Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நேற்றைய நாள் தமிழர் வரலாற்றில் கறைபடிந்த நாள் – விக்கியின் புதிய கட்சி தொடர்பில் சிவமோகன் தமிழர் அரசியல் இருப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருக்குலைக்க சிங்களத்தால் களமிறக்கப்பட்ட தமிழினத் துரோகியை அடையாளம் காட்டிய நேற்றைய நாள் தமிழர் வரலாற்றில் கறைபடிந்த நாள் என வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சி தொடர்பாக வவுனியாவில் அவரது இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “சிங்களத்துடன் இரண்டறக் கலந்து, நீதி அரசர் பதவிபெற்று சிங்கள சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்களை சிறையில் தள்…

  2. மாவீரர் தினத்தின் எதிரொலி வட மாகாண பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து எதிர்வரும் நவம்பர் மாதம் வடக்கின் அனைத்து பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு சில தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதன்காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆயத்தமாக வைத்திருப்பதற்கு உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் வரை வட மாகாண பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தவகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 26ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் என்பதுடன், 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.c…

  3. விக்கியுடன் இணைய தயார் பச்சை கொடி காட்டினார் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தமிழ் மக்கள் கூட்­டனி என்ற புதிய அர­சியல் கட்சி ஒன்­றினை ஆரம்­பித்­துள்ள நிலையில் புதிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பது குறித்து ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­விக்கையில் தமிழ் மக்­க­ளுக்­கான மாற்றுத் தலைமைத் து­வமே இன்­றையகால­ கட்டத்தின் தேவை­ யாகும். அதற்கான சரி­யான களம் அமைந்­ துள்ள நிலையில் விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யுடன் இணைந்து பய­ணிக்க தயா­ராக உள்­ள­தாக குறிப்பிட்டுள்ளார். மாற்றுத் தலை­மை­யுடன் இணைந்து செயற்­பட ஈழ­மக்கள…

  4. நல்லாட்சியில் மனித நேயம் கேள்விக்குறியாகியுள்ளது - சுமந்திரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) நல்லாட்சி அரசாங்கத்தில் மனித நேயம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மிக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கம் ஏன் இழுத்தடிப்புகளை செய்து வருகின்றது எனவும் கேள்வி எழுப்பினார். அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 100 க்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மாற்று சட்டத்தை கொண்டுவருவதாக சர்வதேசத்திடம் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமைய அரசியல் கைதிகளும்…

  5. முன்னாள் பிரதிக் காவல் துறை மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்… October 25, 2018 ஐந்தாவது நாளாகவும் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய முன்னாள் பிரதிக் காவல் துறை மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றும் முன்னிலையாகிய சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கைது செய்யப்பட்டவரை இன்று இரவே கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தி விளக்க மறியலில் வைக்கப்பட்டள்ளதாக க…

  6. கைவிடப்பட்ட கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் October 25, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டு வந்து மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் பல மாதங்கள் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள மாவட்டமான கிளிநொச்சியில் ஏனைய மாவட்டங்கள் மற்றும் தென்னிலங்கையின் பல மாவட்டங்களிலிருந்து வரும் பேரூந்துகள் நிறுத்தி செல்கின்ற இடமாக காணப்படுகின்ற போதும் இதுவரை திருத்தி அமைத்து முடிக்கப்படவில்லை. கடந்த வருடம் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் மாவட்டத்திற்கான மத்திய பேரூந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறித்த பேரூது நிலையம் எந்த தி…

  7. மட்டக்களப்பு காணிகளை விடுவிப்பதற்கு காலவரையறை நிர்ணயிப்பு எம்.எஸ்.எம்.நூர்தீன், ஹஸ்பர் ஏ ஹலீம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகள் என்பனவற்றை விடுவிப்பதற்கு, காலவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றை, எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்குமிடையில் விடுவிப்பதென, ஜனாதிபதி விசேட செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான, இன்றைய (25) கூட்டத்திலேயே மேற்கண்டவாறு ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசேட செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தலைமையில் இன்…

