Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைளை மேற்கொள்ள ஜனாதிபதி உத்தரவுவிடுத்துள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட பணிப்புரை விடுத்துள்ளார். http://www.virakesari.lk/article/46838

  2. முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழையையடுத்து வெள்ளத்தில் சிக்கிய 5 விவசாயிகளை இராணுவத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்டபட்ட நித்தகை குளத்தின் கீழ் நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் ஐந்துபேர் கடந்த 21.12.18 அன்று வயல் காவலுக்கு சென்றுள்ளார்கள். இதன்போது 21 ஆம் திகதி இரவு 22 ஆம் திகதி அதிகாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக அவர்கள் ஐவரும் நித்தகை குளவயல்பகுதியில் இருந்து வெளியேறி ஆண்டான்குளத்து ஜயனார் கோவில் பகுதிவரை வந்துள்ளனர். …

  3. December 23, 2018 மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைக்கானத் தேர்தல்களை ஒருவருடத்துக்கும் மேலாக தாமதித்துள்ள நிலையில், தேர்தலை கலப்பு முறையில் நடத்தமுடியாத பட்சத்தில், பழைய முறையிலாவது நடத்துமாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் பாராளுளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/107584/

  4. December 23, 2018 மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறைப் பிரிவிலுள்ள திக்கோடை வயல் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து மெற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த வயல் பிரதேசத்தின் நிலத்திலிருந்து பழுதடைந்த நிலையில் குறித்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குண்டு வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அதனை செயலிழக்கச் செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் ம…

  5. அரசமைப்பை பாதுகாப்பதற்காக கூட்டமைப்பு செயற்பட்ட விதம் தொடர்பில் ஐ.தே.க பெருமிதம்! அரசமைப்பை பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பட்ட விதமானது, ஐக்கியத்துக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியிலிருந்து அரசாங்கத்தில் இணைய இன்னுமொரு தரப்பினர் வருகைத் தரவுள்ளனர். தற்போது எமது அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்டவர்களும் அமைச்சுப் பதவிகளை எதிர்ப்பார்த்து இணைந்துக்கொள்ளவில்லை. எம்முடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடர…

  6. வடக்கு மக்கள் புலிகள் அல்ல வஜிர அபேவர்த்தன தமிழர்களை புலிகளாக நோக்கினால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும்:- #வஜிர_அபேவர்தன (உள்ளக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்) நாட்டின் தமிழ்ப் பிரஜைகளை விடுதலைப் புலிகள் என்று நோக்கினால், இலங்கைக்கு எதிர்காலம் என்பது இல்லாமல் போய்விடும் என அமைச்சர் வஜிர அபேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், தெற்கில் 1988, 89,90ஆம் ஆண்டுகளில் தேசப்பற்றுள்ள அமைப்பினால் ஆயிரக்…

    • 2 replies
    • 587 views
  7. வன்னி பெருநிலப்பரப்பில் வெள்ளம் 10ஆயிரம் பேர் இடப்பெயர்வு :வட மாகாணத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், இதுவரை 2 ஆயிரத்து 788 குடும்பங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள, அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலேயே இந்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 414 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில், ஆயிரத்து 347 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 27 குடும்பங்கள…

  8. எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் தற்பொழுதும் இரா.சம்பந்தனின் பொறுப்பில்? எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இழுபறிக்கு இதுவரையில் முடிவு எட்டப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் தற்பொழுதும், இரா.சம்பந்தனின் பொறுப்பிலேயே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் சபாநாயகர் தமது முடிவை அறிவிக்காததால், இரா.சம்பந்தன், குறித்த செயலகத்தை இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அறிவிப்பை வெளியிடாமல், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்…

  9. கிளிநொச்சி தருமபுரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் யார்?

  10. நீதியரசர்கள் நியமனத்தில் சிறிலங்கா அதிபர் – அரசியலமைப்பு சபை இடையே இழுபறி உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களுக்கு, அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று நீதிபதிகளின் பெயர்களை சிறிலங்கா அதிபர் நிராகரித்துள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கு மூன்று நீதிபதிகளின் பெயர்களை அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துக்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருந்தார். எனினும், 10 பேர் கொண்ட அரசியலமைப்பு சபையின் 7 உறுப்பினர்கள், சிறிலங்கா அதிபரின் இந்த பரிந்துரைகளை நிராகரித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நடந்த அரசியலமைப்பு சபையின் இந்தக் கூட…

