ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142757 topics in this forum
-
05 Apr, 2025 | 04:32 PM ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கொழும்பு இளைஞன் முகமட் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது கொழும்பில் 22 வயது முகமது ருஸ்டி மார்ச் 25ம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற…
-
- 0 replies
- 119 views
-
-
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும் என தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஒற்றையாட்சிக்குள் தீர்வு சாத்தியமில்லையென்றும் சமஸ்டித்தீர்வு வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய இலங்கைக்கு…
-
- 0 replies
- 114 views
-
-
05 APR, 2025 | 01:36 PM இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (05) கைச்சாத்திடப்பட்டதையடுத்து பிரதமர் மோடிக்கு 'இலங்கை மித்ர விபூஷண' விருது வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார். இந்திய பிரதமர் மோடி மேலும் தெரிவிக்கையில், மீனவர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அந்த வகையில் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று …
-
- 1 reply
- 200 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 05 APR, 2025 | 12:39 PM ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சி இடம்பெற்ற ஏப்பிரல் ஐந்தாம் திகதியன்று ஜேவிபி அரசாங்கம் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடுகின்றது என முன்னிலை சோசலிஸ கட்சியின் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார். சோசலிஸத்திற்காக குரல்கொடுத்த ஜேவிபியின் உறுப்பினர்கள் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் அரசாங்கம் கைசாத்திடுவதை வேடிக்கை பார்க்ககூடாது என முன்னிலைசோசலிஸ கட்சியின் குமார் குணரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் இலங்கைக்கு எதிர்காலத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு உடன்படிக்கை எரிசக்திதுறை சம்பந்தமான உடன்படிக்கை உட்பட பல உடன்படிக்கைகள் கைசாத்திடப்படவுள்ள…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
இந்தியப் பிரதமரைச் சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்! இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7 பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் ”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார…
-
- 0 replies
- 258 views
-
-
பிரபாகரன் உடல் எங்கே? புலிகள் இயக்கத்தில் என்ன நடந்தது? பிபிசி தமிழுக்கு கருணா அம்மான், பிள்ளையான் பேட்டி 5 ஏப்ரல் 2025, 04:12 GMT கருணா அம்மான், பிள்ளையான் நேர்காணல் - பிபிசி தமிழ் எக்ஸ்க்ளூசிவ் இலங்கையின் இன்றைய அரசியல் களம் குறித்தும், கடந்து வந்த தங்களின் பாதைகள் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளும் அந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களுமான கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) மற்றும் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) கூறுவது என்ன? போர் முடிந்து 15 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் அனைவரின் மனதிலும் எழும் ஒரு கேள்வியானது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் எங்கே? அவரின் உடல் எப்படி அடையா…
-
- 0 replies
- 255 views
-
-
இலத்திரனியல் வாகன இறக்குமதியில் மோசடி! வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து அனுப்பும் பணத்தின் அடிப்படையில் முழுமையான இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் 2022 மே 01ஆம் திகதி முதல் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் …
-
- 0 replies
- 111 views
-
-
இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு! இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழைச் சேர்ந்த இரு மீனவர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி மீன் பிடிக்காகக் கடலுக்கு சென்ற இரு இலங்கை மீனவர்களும் படகின் இயந்திரம் பழுதடைந்தமையால் , இராமநாதபுரத்தை அண்டிய கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் , இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேர்…
-
- 0 replies
- 108 views
-
-
05 APR, 2025 | 10:54 AM இந்திய கடற்படைக் கப்பலான 'INS SAHYADRI' உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. https://www.virakesari.lk/article/211200
-
- 0 replies
- 95 views
- 1 follower
-
-
05 APR, 2025 | 06:42 AM சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது. இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் ஹகவ, மிட்டியாகொட, எலமல்தெனிய, அம்பகொலவெவ மற்றும் வுன்தல போன்ற இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், தென் மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் கரையோரப் …
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
04 APR, 2025 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவரை அன்புடன் வரவேற்கிறோம். இந்த விஜய…
-
- 2 replies
- 165 views
- 1 follower
-
-
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர மகஜர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம் வழியுறுத்தக் கோரி வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று (04) அவசர மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த மகஜரை கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைமைத் துவங்களிடமும் அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழ…
-
- 4 replies
- 289 views
- 2 followers
-
-
மோடி வருகை- இந்திய மீனவர்கள் விடுதலை! யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீரியல் வளத்துறை திணைக்களத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்தினால் நல்லெண்ண அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட அனைவரும் யாழில் இருந்து மிரிகானைக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னர் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தரும் நிலையில் குறித்த மீனவர்கள் விடுதலை ச…
-
- 3 replies
- 213 views
- 1 follower
-
-
04 APR, 2025 | 08:56 PM இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை (4) இரவு 8.33 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளார். வெளிவி…
-
- 9 replies
