Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில், நீதவான் தர்சினி அண்ணாத்துரை முன்னிலையில் இந்த வழக்கு இன்று(20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது. பிரதிவாதிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்டோர் மன்றில் இன்று ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு – செங்கலடிக்கு ஜனாதிபதி வருகை தந்த சந்தர்ப்பத்தில், மயிலத்தமடு மாதவ…

  2. 30 APR, 2025 | 05:13 PM (எம்.நியூட்டன்) மக்களுக்கு உரிய தரமான சிகிச்சை வழங்கும் சேவை நிலையமாக மாற்றுவதற்கான நிர்வாக சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறும் வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திதருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தெல்லிப்பளை கிளை கோரிக்கை முன்வைத்து தொழில் சங்க நடவடிக்கைக்கு தயாரி வருகிறது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்த படியாக மக்களிற்கான மருத்துவ சேவைகளை வழங்குவதில் முக்கியமான வைத்தியசாலையாகும். கடந்த சில ஆண்டுகளில் இவ் வைத்திய சாலையில் கடமையாற்றிய மருத்துவ அத்தியட்சகர்கள், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்க…

  3. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்! யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் தலைமையில் நேற்று நடைபெற்றது. கலந்துரையாடலில் நல்லூர் பிரதேச சபையின் பிரதிநிதிகள், சட்டமருத்துவ அதிகாரிகள், பொலிஸார், என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் முறையிட்ட தரப்புகள் கலந்துகொண்டனர். புதைகுழியை அகழ்வதற்கான நிதி மத்திய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், எத…

  4. சிறுவர்களின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் ! திடீரென உயிரிழக்கும் ஐந்து வயதுக்குக் குறைவான சிறுவர்களின் மரணத்துக்கு காரணம் கண்டறியப்படவில்லை என்றால் குறித்த சிறுவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்போது சுகாதார அமைச்சின் இந்தத் தீர்மானத்துக்கு எதிரான ஆட்சேபனை எதுவும் இருக்குமாயின் அந்தக் குழுவில் சமர்ப்பிக்க முடியுமென்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். அத்துடன் ”தாய், சேய் சுகாதாரம் தொடர்பில் ஆசிய நாடுகளில் உயர்தரத்தை கொண்ட நாடாக இலங்கை விளங்குவதாகவும்…

  5. கனகராசா சரவணன் மட்டு. கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்க 6 ஆயிரம் ரூபா இலஞ்சமாக வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (29) மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் கோரியபோது அவர் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை கோரியுள்ளார். இதனையடுத்து குறித்த கடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று பகல் 12 மணியளவில் கரடியனாறு பகுதி வீதியில் …

  6. “இந்திய மீனவர்களை தடுப்போம்” "இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன." என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். நெடுந்தீவு பகுதிக்கு செவ்வாய்க்கிழமை (29) அன்று பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் தமது வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் மீனவ…

  7. இந்திய அரசின் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரல் adminApril 29, 2025 இந்திய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக இலங்கையர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் சித்த, ஆயுர்வேத, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் இளமானி, முதுமாணி மற்றும் கலாநிதி கற்கை நெறிகளைத் தொடர முடியும். ஒவ்வொரு கற்கை நெறிகளுக்குமான தகைமைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பான விபரங்கள் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. சித்த, ஆயுர்வேத, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் இளமாணிக் கற்கைநெறி ஒன்றுக்காக விண்ணப்பிக்க விரும்புபவர…

  8. கொழும்பில் நாளை 15 மே தின பேரணிகள்! கொழும்பில் நாளை (மே 1) குறைந்தது 15 மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர். அதன்படி, சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் மே தின பேரணிகளுக்கு பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்துத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் மே தின பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவு நிகழ்வுகளுக்கு பொருத்தமான பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொ…

  9. இலங்கைக்கான பிணை எடுப்புத் திட்டத்தை திருத்தத் தயார்: IMF ஏற்றுமதிகள் மீதான அதிகரித்த வரிகளை அமெரிக்கா மீண்டும் விதித்தால், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு வழங்க வேண்டிய 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்புக் கடனின் விதிமுறைகளை திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) நேற்று (29) முன்வந்தது. 2022 ஆம் ஆண்டில் பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள போராடி வரும் தெற்காசிய தீவு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் மற்றும் இறப்பர் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இந்த மாதம் 44 சதவீத வரியை விதித்தது. அதிகரித்த இந்த கட்டணங்கள் வொஷிங்டனால் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கை அதிகாரிகள் அவற்றை நீக்க பேச்சுவார்த்தை…

