Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு நிகழ்வு Published By: DIGITAL DESK 2 16 JUN, 2025 | 03:40 PM 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2023/2024 பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ப…

  2. ஒருவாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி! June 16, 2025 10:39 am வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் வவுனியா மாநகரசபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது முதல்வர் தெரிவு மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது. அந்தவகையில் சங்கு கூட்டணியின் சார்பாக போட்ட…

  3. முக்கிய வழக்குகளை கையில் எடுத்த அநுர – சிக்கவுள்ள இரு ராஜபக்சர்கள்..! நாமல் ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பல வழக்குகள் தொடர்பில் விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குற்றப்பத்திரிகையை வெளியிடுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; நாட்டில் உள்ள பல விசாரணைகள் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்திற்கு ஏராளமான வழக்குகள் தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அதன் பிறகு அந்த விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.அதுதான் கடைசி படி. அதன் பிறகு நீதிமன்றத்திற்கு தண்டனை வழங்க அதிகாரம் உள்ளது. அரச நிறுவனங்களின் முக்கியமான பங்கு, வழக்…

  4. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை! வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள்! adminJune 16, 2025 வலிகாமம் வடக்கில் இருந்து தாம் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் தம்மை தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தவில்லை என அப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் எங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுபாட்டிலையே உள்ளது. 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் ஆண்டு எமது சொந்த இடங்களில் இருந்து யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டோம். நாம் வெளியேறினதும்,…

  5. 15 JUN, 2025 | 12:25 PM (நமது நிருபர்) உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாக கருதி வீதி விபத்துகளைத் தடுப்பதற்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சட்டங்களினால் மட்டுமன்றி சிறந்த தெளிவோடு அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் மற்றும் இலங்கை பொலீஸ் இணைந்து '' Tack care '' வீதியைப் பாதுகாப்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வீதி விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ப…

  6. Published By: VISHNU 15 JUN, 2025 | 05:56 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. சீன மக்கள் வங்கியுடன் (People’s Bank of China – PBoC) உள்ள 10 பில்லியன் (அ.டொலர் 1.4) பெறுமதியான நாணய பரிமாற்றத்தை ஒதுக்கீடாக கருதியமையால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது சர்வதேச அளவில் வெளிநாட்டு ஒதுக்கீடாக கருதப்பட வேண்டிய தரநிலையை பூர்த்தி செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத…

  7. 15 JUN, 2025 | 12:59 PM தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். சாவக்கச்சேரியில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. வடக்கிலும் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. தெற்கில் கடைபிடித்த அணுகுமுறையை இதுவிடயத்தில் நாம் வடகிழக்கில் கடைப்பிடிக்கவில்லை. இங்கு நடுநிலை…

  8. Published By: DIGITAL DESK 3 15 JUN, 2025 | 04:24 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று சனிக்கிழமை (14) இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். இரண்டு குழுக்குளுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மாறி வாள்வெட்டு நடைபெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த நால்வர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/217533

  9. கடற்படை வசமுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் General15 June 2025 மன்னார் - பள்ளிமுனை பகுதியில், கடற்படையினரின் வசமுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர், குறித்த காணிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடிதங்கள் அனுப்பியிருந்த போதிலும், தற்போது காணி அளவீடு தொடர்பான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மக்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும், அவற்றைக் கடற்படையினர் அபகரிக்கும் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவு…

  10. கலாநிதி கீதா கோபிநாத் இன்று இலங்கை செல்கின்றாா். adminJune 15, 2025 சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று (15) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை செல்கின்றாா். அவா் தனது பயணத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தலைப்பில் 2025 ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய சீர்திருத்தத் திட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், இலங்கையின் பொருளாதார …

  11. Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 07:58 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும். மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வை வழங்காமல், மக்களின் அடிப்படை உரிமையையும் மனித உரிமையையும் அரசாங்கம் மீறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சுமத்தியுள்ளார். மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும். இலவச சுகாதாரம் என்பது மக்களின் மனித உரிமையாகும…

  12. 14 JUN, 2025 | 07:20 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி தனது ஜேர்மன் விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன் என்பவரை சந்திக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருப்பதாக நான் தெரிவித்திருந்தேன். அதனை அடிப்படையாக்க கொண்டு நான் இனவாதத்தை தூண்டுவதாகக் குறிப்பிட்டு என்னை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. சிறையிலடைப்பதாகக் கூறியோ சுட்டுக் கொல்வோம் எனக் கூறியோ என்னை அச்சுறுத்தி என் குரலை ஒடுக்க முடியாது என முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார். சனிக்கிழமை (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜே.வி.பி.யின் செயற்பாட்டாளர்களே என்னை கைது செய்யுமாறு கோ…

  13. 14 JUN, 2025 | 07:18 PM தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வதே. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும் இல்லாதவர்கள் இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் சனிக்கிழமை (14) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், போரின் இறுதிக் கட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தமிழ் தாய்மார்களான எங்கள் போராட்ட பயணம் 3036 வது நாளாக, தொடர்கிறது. எங்கள் குழந்தைகளை கண்ட…

