சிலை தாக்குதலாலியே கொலையாளி மாவென்னல பகுதியில் அண்மையில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து புத்தர் சிலையை சேதமாகிய இருவரில், ஊரார் திரத்தியபோது, ஒருவர் பிடிபட, ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இந்த இந்த பிடிப்பட்டவரை வைத்து, பலரை போலீசார் கைது செய்து இருந்தனர். ஆயினும், இவர்களை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது செல்வாக்கினை பயன்படுத்தி விடுவித்து விட்டார் என்று சொல்லப் படுகினறது. இந்த பிடிப்பட்ட புத்தர் சிலை தாக்குதலாளி ஞாயிறு தாக்குதல் ஒன்றின் கொலையாளி என தெரிய வருவதாக அமைச்சர் ராஜித இன்று தெரிவித்தார். அமைச்சர் பதியுதீன், கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லா தான், சவுதி ஷேக்குகளை போட்டி போட்டுக் கொண்டு நாட்டுக்கு அழைத்து வந்தவர்கள். வந்…
-
- 0 replies
- 575 views
-