ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
இலங்கையின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் – IMF இலங்கையின் பொருளாதார மீட்சி வேகம் பெற்று வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கையில் சீர்திருத்தங்கள் பலனளிப்பதாகக் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் (Julie Kozack) குறிப்பிட்டார். இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, IMF நிர்வாகக் குழு இலங்கைக்கான EFF (விரிவாக்கப்பட்ட நிதி வசதி) ஏற்பாட்டின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வை அங்கீகரித்தது. மேலும் இது நாட்டிற்கு உடனடியாக $334 மில்லியன் ஆதரவை அணுக அனுமதித்தது. எனவே, அந்த மூன்றாவது மதிப்பாய்வை வாரியம் அங்கீகரித்தவுடன், $334 மில்லியன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கை…
-
- 0 replies
- 131 views
-
-
37வது பொலிஸ் மா அதிபர் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர்களின் பெயர்கள் முன்மொழிவு! பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர் இடையே பனிப்போர் ஆரம்பமாகியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன அதன்படி தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, லலித் பத்திநாயக்க சஞ்சீவ மெதவத்த, ரன்மல் கொடிகுணு, சஞ்சீவ தர்மரத்ன, கித்சிறி ஜெயலத் மற்றும் எம்.ஜி.ஆர் எஸ். தமிந்த ஆகியோர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. மேலும் அடுத்து நியமிக்கப்படவுள்ளவர் இந்த நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபர் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளடன் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனு…
-
- 0 replies
- 189 views
-
-
சட்ட விரோதமான மீன்பிடி முறைமைகளுக்கு எப்பொதும் அனுமதி வழங்க முடியாது-இராமலிங்கம் சந்திரசேகர்! கடற்றொளில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திருகோணமலை மாவட்டத்தில் பல மக்கள் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார். அந்தவகையில் திருகோணமலை மாவட்ட மட்டங்களில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்ட அவர் அதற்கான தீர்வுத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். விசேடமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் போரில் இந்தியாவால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் குறித்து விசேட கவனம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை உபயோகிப்பதன் ஊடாக எங்களது மீனவர்கள எமது கடல் வள…
-
- 0 replies
- 116 views
-
-
அரசாங்கம் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது – நாமல். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான சில சட்டத் தீர்ப்புகளைத் தொடர்ந்து, ஷிராணி பண்டாரநாயக்க மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், 2013 ஜனவரியில் அவர் தலைமை நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அந்த நேரத்தில் இதுபோன்ற நடவடிக…
-
- 0 replies
- 130 views
-
-
தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையால் முதலாவது மாதிரி உணவகம் நாரஹேன்பிட்டியில் திறப்பு! மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்துகொடுக்க, நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலாவது மாதி…
-
- 0 replies
- 160 views
-
-
மீனவர்களின் நலன்கருதி முல்லையில் வெளிச்சவீடு அமைக்கப்படவேண்டும் ; ரவிகரன் எம்.பி 28 Mar, 2025 | 10:58 AM முல்லைத்தீவில் வெளிச்சவீடு இன்மையால் கடலுக்குச்செல்லும் மீனவர்கள் கரைதிரும்புவதில் பாரிய இடர்பாடுகளை நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றனர். எனவே மீனவர்களின் நலன்கருதி முல்லைத்தீவு கடற்கரையில் வெளிச்சவீடொன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டது. குறித்த தீர்மானம் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தை கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பிவைப்பதென முட…
-
- 0 replies
- 78 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைக்கக் கூடாது என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகப் பார்க்கப்படுகின்றது. அத்தகைய முக்கியத்தும் உள்ள இந்தத் தேர்தலை வெறுமனே உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனக் குறைத்து மதிப்பிட கூடாது. இந்தச் சபைகள் அனைத்தையும் கை…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த மத்திய மாகாண சபை 100 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. கண்டி மாவட்ட செயலகத்தில் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்டத்திலுள்ள குரங்குகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டத்தின்படி, ரந்தெனிகல நீர்த்தேக்கப் பிரதேசத்தை அண்மித்த தீவுப் பகுதியில் மேற்படி குரங்குகள் கொண்டு போய் விடப்படவுள்ளன. இதற்காக குரங்குகளைப் பிரித்தல், அவற்றை கூடுகளில் அடைத்து எடுத்துச் செல்லல் மற்றும் அவை விடப்படும் இடங்களில் தேவையான மின்சார வேலிகள் போன்றவற்றை அமைத்தல் முதலான பல்வேறு பணிகளுக்காக இந் நிதி பயன்…
