ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
ஐ.நா.மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில் இன்றைய தினமே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் ஆகிய இருவரும் உரையாற்றவுள்ளனர். இதன்போது இவர்கள் இருவரும் இலங்கையின் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று இன்று ஆபிரிக்க ஒன்றியத்தின் பிரதிநிதி, அயர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளனர். அத்துடன் நானை பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜேர்மன், பிரித்தானியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளன…
-
- 0 replies
- 315 views
-
-
ஜெனிவாவின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் – அனைத்துத் தரப்புகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. முக்கி…
-
- 3 replies
- 685 views
-
-
விடுதலை புலிகளின் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ அதிகாரிக்கு அஞ்சலி செலுத்திய குடும்பம் ! முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் காட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய சமயத்தில், விடுதலைப்புலிகளின் முறியடிப்பு அணிகளின் தாக்குதலில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி (Long Range Reconnaissance Patrol -LRRP) தளபதியான லெப்.கேணல் லலித் ஜெயசிங்கவின் நினைவாக, நேற்று (23) முல்லைத்தீவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் காட்டு பகுதியில், லலித் ஜெயசிங்க உயிரிழந்த இடத்தில்- அவரது மனைவி, மகள், பெற்றோரால் மரக்கன்றுகள் நடப்பட்டன.அடர்ந்த காட்டுக்குள், ஜி.பி.எஸ் துணையுடன் சுமார் 2.7 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றே, அவர் கொல்லப்பட்ட இடத்தை இந்த குழு அடைந்தது…
-
- 0 replies
- 446 views
-
-
அரசியல் உறுதியின்மையால் மோசமான நெருக்கடிக்குள் சிறிலங்கா – கோத்தா குற்றச்சாட்டு அரசியல் உறுதியற்ற நிலை, வெளிப்படைத்தன்மை இல்லாமை, முடிவெடுக்கும் நடைமுறைகளில் உள்ள பலவீனம் ஆகியவற்றினால், நாடு இன்று நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கம்பகாவில் எலிய அமைப்பின் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “வெளிநாட்டில் இருந்து வந்திருந்த அரசாங்க அதிகாரி ஒருவரை அண்மையில் சந்தித்த போது, நாட்டின் தற்போதைய நெருக்கடி குறித்து கரிசனையை வெளியிட்டிருந்தேன். கடந்த நான்கு ஆண்டுகளில் சிறிலங்காவினால் புதிதாக நேரடி முதலீட்டு வாய்ப்புகளைப் பெற முடி…
-
- 0 replies
- 186 views
-
-
அமெரிக்காவுடனான சோபா உடன்பாட்டினால் நாட்டின் இறைமைக்கு ஆபத்து – ஜேவிபி எச்சரிக்கை அமெரிக்காவுடன், சோபா (SOFA) எனப்படும் படைகளின் நிலை குறித்த உடன்பாட்டில், சிறிலங்கா கையெழுத்திட்டால், நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ள ஜேவிபி, இது குறித்து நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜேவிபி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, “2007 மார்ச் 05ஆம் நாள் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இது அமெரிக்கப்படைகள் சிறிலங்காவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் தொடர…
-
- 0 replies
- 138 views
-
-
முகப்பு செய்திகள் ஆய்வு செய்திகள் சிறப்பு செய்திகள் கட்டுரைகள் ஆய்வு கட்டுரைகள் புதினப்பார்வை மேலும் ... உயர்மட்டக் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாது சிறிலங்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழு பங்கேற்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் மார்ச் 20ஆம் நாள் ஜெனிவாவில் சிறிலங்கா குறித்த விவாதம் நடக்கவுள்ளதுடன், சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானமும் ப…
-
- 0 replies
- 330 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அமெரிக்க தலையிட வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்து போராட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இன்று காலை நடைபெற்ற அடையாள போராட்டத்துடன் இக் கையெழுத்து போராட்டம் தொடங்கி வைக்கப்பட்டது http://globaltamilnews.net/2019/114347/
-
- 1 reply
- 467 views
-
-
இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே தீர்வு : February 24, 2019 நாடுகடந்த தமிழீழ அரசு இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே இலங்கை தமிழ் மக்களின் துயரைத் துடைப்பதற்கான தீர்வாக அமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதம அமைச்சரான விசுவநாதன் ருத்ரகுமாரன் வலியுறுத்தியுள்ளார் என இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. “இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோளை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் முன் வைக்கிறோம். இலங்கை அரசின் திட்டமிட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகிவிட…
-
- 7 replies
- 1k views
-
-
கிளிநொச்சி திணைக்களங்கள் பெரும்பான்மையின இளைஞர்களால் நிரப்பப்படுகிறது. February 24, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் உள்ள பல திணைக்கங்களின் வெற்றிடங்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மையின இளைஞர் யுவதிகளால் நிரப்பட்டு வருகிறது. இது தொடர்பில் வேலையற்று காணப்படும் மாவட்ட இளைஞர் யுவதிகள் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலையற்று காணப்படுகின்றனர. க.பொ.த சாதாரணம் தொடக்கம் பட்டதாரிகள் வரை இவ்வாறு வேலையற்றுக் காணப்படுகின்றனர். இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் கடந்த மூன்றாண்டுகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளால் நிரப்பட்ட…
