Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை செயலிழக்கச் சதி? தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திடம் பொறுப்புகள் இலங்கையின் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் பொறுப்புகள் அனைத்தையும் இலங்கைத் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்பீசி பெரேராவிடம் கையளித்துள்ளதாக கொழும்பு ரெலிகிராவ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமை இலங்கை அரசியல் யாப்புக்கு முரணானது என சகலதரப்பினரும் குற்றம் சுமத்தியிருந்தனர். நடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்புக்கு முரணானதா இல்லையா என்பது குறித்து இலங்கை உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரிய பின்னரே நாடா…

  2. பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றார் மஹிந்த ராஜபக்ச - 45 பேர் இணைவு தலைமைப் பதவியையும் ஏற்பார் - நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பெதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை இன்று ஞாயிற்றுக்கிழமை பெற்றுள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்து அதன் தலைமைப் பொறுப்பையும் வகித்த மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராகவும் செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் ஸ்ரீலங்கா பெதுஜன பெரமுன கட்சியில் அவர் இணைந்துள்ளார். கொழும்பு விஜயராம மாவத்தைய…

  3. மகிந்த பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மீது கெடுபிடிகள் November 11, 2018 மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர், அவரின் பாதுகாப்பினை காரணம் காட்டி ஊடகவியலாளர்கள் மீது பல்வேறு கெடுபிடிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஸவின் ஊடகவியலாளர் சந்திப்புக்களுக்கு செல்லும் ஊடகவியலாளர்கள் கைபேசி எடுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால், ஊடகவியலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது ஊடகவியலாளர்களில் பலர் ஒலிப்பதிவுக் கருவியை பயன்படுத்தாமல் தங்களது கைபேசிகளிலேயே செய்திகளை பதிவு செய்து வருகின்ற நிலையில், பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்…

  4. வெறும் 68 எம்.பிக்களே ஆதரவு: நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவின் பின்னணி வெளியானது! November 10, 2018 நேற்று (09) நள்ளிரவு திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, இலங்கை அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அதிரடி முடிவை எடுக்க வைத்த பின்னணி காரணம் என்னவென்ற தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தேசிய புலனாய்வுப்பிரிவு வழங்கிய இரகசிய அறிக்கையொன்றால் கதிகலங்கியே, ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை எடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் மைத்திரி, மஹிந்த தரப்பினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதென்பது தெரிய வந்ததால், நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை எடுத்தார்கள் என்ற செய்தி ஏற…

  5. எவர் தடுத்தாலும் தேர்தல் நடக்கும் : மகிந்த November 11, 2018 எவர் தடுத்தாலும் தேர்தல் நடைபெறும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதே தமது பிரதான திட்டம் எனவும் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு மக்கள் தீர்ப்புக்கு செல்லவேண்டும் என்பதே தமது நோக்கம் எனவும் அவர்குறிப்பிட்டார். தமது இத் தீர்மானம் சரியா, தவறா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடமே இருப்பதாகவும் மக்களுக்குள்ள இந்த அதிகாரத்தை நீதிமன்றத்தால்கூட சவாலுக்குட…

  6. சோபித தேரரின் நினைவு நிகழ்வுக்கு வர மறுத்த சிறிலங்கா அதிபர் 2015ஆம் ஆண்டு, மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை அகற்றி, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர் மறைந்த வண. மாதுளுவாவே சோபித தேரர். அவரது இரண்டாவது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர் அதில் பங்கேற்க மறுத்து விட்டார். இதனால் முன்வரிசையில் அவருக்கான ஆசனம் வெற்றிடமாக இருந்தது. கடந்த ஆண்டு, சோபித தேரரின் நினைவு நிகழ்வுக்கு அமைப்பாளர்கள், அழைப்பு அனுப்ப மறந்து போயிருந்தனர். எனினும், அந்த நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தா…

    • 2 replies
    • 453 views
  7. ஈழ அரசியலில் பிரபாகரனிற்குப் பின்னர் தலைமைத்துவத்தில் பாரிய வெற்றிடம்: தொல்.திருமாவளவன் ஈழ அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால், சிதறிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு ஜனநாயக வழியில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லும் ஒரு தலைமை தற்போது தேவை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மரநடுகையும் மலர் கண்காட்சியும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஈழத்தில் இன்று அரசியல் தலமைக்கான வெற்றிடம் உள்ளது. தந்தை செல்வா …

  8. பொதுத்தேர்தல் குறித்து ஆராய நாளை கூடுகின்றது விக்கியின் புதிய கட்சி பொதுத்தேர்தல் குறித்து நாளைய தினம்(திங்கட்கிழமை) கூடி ஆராயப்படவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவரான வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி என்ற தமது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழலிலேயே நாளைய தினம் கூடி ஆராயவுள்ளதாக சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/பொதுத…

