ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143267 topics in this forum
-
மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை கொலை செய்யும் திட்டம்! டுபாயில் கைதாக பிரபல பாதாள உலககுழு தலைவன் மாகந்துர மதுஷ், ஜனாதிபதி கொலை சதி முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான மேலதிக தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். கடந்த வருடம் நடுப்பகுதியில் ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டபோது, அங்கு வைத்து ஜனாதிபதியை கொல்லும் முயற்சியை திட்டமிட்டுள்ளனர். புலம்பெயர் தமிழ் சினிமா இயக்குனருடன் தொடர்புடையதாக கூறப்படும் துஷார பீரிஸ் என்பவர் மூலம் அறிமுகமான மதுசான் என்பவரின் மூலம் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையவராக கூறப்படும் மதுசான், மதுஷ் குழுவுடன் இணைந்து மோதரை, மட்டக்குளியில் பல கொலைகளில் …
-
- 0 replies
- 566 views
-
-
நாளை உடும்பன்குளம் படுகொலை தினம் அனுஸ்டிப்பதற்காக அழைப்பு விடுக்கின்றனர் பிரதேச மக்கள் (டினேஸ்) எண்பதுகளில் நடைபெற்ற இன ரீதியான படுகொலைகளில் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட படுகொலை தான் உடும்பன்குளம் படுகொலை அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசமே அடம்பன்குளம் சுமார் திருக்கோவில் பகுதியிலிருந்து 20 மைல் தூரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் வயல் வேலை நன்னீர் மீன்பிடி விவசாயம் என வாழ்ந்து வந்தனர் அந்த வகையில் 1986 ஆம் ஆண்டு இடம் பெற்ற இனக்கலவரங்களில் அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் இனந்தெரியா நபர்களினாலும் ஆயுத தாரிகளினாலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதன்படி 1986.02.19 ஆம் திகதி உட…
-
- 0 replies
- 264 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு… February 18, 2019 File Photo காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை எதிவரும் 25-02-2019 அன்று கிளிநொச்சியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதத்தலைவர்கள், அரசியற்கட்சிகளின் பிரதிநிதிகள் நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றுகூடி இலங்கை அரசுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் மற்றும் சர்வதேச சமூகத்திடமும், தமது உறவுகளுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரியே இக் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். அதனைத்த…
-
- 0 replies
- 307 views
-
-
இந்திய தூதுவரை சந்தித்தார் வட மாகாண ஆளுநர்! இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை இந்திய தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றது. வட மாகாணத்தில் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் செயற்திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய தூதுவர் தற்போது போலவே எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதியளித்தார். வட மாகாணத்தில் செயற்திட்டங்களைய…
-
- 0 replies
- 232 views
-
-
சிறிலங்காவிடம் உண்மையான வெளிப்படையான உறவை எதிர்பார்க்கும் அமெரிக்கா சிறிலங்கா அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டாலும் அது வெளிப்படைத்தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் முதன்மை பிரதி உதவிச் செயலர் தோமஸ் வஜ்டா தெரிவித்தார். கடந்த வாரம், கொழும்பில் பாத் பைன்டர் அமைப்பின் ஏற்பாட்டில் நடந்த “இந்தோ-பசுபிக் பற்றிய அமெரிக்க பார்வை மற்றும் சிறிலங்காவின் வகிபாகம்“ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். “சிறிலங்கா இறைமையுள்ள ஒரு நாடு. சிறிலங்காவின் இறைமையை நாங்கள் மதிக்கிறோம். ஏனைய நாடுகளே இந்தோ- பசுபிக்கில் எமது செயற…
-
- 0 replies
- 120 views
-
-
இந்த ஆண்டில் புதிய அரசாங்கம் – சிறிலங்கா அதிபர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அந்தக் கட்சியின் தலைவர், தலைமை தாங்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த மக்கள் ஐக்கிய முன்னணியின் 22 ஆவது ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்று குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், இந்த ஆண்டில் புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் என்றும் தெரிவித்தார். நாடு பாரிய கடன்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும், மக்களுடன் நட்புறவு கொண்ட அரசாங்கம் ஒன்று நாட்டுக்குத் தேவைப்படுவதாகவும் சிறிலங்கா அதிபர் கூறினார். மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினே…
