ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143281 topics in this forum
-
நீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி! நீதிமன்றின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கின்றேன் ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் நாளை நாட்டின் பாதுகாப்புக் கருதியே மேற்கண்ட தீர்மானத்தை தான் எடுத்ததாகவும், நாளை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மஹிந்த தரப்பின் மேன்முறையீட…
-
- 0 replies
- 1k views
-
-
ஜனாதிபதி ரணிலை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் என எதிர்பார்க்கின்றோம் ;ஹக்கீம் (ஆர்.விதுஷா) உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு செவிசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் என எதிர்பார்க்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர். உயர் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசியல் அமைப்புக்கு முரணாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டது தவறானது என்பதை உயர் நீதி மன்றத்தில் ஏழு நீதியரசர்களும் ஒருமித்து தங்கள்…
-
- 0 replies
- 542 views
-
-
மனித எச்சங்களைப் பார்க்கும்போது தமிழின அழிப்பு புலனாகின்றது - அனந்தி சசிதரன் சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் இலங்கை இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டுள்ள உறவுகளினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரம் இரும்புக் கம்பியினால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் மீட்கப்பட்டமையானது மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு மக்கள் அடிமைகளாக கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துவதாக முன்னாள் வடக்கு மாகாண மகளிர் மற்…
-
- 2 replies
- 987 views
-
-
தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்!- அரியாலையில் வீடும் வாகனமும் பலத்த சேதம் யாழ்ப்பாணம் அரியாலையில் முகமூடி அணிந்த மர்ம வாள்வெட்டுக் கும்பலின் அட்டகாசத்தினால் அப்பகுதியின் வீடொன்றும், காரொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளன. வங்கி முகாமையாளர் ஒருவரின் வீடே இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து நாசக்கார செயலில் ஈடுபட்டுள்ளனர். நாசக்கார கும்பலின் செயற்பாட்டிற்கு அஞ்சி வீட்டில் இருந்தவர்கள…
-
- 5 replies
- 789 views
-
-
December 13, 2018 Add Comment Share This! உலகிலேயே அதிகளவில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இலங்கை முதலிடத்தை வகிப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இறுதிப் போரின் போது இலங்கை அரச படைகளிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அவர்களது குடும்பத்திற்கு இராணுவம் பதில் தர வேண்டும் என்றும் அவர் மீளவும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் 201…
-
- 1 reply
- 559 views
-
-
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியானால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்குகரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் அவ்வாறு கலைக்க வேண்டுமானால் பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அப்போது பிரதமாராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். அதிலிருந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக…
-
- 7 replies
- 904 views
-
-
December 12, 2018 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைத்திருந்தன. இந்த வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் ஆதரவாக் வாக்களித்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியில் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (12.12.18) பகல் 1 …
-
- 9 replies
- 1.4k views
-
-
அரச பத்திரிகை நிறுவனமான லேக் ஹவுஸ் கட்டத்தொகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்றால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் குறித்த பகுதியை சுற்றி பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. http://athavannews.com/லேக்-ஹவுஸ்-கட்டத்தொகுதிய/
-
- 1 reply
- 516 views
-
-
ஒத்தி வைக்கப் பட்டது கலாபூஷணம் விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம்(சனிக்கிழமை) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூஷணம் விருது விழா திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. குறித்த விருது விழா தாமரைத்தடாகத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் கையால் விருது வாங்கமாட்டேன் என மூத்த கலைஞரான டபிளிவ் ஜயசிறி தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையிலேயே, இந்த விருது ஒத்திவைக்கப்படுவதாக கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஒத்திவைக்கப்பட்டது-கலா/
-
- 0 replies
- 372 views
-
-
தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் உரிய நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உடன்பாட்டுக்கு வரும் வரையில் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிகளுக்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனைத்து தோட்டத் தொழிலாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைய வேலை நிறுத்தம் மற்றும் சம்பள பிரச்சினை தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என தான் எதிர்பார்க்கும் அதேவேளை தேயிலைத்துறையின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தெரிவி…
-
- 0 replies
- 217 views
-
-
குழப்பங்களுக்கு மத்தியில் கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நேற்று கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு , மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான, பதில் பிரதி உதவிச் செயலர் டேவிட் ரன்ஸ், என்ற மூத்த இராஜதந்திரியே கொழும்பு வந்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதமே இவர், சிறிலங்கா உள்ளிட்ட தெற்கு, மத்திய ஆசிய நாடுகளின் விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தில் முக்கியமான இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பத…
-
- 0 replies
- 358 views
-
-
தீர்ப்பை தொகுக்கும் பணியில் நீதியரசர்கள் – இன்று அல்லது நாளை வெளியாகும் சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றக் கலைப்பு அரசிதழுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அல்லது நாளை அறிவிக்கும் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த மனுக்களை தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 நீதியரசர்களைக் கொண்ட குழு விசாரணைக்கு எடுத்திருந்தது. நான்கு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர், தீர்ப்பு அறிவிக்கப்படும் நாள் குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட நீதியரசர்கள் பலரும், கடந்த சில நாட்க…
-
- 0 replies
- 335 views
-
-
நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – சித்தார்த்தன் வடக்கு, கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர்வது, அரசியல் கைதிகள், காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்துள்ளார். “ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு, பெரும்பான்மை ஆதரவை பெறுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை அடிப்படையிலேயே ஆதரவு அளித்துள்ளது. இதன்போது, முன்வைக்கப்பட்டவை அனைத்தும் கூட்டமைப்பின் வழக்கமான கோரிக்கைகள் தான். நாங்கள் அதிகாரப் பகி…
-
- 0 replies
- 615 views
-
-
கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை – சஜித் பிரேமதாச ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐதேக எந்த இரகசிய உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று அந்தக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “கூட்டமைப்புடன், ஐதேக இரகசிய உடன்பாடு செய்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டியது எமது தார்மீக கடமை. கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் போ…
-
- 0 replies
- 339 views
-
-
ஐதேமு அரசாங்கத்தில் கூட்டமைப்பு இடம்பெறாது – மாவை சேனாதிராசா ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காது என்றும், தொடர்ந்தும் எதிர்க்கட்சியாகவே செயற்படும் எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ”தற்போதைய அரசியல் நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை விபரித்து, சிறிலங்கா அதிபருக்கு கடந்த நொவம்பர் 29ஆம் நாள் கூட்டமைப்பினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும். ஐக்கிய தேசிய முன்னணியினால் பிரதமர் பதவிக்கு மு…
-
- 0 replies
- 621 views
-
-
தார்மீக உரிமையை இழந்து விட்டது கூட்டமைப்பு – டலஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தார்மீக உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்து விட்டது என்று, மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததன் மூலம், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தார்மீக உரிமையை கூட்டமைப்பு இழந்து விட்டது. இந்த நாடாளுமன்றம் தொடருமானால், எதிர்க்கட்சி என்ற பதவியில் இருந்து கூட்டமைப்பு விலக வேண்டும். அதேவேளை தற்போதைய அரசியல் நெருக்கடியை நிறைவேற்று அதிகாரமே, நீதித்துறையோ, நாடாளுமன்றமோ தீர்க்க முடியாது. பொதுத்தே…
-
- 0 replies
- 346 views
-
-
பிரேரணையை நிராகரிக்கிறது மகிந்த அணி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை தெரிவித்து நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, பிரேரணையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிராகரித்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ‘ஜனநாயகமற்ற, சட்டவிரோத நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் வெறுமையானதே. அதனால் தான், நாங்கள் நாடாளுமன்றத்தை புறக்கணிக்கிறோம். சபாநாயகர் கரு ஜெயசூரிய ஐதேகவுக்கு சார்பாக- அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகிறார…
-
- 0 replies
- 440 views
-
-