  11. மன்னார் புதைகுழி எலும்பு மாதிரிகள் புளோரிடாவுக்கு – விமான நிலையங்களுக்கு அறிவிப்பு மன்னார் – சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் வரும் ஜனவரி மூன்றாவது வாரம், காபன் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளது. மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 120 தடவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழ்வுப் பணிகளின் மூலம், புதைகுழியில் இருந்து 21 சிறுவர்கள் உள்ளிட்ட 283 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் சில எலும்பக்கூடுகளின் மாதிரிகள், நீதிவானின் நேரடி கண்காணிப்பில், தெரிவு செய்யப்பட்டு, அமெரிக்காவின் புளோரிடாவில் …

  12. இடைநிறுத்தப்பட்ட நிதி உதவிகளை பெற வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு அரசியல் குழப்பங்களை அடுத்து இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக ஜனவரி மாதம் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். ”அனைத்துலக நாணய நிதியம், அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம், மற்றும் ஜப்பானின் அனைத்துலக ஒத்துழைப்பு முகவரகம் ஆகியவற்றுடனேயே பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. அனைத்துலக நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் ரூபா கடனின், ஆறாவது தவணைக் கொடுப்பனவான, 250 மில்லியன் டொலரை இடைநிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம் 480 மில்லியன் டொலர் உதவியை நிறுத்தி வைத்துள…

  13. புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதும், கடந்தவாரம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்லவுள்ளதால், இந்த வாரமும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது. இதனால் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் 2019 ஜனவரி முதல் வாரமே இடம்பெறும். வெளிநாடு செல்வதற்கு முன்னதாக, நேற்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த சிறிலங்கா அதிபர் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். எனினும்…

  14. நீராவிப்பிள்ளையார் ஆலயத்திற்குள் புகுந்த புத்தரை பற்றி அறிக்கை கோரப்படுகிறது! December 21, 2018 முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை நீராவிப் பிள்ளையார் ஆலயத்தில் பலவந்தமாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியால் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலணியின் கூட்டம் கடந்த 17ம் திகதி இடம்பெற்றது. இதன்போது, புத்தர்சிலை விவகாரம் எழுப்பப்பட்டிருந்தது. நீராவிப்பிள்ளையார் ஆலயப்பகுதியை 2016ம் ஆண்டு வரை இராணுவத்தினர் தமது பாவனையில் வைத்திருந்தனர். அப்போது, ஆலயத்தில் புத்தர் சிலை வைத்து வழிபட்டனர். அந்த பகுதியை இராணுவத்தினர்…

  15. மட்டக்களப்பில் மறுவடிவம் பெறும் இராணுவப் பாஸ். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் இன அழிப்பு போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டாலும் இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகள் தொடர்ந்தும் காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்திவருகின்றனர். அத்துடன் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பாஸ் நடைமுறையைக் கொண்டுவருவதற்கு இலங்கை இராணுவம் முயற்சி மேற்கொள்வதாக பால் பண்ணை உரிமையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மைலத்தமடு மற்றும் பெரிய மாதவணை ஆகிய மேய்ச்சல்தரை பகுதிகளில் வாழ்வாதார தொழிலாக கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களின் பெயர் விபரங்களை தரவை பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரிடம் சமர்…

  16. கிளிநொச்சியில் வெள்ளத்தில் பல கிராமங்கள் மூழ்கியுள்ளன – மீட்பு பணியில் இராணுவத்தினர் December 22, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் நேற்றிரவு(21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சில கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் இ…

  17. மன்னாரில் சீரற்ற காலநிலை 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிப்பு… December 22, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. மன்னார் மாவட்டத்தில் சீரற்ற கால நிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்ந்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார். நேற்று (21) வெள்ளிக்கிழமை இரவு வரை பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் உள்ள மீள் குடியேற்ற கிராமமான ‘பெல்வேறி’ கிhரமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்களே பாதீக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னாரில் உள்ள பொது மண்டபம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த கிராம மக்களை அக்கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலகர் உடனடியாக சென்று பார்வையிட்டதோ…

  18. மலையக இளைஞர்களின் போராட்டம் நிபந்தனையுடன் இடை நிறுத்தம்! December 22, 2018 1 Min Read மலைய மக்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்ட மலையக இளைஞர்கள் தமது போராட்டத்தை நிபந்தனையுடன் இடைநிறுத்தியுள்ளனர். கொழும்பு, புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இப் போராட்டம் இடம்பெற்று வந்தது. நுவரெலியா- தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டத்தில் மலையகத்தை சேர்ந்த, கணேசன் உதயகுமார், கந்தையா அசோக்குமார், கனகரத்தினம் ராஜா, வீரக்குமார் ம…