  10. உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சி மரியெல்லா, நேற்று (28) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) வந்தடைந்தது. மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியாவைச் சேர்ந்த எம்எஸ்சி மரியெல்லா கப்பல் 399.90 மீட்டர் நீளமும் 61.30 மீட்டர் அகலமும் கொண்டது. 240,737 தொன் எடையுள்ள கொள்கலன்களை கையாளக்கூடிய இந்த பெரிய கப்பல் 2023 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கப்பல் கிழக்கு கொள்கலன் முனையத்தில் 1,600 கொள்கலன்களை ஏற்றி இறக்கும் என்று இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிர்வாக பணிப்பாளர் கனக ஹேமசந்திர தெரிவித்தார். மேலும், எம்.எஸ்.சி மரியெல்லாவின் வருகை இலங்கையின் கடல்சார் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல் என்றும், இது சர்வதேச கடல்சார் துறையில் இலங்கையின் பெயர…

  11. ஐ.நா. வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மே முதல் வாரத்தில் வியட்நாமுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா. வெசாக் தின நிகழ்வுகள் மே 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை மியன்மாரின் ஹோ சி மின் நகரில் நடைபெறுகின்றது. 85 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 2 ஆயிரத்து 700 விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, கம்போடியா, நேபாளம், லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே ஐ.நா. வெசாக் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வெசாக் நிகழ்வில் பங்கேற்க வெளிநாடு பறக்கும் ஜனாதிபதி அனுர - ஜே.வி…

    • 1 reply
    • 280 views
  12. Published By: DIGITAL DESK 2 29 APR, 2025 | 04:27 PM 2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை ஒதுக்கிய திட்டங்களுக்கு உரிய காலப்பகுதிக்குள் செலவு செய்து முடிக்கவேண்டியது பொறுப்பு எனக் குறிப்பிட்டார். திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தி முடிக்காமல் அதற்கு சாட்டுப்போக்குச் சொல்லவேண்டாம் எனவும் நா.வேதநாயகன் மேலும் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (29) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த வ…

  13. முன்னாள் ஜனாதிபதி ரணில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை! பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார். கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி மூலம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு இன்று (28) முன்னிலையாகப் போவதாக அறிவித்தார். முன்னர் ஒதுக்கப்பட்ட திகதியில் அவர் முன்னிலையாகப் போவதில்லை என்று அறிவித்தார். நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறித்து ரணில் விக்கிரமசிங்க அளித்த சிறப்பு…

  14. பலாலி வீதி திறப்பு – காங்கேசன்துறை வரை சிற்றூர்திகள் சேவையில் adminApril 27, 2025 எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து 764 வழித்தட சிற்றூர்திகள் (மினிபஸ்கள்) யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 769 வழித்தட சிற்றூர்திகளும், யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும். கடந்த 10ஆம் திகதியன்று பலாலி வீதி கட்டுப்பாடுகளுடன் முழுமையாக திறக்கப்பட்ட நிலையில் குறித்த இரு வழித்தட சிற்றூர்திகளும் சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/214749/

  15. 28 APR, 2025 | 04:54 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது கிடைத்து வரும் மழை மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழையாகும். அதனால் நண்பகல் வரை கடுமையான வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலவும். பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் மழை கிடைக்கும். இது மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழை என்பதனால் இது இடி மின்னல் நிகழ்வுகளோடு கூடிய மழையாகவே கிடைக்கும். அதிலும் இந்த இடி மின்னல் நிகழ்வுகளின் போதான மின்னேற்றம் முகில்களுக்கும் புவி மேற்பரப்பிற்குமிடையில் …

  16. 28 APR, 2025 | 04:57 PM கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் கடும் இடி, மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுக்ள காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று திங்கட்கிழமை (28) இரவு 11.00 மணி வரை வானிலை முன்னறிவிப்பு அமலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசக்கூடும், மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திறந்த வெளியில் அல்லது மரங்களுக்கு கீழ் நிற்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் பாதுகாப்பான கட்…