- 420 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையானது நடு வீதியில் குப்பைகளை கொட்டுவதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். யாழ்ப்பாணம் மாநகர சபையானது நடு வீதியில் குப்பைகளை கொட்டுவதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்; மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் இடம் உள்ளது. ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் வீதியூடாகவே அந்த குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கழிவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும்போது மாநகர சபையின் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றுவதில்லை. பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளை திறந்தவாறு கொண்டு செல்வதால் அந்த கழிவ…
-
-
- 11 replies
- 535 views
-
-
04 Apr, 2025 | 01:21 PM சென்னையிலிருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் நேற்று வியாழக்கிழமை (03) மாலை வந்தடைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளன. 400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு "Royal madras yacht club" அங்கத்தவர்களால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தனர். இன்று மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி புறப்படுகின்ற இப்படகு பின்னர் பூம்புகாரை அடைந்து அங்கிருந்து பாண்டிச்சேரியை சென்றடைந்து அங்கிருந்து கோவளத்தினையும் இறுதியில் மீண்டும் சென்னையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. காங்கேசன்துறையை வந்தடைந…
-
- 1 reply
- 230 views
-
-
பிராந்தியத்தின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இலங்கையை விட குறைந்த வரி விதிக்கப்படும் நாடுகள் விரைவில் அமெரிக்க சந்தையில் நுழையும் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படும். இது ஆடை தொழிற்துறையை பெரிதும் பாதிக்கும் என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 2ஆம் திகதி அறிவித்த 10 வீத அடிப்படை வரியை இன்று முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதன் கீழ், இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத வித்தியாசமான விகித வரி விதிக்கப…
-
- 0 replies
- 144 views
-
-
இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் வெள்ளிக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினைகளில் இழுவைமடிப் படகுகள் ஊடாக இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவதும் ஒன்று. வடமாகாண தமிழ் கடற் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் நிலையில் இருக்கிறது. எனவே கட்டாயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இது தொடர்பாக பேச வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. இது தொடர்பாக நான் ஜனாதிபத…
-
- 0 replies
- 112 views
-
-
பூசா சிறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தமிழ் கைதி உயிரிழப்பு! காலி, பூசா சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி, சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் உடலில் 11 இடங்களில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய நந்த குமார் சிவானந்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறையில் அண்மையில் நடந்த சோதனை அல்லது போதைப்பொருள் தொடர்பான மோதல் இந்த மரணத்துடன் தொடர்புடையதா என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். h…
-
- 1 reply
- 473 views
-
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது. இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஏப்ரல் 5 ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் ந…
-
-
- 41 replies
- 1.7k views
- 1 follower
-
-
வீதி விபத்துக்களால் இந்த ஆண்டு 592 பேர் உயிரிழப்பு! 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 590 க்கும் மேற்பட்டோர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே போக்குவரத்துப் பிரிவின் தலைவரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட இந்த தகவலை வெளியிட்டார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 565 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்வரும தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில், வீதி விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடு முழுவதும் வீதி…
-
- 0 replies
- 115 views
-
-
வட்டுவாகலில் சட்டவிரோத வலைகள்,படகுகள் பறிமுதல் ஒன்றுகூடிய உரிமையாளர்களினால் பெரும் பதற்ற நிலை சட்டவிரோத வலைகள் மற்றும் சட்டவிரோத படகுகளை அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில் அவற்றின் உரிமையாளர்கள் வட்டுவாகல் பகுதிக்கு வந்ததனை தொடர்ந்து பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்த்து அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டதுடன் 6 பேர் கைது செய்யப்பட்டநிலையில் ஒருவர் கை விலங்குடன் தப்பியோடியுள்ளார் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் கடற்தொழில் திணைக்களம் , வட்டுவாகல் கடற்படை, கடற்தொழில் இணையம், கடற்தொழில் சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வட்டுவாகல் களப்பில் நேற்று வியாழக்கிழமை 50 வலைத் தொகுதிகளும், 9 படகுகளும்…
-
- 4 replies
- 302 views
-
-
தமிழ் தேசிய கட்சிகளுடன் மோடி நாளை சந்திப்பு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு நாளை சனிக்கிழமை (5) பிற்பகல் 3மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது. இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கை வரவிருக்கும் இந்திய பிரதமர் மோடி,ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வடக்கு – கிழக்கு, மலையக அரசியல் தலைவர்களை சந்திக்கவிருக்கிறார். இந்நிலையில் நாளை சனிக்கிழமை மாலை தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களை கொழும்பில் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன், சாணக்கியன் இர…
-
- 0 replies
- 223 views
-
-
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுக்களை ஆராய்ந்த பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. https://adaderanatamil.lk/news/cm92cshwb0028hyg31ff9xj4b
-
- 1 reply
- 154 views
-
-
தையிட்டி விவகார தீர்வு கலந்துரையாடல் – இடைநடுவே வெளியேறிய அமைச்சர்கள் தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்களின் காணிக்குள் அத்துமீறிக் கட்டப்பட்ட தையிட்டி விகாரை விடுவிப்பு குறித்த கலந்துரையாடல் இன்று நாக விகாரையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதியமைச்சர் முனீர் முலாபீர்…
-
-
- 7 replies
- 385 views
-