ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
நல்லூர்த் திருவிழாக் காலத்தில் -இந்த நடைமுறைகள் கட்டாயம்!! நல்லூர் கோவில் திருவிழாக்காலத்தில் பின்வரும் சுகாதார நடைமுறைகளைத் தவறாது பின்பற்றுமாறு யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். 1.உற்சவ காலத்தில் கோவிற் சுற்றாடலிலும் கோவிலுக்குவரும் பாதைகளிலும் தாங்கள் உள்ளெடுக்கக் கூடிய குடிதண்ணீர் மற்றும் உணவுப் பொருள்கள் சுகாதாரமானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதோடு அது தொடர்பிலான முறைப்பாடுகளை 021 222 2645 என் னும் தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது நல்லூர்ப் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அலைபேசி இலக்கமான 0718628519 …
-
- 4 replies
- 1.1k views
-
-
தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலைய நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்விகற்க வருகின்ற மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக முயற்சி என தர்மபுரம் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை அடுத்து குறித்த நிர்வாகி நேற்று (17.08) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டார். குறித்த வழக்கை விசாரித்த பதில் நீதவான் சிவபாலன் எதிர்வரும் 30 .08 .2018 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். குறித்த கல்வி நிலையத்தை பொறுத்தவரை அங்கு 18 வயதிற்கும் குறைந்தவர்களே கல்விகற்று வருகின்ற நிலையில் அங்கு கல்விகற்க வருகின்ற மாணவிகளுக்கு பாலியல் துஸ்பிரயோகம் ,பாலியல் தொந்தரவு பலமுறை இடம்ப…
-
- 0 replies
- 299 views
-
-
இலங்கை தொடர்பான 2அறிக்கைகள் UNHRCக்கு வருகின்றன இலங்கை தொடர்பான, இரண்டு அறிக்கைகள், அடுத்த மாதம் நடைபெற விருக்கின்ற ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை பேரவையில் கலந்துரையாடப்படவுள்ளன. எழுந்தமானமான தடுப்பு பற்றிய செயற்குழுவின் அறிக்கையும் உண்மை நீதி, பரிகாரம் வழங்கள், மீளவும் இவை நடக்காது என்ற உறுதி வழங்கல் என்பன தொடர்பிலான விசேட அறிக்கையாளரின் அறிக்கையும் இந்த அமர்வின் போது கலந்துரையாடப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பேரவையின் 39ஆவது அமர்வு செப்டெம்பர் மாதம் 10 திகதியிருந்து செப்டெம்பர் 28 திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதன்போதே, இலங்கை பற்றிய இரண்டு அறிக்கைகள் கலந்…
-
- 1 reply
- 327 views
-
-
ஒரு நாள் நாமல் ராஜபக்ச நாட்டின் தலைவராக பதவிக்கு வருவதை எவரும் தடுக்க முடியாது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டியிடும் வாய்ப்புக்கு தடை ஏற்படுத்தினாலும் எதிர்காலத்தில் ஒரு நாள் நாமல் ராஜபக்ச நாட்டின் தலைவராக பதவிக்கு வருவதை எவருக்கும் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற விவகார செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக நுகோகொடையில், அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலருடன் கலந்துரையாடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்…
-
- 1 reply
- 504 views
-
-
கீத் நொயார் கடத்தல் – கோத்தபாயவும் விசாரணை வலையத்துள் கொண்டுவரப்படுவார்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… துப்பாக்கியை காட்டி ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தை பெற்ற பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வாக்குமூலம் பெற அழைக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கீத் நொயார், தெஹிவளை வைத்தியா வீதியில், ஆயுத முனையில் கடத்திச் செல்லப்பட்ட போது, த நேஷன் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லலித் அழககோன், அன்றைய ஜனாதிபதி ம…
-
- 0 replies
- 480 views
-
-
அமைச்சரின் அனுசரணையில் சீன அதிகாரிகள் நேரில் ஆய்வு யாழ்ப்பாணத்துக்கு ஒரு மாதத்துக்குள் இரு தடவைகள் வருகை இந்தியாவா, சீனாவா வடக்கில் வீடுகளை அமைப்பது என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் சீன அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு கடந்த ஒரு மாத காலத்துக்குள் இரு தடவைகள் நேரில் வருகை தந்து ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் ஏற்பாட்டிலேயே அவர்கள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். தேசிய நல்லிணக்க ஒருமைப்பாடு அமைச்சினால் வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல்வீடுகள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் கூறப்பட்டிருந்தது. அந்த அமைச்சினால் 25 ஆயிரம் வீடுகள் மாத்திரமே தற்போது அமைக்கப்படவுள்ளது. எ…
