ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக திரண்ட உறவுகள்-!! தென்மராட்சியின் பல்வேறு பிரதேசங்களை யும் சேர்ந்த 7 இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்று சுமார் 40 இற்கும் மேற்பட்டோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதைபதைப்புடன் திரண்டனர். வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் 7 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். …
-
- 5 replies
- 1k views
-
-
நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி உத்தரவு திருகோணமலை, சம்பூர், பாட்டளிபுரத்தில் ஆசிரியர் ஒருவரை கொலை செய்த இருவருக்கு நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். திருகோணமலை சம்பூர் பாட்டாளிபுத்தை அண்டிய பகுதியில் 33 வயதான குருகுலசிங்கம் ஸ்ரீவதனி என்ற ஆசிரியை கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந் நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் மீது முன்வை…
-
- 0 replies
- 650 views
-
-
நாடு திரும்பினர் 27 இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து 27 இலங்கை அகதிகள் விமானம் மூலம் இன்று நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். கடந்த யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற 27 பேரே இவ்வாறு இன்று நாடு திரும்பியுள்ளனர். குறித்த 27 பேரும் 3 விமானங்கள் மூலம் இன்று கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு இலங்கை வந்த அகதிகளிடம் குடிவரவு மற்றும் குடியல்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/37979
-
- 0 replies
- 420 views
-
-
கண்டி பெண்கள் உயர் கல்லூரியின் பழைய மாணவியான கரீமா மரிக்கார் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறியை பூர்த்தி செய்தவர். 1990ஆம் ஆண்டி திருமண பந்தத்தில் இணைந்ததையடுத்து அவர் இலண்டனுக்குச் சென்றார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கரீமா மரிக்கார், இலண்டனின் ஹரோவ் கவுன்சிலின் உறுப்பினராக 2010ஆம் ஆண்டில் முதன் முறையாக தெரிவு செய்யப்பட்டார். 2017 – 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில், பிரதி மேயராக பதவி வகித்த அவர், 2018 – 2019ஆம் ஆண்டிற்கான மேயராக கடந்த மே மாதம் தெரிவானார். லண்டனின் ஹரோவ் கவுன்சிலின் முதலாவது பெண் முஸ்லிம் மேயரான இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கரீமா மரிக்காரை வரவேற்கும் நிகழ்வு கண்டியில் இன்று நடைபெற்றது. ஒரு காலத்தில் …
-
- 1 reply
- 580 views
-
-
வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? – சுமந்திரன் தகவல் வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் சி.வி.விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எமது ஆதவன் செய்திச் சேவை வினவியபோது அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனக் குறிப்பிட்டார். அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கு…
-
- 2 replies
- 693 views
-
-
சிங்கப்பூர் போன்று முன்னேறவேண்டுமாயின் அனைவரும் ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும் (எம்.எம்.மின்ஹாஜ்) எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தல் சட்டம் அனைத்து இனத்தவர்கள் மீதும் சமமாக பிரயோகிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டால் பெரும்பான்மையானாலும் சிறுபான்மையானாலும் நாட்டின் மீது அதிருப்தியே ஏற்படும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அத்துடன் சிங்கப்பூரை போன்று நாமும் முன்னேற வேண்டுமாயின் அனைத்து இனத்தவர்களும் ஒன்றுபட்டு இலங்கையராக வாழ வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் சர்வதேசத்தை எம்மால் வெற்றிக்கொள்ள முடி…
-
- 1 reply
- 381 views
-
-
மணிவண்ணனுக்கு – நீதிமன்றால் பிணை!! தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் தாக்கல் செய்த வழக்கில் மணிவண்ணனுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது. உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் ஆணைக்குழு உறுப்பினர் என்ற வகையில் மேற்கொண்ட பணிக்காக தேர்தலின் பின்னர் தாக்குதல் தொடரும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த வி.மணிவண்ணன் அச்சுறுத்தும் வகையிலான கருத்தை வெளயிட்டார் என ஆணைக்குழு உறுப்பினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முறையீட்டின் மீதான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது குறித்த…
-
- 0 replies
- 372 views
-
-
ஒரு பிசாசை அடித்துக் கலைப்பதற்காக ஒரு பேயை ஆதரித்தோம்;சிவமோகன் எம்பி கடந்தகால ஆட்சியை மாற்றி புதிய அரசைக் கொண்டு வந்தது அவர்களிடம் பிச்சை எடுப்பதற்கு அல்ல. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு அதற்க்காகவே ஒரு பிசாசை அடித்துக் கலைப்பதற்காக ஒரு பேயை ஆதரித்தோம். என வன்னி நாடாளுமன்ற உறுபப்பினர் வைத்தியக்கலாநிதி சி. சிவமோகன் தெரிவித்தார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற நூலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எல்லோரிடமும் ஒரு…
-
- 0 replies
- 259 views
-
-
