ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143294 topics in this forum
-
மலையக மக்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் யாழில் போராட்டம் October 19, 2018 மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமும் கைகோர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் அறவழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டம் நாளை மறுதினம் (21.10.2018) காலை 9.30 மணிக்கு யாழ் பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெறவுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்காய் வடக்கில் இருந்து உரிமைக் குரல் கொடுக்கும் நோக்கில் சமூக வலைத்தள நண்பர்களினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/99952/
-
- 0 replies
- 347 views
-
-
மன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு…. October 19, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 87 ஏக்கர்களை, பொது மக்களின் காணிகள் பாவனைக்காக விடுவிக்க கடந்த புதன் கிழமை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந் நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை புதைகுழி பகுதியின் அருகில் அமைந்திருந்த இராணுவத்தின் வசம் காணப்பட்ட சுமார் 5 ஏக்கர் காணி பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி முருங்கன் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இரானுவ முகாம் காணப…
-
- 0 replies
- 353 views
-
-
யாழில் “தமிழர் நாகரிக மையம்”எனும் அமைப்பு உருவாக்கப்படவுள்ளது தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வியலில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் கலாசாரங்கள் என்பன அருகி வருகின்றன. தமிழர்களின் புராதன அடையாளங்களை, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்கள் அழித்தனர். இவர்களுக்கு இணையாக, இலங்கை அரசாங்கமும், தமிழர்களின் புராதன அடையாளங்களை அன்று தொட்டு இன்று வரை அழித்து வருகிறது. எனவே, தமது எதிர்காலச் சந்ததியினருக்கு, இவற்றை எடுத்துக் கூறும் வகையில் “மரபுரிமை மையம்” மற்றும் “தமிழர் நாகரிக மையம்” எனும் தொனிப்பொருள்களிலான கருத்திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். இந்தக் கருத்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு, எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவு…
-
- 1 reply
- 537 views
-
-
யாழ்ப்பாணம் ESOFT இல் பட்ட மேற்படிப்பு கற்கைகளை தொடர வாய்ப்பு Editorial / 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, பி.ப. 01:15 Comments - 0 கடந்த எட்டு வருட காலமாக யாழ்ப்பாண பிராந்தியத்தில் இயங்கி வரும் ESOFT, சில தினங்களுக்கு முன்னர் தனது பட்ட மேற்படிப்பு கற்கைகளை தொடர்வதற்கான பட்டப் படிப்பு பிரிவை திறந்து வைத்திருந்தது. இந்நிகழ்வில் ESOFT மெட்ரோ கம்பஸ் குழும முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி. தயான் ராஜபக்ஷ, நிஷான் செம்புசுட்டிஆரச்சி (பிரதம நிறைவேற்று அதிகாரி - ESOFT மெட்ரோ கம்பஸ்), ஹர்ஷ ரவீந்திர (உதவி முகாமையாளர் - கிளை செயற்பாடுகள் - ESOFT மெட்ரோ கம்பஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர். லண்டன் மெட்ரொபொலிடன் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்து ESOFT மெட்ரோ கம்பஸினால் 2014 …
-
- 0 replies
- 476 views
-
-
யாழில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு கடந்த செப்ரெம்பர் மாதம், நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.இந்த நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்தவர்களில் ஒருவரான, முன்னாள் போராளி, கந்தையா பிரபாகரன் என்பவரையே பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது.எனினும், இந்த அழைப்பாணையில் காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை. சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் உள்ள இவரது வீட்டுக்கு நேற்றுச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வரும் 29ஆம் நாள், விசாரணைக்கு வருமாறு அழைப்பாணையை கொடுத்துள்ளனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழில்-திலீபனின்-நினைவேந/
-
- 0 replies
- 303 views
-
-
அமைச்சரவையிலிருந்து ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய ஐ.தே.க அமைச்சர் யார்.? கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் சர்ச்சை ஏற்பட்டதாக ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய அமைச்சர் யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீல. சு. கட்சி தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அமைச்சரவையில் பிரதமர் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்ததாக ஊடகங்கள் பரவலாக செய்திகளை வெளியிட்டிருந்தன. இதில் எந்த உண்மையும் கிடையாது.…
-
- 0 replies
- 829 views
-
-
தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் கேசவன் பஹ்ரைன் பயணம்! வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவருமான ஸ்ரீகரன் கேசவன், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின் முதலாவது சர்வதேச இளைஞர் மாநாட்டிற்கு பங்குகொள்வதற்காக பஹ்ரைன் நாட்டிற்கு நாளை பயணமாகிறார். குறித்த மாநாடு 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை பஹ்ரைன் தலைநகரான மனாமாவில் நடைபெற இருக்கின்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புலமைப்பரிசில் மூலம் தெரிவுசெய்யப்பட்டு இலங்கை நாட்டை பிரதிநிதித்துப்படுத்தி மாநாட்டில் பங்குகொள்ளும் இளைஞர் யுவதிகளில் இவர் ஒருவரே தமிழ் இளைஞர் ஆவார். குறித்த இளைஞர் வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக இறுத…
-
- 0 replies
