ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142726 topics in this forum
-
தேசிய தலைவர் தொடர்பில் சிங்கள எம்.பி வெளியிட்ட பகிரங்க கருத்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை துரோகி என்றும், ரோஹண விஜயவீரவை வீரன் என்றும் குறிப்பிட முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் (Kurunegala) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10.04.2025) இடம்பெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் “1994 ஆம் ஆண்டு பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஒத்துழைப்பு வழங்கியது. பட்டலந்த விவகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரச தரப்ப…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. பாடசாலைகளுக்கான இந்த ஆண்டின் முதல் தவணையின் இரண்டாவது கட்டம் இன்று நிறைவடைகிறது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான நிலையில் இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதல் தவணையின் மூன்றாவது கட்டம் அதன்படி, மூன்றாவது கட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முதல் தவணையின் மூன்றாவது கட்டம் மே மாதம் 9ஆம் திகதி முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/april-15-public-holiday-school-holiday-sri-lanka-1744340752
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைபேசி கடைகளை கண்டறிய பொலிஸாருடன் இணைந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உரிமம் பெறாத கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. பொலிஸாரின் உதவியுடன் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யுமாறு தொலைபேசி விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையகத்தின் பணிப்பாளர் மேனகா பத்திரண தெரிவித்தார். அபராதம் ஆண்டுதோறும் வழங்கப்படும் தொடர்புடைய உரிமத்தைப் பெறுவதற்கு 1,50,000 ரூபாய் செலவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இனிமேல் இந்த உரிமம் இல்லாமல் ஒரு தொலைபேசி அல்லது தொலைபேசி கருவிகளை விற்பனை செய்தால், ஒரு லட்சம் ரூப…
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
11 APR, 2025 | 03:30 PM முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி வெள்ளிக்கிழமை (11) கேப்பாபிலவு கிராம மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடமும், மற்றும் உயர் அதிகாரிகளிடமும் கடந்த வருடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர். அதற்கு தீர்வுகள் கிடைக்க பெறாத நிலையில் நேற்றையதினம் வியாழக்கிழமை (10) கேப்பாபிலவு மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று ஜனாதிபதியினுடைய சிரேஸ்ட உதவி செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய போது தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆவணங்கள் எம்மிடம் கிடைக்…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
11 APR, 2025 | 09:21 AM இலங்கை மின்சார சபை (CEB) இன்று வெள்ளிக்கிழமை (11) நாட்டின் மின்சாரத் துறையை மாற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புதிய முயற்சியை அறிவிக்கவுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பு இன்றையதினம் மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் மின்சாரம் விலை நிர்ணயம், வலுவான மின் கட்டமைப்பு மற்றும் நிலைத்துறையான பசுமை ஆற்றல் நோக்கில் இலங்கை மேற்கொள்கின்ற பயணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாட்டின் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் முறையை முற்றிலும் மாற்றக்கூடிய சக்தி இந்த திட்டத்துக்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/211766
-
- 1 reply
- 178 views
- 1 follower
-
-
11 APR, 2025 | 03:51 PM தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். பலாலி வீதி திறக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- வடபகுதி மக்களின் உணர்வுகளுடன் அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை தேசிய மக்கள் சக்தி கைவிடவேண்டும். பலாலி வீதியை கடுமையான கட்டுப்பாடுகளுடன் அரசாங்கம் திறக்க தீர்மானித்துள்ளமை உண்மையாகவே கரிசனையளிக்கின்றது. அந்த வீதி பாதுகாப்பு காரணங்களிற்காக மூடப்பட்ட போதிலும் அரசாங்கம் பாதுகாப்பு; சரிபார்ப்பில் ஈடுபடாமல் இந்த வீதியை திறந்துள்ளது. இதன் காரணமாகவே கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது அனைத்து வகையான அச்சுறுத்தல்களை…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வாழிபாடு! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டுள்ளார் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் காலை இடம்பெற்ற நிலையில் மதியம் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுப்பட்டார். இதேவேளை பிரதமர் ஆலயத்திற்கு வருகை தர விருந்த நிலையில் அதிகாலை வேளை ஆலய சூழலில், பொலிஸ் விசேட அதிரடி படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்த நிலையில் பலரும் விசனம் தெரிவித்தமையும் குறிப்ப…
-
- 0 replies
- 103 views
-
-
10 APR, 2025 | 04:31 PM 1977 முதல் 1994 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி பாவிகளே, பட்டலந்த வதை முகாமின் சூத்திரதாரிகளும் கூட. எனவே, பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார். பட்டலந்த வதை முகாம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ”நல்ல வழியில் நாம் அரசியலை முன்னெடுத்து வந்த வேளை 1983ஆம் ஆண்டு எமது கட்சி தடைசெய்யப்பட்டது. ஜுலை கலவரத்தை அடிப்படையாகக்கொண்டே எமது கட்சி மீது தடை விதிக்கப்பட்டது. அன்று ஏற்பட்ட கறுப்பு ஜுலையென்பது இன…