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இருந்து வட மாகாண அமைச்சர்கள் இருவர் வெளிநடப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை (6.08.18) மதியம் 1.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடாத்தில் இடம் பெற்ற போது வடமாகாண அமைச்சர்கள் இருவர் குறித்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஏற்பாட்டில் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிஸாட் பதியுதீன், பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஆகியோரின் இணைத…
-
- 0 replies
- 392 views
-
-
யாழில் விரைவில் புதிய வர்த்தகதொகுதி யாழ்ப்பாணம் – பழைய சத்திர சந்தை பகுதியில் புதிய வர்த்தக தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் புதிய வர்த்தக தொகுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அதனை கட்ட முயாத நிலையில், குறித்த நிதி மீளப்பெறப்பட்டது. இந்தநிலையில் இதனை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம். …
-
- 0 replies
- 332 views
-
-
பாத்தீனிய ஒழிப்பில் வலி கிழக்கு பிரதேச சபையும் யாழ். பல்கலையும் இணைவு வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் பாத்தீனிய ஒழிப்பு முயற்சிகளுக்காக பிரதேச சபையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக திட்டமிடல் சமூகமும் இணைந்து செயலாற்ற ஆரம்பித்துள்ளன. இதன் முயற்கட்ட முயற்சியாக இன்று புத்தூர் நிலாவரைப் பகுதியிலுள்ள ஏராளமான பாத்தினியச் செடிகள் பக்குவமாக அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் பெரும்பாலான பொது இடங்களில் பாத்தீனிய செடியின் பரம்பல் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில் இதனை அகற்றுவதற்கான முயற்சியாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல்…
-
- 0 replies
- 224 views
-
-
எதிர்க்கட்சி தலைவர் யார் ? - இன்று தீர்மானம் (ஆர்.யசி) எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கான பதிலை இன்று சபாநாயகர் அறி விக்கவுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை சம்பந்தன் வகிப்பாரா அல்லது அது பொது எதிரணி வசமாகுமா என்பது குறித்த நிலைப் பாட்டை இன்று பாராளுமன்றத்தில் சபாநாய கர் கரு ஜயசூரிய தெரிவிப்பார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆளும் தரப்பில் இருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களில் 15 பேர் பொது எதிரணியுடன் இணைந்து கொண்டனர். இதனையடுத்து தாம் 70 பேர் எதிரணியில் அங்கம் வகிப்பதாகவும் ஆகவே தமக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக…
-
- 1 reply
- 355 views
-
-
ஆட்சியைக் கைப்பற்ற – புதிய அரசமைப்பை பயன்படுத்த வேண்டாம்!! சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைக் கொண்ட முக்கிய மான அரசியல் தலைவர் மகிந்த ராஜபக்ச. மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக புதிய அரசமைப்பைப் பயன்படுத்தவேண்டாம் என்று அவரிடம் நான் நேரில் கூறியுள்ளேன். இந்த வேண்டு கோளை முன்னாள் அரச தலைவர் மகிந்த தலைமையிலான பொது எதிரணியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்தச் சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலை…
-
- 0 replies
- 260 views
-
-
அரசியல்வாதிகளால் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு -மதத் தலைவர்கள் சுட்டிக்காட்டு!! அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதக் கருத்துகளால்தான் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது. மிகவும் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களும் இன நல்லிணக்கதைப் பாதிக்கும் முதன்மை காரணியாகும். இவ்வாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடத்தின் தேரர்கள் உட்பட மதத் தலைவர்கள் தெரிவித்தனர். இன, மத சகவாழ்வின் ஊடாக நிலையான நாடு என்ற தொனிப்பொருளின் கீழ் சிறப்பு மாநாடொன்று நேற்றுக் காலை கண்டியில் சபாநாயகர்…
-
- 0 replies
- 282 views
-
-
பலாலியில் நினைவுத் தூபி -சிதைத்து அழிப்பு!! கடந்தகாலப் போராலும், இராணுவ ஆக்கிரமிப்பாலும் அழிவடையாது, அழிக்கப்படாது பாதுகாக்கபப்பட்ட புலிகள், மற்றும் பொதுமக்களின் நினைவாக மக்களால் அமைக்கபப்பட்ட நினைவுத் தூபி 28 ஆண்டுகளின் பின்னர் நேற்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 1989ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் காலத்தில் பலாலி வீதியில் ஆலடிச் சந்தியில் இடம்பெற்ற வெடி விபத்தில் வீரச்சாவடைந்த 4 புலிகள் மற…
-
- 0 replies
- 378 views
-
-
பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளோம்: பிரதமர் Colombo (News 1st) பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு நிலம் ஒன்றைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தற்போதுள்ள காணிகளில் பணிகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கம் இரண்டு கட்டங்களாக உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதேபோன்று, காங்கேசன்துறை அபிவிருத்தி செய்யப்பட்டு துறைமுகமாக விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் காங்கேசன்துறை சீமேந்து ஆலையை அகற்றி, அந்த பகுதியில் சிறு கைத்தொழிலை விஸ்தரித்து, தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த எதிர்பார்த்…