-
- 7 replies
- 789 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பொன்னாலை வீதி மானிப்பாயைச் சேர்ந்த 22வயதான சிவப்பிரகாசம் தனுசன் என்ற இளைஞரே இவ்விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவர். அவருடன் மோட்டார் சைக்கிலில் பயணித்த மானிப்பாயைச் சேர்ந்த 24வயதான வசந்தகுமார் நிரோசன் என்பவர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூநகரி நோக்கி சென்ற இவர்கள் பாலத்திற்கு அருகாமையில் உள்ள வளைவில் திருப்பிய வேளை …
-
- 0 replies
- 464 views
-
-
February 24, 2019 தென்னாபிரிக்காவின் மாதிரியை தவறாக அர்த்தப்படுத்துவதற்கான முயற்சிகள் இலங்கையில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள ஐநாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தென்னாபிரிக்கா உண்மையை தெரிவிப்பது , விசாரணை இழப்பீடு என்பவற்றையும் உள்வாங்கியிருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார். தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்ட முறை என்பது பூரணமானது இல்லை எனினும் அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைக்கு உகந்தது என்பதனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தென்னாபிரிக்காவில் காணப்பட்ட நிலைமையை இலங்கையில் இடம்பெ…
-
- 0 replies
- 317 views
-
-
ஆசிய அபிவிருத்தி வங்கி! | இலங்கை துறைமுக அதிகாரசபை 2050ஆம் ஆண்டு வரை வரைந்துள்ள தேசிய திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. தேசியத் திட்டம் தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் பல பிரிவுகளிலும் கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையின் செய்தி இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அமைச்சர் சாகல ரட்நாயக்க இதுபற்றி அறிவித்தார். கொள்கலன் ஏற்றி இறக்கல் நடவடிக்கைகளை அதிகரித்து, கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்டத் திட்டங்கள் தய…
-
- 0 replies
- 253 views
-
-
வடக்கு மாகாணம்- நாளை முடங்கும்!! பதிவேற்றிய காலம்: Feb 24, 2019 காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் முழுமையாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக மற்றும் போக்குவரத்துச் சேவைகள் எவையும்இடம்பெறாது என்பதுடன், அலுவலகங்கள், பாடசாலைகளும் முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும் நாளை திங்கட்கிழ…
-
- 0 replies
- 386 views
-
-
இலங்கை வருகிறார் ஐ.நா.வின் முன்னாள் அமெரிக்க உயர்ஸ்தானிகர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அமெரிக்க உயர்ஸ்தானிகர் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நிதியமைச்சர் மங்கள சமர வீரவின் அரசியல் வாழ்க்கையில் 30 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளதை முன்னிட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முக்கிய நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர் சிறப்பு உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார். http://www.virakesari.lk/article/50576
-
- 0 replies
- 226 views
-
-
ஸ்திரமான அரசாங்கமொன்று தற்போது நாட்டில் இல்லை ; கோத்தா ஸ்திரமானதும், பலமானதுமான அரசாங்கமொன்று நாட்டில் இல்லாத காரணத்தினால், வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர முடியாதுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிலைமை தொடருமாயின் நாட்டில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது கடினமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திவுலபிடியவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற எளிய அமைப்பின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எவ்வாறானதொரு நாட்டை நாம் எதிர்க்காலத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் பலமான அ…
-
- 0 replies
- 269 views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை February 24, 2019 மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளமையினால் மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுமாயின், அரசாங்கத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர். மாகாணங்களின் ஆளுநர்கள் சிலர் நேற்றையதினம் காலியில் ஏற்பாடு செய்திருந்த ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதன் போது கருத்து தெரிவித்த மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தற்போது காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதேவேளை நாட்டில் 85 சதவீதமான நிர்வாக நடவடிக்கைகள் மாகாண சபைகள் ஊடாகவே ம…
-
- 0 replies
- 730 views
-
-
வடமாகாண காணிப்பிரச்சினை- ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை February 24, 2019 வட மாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார். காணிப் பிரச்சினைகளில் முதன்மையானதாக காணிகளை அளவிடுதல் காணப்படுவதால் காணிகளை அளவிட நில அளவையாளர் திணைக்களத்தில் போதிய ஆளணியினர் இல்லாமையின் காரணமாகவே ஓய்வுபெவுற்ற நில அளவையாளர்களின் சேவையினை பெற்றுக்கொள்ளும் முகமாகவே ஆளுநரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை வட மாகாண காணி நிர்வாக திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து கொள்…
-