-
- 0 replies
- 311 views
-
-
ராஜபக் ஷவினரை மீண்டும்: தலை தூக்குவதற்கு இடமளிக்கக்கூடாது பிரதமர் ரணில் அறிவிப்பு ; வடக்கில் 40,000 வீடுகளை அமைக்க துரித நடவடிக்கை என்கிறார். (எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டை நாம் பொறுப்பேற்கும் போது நெருக்கடியான பொரு ளாதாரத்துடன் கூடிய ஆழமான குழி இருந்தது. தற்போது அந்த குழியை கம்பெரலிய, வீடமைப்பு போன்ற பல்வேறு திட்டங் களினாலும் கடன் மீள்செலுத்தலின் ஊடாகவும் நிரப்பி விட் டோம். எனினும் 500 சதுர அடிக்கு பாரிய குழி ஒன்று உள் ளது. அதனை இன்னும் நாம் நிரப்பவில்லை. அந்த 500 சதுர அடி கூட மிகவும் ஆழமாகவே உள்ளது. ஆகவே அந்த ஆழமிக்க குழியை நிரப்ப வேண்டுமாயின் ராஜபக் ஷவினரை மீண்டும் தலைதூக்க இடமளிக்க கூடாது என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெ…
-
- 0 replies
- 268 views
-
-
வடக்கில் இரு வருடங்களில் 7000 அபாயகர வெடிப் பொருட்கள் அகற்றல் கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஆகஸ்ட் மாதம்; 15ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் 7147 அபாயகரமான வெடிப்பொருட்களை அகற்றியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் ஜந்து இலட்சத்து தொண்ணூற்றேழாயிரத்து நூற்றியேழு சதுரமீற்றர் பரப்பளவில் (597,107) இருந்து ஏழாயிரத்து …
-
- 1 reply
- 507 views
-
-
வலி.வடக்கில் 4.7 ஏக்கர் காணி அடுத்தவாரம் விடுவிப்பு வலி.வடக்கில் காங்கேசன்துறையில் 21 குடும்பங்களுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலப் பரப்பு எதிர்வரும் செவ்வாய்க் கிழமை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. காங்கேசன்துறை மத்தி, காங்கேசன்துறை தெற்கு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி இராணுவத்தின் 515ஆவது பிரிகேட் அமைந்துள்ளது. அந்த முகாமின் ஒரு பகுதி காணி மாத்திரமே எதிர்வரும் செவ்வாய்க் கிழமை விடுவிக்கப்படவுள்ளது. https://newuthayan.com/story/09/வலி-வடக்கில்-மீள்கிறது-4-7-ஏக்கர்-காணி-அடுத்தவாரம்-விடுவிப்பு.html
-
- 0 replies
- 226 views
-
-
முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினர்: விசாரணை ஆரம்பம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்குமூலம் பெற்று வருகின்றனர். கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர், அங்கு அவரிடம் வாக்குமூலம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக இன்றையதினம் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு முன்னதாக அழைப்பு விடுக…
-
- 5 replies
- 684 views
-
-
இலங்கை வருகிறார் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேரா, 5 நாட்கள் பயணமாக இந்தியா மற்றும் இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார். இதற்கமைய, நாளைய தினம் தனது விஜயத்தை ஆரம்பிக்கும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவுக்கு தனது முதலாவதாக பயணத்தை மேற்கொள்ள உள்ளார். பின்னர், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார். இந்து சமுத்திரத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் நோக்கில் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் அமையவுள்ளது. இதன்போது அவர் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்து…
-
- 0 replies
- 214 views
-
-
இவ்வளவு காலமும் சிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் , திடீரென புத்தரின் பாதமாக மாறியதன் பின்னணி என்ன? இலங்கையில் சிறுபான்மை மக்களின் பாரம்பரியங்கள், கலாச்சார பெருமைகளை மூடி மறைப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக இன்னொரு நடவடிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்துக்களின் பாரம்பரியங்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டும், இல்லாமல் ஆக்கப்பட்டும் வருகின்றது. இவ்வாறான சில மோசமான விடயங்களால், தமிழர்களின் தொன்மையை யாராலும் மாற்றவோ, அழிக்கவோ முடியாது என்பது தான் வெளிப்படையான உண்மை. அந்த வகையில் கதிர்காம பகுதியில் பல தொன்மையான தமிழ் பாரம்பரிய விடயங்கள் சிங்கள பாரம்பரிய விடயங்…
-
- 5 replies
- 816 views
-
-