  17. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு “உள்ளக அலுவல்கள் அலகு” எனும் பிரிவானது நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது. இவ் அலகினை திறந்துவைத்து பின் மாவட்ட செயலர் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் செயற்பாடுகளை தடுப்பதாகவும் அலுவலக செயற்பாடுகள், வெளிப்படுத்தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைய, மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாக முழுமையான விபரங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள உதவும். குறிப்பாக அலுவலக நடைமுறைகள் தொடர்ப…

  18. 28 Apr, 2025 | 04:28 PM கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்ட பெண் தனது இரண்டாவது கணவர், மகள் மற்றும் மருமகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்த பெண் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் 25 வயதுடைய இளைஞனுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரி…

  19. Published By: DIGITAL DESK 2 28 APR, 2025 | 03:56 PM படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான ஊடகவியலாளர்களான தராகி சிவராமின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், செல்வராசா ரஜிவர்மனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் திங்கட்கிழமை (28) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு - பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட பின்னர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அருகில் அவரது சடலம் மீட்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த …

  20. கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று (28) பிற்பகல் ஒரு மடிக்கணினியால் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டது. வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்நிலை ஏற்பட்டது. அதன்படி, விசேட அதிரடிப்படை, விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் கறுவாத்தோட்டம் பொலிஸார் உள்ளிட்ட குழுவை உடனடியாக தூதரகத்திற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளைத் தொடர்ந்து, கறுவாத்தோட்டம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/317351

  21. 1.15 மில்லியனை விஞ்சிய பொது, அரை அரசு துறை வேலைவாய்ப்பு! இலங்கையில் உள்ள அனைத்து பொது மற்றும் அரை அரசு துறை நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை 1,156,018 ஐ கடந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் உள்ள அனைத்து பொது மற்றும் அரை அரசு துறை நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டுக்குள் 1,156,018 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 46,543 அதிகமாகும். அவர்களில், வேலை செய்யும் ஆண்களின் விகிதம் 50.5% ஆகும். இது பெண்களை விட (49.5%) சற்று அதிகம். பெரும்பாலான ஊழியர்கள் மத்திய அரசில் உள்ளனர், மொத்த பணியாளர்களில் 59.5% பேர் இதில் அடங்குவர். இர…

  22. 26 APR, 2025 | 08:00 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை (26) வெளியிடப்பட்டன. 2024ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் கடந்த நவம்பர் முதல் டிசம்பர் வரை இடம்பெற்றது. க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 333,183 மாணவர்கள் தோற்றினர். அவர்களில் 253,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாவர். 2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk , www.results.exams.gov.lk ஆகிய இணைய தளங்களில் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/213032

  23. சிறுமியை துஸ்பிரயோகம் -இரு பெண்கள் உட்பட மூவர் கைது adminApril 27, 2025 யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அயல் வீட்டு பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணொருவரும் இணைந்து சிறுமியை மிரட்டி பிற ஆண்களுடன் உறவு கொள்ள வைத்து , பணம் சம்பாத்தித்து வந்துள்ளனர். தாம் பணம் பெற்றுக்கொண்ட போதிலும் , சிறுமிக்கு பணம் கொடுக்காது இனிப்பு பண்டங்களை மாத்திரம் வழங்கியுள்ளனர் இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி , தனது உறவினர் ஒருவருக்கு இது தொடர்பில் தெரிவித்தமையை அடுத்து , வட்டுக்கோட்டை …

  24. Published By: VISHNU 28 APR, 2025 | 07:25 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு திங்கட்கிழமை (28) மிக சிறப்பாக இடம்பெற்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் நூலொன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள்,பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதனொரு அங்கமாக பல்கலைக்கழக கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் புகைப்பட கண்காட்ச…

  25. 28 Apr, 2025 | 05:01 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இணுவிலை சேர்ந்த 75 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் இணுவில் பகுதியில் வீதியோரமாக உள்ள தோட்டக்காணி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (27) முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஒப்படைத்தனர். மரண விசாரணையில் அதீத வெப்பம் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் நிலவும் அதீத வெப்பம் ; ஒருவர் உயிரிழப்பு | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.