ஜனாதிபதிக்கெதிரான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று December 13, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது என தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை 4 வழங்கப்படவுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, ஏற்கெனவே இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்…
-
- 0 replies
- 447 views
-
-
யாழில். காவல்துறையினரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் December 13, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில். காவல்துறையினரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் இந்த ஆண்டு கிடைக்க பெற்று உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். யாழ்.கலைத்தூது கலையரங்கில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , மனித உரிமைகள் தினத்தை 70 ஆண்டு காலமாக கடைப்பிடிக்கிறோம். ஆனாலும் மனித உரிமைகள் மீறல்களை நாம் கண்முன்னே பார்த்துக்கொண்டே இருக்கின்றோம். ஊடகங்களிலும் அது தொடர்பிலான செய்திகள் வெளியாகிக்…
-
- 0 replies
- 319 views
-
-
சட்ட விரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்தவர்கள் கைது! சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த குற்றச்சாட்டில் மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஐந்து ஆமைகளை மீட்டுள்ளதாக யாழ்ப்பாண கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் வைத்து அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மூன்று கடல் ஆமைகள் மீட்கப்பட்டதுடன், நெடுந்தீவு பகுதியில் வைத்து இரண்டு ஆமைகளுடன் மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் நால்வருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், உயிருடன் காணப்பட்ட ஆமைகள் ஐந்தையும் மீ…
-
- 4 replies
- 712 views
-
-
1 Min Read December 12, 2018 மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் உள்ள ‘சதொச’வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வட-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் இன்று புதன் கிழமை காலை போராட்டம் இடம் பெற்றது. மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று புதன் கிழமை(12.12.18) காலை 10.30 மணியளவில் இடம் பெற…
-
- 3 replies
- 779 views
-
-
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான தீர்ப்பு இன்று! நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்த ஜனாதிபதி மைத்திரி, கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலையும் அறிவித்தார். இது அரசியலமைப்பிற்கு முரணானதென தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரகாரம், நாடாளுமன்ற கலைப்பிற்கு கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது. அதன் பின்னர் குறித்த மனுக்கள் மீதான விசாரணை இடம்பெற்றது. பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ர…
-
- 0 replies
- 435 views
-
-
புலமைப்பரிசில்-பாடசாலை வெட்டுபுள்ளி விபரம் Editorial / 2018 டிசெம்பர் 12 புதன்கிழமை, பி.ப. 05:30 Comments - 0 2018 ஆம் ஆண்டு ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்துக்கு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் வகையில், வெட்டுப்புள்ளி விபரங்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, தமிழ் மொழி மூலமான ஆண்கள் பாடசாலை கொழும்பு றோயல் கல்லூரி-187,சில்வெஸ்டார் கண்டி-183,கொழும்பு டீ எஸ்.சேனநாயக்க-178, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி 176, கொழும்பு இசிபத்தனா கல்லூரி-175,மட்டு சென்.மைக்கல் கல்லூரி-165,சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி-164,யாழ்.இந்து கல்லூரி-164,யாழ்.மத்தியக் கல்லூரி-164,காத்த…
-
- 0 replies
- 480 views
-
-
December 12, 2018 வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் பல்வேறு குறைப்பாடுகள் காணப்பட்டிருக்கலாம் என்றும் பிரதான கட்சிகள் இணைந்து பணியாற்றிய போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இக்குறைப்பாடுகள் தோற்றம் பெற்றதுடன், அதனால், மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றுவதில் சில தாமதங்களும் ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதன்போது ரணில் க…
-
- 2 replies
- 748 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலைகளாலும் கடற்சீரின்மை காரணமாகவும் மீனவர்களது தொழில்கள் பாதிப்படைந்துள்ளது . குறிப்பாக நாயாறு பகுதியில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள மீனவ குடும்பங்கள் கடலடிக்கு மத்தியிலும் வாழ்வாதாரத்துக்காக கடலன்னையுடன் போராடி கடற்றொழிலுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக நாயற்றுபகுதி மீனவர்கள் இரண்டு மாதங்களாக கடற்தொழிலுக்கு செல்லவில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்தப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள அந்தப்பகுதி மீனவர்கள் தற்பொழுத…
-
- 1 reply
- 1k views
-