ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடை நீக்கப்படவுள்ளது! adminJune 3, 2025 யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்ததாவது, இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யுத்தக்காலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பு தேடி இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர். அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு குடிவரவு மற்றும் குடியகல…
-
- 0 replies
- 217 views
-
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்காக புதிய ஏர்பஸ் A330-200 wide-body விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகரிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்கவில் மீது குறைந்த உயரத்தில் பறக்கும் இதன்போது பாரிய விமானத்தை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, சுமார் 1,500 அடி உயரத்தில் கொழும்பு கடற்கரையோரம், துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவ வரை பறக்கும். புதிய விமானம் பின்னர் அது கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்து, தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலையத்திற்கு மேல் குறைந்த உயரத்தில் மீண்டும் பறக்கும். இலங்கையை …
-
-
- 7 replies
- 610 views
- 1 follower
-
-
Published By: VISHNU 02 JUN, 2025 | 09:06 PM (நா.தனுஜா) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி வலிந்து காணாமலாக்கப்படல்களால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பாக இருந்தும்கூட, இவ்விவகாரத்தில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக்கொடுப்பனவாக தலா 200,000 இலட்சம் ரூபாவையை வழங்குவதற்கும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்பதாக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவேண்டும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
02 JUN, 2025 | 05:35 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்கீழ் மீள நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படவோ, தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள் எனவும் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மாறாக இதுகுறித்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்திலிருந்து குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்ப…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
02 JUN, 2025 | 05:28 PM (எம்.மனோசித்ரா) உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும், நமது நாட்டில் எவ்வித விலை திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அன்று எரிபொருளால் கிடைத்த இலாபம் தேசிய மக்கள் சக்தி கூறியதைப் போன்று கஞ்சன விஜேசேகரவின் சட்டைப் பைகளுக்குள் சென்றது உண்மையெனில், இன்று அது யாருடைய சட்டைப் பைக்குள் செல்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கேள்வியெழுப்பினார். கொழும்பில் திங்கட்கிழமை (2) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த அரசாங்கத்தில் எரிபொருட்களால் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதி அப்போதைய அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் சட்டைப் பைகளுக்குள் செல்வதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்தி…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
02 JUN, 2025 | 06:01 PM வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திங்கட்கிழமை (02) மாலை 5.30 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலடி முன்றலில் சமூக செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடு. நீண்டகாலமாக சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களின் காணி அபகரிப்பு, சைவத் தமிழரின் தலங்களை அழித்தல், நாடு முழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல் சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின் கோயில்களின் வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணான வகையில் தடுத்தல், ஆலயங்களுக்குச் சொந்தம…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
02 JUN, 2025 | 03:34 PM இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்குவதற்காக MAG மற்றும் HALO அறக்கட்டளையுடன் இணைந்து இந்த புதிய இரண்டு திட்டங்களுக்கும் மொத்தமாக 900,000 US$ (சுமார் ரூ. 270 மில்லியன்) ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நன்கொடை அளித்து வருகிறது, மேலும் ஜப்பானின் மொத்த உதவித் தொகை 47 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. KAMOSHIDA Naoaki Chargé d' Affaires ad interim, கண்ணிவெடி ஆலோசனைக் குழு (MAG) மற்றும் ஹாலோ அறக்கட்டளையுடன் (Halo Trust) அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான உதவி (GGP)" திட்டத்தின் கீழ் இரண்ட…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்! http://seithy.com/siteadmin/upload/suthan-020625-seithy.jpg தேசிய மக்கள் சக்தியும் ஏனைய கட்சிகளை போன்றுதான் செயற்படுவதை காணக் கூடியதாக உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் பொன்.சுதன் தெரிவித்துள்ளார். நேற்று சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி அவற் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “இது தொடர்பாக நான் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் பலருடன்,அமைச்சர் சந்திரசேகரனுடன் கலந்துரையாடினேன். நேற்று முன்தினம் பிற்பகல் 02.00 அமைச்சர் தன்னை சந்திப்பதற்கான அனுமதியை எனக்கு வழங்கியிருந்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு வாருங்கள்,அங்கு நாம் மேற்…
-
- 4 replies
- 429 views
-
-
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் திருப்தியில்லை! 00] http://seithy.com/siteadmin/upload/easter-attack-111124-seithy.jpg ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து திருப்தி தெரிவித்த தேசிய கத்தோலிக்க திருச்சபை தகவல் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த, பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை மகிழ்ச்சியடையவில்லை என்று தெரிவித்தார். "நாங்கள் அரசாங்கத்தை விமர்சிக்க விரும்பவில்லை, ஆனால் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கொண்டுவருவது, மற்றவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதைப் போலவே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்," என்…
-
- 0 replies
- 207 views
-
-
02 JUN, 2025 | 03:38 PM டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பிக்கின்றது. அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைவாக உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இன்றையதினம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை மேற்கொண்டுள்ளது. குறித்த விமானமானது இ…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