    • 0 replies
    • 250 views
  8. தாக்குதல் முயற்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் பேரின்பராஜா சபேஷ், க.விஜயரெத்தினம், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு, செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மட்டக்களப்பு நிர்வாக உத்தியோகஸ்தர்களால் ஆர்ப்பாட்டமொன்று, இன்று (25) முன்னெடுக்கப்பட்டது. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் மரம் ஒன்றை நேற்று முன்தினம் வெட்டுவது தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், கடமையில் ஈடுபட்டிருந்த ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். விகாராதிபதியின் ச…

    • 0 replies
    • 215 views
  9. ’ராம், நகுலனுக்கு கோட்டாபய பணம் கொடுத்தார்’ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ராம் மற்றும் நகுலன் ஆகியோருக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் சம்பளம் வழங்கப்பட்டதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவிய போது, புலிகள் இயக்கத் தலைவர்கள், கிழக்கு மாகாண மக்களின் வாக்குகளைத் தனக்கு சேகரித்துக் கொடுப்பதாகக் கூறியிருந்த நிலையிலேயே இந்தப் பணம் வழங்கப்படுவதாக பதிலளித்தாரென்றும், அமைச்சர் சம்பிக்க கூறினார். கொலன்னாவயில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வர்த்தகத் தொகுதிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ…

    • 0 replies
    • 596 views
  10. பதவிய பகுதியில் இராணுவ மேஜர் ஒருவரும் இராணுவ சிப்பாய்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சியம்பலாண்டுவ பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் T56 ரக துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு துப்பாக்கி ரவைகளை விநியோகித்த சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மேஜர் தவிர்ந்த இருவரும் கோப்ரல் தரத்திலுள்ள சிப்பாய்கள் என தெரியவந்துள்ளது. பதவிய, பராக்ரமபுர, கம்பிலிவெவ இராணுவ முகாம்களுடன் இணைந்த வகையில் சேவை புரிபவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த மேஜர் தங்கியுள்ள வீட்டின் பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகளுடன் 04 பெட்டிகளை காவற்துறையினர் மீட்டுள…

  11. October 25, 2018 Add Comment Share This! அடுத்த வருடம் முதல் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீண்டும் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை காங்கேசன்துறை பிரதேசத்தில் 300 ஏக்கரில் தொழில்பேட்டையும் முல்லைத்தீவில் ஓட்டுத்தொழிற்சாலையும் மட்டக்களப்பின் வாழைச்சேனையில் கடதாசித் தொழிற்சாலையும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது. http://globaltamilnews.com/

  12. முடிவுக்கு வந்தது வட மாகாண சபையின் பதவிக்காலம் – பிரித்தானிய தூதுவர் கவலை வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மாகாண சபை ஆளுனர் றெஜினோல்ட் குரேயின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. கடந்த 2013 செப்ரெம்பர் 25ஆம் நாள், வடக்கு மாகாண சபையின் முதல் அமர்வு இடம்பெற்றது.இந்த நிலையி், சபையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம், நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. அதேவேளை, மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படாமை குறித்து சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் கவலை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவின் ஒன்பது மாகாணசபைகளில் ஆறாவது மாகாண சபையின் பதவிக்காலமும், புதிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு…

    • 1 reply
    • 665 views
  13. இராணுவ அதிகாரியை திருப்பி அனுப்பும் ஐ.நாவின் முடிவு – சிறிலங்கா அதிபர் கவலை மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய சிறிலங்கா இராணுவ கட்டளை அதிகாரியான லெப்.கேணல் கலன அமுனுபுரவைத் திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவு குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இந்தக் கவலையை வெளியிட்டுள்ளார். அத்துடன், இந்த விடயத்தில் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பங்கு குறித்து கவலை எழுப்ப வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, விசாரிக்க ஐ.நா பொதுச்செயலரால் நியமிக்கப்பட்ட, நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந…