-
-
- 6 replies
- 467 views
-
-
21 Mar, 2025 | 10:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பாராளுமன்றத்தில் முதன் முதலில் வந்துள்ளமை ஆரோக்கியமான விடயமா? பாராளுமன்ற உறுப்பினர் மீதான குற்றம் இன்னும் எத்தனையோ பேருக்கு பாயலாம். இது தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகலாம். அர்ச்சுனா பேசிய சில விடயங்களில் தவறுகள் இருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக அதற்கு மன்னிப்பு கேட்கின்றோம். முஸ்லிம் மக்கள் அதனை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எமது வினயமான வேண்டுகோளாகும். வரலாறு எம்மை தவறாக குறிப்பிட கூடாது என்பதற்காகவே இதனை சுட்டிக்காட்டுகிறேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்த…
-
-
- 3 replies
- 482 views
-
-
Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 05:38 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த, முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால் அப்பாவி பலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு பிரித்தானியா ஆதரவளித்து வருகிறது. அவ்வாறெனில் இலங்கை இராணுவத்துக்கொரு நீதி, இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பினார். களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இலங்கையில் மனித உரி…
-
-
- 2 replies
- 256 views
- 1 follower
-
-
27 Mar, 2025 | 03:47 PM தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமே கிடையாது என கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் சமுத்திர வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்று (26) தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் இணைந்து அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குறிப்பாக, ஒலுவில், கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளுக்கு சென்று மீன்பிடி, கடற்றொழில் மற்றும் கடற்றொழில் அபிவிருத்தியின் தற்போதைய நிலைமைகளை அவதானித்தபோது அமைச்சர் இதனை தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் பங்குபற்றலுடன் நேற்று மாலை காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கலந்துரையாட…
-
- 1 reply
- 193 views
-
-
50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 07:18 PM (செ.சுபதர்ஷனி) சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி நாட்டில் உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன தெரிவித்தார். தைராய்டு விசேட தடுப்பூசி திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சால் வியாழக்கிழமை (27) வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு ம…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 07:15 PM (எம்.வை.எம்.சியாம்) திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பை வழங்க வேண்டும். அந்த அதிகாரிகளின் சார்பில் முன்னிற்க வேண்டிய பாரிய பொறுப்பு பொலிஸ் திணைக்களம் சார்பில் தனக்கு உள்ளதென பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களை பாராட்டி பணப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
27 Mar, 2025 | 06:10 PM கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்தமை ஒரு அரசியல் நாடகம். ஆகவே, கிழக்கு மாகாண சபையை தவறவிடுவோமாக இருந்தால் முஸ்லிம் தலைவர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடைந்து தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு இருப்பே கேள்விக்குறியாகும் என்று முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார். கிழக்கு தமிழர் கூட்டணியின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழா கிரான் றெஜி மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒரு முக்க…
-
- 0 replies
- 213 views
-
-
தீவிரமடைந்து வரும் டெங்கு நோய்ப் பரவல். ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, கொழும்பு நகரப் பிரிவு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விசேட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறித்த பகுதிகளில் டெங்கு பரவக்கூடிய 37 இடங்களை அடையாளம் கண்டு, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒரு சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு களத் திட்டத்தை நடத்தவும் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய த…
-
- 1 reply
- 214 views
- 1 follower
-
-
இராமேஸ்வர மீனவர்கள் 11 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை! எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், நெடுந்தீவு கடப்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் ஆஜர் படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1426589
-
-
- 1 reply
- 229 views
-
-