-
-
- 2 replies
- 167 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SAJITH PREMADASA'S MEDIA UNIT கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஒற்றை கண் பார்வை இழந்த பெண் சிறுத்தை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததுடன், நரேந்திர மோதிக்கு நினைவு பரிசொன்றையும் அவர் வழங்கியிருந்தார். முன்னோக்கி செல்லும் பெண் சிறுத்தையொன்று பின்னோக்கி திரும்பி பார்க்கும் வகையிலான புகைப்படமொன்றையே சஜித் பிரேமதாஸ, நரேந்திர மோதிக்கு வழ…
-
- 1 reply
- 285 views
- 1 follower
-
-
நவக்கிரி சித்த வைத்தியசாலை காணி விடுவிப்பு யாழ்ப்பாணம், அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியை இராணுவத்தினர் மீள கையளித்துள்ளனர். நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியையும் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் கையகப்படுத்தி நிலை கொண்டிருந்தனர். அந்நிலையில் நேற்று (10) குறித்த காணியை மீள கையளித்துள்ளனர். சித்த மருத்துவமனைக்கு தேவையான மூலிகைகளை பயிரிடும் காணியாக குறித்த காணி காணப்பட்ட நிலையில் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினர் காணியை கையகப்படுத்தி கடந்த 30 ஆண்டு காலமாக நிலை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cm9c9bqma007mhyg3qjup5zps
-
- 0 replies
- 127 views
-
-
50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் ஆலய மகா கும்பாபிசேகம்-பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு! யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர் இன்னிலையில் ஆலயத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரியர் வருகை தரவுள்ளதாக தெரிவித்து, ஆலய சூழலில் பெருமளவான பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிபடையினர், பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு பாத…
-
- 0 replies
- 123 views
-
-
3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதே இலக்கு – சுற்றுலாப் பிரதி அமைச்சர். சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) நடைபெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். சுற்றுலாக் கைத்தொழில் நாட்டில் முதன்மைக் கைத்தொழில் என்றும் இவ்வாண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் நிலைபேறான சுற்றுலாப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக சுற்றுலா அமைச்சு ச…
-
- 0 replies
- 153 views
-
-
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் பலவற்றின் பணிகள் இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட உள்ளன. செயற்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகளை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காக அந்த திணைக்களத்தின் மாதிரிக்கு அமைவாக முன்மொழிவுகளை தயாரிப்பது தொடர்பில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்கான ஒரு நாள் செயலமர்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற நிலையில் இவ்வாறு அறிவிக்கப்…
-
- 0 replies
- 104 views
-
-
10 APR, 2025 | 09:08 PM யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்று வியாழக்கிழமை (10) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி மற்றும் அதனுள் இருந்த கட்டடம் என்பவற்றை வலி கிழக்கு பிரதேச செயலரிடம் இராணுவத்தினர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளித்த நிலையில், பிரதேச செயலரினால் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது . இதுவரை காலமும் மாற்றிடம் ஒன்றில் தலைமை காரியாலயம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211736
-
-
- 3 replies
- 274 views
- 1 follower
-
-
கொள்ளையர்களைப் பிடிப்பதாக பெருமை பேசினாலும், மஹிந்த ராஜபக்ஷ அல்லது ரணில் விக்கிரமசிங்க மீது இந்த அரசாங்கம் கை வைக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பெரிய மீன்களுக்குப் பதிலாக சில சிறிய மீன்களை மட்டுமே நீங்கள் பிடிப்பீர்கள். தற்போதைய அரசாங்கம் கைது செய்த ஒரே எம்.பி நான்தான்" என்று தசநாயக்க மேலும் கூறினார். பெரகல தடுப்பு முகாம் மிகவும் ஆபத்தானது, இருப்பினும் அரசாங்கம் பட்டலந்தவை மட்டுமே குறிவைக்கிறது என்று அவர் கூறினார். Tamilmirror Online || ”ரணில் ராஜபக்சவின் முடியையும் அரசாங்கம் தொடாது”
-
- 1 reply
- 202 views
-
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்தார். புதிய வரித்திருத்தத்தினால் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய வழிமுறைகள், அரசாங்கம் என்ற அடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் போன்றன இந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த வரியைக் குறைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்த கடிதம் ஊடாக கோரிக்க…
-
-
- 19 replies
- 850 views
-
-
Published By: VISHNU 10 APR, 2025 | 08:06 PM ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒரே நாள் மற்றும் பொது சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வியாழக்கிழமை (10) அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, குறித்த நாட்களில் மதியம் 12 மணி வரை மட்டுமே டோக்கன் அட்டைகள் வழங்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு நாள் சேவைக்காக சேவை, 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இயங்காது என்று அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211755
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