    • 0 replies
    • 298 views
  14. இரு தமிழர்களை கடத்திய சம்பூர் கடற்படைத் தள துணைத் தளபதிக்கு விளக்கமறியல் கொழும்பில் இரண்டு தமிழர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய குற்றச்சாட்டில், சம்பூரில் உள்ள சிறிலங்கா கடற்படையின் துணை கட்டளை அதிகாரி லெப்.கொமாண்டர் சம்பத் தயானந்தவை, விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 11ம் நாள் பக்கிலிசாமி லோகநாதன் மற்றும் ரத்தினசாமி ஆகியோர் வாகனம் ஒன்றுடன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். கொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுகாணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இவர்கள் பணம் செய்த வாகனம் வெலிசற கடற்படைத் தளத்தில் பாகங்களாக இருந்த்தை கண்டுபிடித்தனர். …

    • 0 replies
    • 380 views
  15. ஜனாதிபதி கொலை சதித் திட்டத்தின் பின்னணியில் சரத் பொன்சேகா – நாமல் குமார ஜனாதிபதி கொலை சதித் திட்டத்தின் பின்னணியில் அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா காணப்படுவதாக நாமல் குமார குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எதிர்வரும் நாட்களில் நடைபெறும் விசாரணைகளின் போது நாமல் குமாரவின் உண்மை முகம் தெரியவரும் என சரத் பொன்சேகா கூறியிருந்தார். இதன் மூலம் வாழைக்குலை திருடனுக்கு முன்னதாக வாழைக்குலையே காட்டிக் கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு நான் ஆர…

  16. புல்லுமலை தொழிற்சாலைமுற்றாகக் கைவிடப்பட்டது Editorial / 2018 ஒக்டோபர் 23 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:52 Comments - 0 பேரின்பராஜா சபேஷ், ஆர்.ஜெயஸ்ரீராம் மட்டக்களப்பு, பெரிய புல்லுமலையில் நிர்மாணிக்கப்பட்டுவந்த, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணிகளை, முற்றாகக் கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. “தொழிற்சாலை அமைக்கப்படுவதை, குறித்த பிரதேச மக்கள் எதிர்த்தனர். அதேபோன்று, தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தொழிற்சாலை அமைப்பதில்லை என எமது நிறுவனம் தீர்மானித்துள்ளது” என, …

  17. விக்கியை விட்டு விலக நினைக்கின்றதா தமிழ்தேசிய மக்கள் முன்னணி? வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ”தமிழ் மக்கள் கூட்டணி” என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றிணை நேற்று(புதன்கிழமை) ஆரம்பித்துள்ள நிலையில், புதிய கட்சி அறிவிப்புக்கான கூட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாமல் தவிா்த்திருக்கின்றது. வட மகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் முரணப்பாடுகள் வலுத்த நிலையில் அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனியாக கட்சி ஒன்றை உருவாக்கினால் அவருடைய தலமையில் இணைந்து பயணிக்க தயார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது. இதற்கிடையில் முதலமைச்சருடைய கட்சியில் ஈ.பி.ஆர்.எல்…

  18. வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம் வாகரை கண்டலடி மாவீரர்துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணிகள் நேற்று துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு குழுவினரினால்முன்னெடுக்கப்பட்டுள்ளன. கார்த்திகை 27 மாவீரர் தினநிகழ்விற்கான ஏற்பாடுகள் வட கிழக்கு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கிழக்குமாகாணத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களான மட்டக்களப்பு தரவை, மாவடிமுன்மாரி,தாண்டியடி, வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லங்கள், அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம்திருமலை ஆலங்குளம், செம்பிமலை மாவீரர் துயிலுமில்லம் என 7 துயலுமில்லங்களில்சிரமதானப்பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் வாகரை கண்டலடி மாவீரர்துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டத…

  19. அரசாங்கத்தின் அடிவருடிகளாக தமிழ் அரசியல்வாதிகள் ஈடுபட்டுவருவது வேதனைக்குரியது - விக்கினேஷ்வரன் ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகளாக என்றென்றும் இருக்க விரும்புகின்ற சிலரின் அப்பட்டமான கீழ்த்தரமான நடவடிக்கைகளாலேயே சிங்கள ஆட்சியாளர்கள் எம்மீது குதிரை விடப் பார்க்கின்றார்கள் என வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்தார். இதேவேளை, தமிழ் அரசியல்வாதிகளும் அலுவலர்களும் சுயமாகச் சிந்திக்கத் திராணியற்றவர்களாக அரசாங்கத்தின் அடிவருடிகளாக அவர்களைத் திருப்திப்படுத்துகின்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனைக்குரியது எனவும் அவர் தெரிவித்தார். காரைநகர் பிரதேச சபையின் கசூரினா சுற்றுலா மையத்தில் முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்த…