-
- 9 replies
- 1.1k views
-
-
வடக்கு முதலமைச்சின் மீது- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மூவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முடிவெடுத்தது. இதையடுத்து நாளைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் பா.டெனீஸ்வரன். வடக்கு மாகாண முதலமைச்சர் சி…
-
- 0 replies
- 347 views
-
-
அராலியில் குள்ளமனிதர் என்பது கட்டுக்கதை- வடக்கு மாகாண சபை உறுப்பினர்!! அராலி, மூளாய் போன்ற பகுதிகளில் குள்ள மனிதர் அட்டகாசம் என்பது கட்டுக்கதை. அங்கு என்ன நடக்கின்றது என்பதை விசாரிக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது, மக்கள் எவரும் குள்ள மனிதர்களைக் காணவில்லை. ஆனால் ஊடகங்கள் மட்டும் அவ்வாறு கூறுகின்றனர். எனவே அது வெறும் க…
-
- 0 replies
- 238 views
-
-
இந்தியப் படகுகளை விடுவிக்கக் கூடாது -வடக்கு முதலமைச்சர்!! வடக்குக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்களை மீள ஒப்படைக்கக் கூடாது என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-, இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்புக்குள் நுழைந்து நவீன முறைகள…
-
- 0 replies
- 173 views
-
-
கடற்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்போம் ; செல்வம் அடைக்கலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தக் கோரியும் கடல் வளத்தை அழிக்கும் சுருக்கு வலை அனுமதியை இரத்து செய்யகோரியும் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் இன்று ஜந்தாவது நாளாக தொடர்ந்தவண்ணமுள்ளது. இந்நிலையில் இன்று இரவு போராட்டம் மேற்கொண்டுவரும் மக்களை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மீனவ உஅமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் உடன் இருந்து மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் தெரிவித்துள்ளார்கள். தா…
-
- 0 replies
- 303 views
-
-
பயணிகளின் உயிருடன் ஓட்டப் பந்தயம் நடத்திய தனியார், இ.போ.ச பஸ்கள் வவுனியா மன்னார் பிரதான வீதி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு முன்பாக நேற்று 06 மாலை 5.15 மணியளவில் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் போட்டித்தன்மை காரணமாக பயணிகள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். திருகோணமலையிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்றும் வவுனியாவிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பட்டானீச்சூர் பகுதியிலிருந்து வேப்பங்குளம் 6 ம் ஒழுங்கை வரை போட்டி போட்டுக்கொண்டு வீதியில் சமமாக சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸ…
-
- 0 replies
- 324 views
-
-
டெலோ மூத்த உறுப்பினர் எடுத்த திடீர் முடிவு! டெலோ கட்சியில் இருந்து விலகியுள்ள கட் சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கணேஷ்வேலாயுதம் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கூறியுள்ளார். மேற்படி விடயம் குறித்து யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில், கடந்த 02.08.2018ம் திகதி டெலோ கட்சியில் இருந்து விலகுவதா கட்சியின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தாவிடம் கடிதம்கொடுத்துள்ளேன். டெலோ அமைப்புக்குள் பிளவு என செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் உண்மை அதுவல்ல. நான் மட்டும் விலகி இருக்கிறேன். அதற்கான காரணம் மக்களுடைய அபிவிருத்தி, கல்வ…
-
- 3 replies
- 954 views
-
-
மன்னார் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகள் எவ்வித தடையுமின்றி தங்களுடைய தேவைக்கேற்ப செயற்படுவதால் மீண்டும் விடுதலைப் புலிகள் தலை தூக்கியுள்ளதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ் சாட்டியுள்ளார். கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கான மீன்பிடி ஆராய்ச்சி திணைக்களம் மன்னார் பிரதேசத்தில் இருக்கின்றது. அதில் தமிழர்களே சேவையாற்றுகின்றனர். ஆனால், அந்தப் பிரதேசத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்டுள்…
-
- 1 reply
- 718 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் கோட்டா இல்லை: அமெரிக்க தூதுவருடனான சந்திப்பில் முக்கிய முடிவு! 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிட மாட்டார் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபர்ட் ஹில்டன், மற்றும் டேவிட் மெக்கின்னன், ஜோரென் ரோட் மற்றும் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைக்காலமாக ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த தரப்பில் இருந்து யார் போட்டியிடப் போகின்றார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. …
-
- 1 reply
- 526 views
-
-
வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழில் முக்கிய கலந்துரையாடல்! யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை முதல் இந்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட செயலாளர், யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், யாழ் பொலிஸ் நிலையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் விவாத…
-
- 2 replies
- 590 views
-