10 APR, 2025 | 11:04 AM தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்? யாழ் பலாலி வீதி திறந்துவிடப்பட்டுள்ளமை குறித்த தனது சமூக ஊடக பதிவில் இந்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கட்டுப்பாடுகளுடன் பலாலி வீதி திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா? இந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக சட்டபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில்லை. மாலை ஆறு மணியிலிருந்து காலை 5 மணிவரை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த சட்டம் உங்களிற்கு அனுமதிவழங்கியது. ஏன் பாதசாரிகள் இந்த வீதியை பயன்பட…
-
-
- 5 replies
- 384 views
- 1 follower
-
-
08 Apr, 2025 | 05:23 PM 1988-89ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டி பாடசாலையொன்றில் இயங்கிய வதை முகாமிலிருந்து இளைஞர்களை டிரக்கில் கொண்டு சென்று வழியில் அவர்களை கீழே தள்ளிவிட்டு அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த பின்னர் அவர்கள் பெட்ரோலை ஊற்றி கொலை செய்தனர் என காணாமல்போனவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயலாளர் எம்சி இக்பால் தெரிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம் உட்பட பல சர்வதேச அமைப்புகளும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். எம்சிஎம் இக்பால் இந்த வீடியோவில் மேலும் தெரிவித்துள்ளதாவது. எனது மனதில் நினைவில் இருக்கும் விடயங்களில் ஒன்று க…
-
-
- 3 replies
- 246 views
-
-
08 Apr, 2025 | 03:23 PM "கலிப்சோ" எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட தொடருந்து சேவையானது நானுஓயா மற்றும் தெமோதரை புகையிரத நிலையங்களுக்கு இடையே இன்று (08) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த தொடருந்து அதன் பயணத்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு நானுஓயா புகையிரத நிலைய வளாகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நானுஓயாவிலிருந்து தெமோதரை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படுவதுடன் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் …
-
- 4 replies
- 274 views
-
-
ரவீந்திரநாத் பிள்ளையான் கும்பலால் எப்படி கடத்தப்பட்டார்! Vhg ஏப்ரல் 10, 2025 துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்கள் மார்கழி 15, 2006 அன்று "Triploli Platoon-பிள்ளையான்" கூட்டு கும்பலால் கடத்தி காணாமலாக்கப்பட்டார் புரட்டாதி 20, 2006 முதல் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பல்வேறு வழிகளில் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டார் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கிழக்கு பல்கலை கழக துணைவேந்தராக இருக்க முடியாது என்கின்ற தோரணையில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது தொலைபேசி வழியில் தொடங்கிய அச்சுறுத்தல்கள் ஒரு கட்டத்தில் கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பால சுகுமாரை கடத்திச் சென்று பேராசிரியர் சிவசுப்…
-
- 1 reply
- 223 views
-
-
10 APR, 2025 | 10:51 AM வடக்கில் சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ள நிலையில் அதனை கூடுதல் அபிவிருத்தி செய்யவேண்டும் எனவும், உலக வங்கியும் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதையும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கவனத்துக்கு கொண்டு சென்றதோடு விவசாயம், மீன்பிடி துறைகளின் பெறுமதி சேர் ஏற்றுமதிக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பினர்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றது. இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் த…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 APR, 2025 | 09:43 AM தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் படிப்படியாக பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய கடல் பகுதிகளில் தற்காலிகமாக மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், அதனுடன் பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்புடன் இருக்கும். இது தொடர்பாக திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கவனமாகக் கவனிக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியானது எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்புதான் நிராகரிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் 19 தமிழ் உறுப்பினர்கள் உள்ள போதும் 10 உறுப்பினர்களைக்கொண்ட அறுதிப்பெரும்பாண்மை ஒருவருக்கும் இல்லை. தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை. தமிழரசு பதில் தலைவர் சீ.வி.கே. சிவஞானத்துடன் பேசிய போது தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு குழு அமைப்பதாக சொல்லியிருந்தார். அதன் பின்பு எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்பு குழு அமைக்கும் விடயம் தேவையில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. தற்போது தமிழரசுக்கட்சி ஆட்சி செய்பவர்கள் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை கொண்டு…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
10 APR, 2025 | 11:46 AM காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதையே எதிர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் வனவள, வனஜீவராசிகள் திணைக்களங்கள் என்பனவற்றால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (09) இடம்பெற்றது. சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி மற்றும் காணி, நீர்ப்பாசனத்துறை பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-