  20. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம், ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாக செல்கின்றது. கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலைமுதல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், பின்னர் பேரணியாக செல்கிறது. இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதோடு, தண்ணீர் தாக்குதல் நடத்தும் வாகனங்களும் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1000 ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் பழைய மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று 24-10-2018 காலை பத்து மணிக்கு இப் போராட்டம் முன்னெடுக்கப்…

  21. கூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பித்தேன்: சி.வி. கூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று (புதன்கிழமை) தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராகவே கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால் என்னை ஒரு பொம்மையாக வைத்து அரசியலை நடத்துவதற்கு அதன் தலைவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அதற்கு என்னால் இடமளிக்கமுடியவில்லை. எனக்கும் தமிழ்த்…

  22. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்… October 23, 2018 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் “ஞானலிங்கம்” – ஸ்ரீ ஞானலிங்கேஸ்வரர் ஸ்தாபிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டப வாயிலில் அமைந்துள்ள பழமையான மேடையில் குறித்த சிவலிங்கம் பிரதிஸ்டை செய்ய்யப்பட்டுள்ளது. 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யும் விம்பஸ்தானம் நிகழ்வு நடைபெற்று; அன்றைய தினமே மாலை எண்ணெய்காப்பு சாத்தப்பட்டது. தொடர்சியாக 22.10.2018 திங்கட்கிழமை அன்று ஸ்ரீ ஞானலிங்கேஸ்வரருக்கான மகா கும்பாபிசேக நிகழ்வி சிறப்புற நடைபெற்றது. மகா கும்பாபிசேக நிகழ்வுகள் சாகித்ய சிரோன்மணி யாழ் நயினை சிவஸ்ரீ. வை.மு.ப. முத்துக்கு…

    • 6 replies
    • 1.2k views
  23. அடாவடித்தனத்தில் ஈடுபடும் தேரரை மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்: அரியநேத்திரன் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு இராணுவத் தளபதி போன்று செயல்படும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரரை இடமாற்றம் செய்யவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மயிலம்பாவெளியில் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தை அச்சுறுத்தி அடாவடி செய்த அம்பிட்டிய சுமணரட்ண தேரர் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மயிலம்பாவெளியில் புத்த துறவியின் காட்டு மிராண்டித்தன செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த புத்த துறவி பௌத்த மதத்திற்கு அவமானச்சின்ன…

  24. வடக்கு, கிழக்கின் சலுகைகளை இந்த அரசாங்கம் பறித்துள்ளது – மஹிந்த பல வருடங்களின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்த போதும், இந்த அரசாங்கம் அதன் சலுகைகளை பறித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் 25 வருடங்களின் பின்னர் அங்கு தேர்தலை நடத்தியிருந்த போதும் கூட தற்போது அரசாங்கம் தேர்தலுக்கு முகங்கொடுக்க பயப்படுகின்றது என கூறினார். தங்காலையில் நடைபெற்ற மத நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆகியன எதிர்கால தேர்தலில் இணைந்த…

  25. தமிழ்த்தலைமைகளின் அபிலாஷைகளை பேரினவாத சக்திகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை: குருபரன் தமிழ்த்தலைமைகள் தங்களுடைய அரசியல் அபிலாஷைகளைக் குறைத்துக் கொண்டாலும் கூட ,தென்னிலங்கை பேரினவாத சக்திகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என யாழ்.பல்கலைக்கழக சட்டபீடத் தலைவர் கு.குருபரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த தேர்தல்களில் தமிழர்களின் வாக்களிப்பு முறையானது தமிழ் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளுக்கும், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை நிகழ்ச்சி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.