குறைவான சக்திவலு பயன்பாட்டுடனான சீனாவின் ரயில் பாதை விஸ்தரிப்பு தெற்கில் : 26 கி.மீ வரை பூர்த்தி!!! (நா.தனுஜா) சீனாவால் தெற்கில் முன்னெடுக்கப்படும் பாரிய ரயில் பாதை விஸ்தரிப்பு பணிகள் தொடர்வதாகவும், 26 கிலோமீற்றர் வரையான வேலைத்திட்டம் பூர்த்தியடைந்துள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஊடகவியலாளர்களுக்குக் காண்பிக்கும் வகையில் இலங்கையிலுள்ள சீன தூதரகத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போதே சீன அதிகாரிகளால் மேற்கண்ட விடயம் குறித்துத் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, "தெற்கில் மாத்தறை மற்றும் பெலியத்த போக்குவர…
-
- 2 replies
- 503 views
-
-
கிளிநொச்சி நகரின் உள்ளக வீதிகள் பல முதற்தடவையாக புனரமைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி நகரில் மிக மோசமான உள்ளக வீதிகள் பல புனரமைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகர், இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் காணப்பட்ட பிரதேச சபைக்குச் சொந்தமான பல உள்ளக வீதிகள் முதற்தடவையாக புனரமைக்கப்பட்டுள்ளன. மேற்படி பிரதேசத்திற்குரிய கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களின் ஒதுக்கீட்டுக்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையினரால் குறித்த வீதிகள் தற்காலிகமாக பொது மக்களின் போக்குவரத்துக்கு இலகுவாக சீரமைக்கப்பட்டுள்ளன. http://globaltamilnews.net/2018/91754/
-
- 1 reply
- 416 views
-
-
சமஷ்டித் தீர்வை நோக்கியே செல்கின்றது தமிழரசுக் கட்சி வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்ப காலத்தில் இருந்து தற்போதுவரை கூட்டாட் சித்(சமஷ்டி) தீர்வை நோக்கியே பணிக்கின்றது. அதை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் கைவிடவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம். தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.நாகநாதனின் நினைவுதின நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே வடக்கு மாகாண அ…
-
- 3 replies
- 499 views
-
-
அமெரிக்க விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவம் ; வவுனியாவில் வவுனியாவில் கடந்த ஒருவார காலமாக அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களுடன், இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர். வவுனியா ஈரப்பெரியகுளம், அலகல்ல வித்தியாலயத்தில் கடந்த ஒருவாரகாலமாக இடம்பெற்றுவரும் இலவச மருத்துவ முகாம் நாளைய தினத்துடன் முடிவடைகின்றது. பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு போன்ற ஆசிய பசுபிக் கண்டங்களைச் சேர்ந்த 65 அமெரிக்க விமானப்படை வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை விமானப்படை வைத்திய அதிகாரிகளும் இச் செயற்றிட்டத்திதை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய நிகழ்வில் இலங்கைக்…
-
- 1 reply
- 330 views
-
-
தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் மக் களிடம் ஆரோக்கியமான கருத்துநிலை இல்லை என்பது தெளிவு. ஆக, வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் அவர்கள் கூறுகின்ற கருத்துக்கள் மட்டுமே தமிழ் மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது. எனினும் தனிமனிதராக நின்று முதலமைச் சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் யதார்த்த பூர்வமான கருத்துக்களைக் கூறுவதால் அவருக்கான எதிர்ப்பு தமிழ் அரசியல் தரப்பிடம் கடுமையாக ஏற்படவே செய்கிறது. அதாவது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் அவர்களின் தமிழ் மக்கள் தொடர்பான கருத்துக்களும் தென்பகுதி அரசியல்வாதி களுக்கு உடனுக்குடன் வழங்கும் பதில்களும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கின்ற விடயங்களும் யதார்த்தமானவை என்பதுடன் அவர் இருப்பதால்தான் தமிழ் மக்களின் …
-
- 0 replies
- 346 views
-
-
அரசியலமைப்பை உருவாக்கும் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றோம்: செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் விவாதம் நடத்தப்படும் - சுமந்திரன் எம்.பி. (ஆர்.யசி) புதிய அரசியலமைப்பை உருவாக்க இரண்டரை வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற பணிகள் இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளன. அடுத்த வழிநடத்தல் குழுவில் நிபுணர் குழுவின் வரைபை இறுதி செய்யவும் தீர்மானம் எடுத்துள்ளோம் என வழிநடத்தல் குழுவின் உறுப்பினராக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத் தில் அரசியலமைப்பு பேரவையில் இந்த ஆவணம் முன்வைக்கப்பட்…
-
- 3 replies
- 466 views
-
-
கிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் தற்போது இன்மையால் கர்ப்பவதிகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்களாக இருவர் கடமை புரிந்த நிலையில் ஒருவர் வருடாந்த இடமாற்றம் மூலம் வெளிமாவட்டத்திற்குச் சென்ற நிலையில் மற்றைய மகப்பேற்று நிபுணரும் தமது வெளிநாட்டுப் பயிற்சிநெறிக்காக விடுகைபெற்றுச் சென்றுவிட்டார். இந்நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பவதிகள் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவதாகப் பொதுமக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
மீண்டும் யுத்தத்திற்கு இடமில்லை - ரெஜினோல்ட் குரே வடக்கில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டாலும் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். பெரிய மழை பெய்து முடிந்தவுடன் நிலத்தில் ஈரம் இருப்பது போன்று வட மாகாணத்தில் இடம்பெற்ற முப்பதாண்டு யுத்தத்தின் பின்னர் ஓரிரு ஆயுதங்கள் கண்டெடுக்கப்படலாம். அது யுத்தத்தின் மறு ஆரம்பமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். http://www.virakesari.lk/article/38569
-
- 3 replies
- 1.4k views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்வீதியில் இராணுவத்தினரின் பிரமாண்டமான தொலைக்காட்சித் திரை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன் வீதியில் இராணுவத்தினரால் பிரமாண்டமான தொலைக்காட்சி திரை (LED TV.) அமைக்கப்பட்டு உள்ளது. ஆலய முன் வீதியில் ஆலயத்திற்கு சுமார் 150 மீற்றர் தூரத்தில் செட்டித்தெரு சந்திக்கு அருகில் இந்த பிரமாண்ட தொலைக்காட்சி திரை அமைக்கப்பட்டு உள்ளது. ஆலய சுற்று வீதிகள் கடந்த 16ஆம் திகதி முதல் வீதி தடைகள் போடப்பட்டு , வாகனங்கள் உட்பிரவேசிக்க தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன.அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை நேர உற்சவ பூஜைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்த வேளை , வீதி தடைகளை தாண்டி இராணுவத்தின…
-
- 1 reply
- 514 views
-
-
முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொட கைதுசெய்யப்படலாம்! நாட்டில் போர் நடைபெற்ற காலத்தில் 11 இளைஞர்கள், கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்தால், முன்னாள் இராணுவ தளபதி வைஸ் அத்மிரல் வசந்த கரன்னாகொடவை கைதுசெய்ய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் வழங்கு விசாரணைகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்த ஹெட்டியராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி என்ற முன்னாள் கடற்படை அதிகாரியை, குற்றப் புலனாய்வு திணைக்களத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
இரவில் கடன் பணத்தை வசூலிக்கும் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் வவுனியா கோவில்குளம், கோவில் புதுக்குளம் பகுதிகளிலுள்ள பெண்கள் வீதியில் ஒன்று கூடி நுண்நிதி நிறுவனத்தில் பெற்று கொள்ளப்பட்ட கடன் பணத்தைச் செலுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர். குறித்த ஒன்று கூடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தொடர்ந்தும் இரவு வேளைகளில் தமது வீடுகளுக்கு நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் வருவதற்கு தடை விதிக்குமாறும் பெற்று கொண்ட கடன் பணத்தைச் செலுத்தவதற்கான வழிமுறைகள் தற்போது காணப்படவில்லை எனவே அரசாங்கம் தமக்கான நிவாரணங்களை வழங்குமாறு கோரியுள்ளனர். மேலும் கோவில்குளம், கோவில் புதுக்குளம் பகுதிகளுக்குச் செல்லும் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் பணத்தை வசூலிப்பத…
-
- 0 replies
- 327 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தி.கிந்துஜன், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆம் திகதி செஞ்சோலையில் உயிரிழந்த மாணவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னிலையில் 16.0…
-
- 1 reply
- 318 views
-
-
3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது யாழ்.நகரப்பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் நகையும் திருடப்பட்டுப்போனதையடுத்து விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.நகர் விக்டோறியா வீதியில் அமைந்துள்ள வெளிமாவட்டத்தவர்களுக்கான விடுதியிலேயே நேற்று இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து சகோதர மொழி பேசும் குடும்பத்தினர் சுற்றுலாவின் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் குறித்த விடுதியில் தங்கியபோது, அந்த விடுதியின் உரிமையாளர் இரவில் நகைகள் களவு போய்விடும், பத்திரமாக கழற்றி வைத்துக்கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளார். அவ்வாறு சென்ற பின்னர்,…
-
- 1 reply
- 312 views
-