- 906 views
-
-
கோத்தபாய ராஜபக்ஸ விஷேட மேல் நீதிமன்றத்தில்… October 19, 2018 கோத்தபாய ராஜபக்ஸ விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/99847/
-
- 0 replies
- 274 views
-
-
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரசவேலை? விபரம் சேகரிப்பு…. October 19, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச வேலைகளுக்குள் உள்ளீர்க்கும் நோக்குடன் அவர்களின் பெயர் விபரங்கள் பிரதேச செயலகங்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு அரச வேலை வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைவாகவே விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஜே. பிரமிளஸ் கொஸ்தா கடந்த 08 ஆம் திகதி கடிதமொன்றை யாழ்மாவட்ட செயலருக்கு அனுப்பி வைத்திருந்தார். அதன் பிரகாரம் மாவட்ட செயலரால் பிரதேச செயலர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. …
-
- 0 replies
- 330 views
-
-
சிறைக் கைதிகளுக்கு முன் அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றச்சாட்டு! சிறைச்சாலையில் இருந்த அனைத்து சிறைக் கைதிகளுக்கு முன்பும் தன்னுடன் சிறைச்சாலையில் இருந்த ஏனைய இரண்டு அதிகாரிகளையும் நிர்வாணப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 3 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேற்கண்டவாறு கூறினார். சிறையிலிருந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகவும், அது அரசா…
-
- 0 replies
- 414 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை! வழக்கு தாக்கல் செய்யப்படாதுள்ள அரசியல் கைதிகள் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசியல் கைதிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் கைது செய்யப்பட்டவர்களில் தண்டனைகள் வழங்கப்பட்ட கைதிகள் தவிர்ந்து, வழக்குகள் பதிவு செய்யப்படாத கைதிகள் 102 பேர் தொடர்பில்…
-
- 0 replies
- 241 views
-
-
வன்னி மாவட்டத்தில் புனர்வாழ்வுக் கடனுக்கான விண்ணப்பம் விநியோகம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்படும் சொத்தழிவு விண்ணப்பங்கள், பாதிக்கப்பட்ட வணக்கஸ்தலங்களை புனரமைப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் புனர்வாழ்வுக் கடன் வழங்கும் விண்ணப்பங்கள் ஆகியன புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகார சபையினால் தற்பொழுது வன்னி மாவட்டத்தில் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.' இப் படிவங்களை மாவட்டச் செயலகங்களில் செயற்படும் புனர்வாழ்வு அதிகாரசபை உத்தியோகத்தர்களிடமும் எனது மாவட்ட அலுவலகங்களிலும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு தான் பாதிக்கப்பட்ட மக்களும் மேற்படி நிலையங்களிலிருந்து இப்படிவங்களை இல…
-
- 0 replies
- 344 views
-
-
2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில் (எம்.நியூட்டன்) யாழ். மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் கையூட்டு வாங்கினார் என்ற குற்றச்சாட்டை குறித்த சங்கத்தின் புதிய தலைவர் முன்வத்ததையடுத்தே இந்த மோதல் சம்வம் ஏற்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற் சங்கத்தின் தற்போதைய தலைவர் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த மூவரும் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது தரப்பில் மூவர் என 8 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் …
-
- 0 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு கரைத்துரைப்பற்றில் சமுர்த்தி நிதியை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்திய அலுவலர்கள்: October 18, 2018 போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டின் ஊடாக சமூக மேம்பாட்டை கருத்தில் கொண்டு சமுர்த்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதிலும் இதன் மூலம் ஏழை எளிய மக்கள் ஏமாற்றப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன. சமுர்த்தி வங்கிக்கும் வீட்டுக்கும் தினமும் அலையும் ஏழை மக்கள் இதனாலேயே பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஏழை மக்களின் சேமிப்பு நிதி துஷ்பிரயோகத்திற்கும் மோசடிக்கும் உள்ளாக்கும் சம்பவங்கள் சிலவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளில் நிதி ம…
-
- 0 replies
- 221 views
-
-
மன்னார் தள்ளாடி விமான ஓடுபாதைக்கு அருகில் வெடி பொருட்கள் மீட்பு October 18, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் தள்ளாடி விமான ஓடுபாதை அமைந்துள்ள பகுதியில் காணப்பட்டுள்ள பற்றைக்குள் இருந்து இன்று வியாழக்கிழமை(18) மாலை ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உள்ள பற்றைக்குள் ஒரு தொகுதி வெடி பொருட்கள் காவல்துறையினர் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து குறித்த வெடி பொருட்களை மீட்பதற்கு மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்று மாலை விசேட அதிரடிப்படையினர், காவல்துறையினர்; மற்றும் விமானப்படை வீரர்கள் இணைந்து குறித்த வெடி பொருட்களை மீட்டுள்ளனர். இதன் ப…
-
- 0 replies
- 409 views
-
-
மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு, சிரமதானப் பணி முன்னாள் போராளிகளால் நேற்று முன்னெடுக்கப்பட்டது. மாவடி முன்மாரி, பனிச்சையடி முன்மாரி ஆகிய கிராமங்களில் உள்ள மாவீரர் குடும்பங்களின் பெற்றோர்கள், தேசத்தின் வேர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் இணைந்து சிரமதானத்தில் ஈடுபட்டனர். https://newuthayan.com/story/15/மாவீரர்-நாளுக்கு-தயார்படுத்தப்படும்-துயிலுமில்லங்கள்.html
-
- 0 replies