  19. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு TNA தொடர்ந்தும் போராடுகிறது… December 22, 2018 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டு நீண்டாக காலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் போராடி வருகின்றது. எத்தகைய தடைகள் வந்தாலும் எமது இந்தப் போராட்டம் ஓயாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோனதிராசா தெரிவித்தார், போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு சுவிஸ் வாசல் செந்தமிழ்ச்சோலையின் நிறுவன அனுசரணையுடன் இலங்கைத் தமிழசுக் கட்சியின் அலுவலத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேய…

  20. December 22, 2018 வடமராசட்சி நன்னீர் ஏரி பெருக்கெடுத்தமை காரணமாக தொண்டைமானாறு வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கும் இப் பகுதியில் ஊடாக பயணிக்கும் மாணவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப் பகுதிக்கு அறிவித்தல் விடுக்கும் வரையில் செல்லுவதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை அறிவிறுத்தியுள்ளார். நீர்மட்டம் 3.8 அளவில் உயர்வடைந்தமை காரணமாக வடமராட்சி நன்னீரேரி மற்றும் தொண்டமனாறு கடலேரி உட்பட…

  21. முல்லைத்தீவிலும் வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! December 22, 2018 முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளும் வெள்ளப் பெருக்களினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தொடரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாங்களில் தஞ்சமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விசுவமடு, றெட்பானா, வள்ளுவர்புரம், மாணிக்கபுரம் முதலிய பகுதிகளிர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளை சேர்ந்த 150 குடும்பங்கள் வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலய இடைத்தங்கல் முகாங்களில் தங்கியுள்ளனர். இதேவேளை, பாதிக்கப்பட்ட இந…

  22. அனர்த்ததை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பணிப்பு…. December 22, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்ததை எதிர்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று(22) காலை பணித்துள்ளதாக கிளிநொச்சி மாவடட் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மாவட்டத்தின் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளை எதிர்கொள்வதற்கு மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் தயாராக உள்ளன. வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான முதலுதவிகள், சமைத்த உணவுகள் வழங்குவதற்கும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்…

  23. இரணைமடுக் குளத்தின் 11 வான்கதவுகளும் திறக்கப்பட்டன… December 22, 2018 கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதனால் 11 வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் பாரிய நீர்ப்பாசனக்குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட்டு இம்மாத முற்பகுதியில் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டதைத்தொடர்ந்து 36 அடி நீர்கொள்ளளவைக் கொண்ட இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் நேற்று (21) 35 அடியாகக் காணப்பட்;டது. இந்நிலையில் நேற்றிரவு பெய்த மழையினால் குளத்தின் நீர்மட்டம் மிக வெகுவாக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் இன்று கால…

  24. சிறிலங்கா விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயற்பட்ட அமெரிக்கா- இந்தியா சிறிலங்கா, மாலைதீவு ஆகிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் போது, அமெரிக்காவும் இந்தியாவும் மிகநெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்பட்டதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் பிரதி உதவிச் செயலர் டேவிட் ரான்ஸ் தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகளான சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகியவற்றின் நெருக்கடிகள் தொடர்பாக, ஏஎன்ஐ செய்திச் சேவையினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். “இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் நிகர பாதுகாப்பு வழங்குனராக இந்தியாவின் தோற்றத்தை ஆதரித்து வருகிறது. …

  25. அமெரிக்க கடற்படைக் கப்பலும் கொழும்பு வந்தது ரஷ்ய கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கும் நிலையில், அமெரிக்காவின் தரையிறக்கக் கப்பல் ஒன்று நேற்று கொழும்பு வந்து சேர்ந்துள்ளது. 13 ஆவது கடல் விரைவு அணியைச் சேர்ந்த யுஎஸ்எஸ் ரஷ்மோர் (USS Rushmore) என்ற தரையிறக்க கப்பலே ஆறு நாட்கள் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துளள்து. கொமாண்டர் றொபேர்ட் ட்ரயனை கட்டளை அதிகாரியாக கொண்ட, 185 மீற்றர் நீளமான இந்தக் கப்பலில், 380 அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் பணியாற்றுகின்றனர். எதிர்வரும் 26ஆம் நாள் வரை கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைக் கப்பல் தரித்திருக்கும் என்றும், இதன் போது இருநாடுகளின் கடற்படை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.