-
- 0 replies
- 149 views
-
-
போர்க்குற்றத்தை ஒப்புக் கொண்டு காட்டிக் கொடுத்து விட்டார் ரணில் – மகிந்த குற்றச்சாட்டு பயங்கரவாதத்தை ஒழிப்பது அடிப்படையில் ஒரு போர்க்குற்றம் அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த மக்கள் ஐக்கிய முன்னணியின் 22 ஆவது ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வடக்கில் மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, 30 ஆண்டு போரில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்று ஒப்புக் கொண்டிருப்பது தொடர்பாக மகிந்த ராஜபக்ச இங்கு கருத்து வெள…
-
- 0 replies
- 151 views
-
-
18 ஆவது திருத்தத்தை மீளக் கொண்டு வரும் முயற்சி – சிவில் சமூக அமைப்புகள் எதிர்ப்பு அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் திட்டத்துக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒத்துழைத்து வருகிறார் என்று சிவில் சமூக அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. 2015 அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக, பாடுபட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியமான புரவெசி பலயவின், அமைப்பாளர் காமினி வியன்கொட இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில், 2010 செப்ரெம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச்சட்டத்தை, 2015 ஏப்ரல் மாதம், நாடாளுமன்றத்தில் 19 ஆவது திருத…
-
- 0 replies
- 198 views
-
-
இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 5ஆம் கட்ட கடன் திட்டத்தினை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சு, மத்திய வங்கி மற்றும் திறைசேரி ஆகியவற்றுடனேயே குறித்த பிரதிநிதிகள் இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த கடன் திட்டம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரையறுக்கப்பட்ட கடன் திட்டங்களை பகுதியளவில் இலங்கைக்கு சர்வதேச நாணயம் வழங்கி வருகின்றது. அதற்கமைய கடன் திட்டத்தினை இலங்கைக்கு வழங்கும் நோக்கில் கடந்த 15ஆம் திகதி …
-
- 0 replies
- 224 views
-
-
புத்தர் சிலை சேதமாக்கியவர்கள் நீதிமன்றில் விளக்க மறியலில் இருக்கும் 11 பேர் சிறை அதிகாரிகளினால், மேலும் நான்கு பேர் சிஐடி யினரால் நீதிமன்றில் நிறுத்த்தப்பட்டனர் . இவர்களை பெப்ரவரி 27 அன்று மீண்டும் நீதிமன்றில் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவன்னல பகுதியில் இரவு நேரத்தில் புத்தர் சிலையினை உடைத்து தப்பி ஓட முனைந்த இருவரில் ஒருவர் ஊராரிடம் பிடிபட அவர் தந்த தகவலின் பெயரில் அனைவரும் கைது செய்யப் பட்டிருந்தனர். இவர்கள் சார்பில் நீதிமன்றில் தோன்ற வாதாட மாவன்னல சட்டத்தரணியும் அனைவருமே மறுத்துவிட்டார்கள் என்பது முக்கியமானது. எனினும் இன்னும் தப்பி ஓடிய மற்றவர் கைதாகவில்லை. எனினும் நால்வர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் அளவுக்கு போ…
-
- 1 reply
- 745 views
-
-
வன்னியில் விரைவில் தனியான பல்கலைக்கழகம் இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கீழ் செயற்பட்டு வந்த வவுனியா வளாகத்தை வன்னி பெருநிலப்பரப்பில் தனியான ஒரு பல்கலைக்கழகமாக மிக விரைவில் தரமுயர்த்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கான தொழிநுட்ப பிரிவின் புதிய கட்டடத்தையும், அதனுடன் இணைந்த கணனி ஆய்வு கூடத்தையும் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்து அங்கு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சாந்தி …
-
- 0 replies
- 429 views
-
-
கோதாபயவை அமெரிக்க பிரஜாவுரிமையில் இருந்து விடுவிக்க வாஷிங்டன் இணங்கும் சாத்தியம் இவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச போட்டியிடக்கூடியதாக அவரை அமெரிக்கப் பிரஜாவுரிமையில் இருந்து விடுவிப்பதற்கு வாஷிங்டன் இணங்கக்கூடியது பெரும்பாலும் நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கைகொண்டிருக்கிறது போல் தோன்றுகிறது என்று கொழும்பில் அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள். பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் குழுவொன்றுடன…
-
- 0 replies
- 706 views
-
-
இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் உள்ள தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்தால் மாத்திரமே, ஈழத்தமிழர்கள் என்ற உண்மையான தமிழ் தேசிய இனத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், இதன்மூலம், தமிழர்களின் அடையாளத்தையும் இருப்பையும் அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். வவுனியாவில் இன்று (17) நடைபெற்ற தேசிய முற்போக்குக் கழகத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், எங்களை நாமே தாழ்த்தி வைத்துக்கொண்டிருப்போம் என்றால், பெரும்பான்மை இனத்தவர்களிடம், சம உரிமையைக் கோருவதற்கான தார…
-
- 0 replies
- 477 views
-
-
நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டமானது வரவேற்கத்தக்கது மாவை! கடன் சுமையிலிருந்து வடக்கு மக்களை விடுவிக்கும் வகையில் நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டமானது வரவேற்கத்தக்கது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நிதி அமைச்சின் ஏற்பாட்டில…
-
- 0 replies
- 266 views
-
-
ரஞ்ஜனின் கருத்துக்கு முஜிபுர் ரஹ்மான் எம்.பி. விளக்கம் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க வெற்று அறிவிப்புக்களை மாத்திரம் விடுத்தால் போதாது எனவும், அவர் அதற்கான ஆதாரங்களை முன்வைத்து அவற்றை நிரூபிக்கும் விதத்தில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அமைச்சரவையில் கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்கள் இருப்பதாக ஊடகங்கள் முன்னிலையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அறிவிப்புச் செய்திருந்தார். இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே முஜிபுர்ரஹ்மான் எம்.பி. இவ்வாறு கூறியிருந்தார். http://www.dailyceylon.com/177871
-
- 0 replies
- 369 views
-
-
ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் மே தினத்தில் அறிவிக்கப்படும்- முஜிபுர் ரஹ்மான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் மே தினத்தன்று அறிவிப்புச் செய்யப்படும் என பாராளுமன்ற உறுப்பிப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி பாரிய கூட்டணியுடன் மக்கள் முன்வரவுள்ளது. இதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமது வேட்பாளர் ஐ.தே.கட்சியிலிருந்துதான் வரும். பொது அபேட்சகராக அவர் களமிறங்கவுள்ளார் எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.dailyceylon.com/177885
-
- 0 replies
- 139 views
-
-
பான்டா, சாமுராய் பிணை முறிகளின் மூலம் 1 பில்லியன் டொலர் திரட்ட நடவடிக்கை அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டதை அடுத்து, சீனாவின் பான்டா, ஜப்பானின் சாமுராய் பிணை முறிகளின் மூலம், 1 பில்லியன் டொலர் நிதியைத் திரட்டும் நடவடிக்கையில் சிறிலங்கா மத்திய வங்கி மற்றும் திறைசேரி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியை தளர்த்தும் நோக்கில், இந்த நிதியை திரட்டுவதற்காக, ஜப்பான் மற்றும் சீனாவுக்கு, திறைசேரி, மத்திய வங்கி அதிகாரிகள் விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். பான்டா, சாமுராய் பிணை முறிகளின் மூலம் தலா 500 மில்லியன் டொலர் நிதியை திரட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, திறைசேரி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன், டொலர…
-
- 0 replies
- 107 views
-
-
கடல்சார் பாதுகாப்புக்காக சிறிலங்காவுக்கு நவீன கப்பலை வழங்குகிறது ஜப்பான் சிறிலங்காவின் கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, ஆதரவளிக்க முன்வந்துள்ள ஜப்பான், இதற்காக கப்பல் ஒன்றையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர் கென்ராரோ சொனோரா நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டுக்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்…
-
- 0 replies
- 116 views
-
-
சிறிசேனவை போட்டியில் நிறுத்தினால் சுயேட்சை வேட்பாளரை களமிறக்க பசில் திட்டம் அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த மகிந்த ராஜபச்ச முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வெற்றிபெறும் வலு கிடையாது என்றும் அவரை அதிபர் வேட்பாளராக நிறுத்தினால் தோல்வியடைவார். பசில் ராஜபக்ச கருதுகிறார். அவ்வாறு தோல்வியடைந்தால் அது நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பசில் ராஜபக்சவின் கணிப்பாக உள்ளது. எனினும், கோத்தாபய ராஜபக்சவுக்கு சிறுபான்மையின மக்கள் ஆ…