  9. மட்டக்களப்பு மழை காரணமாக 16,632 குடும்பங்கள் பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக 16,632 குடும்பங்களைச் சேர்ந்த 57, 051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த 242 குடும்பங்களைச் சேர்நத 691 நபர்கள் 3 முகாம்களில் தங்கவைக்கப்ட்டுள்ளனர். அத்துடன் கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறு மூலை வளாகத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2, 296 குடும்பங்களைச் சேர்ந்த 8, 564 நபர்களும கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1, 166 குடும்பங்களைச் …

  10. ஜனநாயக கட்டமைப்புகள் குறித்த மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம் November 11, 2018 1 Min Read பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதால் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் குறித்த மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையாக செயற்படும் பாராளுமன்றம் ஜனநாயகத்தின் அவசியமான தூண்களில் ஒன்று எனவும் இந்த நடவடிக்கை நாட்டின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஜனநாயக இலங்கையின் நீண்ட நாள் ஆதரவாளர் என்ற அடிப்படையில…

  11. ராஜபக்ச பாணி அரசுக்காக எனது சகோதரருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குங்கள் - கோத்தாபய November 11, 2018 எதிர்வரும் பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார் . களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கும் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மகிந்த பாணி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் அவருக்கு பெரும்பான்மை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார் ரணில் அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துவிட்டது எனத் தெரிவித்த க…

  12. ஜனாதிபதியின் தீர்மானம் தவறெனில் மக்கள் தண்டனை வழங்கட்டும் : November 11, 2018 பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை தொடர்பில் ஏதேனும் தவறு இழைக்கப்பட்டிருக்குமாயின் பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சமாதான ரீதியில் செயற்படாமல் மோதல் வழிகளில் நாட்டை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாகவும் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் இந்த நிலையை சரி செய்வதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளர்h. இ…

  13. அரசியல் நெருக்கடி – முக்கிய அரச நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு : November 11, 2018 தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆறு முக்கிய நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம், லேக்ஹவுஸ், தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி முதலிய அரச ஊடக நிறுவனங்களுக்கு விசேடபாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைவிட, அரசின் முக்கிய நிறுவனங்களான சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச அச்சகம் ஆகிய நிறுவனங்களுக்கும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் விசேட பாதுகாப்பு வழங்கப…

  14. பைத்தியக் காரன், கொடுங்கோலன் என்று மைத்திரியை விமர்சித்த மங்கள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக் காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர், “மண்டேலாவாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து அவர் பதவிக்கு வந்தார். ஆனால், நாங்கள் முகாபேயைத் தான் பெற்றிருக்கிறோம். ஒரு பைத்தியக்காரன். மக்களுக்கு எமது பெரும்பான்மையை காண்பிப்போம். எமக்கு பெரும்பான்மை பலம் இருந்தும், சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார். கொடுக்கோலனாக எழுச்சி பெற்றுள்ள சிறிசேனவுக்கு எதிராக நாம் போராடுவோம். நீதிமன்றத்திலும், ந…

  15. குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள் கொழும்பு – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலய வீதிக்குள் உள்நுழையும் போது வாசனை நிரம்பிய நறுமணத்தை உணர முடிவதுடன் மெல்லிசையையும் கேட்க முடியும். இந்திய மாக்கடலை அண்டிய காலி வீதியில் அமைந்துள்ள முருகன் ஆலயமான கதிரேசன் ஆலயமானது கொழும்பில் வாழும் தமிழ் மக்களால் வழிபடப்படும் ஒரு வணக்கத் தலமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் சிறிலங்கா அரசியலில் ஏற்பட்ட சடுதியான மாற்றமானது இங்கு வாழும் மக்களை பெரிதும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. சிறிலங்கா அதிபரால் பிரதமராக அறிவிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியிருந்தார் என்பதால் இவர் தொடர்பில் …

  16. தேர்தல் விடயத்தில் பசில் விடாப்பிடி – கண்டியிலேயே தங்கிவிட்ட மைத்திரி நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி தனது மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அதன் நிறுவுனரான பசில் ராஜபக்ச அடம்பிடித்து வருவதால், மைத்திரி- மகிந்த கூட்டணி இடையே முரண்பாடுகள் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது ஆலோசகர்கள் மற்றும் தமது கட்சிகளின் மூத்த தலைவர்களுடன் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். இதன்போது ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து, பரந்துபட்ட கூட்டணியை அமைத்துப் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. எனினும், இ…