- 0 replies
- 250 views
-
-
கோவணத்துடன் ஓடிய கேப்பாபிலவு மக்களிடம் ஆளுநர் ஆவணங்களை கேட்பது விந்தையாக உள்ளது February 24, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கோவணத்துடன் ஓடிய கேப்பாபிலவு மக்களிடம் வடமாகாண ஆளுநர் ஆவணங்களை கேட்பது விந்தையாக உள்ளது என தெரிவித்துள்ள வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், மக்கள் போராட்டங்களை மலினப்படுத்துவதுபோல் ஆளுநர் பேசகூடாது எனவும் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடாக அமையத்தில் நேற்று சனிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கேப்பாபிலவு மக்கள் தொடர்பாக கூறியிருந்த கருத்து குறித்து ஊடகவியல…
-
- 0 replies
- 677 views
-
-
ஓய்வு பெற்ற நில அளவையாளர்களுக்கு ஆளுநர் அழைப்பு வட. மாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார். காணிப் பிரச்சினைகளில் முதன்மையானதாக காணிகளை அளவிடுதல் காணப்படுவதால், காணிகளை அளவிட நில அளவையாளர் திணைக்களத்தில் போதிய ஆளணியினர் இல்லாமையின் காரணமாகவே ஓய்வுபெற்ற நில அளவையாளர்களின் சேவையினை பெற்றுக்கொள்ளும் முகமாக ஆளுநர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அதன்படி ஓய்வு பெற்ற நில அளவையாளர்கள் வட. மாகாண காணி நிர்வாக திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் தமது விபரத்தினை தபால் மூலமாகவோ அல்லது இணையத்தின் மூலமாக…
-
- 0 replies
- 358 views
-
-
பிரதமரின் மறப்போம் மன்னிப்போம் கருத்திற்கு – நவநீதம் பிள்ளை கடும் விமர்சனம்! மறப்போம் மன்னிப்போம் என்ற பிரதமரின் செய்தியில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடுமையாக விமர்சித்துள்ளார் தென்னாபிரிக்க பாணியில் மறப்போம் மன்னிப்போம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை அரசாங்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்களை உறுதி செய்வதாக உறுதியளித்தது. எனினும் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கு மாத்திரம் அமைச்சரவையின் அனுமதியை பெற முயல்வதன் ம…
-
- 0 replies
- 296 views
-
-
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை யாழ்ப்பாணத்திற்குவிஜயம் செய்த மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சர் கௌரவ பாட்டாலீ சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த (21) நடைபெற்றது. இந் நடமாடும் சேவையில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் - பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருடன் இணைந்து தீர்வுகாணும் முயற்சியிலும் ஈடுபட்டார்.இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், யாழ் பிரதேச செயலர் பொ.தயானந்தன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ் பிராந்த…
-
- 0 replies
- 311 views
-
-
அட்மிரல் கரன்னகொடவின் கடவுச்சீட்டு முடக்கம் – எந்த நேரத்திலும் கைதாவார் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் கடவுச்சீட்டை முடக்கி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 2008-09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கிலேயே அட்மிரல் கரன்னகொட கைது செய்யப்படவுள்ளார். கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார் என்பது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதில் கொலைச் சதித்திட்டத்துக்கு மரணதண்டனை தீர்ப்பு அளிக்கப்படக் கூடியதாகும். குற்றவியல் …
-
- 0 replies
- 822 views
-
-
பசில் – கம்மன்பில இடையே வெடித்த மோதல் – விலக்குப் பிடித்தார் மகிந்த கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் பசில் ராஜபக்சவுக்கும், உதய கம்மன்பிலவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மகிந்த ராஜபக்ச தலையிட்டு இரண்டு தரப்பையும் அமைதிப்படுத்தியுள்ளார். கூட்டு எதிரணியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பிலவும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுனரான பசில் ராஜபக்சவுமே சொற்களால் மோதிக் கொண்டனர். உள்ளூராட்சி சபைகளில் ஏற்படும் வெற்றிடங்களை எவ்வாறு நிரப்புவது என்பது தொடர்பாக, உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு, பசில் ராஜபக்ச அளித்த பதிலே இருவருக்கும் இடைய…
-
- 0 replies
- 349 views
-
-
காணாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் பேரவை பூரண ஆதரவு February 23, 2019 காணாமல்போனவர்களின் உறவினர்களால் பெப்ரவரி 25ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு தமிழ் மக்கள் பேரவை தனது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களாகிய நாம் முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். இலங்கையில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் ஆராயப்பட இருக்கின்ற இவ்வேளையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு எங்களின் ஒருமித்த நிலைப்பாட்டடை ஒரே குரலில் கூறவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நாம் அனைவரும் ஒருமித்த குரலில் எங்களின் உறு…
-
- 0 replies
- 442 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உங்களுக்கும் உறவுகள்.நாங்கள் தனித்தனியாக போராடி களைத்து விட்டோம்.எனவே அனைவரும் இணைந்து கிளிநொச்சியில் எதிர்வரும் 25 ஆம் திகதி வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதையச்சந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார். மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். …
-
- 1 reply
- 501 views
-