00]சங்கு - சைக்கிள் சந்திப்பு! http://seithy.com/siteadmin/upload/DTNA-020625-seithy.jpeg தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தன…
-
- 5 replies
- 651 views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 3 02 JUN, 2025 | 11:30 AM முப்படைகளில் இருந்து தப்பியோடிய வீரர்கள் உட்பட மொத்தம் 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்தக் கைதுகள் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் 2,261 இராணுவ வீரர்கள், 194 கடற்படை வீரர்கள் மற்றும் 198 விமானப்படை வீரர்கள் அடங்குவர். இதே காலப்பகுதியில் பொலிஸார் மேலும் 330 பேரைக் கைது செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/216317
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
02 JUN, 2025 | 09:47 AM யாழ். போதனா வைத்தியசாலை அருகே வாகன பாதுகாப்பு நிலையம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் 34 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்ற இந்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, பளையை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் நகர பகுதியில் தனது வேலை நிமித்தம் வந்துள்ளார். பேருந்தில் பயணிப்பதற்காக தனது சைக்கிளை குறித்த வாகன பாதுகாப்பு நிலையத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து செல்ல முற்பட்டவரிடம் அங்கு வந்த ஒருவர் அவரை தனக்கு தெரியும் என்று கூறி கைபேசி இலக்கத்தை தருமாறு கேட்டுள்ளார். இருட்டில் நின்ற நபரிடம் தான் கைபேசி பாவிப்பதில்லை என்று…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு Published By: VISHNU 01 JUN, 2025 | 08:40 PM உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது தோணியில் இருந்த இருவரும் நீரிற்குள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
Published By: VISHNU 01 JUN, 2025 | 08:04 PM குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் ஞாயிற்றுக்கிழமை (01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர். இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்க…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
01 JUN, 2025 | 05:19 PM கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீருக்கும் இந்த பெறப்பட்டு வைத்தியசாலைக்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனைய தேவைகளும் நேரடியாக குறித்த கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நீரில் ஒரு சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மலத்தொற்று (ஈகோலி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலத்தொற்றை நீக்கியாக குளோரின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வைத…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
Published By: VISHNU 01 JUN, 2025 | 08:44 PM ஞாயிற்றுக்கிழமை (01) யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன. கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. வளலாய் மேற்கு, அச்சுவேலி (ஜே/284) பகுதியில் வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வாதரமே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல கோழிகள் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கோழிகளையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கை…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (31) நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதியொருவர…
-
- 0 replies
- 222 views
-
-
01 JUN, 2025 | 04:20 PM ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தாங்கள் நம்புவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (31) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மட்டு.ஊடக அமையம்,கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்,வடகிழக்கு,தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது. இதன்போது படுகொல…
-
- 1 reply
- 216 views
- 1 follower
-
-
01 JUN, 2025 | 12:11 PM ஆர்.ராம் நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் விரைவில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால கேசரிக்கு தெரிவித்தார். அத்துடன், அசாதாரண சூழல்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பலாலி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த …
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
01 JUN, 2025 | 12:10 PM (நமது நிருபர்) மாகாண சபைக்கான அதிகாரங்கள் சூட்சுமமான முறையில் மீளப் பெறப்படும் செயற்பாடு தொடருகின்ற நிலையில் அதுதடுக்கப்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுள் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கதிற்கு கையளிப்பதற்கான தீர்மானம் தொடர்பி…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
01 JUN, 2025 | 10:57 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை ஆணையாளரின் விஜயத்திற்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என அவை தெரிவித்துள்ளன. அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது - இறுதியாக 2016 பெப்ரவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை செய்த் ராத் அல்ஹ_சைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். சர்வதேச சமூகத்தினால் மு…
-
- 19 replies
- 1k views
- 1 follower
-
-
01 JUN, 2025 | 10:11 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னடைவுகளை தொடர்ந்து துரித அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்வீட்டு முரண்பாடுகளை தனிக்காது மாற்றங்கள் செய்வது பயனற்றதாக கருதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார். எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக்க அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு தீர்மானிக்க வில்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஆளும…
-
-
- 1 reply
- 353 views
- 1 follower
-
-
01 JUN, 2025 | 09:23 AM (லியோ நிரோஷ தர்ஷன்) அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாய்கிழமை (03) இலங்கைக்கு வருகிறார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருணா ஜெயசேகர உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார். இதேவேளை, லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் இடம்பெறவுள்ள சிறப்பு நிகழ்வின் போது 'அவுஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல்' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். இலங்கை விஜயத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகா…
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் adminJune 1, 2025 யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் , யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது…
-
- 0 replies
- 317 views
-