  17. மன்னார் தோட்ட வெளி ஜோசப் வாஸ் நகர் கிராம பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரு சிறுவர்களும் அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் ரஜீத் (வயது -7) மற்றும் இந்தயூட் லிவிசன் (வயது-7) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நீர்த்தேக்கத்தில் குளிப்பதற்காகச் சென்ற சக சிறுவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொதுமக்கள் இணைந்து குறித்த சிறுவர்களின் உடலங்களை மீட்டனர். பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் வவுனியாவில் இருந்து வருகை தந்த விசேட தடவியல் நிபுணத்…

  18. நாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் முழுமையாக ஓரங்கட்டிவிட்டு சர்வாதிகாரியாக செயற்பட்டுவரும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு, லிபிய அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட துர்பபாக்கியமான நிலமையே ஏற்படும் என்று முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை அகற்றி, மைத்ரிபால சிறிசேனவை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு முன்னின்று உழைத்த முக்கிய தலைமை பௌத்த பிக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். இதனால் மைத்ரிபால சிறிசேன தான் செய்துவரும் தவறுகளை உடனடியாக சரிசெய்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் முக்கியஸ்தரான கலாநிதி தம்பரே அமில தேரர், அவ்வாறு செய்ய அவர் செய்யத் தவறிால், நாட்டின் சுதந்திரத்தை …

    • 0 replies
    • 414 views
  19. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. குறித்த விபத்தில் செல்வரட்ணம் திசான் (வயது-25), சரவணபவன் கோபிசன் (வயது-23) மற்றும் கோபாலகிருஷ்ணன் சாரங்கன் (வயது-25) ஆகிய மூவருமே உயிரிழந்தனர்.உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. http://globaltamilnews.net/2018/10…

  20. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட வைத்திய அத்தியட்சகர் கடமையைப் பொறுப்பேற்கச் சென்றபோது அங்கு பதில் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றிய வைத்தியர் இருக்கவில்லை எனவும் புதிய வைத்திய அத்தியட்சகர் தமது பதவியை ஏற்ற பின்னர் அங்கு வருகை தந்த பதில் வைத்திய அத்தியட்சகர் பணியாளர்களை நோக்கி ‘ஏன் புதியவரைப் பதவி ஏற்க அனுமதித்தீர்கள்?’ எனக் கண்டித்ததுடன் வைத்திய அத்தியட்சகரது அறையினைப் பூட்டித் திறப்பினைத் தம்முடன் எடுத்துச் சென்று விட்டார் எனக் குற்றம் சுமத்தப்படுகிறது. இதனை அடுத்துப் புதிய வைத்திய அத்தியட்சகர் யாழ்ப்பாணப் பிராந்தி…

  21. November 10, 2018 வழங்கப்படாத அதிகாரத்தின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் அக் கட்சி நடாத்திய ஊடக மாநாட்டில் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கா இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பம் முதலே அரசியலமைப்பை மீறி வருவதாகவும் குற்றம் சுமத்திய அனுர தேர்தலில் அவரது அரச அதிகாரத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நோக்கிலேயே அமைச்சரவை…

  22. நிலையான அரசாங்கம் அமைப்பதற்கு பொது மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது - மகிந்த November 10, 2018 நிலையான அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு பொது மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கு பொதுதேர்தல் மூலம் நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் சிறந்த ஆட்சியை நிலை நாட்டுவதற்கும் பொது மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஸ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/102771/

    • 3 replies
    • 840 views
  23. மைத்திரியின் செயற்பாட்டினால் இலங்கைக்கு சர்வதேசத்தில் நெருக்கடி – கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் இலங்கைக்கு சர்வதேசத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நேற்று(சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இதற்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு சர்வதேச நாடுகளின் பங்களிப்…

  24. சிறிலங்கா அதிபரின் நடவடிக்கை – பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா அதிர்ச்சி கி.தவசீலன்Nov 10, 2018 | 9:57 by in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்றிரவு சிறிலங்கா அதிபரால் கலைக்கப்பட்டமை குறித்து பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட், கீச்சகப் பதிவு ஒன்றில் – ‘சிறிலங்காவின் ஒரு நண்பனாக, அனைத்து தரப்புகளும் அரசியலமைப்பை பின்பற்றுமாறு பிரித்தானியா கோருகிறது. ஜனநாயக நிறுவனங்களையும், செயல்முறைகளையும் மதித்துச் செயற்படுமாறும் கோருகிறது.” என்று தெரிவித்துள்ளார். கனடா சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை …

  25. அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும் இதுதொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நாங்கள் நிச்சயம் நம்புகிறோம். அதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்று நா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.