-
- 0 replies
- 135 views
-
-
மற்றொரு கடற்படைப் புலனாய்வு அதிகாரியைக் கைது செய்யும் முயற்சியில் சிஐடி சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் நெருங்கிய உதவியாளராக இருந்த கடற்படை அதிகாரி ஒருவரை, கைது செய்யும் முயற்சியில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இறங்கியுள்ளனர். கொழும்பில் 11 பேரைக் கடத்தி கப்பம் கோரி, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலேயே, குறித்த அதிகாரியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நெருங்கியுள்ளனர். கடற்படைப் புலனாய்வுப் பிரிவில் தற்போது சீவ் பெற்றி ஒவ்விசராக அவர் பணியாற்றி வருகிறார். கடந்த 6ஆம் நாள், விசாரணைக்காக அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைத்திருந்தனர். என…
-
- 0 replies
- 124 views
-
-
யாழில் ஐ.நா அதிகாரிக்கு அச்சுறுத்தல் – மைத்திரியிடம் முறைப்பாடு! யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவர்ரை இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக ஐ.நா. சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இதில் “இராணுவத்தினர் எனக் கூறிக் கொண்ட இருவர், யாழ். மாவட்டத்தில் உள்ள ஐ.நா. அதிகாரி ஒருவரின் வதிவிடத்துக்குள் நுழைந்தனர். ஒருவர் கைத்துப்பாக்கியை வைத்திருந்தார். குறித…
-
- 1 reply
- 328 views
-
-
போர் இடம்பெற்றால் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றமை இயல்பு – சுமந்திரன்! போர் இடம்பெறுமாக இருந்தால், அங்கு யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றமை இயல்பான ஒன்றாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நல்லூரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இதனை கூறினார். மேலும், இரண்டு தரப்பினரும் போர்க்குற்றம் இழைத்துள்ளதாக சர்வதேச அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளமையால், உண்மைகளைத் தெரிந்துக்கொள்ளவே விசாரணைக்கு தமது தரப்பு வலியுறுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு சர்வதேச விசாரணை அவசியம் என கூ…
-
- 0 replies
- 299 views
-
-
வடக்கில் வாழும் மலையக மக்கள் புறந்தள்ளப்படுகிறார்கள் – அமைச்சர் மனோ வடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்களுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேசிய முற்போக்கு கழகத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார். இதன் போதே வடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்களுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என கூறினார். அத்தோடு அவர்கள் சில அரசியல் காரணங்களுக்காக புறந்தள்ளப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தினார். மேலும் இங்கிருக்கும் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் அவர்களுக்கான காணி உர…
-
- 0 replies
- 120 views
-
-
கூடுதல் அதிகாரம் கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை – மஹிந்த மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்கவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வேயங்கொடை பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பையடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபைத் தேர்தலுக்கு அஞ்சுகிறது. மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றால், ஐக்கிய தேசிய கட்சி அதில் பாரிய பின்னடைவையே சந்திக்கும். இதேவேளை, கடந்த காலங்களில் தமக்கு காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் …
-
- 0 replies
- 130 views
-
-
அரசாங்கம் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும் – ரணிலின் கருத்துக்கு ஜனநாயக போராளிகள் கட்சி பதில் வன்புணர்வு மற்றும் கொடூரமான இனப் படுகொலைக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆகவேண்டிய நிலை சிங்கள அரசுக்கு உண்டு என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவினால் கிளிநொச்சியில் வெளியிடப்பட்ட ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர்ந்தும் இன்னல்களுக்கும் இனவழிப்புக்கும் முகங்கொடுத்து ஆக்கிரமிப்புக்குள் வாழ்ந்துவரும் ஓர் தேசிய இனத்தின் ஆன்மாவை சிதைக்கின்ற கருத்துக்களைக் கூறி அரசியல் காழ…
-
- 0 replies
- 146 views
-