ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
Published By: DIGITAL DESK 2 20 MAY, 2025 | 03:49 PM கடந்த 8 மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இந்த வன்முறைகள், கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுக்க அரசாங்கம் தவறிவிட்டது என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார். நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் கேள்விகளை எழுப்பிய அவர், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பின்வரும் முக்கியமான கேள்விகளை எழுப்பினார்: துப்பாக்கிச் சூடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம் எங்கே? நாட்டளவில் இடம்பெறும் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தற்போதைய வேல…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 MAY, 2025 | 03:09 PM வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம மரணதண்டனை வழங்கியநிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை மாற்றி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சசி மகேந்திரன், அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை இன்று செவ்வாய்க்கிழமை (20) அறிவித்தது. இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோரின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது. வவுனியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 20ஆம் திகதி கற்குழியில் அமைந்து…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் – HRW இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை புதிய அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவின் துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த வார இறுதியில், இலங்கையில் உள்ள தமிழர்கள் 1983 முதல் 2009 வரை நீடித்த உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை அல்லது காணாமல் போனவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்த ஒன்றுகூடினர். கடந்த 16 ஆண்டுகளாக…
-
- 0 replies
- 120 views
-
-
100,000 இலங்கையர்கள் 2025 இல் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேற்றம்! 2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 100,413 பதிவுசெய்யப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது. அவர்களில், சுய பதிவு மூலம் வெளியேறியவர்கள் 64,150 பேர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பதிவு செய்தவர்கள் 36,263 பேர். இந்தக் குழுவில் 39,496 பெண்களும் 60,917 ஆண்களும் அடங்குவர். குவைத்தில் வேலைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் செய்யப்பட்டன. அதன்படி 25,672 …
-
- 0 replies
- 146 views
-
-
அனுரகுமார ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு தீர்வை காண்பார் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் Published By: Rajeeban 20 May, 2025 | 11:15 AM அனுரகுமார திசநாயக்க முன்னைய அரசாங்கங்கள் செயற்பட்ட விதத்திலிருந்து விலகி ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு தீர்வை காண்பார் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடந்த வார இறுதியில் இலங்கையில் தமிழர்கள் 1983 முதல் 2009 வரை…
-
- 0 replies
- 135 views
-
-
சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் - மஹிந்த ராஜபக்ஷ தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (20) காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார். தான் இந்த நினைவு நிகழ்வில் கடமையை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பங்கேற்றதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த அவர், "இன்று நாங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக வந்தோம். ஆம், சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தோம். யாரையும் பிடிப்பதற்காக அல்ல. நாட்டைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் செய்த…
-
- 3 replies
- 351 views
-
-
வடக்கு கடல் வழியான போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் adminMay 20, 2025 வடக்குக்கான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாக கடற்படை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமார, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது யாழ். மாவட்டத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பிலும், கடல் வழியான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. https://globaltamilnews.net/2025/215700/
-
- 0 replies
- 137 views
-
-
தாளையடியிலிருந்து கரவெட்டிக்கு நீர் விநியோகம் adminMay 19, 2025 வடமராட்சி கிழக்கு தாளையடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கரவெட்டிக்கு நீர் விநியோகம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.கரவெட்டி மத்தொனி தாழங்குழியில் அமைக்கப்பட்ட நீர்தாங்கியில் இருந்து நீர் வழங்கும் செயற்பாடு இன்றைய தினம் காலை 8.30க்கு சமய நிகழ்வுடன் ஆரம்பானது. நிகழ்வில் பிராந்திய பொறியியலாளர் உதயசீலன், யாழ் மாவட்ட பொறுப்பதிகாரி யசோதரன், பருத்திதுறை நீர் வழங்கல் சபை பொறுப்பாளர் மதிவாணன்,கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய தலைவர் இராகவன்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நீர் விநியோக செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தனர். யாழ்ப்பாணம் – தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மா…
-
- 0 replies
- 130 views
-
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை May 19, 2025 2:08 pm “தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உணர்ந்து கொள்ளவேண்டும்” என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர், உப தவிசாளர் நியமன சர்ச்சை தொடர்பில் இன்றைய தினம் (19.05.2025) அவர் விளக்கமளித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்…