உள்ளூராட்சி தேர்தல்; வாக்காளர் சார்பில் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை அறிவிப்பு! எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக வாக்காளர் ஒருவர் சார்பில் அதிகபட்சமாக வேட்பாளர் செலவு செய்யக் கூடிய தொகையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் ஒருவர் சார்பில் அதிகபட்சமாக வேட்பாளர் செலவு செய்யக் கூடிய தொகையாக 74 ரூபா முதல் 160 ரூபா என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்புக்கு தனித்தனியாக இந்தத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வாக்காளர் ஒருவரின் சார்பாக வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய மிகக் குறைந்த தொகை மன்னாரில் ஆகும். அங்கு அந்த தொகை 74 ரூபா என சுட்டிக்காட்டப்பட்டுள்ள. அ…
-
- 1 reply
- 183 views
-
-
அதானியுடனான எரிசக்தி திட்டம்; ஜனாதிபதியை குற்றம் சாட்டும் ரணில்! இந்திய கூட்டு நிறுவனமான அதானியுடன் மன்னாரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தவறியதற்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார். சனிக்கிழமை (22) நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலின் போது ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அதன் உரை இன்று (24) வெளியிடப்பட்டது. அந்த உரையில், தீவு நாட்டிற்கான பலன்களை அதிகரிக்க இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை இலங்கை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார். 2022 ஆம் ஆண்டு தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்…
-
- 1 reply
- 115 views
-
-
திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்! கரையோரப் புகையிரத மார்க்கத்தின் மொரட்டுவை, எகொடஉயன புகையிரத நிலையத்தில் பயணிகள் மேம்பாலம் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது. எவ்வாறாயினும், பாலம் இடிந்து விழும் போது பாலத்தின் மீது யாரும் நடமாடவில்லை எனவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், மொரட்டுவையில் இருந்து பாணந்துறை வரை செல்லும் புயிரத மார்க்கம் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு பாதை மாத்திரமே இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. தற்போது ரயில்வே துறை தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் ரயில் பாதையின் குறுக்கே இடிந்து விழுந்த பாலத்தின் குப்பைகளை அகற்றும் ப…
-
- 0 replies
- 166 views
-
-
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல். கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார் கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.70 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடர்ந்திருந்தார் இதேவேளை சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பெப்ரவரி மாதம் பிணை வழங்கியிருந்தது மேலும் இலங்கையி…
-
- 0 replies
- 115 views
-
-
காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு March 27, 2025 10:57 am காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16 ஆயிரத்து 966 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 ஆயிரத்து 742 பேர் படையினர் மற்றும் பொலிஸார் என பாதுகாப்பு தரப்பினராக காணாமல் போயுள்ளதாகவும் பதிவு…
-
- 1 reply
- 173 views
-
-
தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி. இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20.40 மில்லியன் கிலோகிராம் தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 39.77 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 1.30 மில்லியன் கிலோகிராம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதியில் இலங்கையிலிருந்து அதிகளவில் தேயிலை இறக்குமதி செய்த நாடாக ஈராக் பதிவாகியுள்ளது. அத்துடன் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், லிபியா 3ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக…
-
- 1 reply
- 127 views
-
-
6 Mar, 2025 | 03:16 PM பிரிட்டன் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு அரசாங்கங்களால் அமைப்புகளால் துன்புறுத்தப்படு;ம் முன்னாள் ஆயுதப்படையினரை தற்போதை அரசாங்கம் உறுதியாக பாதுகாக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் முன்னாள் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா முன்னாள் இராணுவதளபதி ஜகத் ஜெயசூரிய முன்னாள் கடற்ப…
-
-
- 2 replies
- 217 views
-
-
26 Mar, 2025 | 04:00 AM யாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரதேசபை தேர்தல் என்பது கிராம மட்டத்திலேயே உள்ள விடயங்களை கையாள்வதற்கு உரிய தேர்தலாகும் எனவே மக்கள் கிராமத்திலே செல்வாக்குரியவர்களுக்கு வாக்களிப்பார்கள் இது நிச்சயமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து அமோக வெ…
-
-
- 2 replies
- 217 views
-
-
25 Mar, 2025 | 01:46 PM யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கடும் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து, கூட்டத்தின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமற்போனதனால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.
-
-
- 10 replies
- 475 views
-