  14. 14 JUN, 2025 | 04:28 PM மட்டக்களப்பில் யானை - மனித மோதலை குறைக்கும் முகமாக முதற்கட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை (13) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தும்பாலஞ்சோலை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு தும்பாலஞ்சோலை கிராமத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள சுற்றுவட்டார பொறுப்பதிகாரி நா. சுரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச சபை ஊழியர்கள், வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்டோருடன் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர். தும்பாலஞ்சோலை கிராமத்தில் யானைகள்…

  15. Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 12:37 PM (எம்.மனோசித்ரா) துருக்கிய கடற்படைக் கப்பலான 'டி.சி.சி. புயுகடா' உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சனிக்கிழமை (14) நாட்டை வந்தடைந்த இக்கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டது. இக்கப்பலானது 99.56 மீற்றர் நீளமும், மொத்தம் 147 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் அனில் பில்கின் பணியாற்றுகிறார். இக்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் பணிக்குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில…

  16. Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 07:55 PM யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்கென 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது. எனினும், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அந்நிலையம் முடங்கி, பறவைகளின் கூடாரமாக மாறியுள்ளது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையின் பிரகாரம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்குரிய முயற்சியில் அமைச்சர் தீவிரம…

  17. யாழில். வாள் வெட்டு தாக்குதல் ; இளைஞன் பலி! 14 JUN, 2025 | 10:15 AM யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது. இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்திய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/217421

  18. தமிழர்கள் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன - பிரித்தானிய தமிழர் பேரவை 14 June 2025 இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடமான முள்ளிவாய்க்காலுக்கும், புதைகுழிகள் தோண்டப்பட்ட செம்மணிக்கும், செல்லவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. BTF என்ற பிரித்தானியத் தமிழர் பேரவை, இந்த கோரிக்கையை, விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதத்தில் இலங்கை வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின…

  19. பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது. எனவே பாதுகாப்பற்ற சிறுமிகள் எத்தனைபேர் உள்ளனர் எனவே இவர்களை பாதுகாப்பதுடன் இவற்றை தடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஷ்பிரயோகத்தை தடுக்கும் 'சறோஜா' திட்டம் ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்டபத்தில் கடந்த 12 …

  20. கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி அறிவிப்பு Published By: VISHNU 14 JUN, 2025 | 02:06 AM (நா.தனுஜா) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரத்துக்கு (ஜனா) எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அக்கூட்டணி அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இணைந்து களமிறக்கிய வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மாவட்டக்கிளைத் தலைவர் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு வழிகாட்டலை வழங்கியமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக மேற்குறிப்பிட்டவாறு நடவடிக்க…

  21. பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சை குழு கைப்பற்றியுள்ளது. பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளராக திரேஸ குமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பட்டிப்பளை பிரதேச தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் கோபாலபிள்ளை சுரேந்திரன் (பட்டிப்பளை வட்டாரம்) முன்மொழியப்பட்டார். சுயேட்சை குழு (பந்து) சார்பில் இளையதம்பி திரேஸ குமாரன் (அரசடித்தீவு வட்டாரம்) முன்மொழியப்பட்டார். வாக்கெடுப்பில் சுயேட்சை குழுவின் இளையதம்பி திரேஸ குமாரன் 9 வாக்குகளை பெற்றுக் கொண்ட நிலையில், தமிழ் அரசு கட்சியின் கோபாலபிள்ளை சுரேஷ்குமார் 6 வாக்குகளை பெற்றார். தேசிய மக்கள் ச…

  22. 13 Jun, 2025 | 04:28 PM இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலச்சந்திரன் பிரபாகரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு விசாரணைகளை கோரி தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி பொலிஸ் மா அதிபருக்கு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது. சரணடைந்தவர்களை கொன்றது தொடர்பான புகார் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்( இசைப்பிரியா,மற்றும் பாலசந்திரன் பிரபாகரன் உட்பட ) தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஆகிய நான் இந்த மனுவை மதிப்பிற்குரிய உங்கள் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கின்றேன். இது கடுமையான சர்வதேச மனிதாபிமான சட்டமீறலை குறிக்கின்றது. இந்த சம்பவங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களின் கீழ் அடங்கும் என்பதுடன் …

  23. 13 Jun, 2025 | 05:02 PM நல்லூர் பிரதேச சபை தவிசாளராக தெரிவாகியுள்ள ப. மயூரன், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி ஆசிர்வாதம் பெற்றார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வெள்ளிக்கிழமை (13) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது, மயூரன் தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, நல்லூர் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்குச் சென்று, தியாக தீபத்தின் திருவுருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தியதுடன், ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டார். திலீபனின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் | Virakesari.lk

  24. யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இன்று (13) மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி அங்கு சிலர் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் செம்பியன்பற்று சென் பிலிப் நேரியார் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு மதுபோதையில் தடிகளுடன் கரைவலை வாடிகளுக்குச் சென்ற கும்பலொன்று அங்கிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, …

  25. 13 JUN, 2025 | 12:00 PM ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் சூட்டப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக விநியோகம் செய்யப்படும் என அறியமுடிகிறது. https://www.virakesari.lk/article/217343

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.