-
-
- 10 replies
- 600 views
- 1 follower
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் எதிரொலிகள் சர்வதேசத்திடம் இருந்து இலங்கை அரசுக்கு அழுத்தங்களாக வெளிப்படுத்தப்படுகிறன. இந்நிலையில் இறுதியுத்தத்தில் போர்குற்றவாளிகளாக கருதப்பட்ட பல இலங்கையின் இராணுவ வீரர்களுக்கு எதிராக தடைகளையும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் நாடான பிரித்தானியாவில், போர்க் குற்றவாளிகளை ஆதரித்தார் என்ற அடிப்படையில் இலங்கை பாடகி யோஹானிக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. யோஹானி தனது தந்தை மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா உட்பட போர்க்குற்றவாளிகளாக தடைவிதிக்கப்பட்டவர்களை பாராட்டியமையே இந்த எதிர்ப்புக்கு காரணமாகியது. மேலும் முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட தரப்புக்கு…
-
-
- 1 reply
- 280 views
-
-
Published By: RAJEEBAN 19 MAY, 2025 | 04:53 PM யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆனால் வெற்றிவிழாவாகவும், வெற்றிநாயர்களாகவும் காட்டிக்கொள்வது எந்த வகையிலும் அர்த்தமற்ற ஒன்று என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த அவர் இனவாதிகளிற்கு ஏற்றது போல இந்த அரசாங்கம் நகர்ந்து செல்கின்றது எனதெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- கடந்த 2022 ம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தின் போது மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அனைவருக்குமான நினைவேந்தலை இன அழிப்பு நாளின் உடைய நினைவை, அங்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக இந்த ந…
-
-
- 5 replies
- 314 views
- 1 follower
-
-
Published By: VISHNU 19 MAY, 2025 | 07:48 PM "பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்" நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும்? உங்கள் குழந்தை, உங்கள் கணவர், உங்கள் நண்பர், உங்கள் உறவினருக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக உயர்ந்த நீதி, இந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதாகும். இந்த நினைவிடத்திற்கு முன், நாம் நின்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது, மீண்டும் ஒரு மோதல் ஏற்பட இடமளிக்காமல், வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக சகோதரத்துவம், அன்புடன் கூடிய ஒற்றுமை நிறைந்த சமூகத்தை உருவாக்கத் தயார் என்ற உறுதிமொழியை எடுப்பதாக…
-
-
- 3 replies
- 314 views
- 1 follower
-
-
வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வெளிநாடுகளிலுள்ளவர்கள் உதவிகளைச் செய்வார்கள்; ஆளுநர் வேதநாயகன் 19 MAY, 2025 | 01:34 PM (எம்.நியூட்டன்) நிறுவனம் வளர்ச்சியடைவதற்கு வெளிப்படைத்தன்மை முக்கியம் வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வெளிநாடுகளிலுள்ளவர்கள் உதவிகளைச் செய்வார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்தார். மாதகலைச் சேர்ந்த விசுவநாதர் சிற்றம்பலம் சமூகசேவைகளைப் பாராட்டி மதிப்பளித்து அவரின் வாழ்நாள் சாதனைகளை வாழும்போதே வாழ்த்தும் கௌரவிப்பு விழாவும் நூல் வெளியீடும் மாதகல் இளைஞர் சங்க கலையரங்கத்தில் சனிக்கிழமை (17) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாதகல் மண்ணுக்கு நான் பிரத…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 MAY, 2025 | 12:06 PM மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் ஓய்வுபெற்ற கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை இன்று திங்கட்கிழமை (19) நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். https://www.virakesari.lk/article/215131
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
30-வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றி கொண்டாட்டமா? -மனோ கணேசன் இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது” இலங்கை சமூகத்தில் சமூகத்தில் மரணித்து போன உறவுகள், இன்று முள்ளிவாய்க்காலிலும், தெற்கிலும் நினைவு கூர படுகிறார்கள். தெற்கில் இராணுவ வெற்றி விழா நடத்த படுகிறது. நினைவு கூரலும், வெற்றி விழாவும் ஒருசேர நடத்தலாம். அந்த நாள் வர வேண்டும். ஆனால் அந்த இலக்கை, முப்பது வருட காலம் யுத்தம் நிகழ்ந்தமைகான மூல…
-
- 0 replies
- 120 views
-
-
19 MAY, 2025 | 12:02 PM 2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு படை பிரதானியும், இராணுவதளபதியும் இறுதி யுத்தத்தில் 58 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியருவமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கங்களின் இந்த தோல்வி, விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் உலக நாடுகளின் தண்டனைகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என சவேந்திர சில்வா தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வா இந்த பேட்டியில் அரசாங்கங்கள் அரசியல் ரீதியில் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காணத்தவறியுள்ளமை குறித்து தனது சீற்றத்…
-
- 3 replies
- 267 views
- 1 follower
-
-
Published By: VISHNU 19 MAY, 2025 | 05:22 AM தனியார் காணிகளை அரசுடமையாக்கும் அல்லது கையகப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. நில அளவை வரைபடப் பகுதிக்குள் உள்ள காணிகளின் உரிமை தனியாருக்குச் சொந்தமானதா அல்லது அரசுக்கு சொந்தமானதா என்பதைத் தனித்தனியாக அடையாளம் காணவே தீர்மானிக்கப்பட்டது. இதனூடாக காணிப் பிரச்சினைகளை இதன்மூலம் முறையாக தீர்த்துக் கொள்ள முடியும். தீவின் அனைத்து மாகாணங்களிலும் காணி தீர்வுக்கான பூர்வாங்க அறிவிப்புக்களை வெளியிடுவதன் மூலம் நில தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் விசேடமான முறையில் குறிப்பிட்ட தீர்வுக்கான பூர்வாங்க அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பா…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