- 335 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பிறகு இன்று (10) புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது. சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவொன்றை மையப்படுத்தி இரத்தினபுரியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் வாழ்த்துச் செய்தியொன்று பேஸ்புக்கில் பதியப்பட்டுள்ளது. தினேஸ் குமார் என்ற இளைஞனே குறித்த சர்ச்சையான பதிவை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பதிவை லைக் செய்ததாகவே விதுசன் என்ற இளைஞனும்…
-
- 0 replies
- 336 views
-
-
விடுதலைப் புலிகளின் போர்க் கப்பலைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யோர்தான் நாட்டுக்குச் சொந்தமான போர்க் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடற்பரப்பான முல்லைத்தீவில் கரை ஒதுக்கியது. பின்னர் இந்த கப்பல் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போது இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த கப்பலை பார்வையிடுவதற்காக அதிகளவான சுற்றுலாப் பணிகள் முல்லைத்தீவுநோக்கி வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் போர்க்கப்பலை பொது மக்கள் பார்வையிடுவதற்கு தற்போது இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/story/16/விட…
-
- 6 replies
- 939 views
-
-
வீர துட்டகைமுனு இயக்கம் மேர்வின் சில்வாவின் தலைமையில் உதயம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வீர துட்டகைமுனு இயக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இதனை அறிவித்தார். வடக்கிலும், கிழக்கிலும் இனவாதம் உருவாவதை அனுமதிக்க முடியாது. கடந்த மன்னர்களது ஆட்சியின் போது இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகர் ஆகிய சகலரும் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர். சிங்களவர்களுக்கு இந்நாட்டில் இருந்த உரிமைகள் இல்லாமல் போவதை அனுமதிக்க முடியாது. அதனை மீளவும் பெற்றெடுப்பது இந்த அமைப்பின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பி…
-
- 1 reply
- 375 views
-
-
யாழில் ஆலயங்கள் , வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது… October 17, 2018 யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்களை நேற்று மாலை மடக்கி பிடித்த இளைஞர்கள், நையபுடைத்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர். குறிப்பாக திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடுகளில் கடந்த இரு நாட்களில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. குறித்த கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர்களின் தெளிவான அடையாளங்களுடன் கூடிய சீ.சீ.ரி.வி ஆதாரங்கள் மீட்கப்பட்டிருந்தன. இதனடிப்படையில் இந்தக் கொள்ளையர்களை பிடிப்பதற்காக இளைஞர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான மு…
-
- 1 reply
- 516 views
-
-
4 வருடங்களின் பின் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (17-10-2018) பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் நான்கு வருடங்களுக்கு பின்னர் நேற்று இடம்பெற்றதுடன், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அமைச்சுடன் தொடர்பிலான விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. எதிர்க்கட்சி …
-
- 0 replies
- 276 views
-
-
தமிழர் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் – ஜனாதிபதி சந்திப்பு தமிழர் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளும் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை மற்றும் அப்பிரதேச மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. தமிழர் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். http://www.dailyceylon.com/1…
-
- 0 replies
- 198 views
-
-
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து- ஒருவர் உயிரிழப்பு- மற்றவரின் கை துண்டானது!! பதிவேற்றிய காலம்: Oct 18, 2018 கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கிச் சென்ற கூலர் வாகனமும், கெக்கிராவையில் இருந்து மல்லாவி நோக்கிச் சென்ற கதிர்அறுக்கும் இயந்திரத்தை ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது. விபத்தில் யாழ்பாணம் வடமாராட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், இன்னொருவரின் கை துண்டானது. மற்றொருவர் படுகாயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://newuth…
-
- 0 replies
- 229 views
-
-
திருக்கேதீஸ்வரம் மாந்தையில் இராணுவ வசம் இருந்த 05 ஏக்கர் காணி கையளிப்பு.. October 18, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் சுமார் 87 ஏக்கர் காணிகளை விடுவிக்க நேற்று செவ்வாய்க்கிழமை (17.10.18) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட 5 ஏக்கர் காணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் பிரதேசச் செயலாளரிம் கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச்செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் வசம் இருந்த குறித்த 5 ஏக்கர் காணி சுமார் 28 வருடங்களின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை (17.10.18) உரி…
-
- 0 replies
- 456 views
-
-
இரண்டு அரச வங்கிகள், இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகள் கலைப்பு! இரண்டு அரச வங்கிகள் மற்றும் முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகள் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவை கலைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய இலங்கை வங்கி, மக்கள் வங்கி, மற்றும் இலங்கை முதலீட்டு சபை என்பவற்றின் பணிப்பாளர் சபைகளைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவிட்டிருந்ததாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. http://athavannews.c…
-
- 0 replies
- 352 views
-