18 MAY, 2025 | 05:41 PM (எம்.மனோசித்ரா) கொடூரமான 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வந்து தாயகத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து விடுவித்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தாய் நாட்டுக்காக தமது உயிரை தியாகம் செய்த, அங்கவீனமுற்ற சகல பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகால கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டு வந்து, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மலைநாட்டை ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்து, நமது தாயகத்தையும் மக்களையும் கொடூரமான புலி பயங்கரவாத அமைப்பிலிருந்து வி…
-
-
- 3 replies
- 259 views
- 1 follower
-
-
இலங்கையில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பெண் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தி பிரித்தானிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண்ணுக்கு துணை நிற்பதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு லண்டனின் கூல்ஸ்டனைச் சேர்ந்த 21 வயதான சார்லோட் மே லீ, பெங்காக்கிலிருந்து விமானத்தில் வந்த பின்னர் திங்களன்று கொழும்பில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 46 கிலோ (101 பவுண்டுகள்) கஞ்சா வகை குஷ் அடங்கிய இரண்டு போதைப் பொருள் பொதிகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்றதாக இலங்கை அதிகாரிகளால் குறித்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு …
-
- 0 replies
- 153 views
-
-
மஹிந்தவின் தனி விழாவுக்கு அனுமதி மறுப்பு போர் வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், திங்கட்கிழமை (19) தேசிய போர் வீரர்களின் நினைவு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கேட்டுக்கொள்கிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுவதாகவும், அது தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் பெயரில் ஜனாதிபதி செய்யும் ஒரு பெரிய தவறு என்றும் ஞாயிற்றுக்கிழமை (18) அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ஒரு கட்சியாக, ஸ்ரீலங்கா பொதுஜன ப…
-
-
- 2 replies
- 280 views
-
-
சமூக ஊடக பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை நீதித்துறை அதிகாரிகளை குறிவைத்து சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடப்படும் பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கவலை வௌியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறை அதிகாரிகளுக்கும் நீதி அமைப்புக்கும் தீங்கு விளைவிக்கும் சில கருத்துகள் மற்றும் பதிவுகளை சில சமூக ஊடக தளங்களில் பொதுமக்கள் பதிவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. நீதி நிர்வாகத்தில் நீதித்துறை அதிகாரிகள் வகிக்கும் முக்கிய பங்கையும், நீதித்துறையின் கடமைகள், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிசெய்தல் மற்றும் பாதுகாப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டு, நீதித்துறை நடத்தையை மறுபரிசீலனை செய்வதற்காக சட்டம் தெ…
-
- 0 replies
- 169 views
-
-
தேசிய போர் வீரர் நினைவு விழா; விசேட போக்குவரத்து! 16 ஆவது தேசிய போர் வீரர் நினைவு விழாவினை முன்னிட்டு, கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள நாடாளுமன்றப் பகுதியைச் சுற்றி இன்று (19) விசேட போக்குவரத்துத் திட்டம் அமலில் இருக்கும். இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி, குறித்த காலகட்டத்தில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். உள்நாட்டு போர் வெற்றியின் 16 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இன்று நடைபெறும் தேசிய போர்வீரர் தின கொண்டாட்டங்களானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான அனுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் நடைபெறும். இதில் பாதுக…
-
- 0 replies
- 126 views
-
-
நாடு திரும்புகின்றார் பசில் ராஜபக்ச May 18, 2025 2:12 pm ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை அவர் நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அமெரிக்காவிற்குச் சென்ற பசில் ராஜபக்ச அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையிலேயே அவர் நாடு திரும்பவுள்ளார். எவ்வாறாயினும், அவர், நாடு திரும்பிய பின்னர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவாரா இல்லையா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. https://oruvan.com/basil-rajapaksa-returns-to-the-coun…
-
- 0 replies
- 194 views
-
-
கொழும்பு – வெள்ளவத்தையில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு May 18, 2025 3:18 pm கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு – வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தின் போது பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன்படி, இன்று காலை கொழும்பு – வெள்ளவத்தை கடற்கரையிலும் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட சிவில் ச…
-
- 0 replies
- 242 views
-
-
Published By: DIGITAL DESK 3 18 MAY, 2025 | 05:25 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நாளை திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவீரர் சேவை அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கொஹொன தெரிவித்தார். இன்று ஞாயிறுக்கிழமை (18) போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் தன்னலமின்றி பணியாற்றிய…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-