Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக திரண்ட உறவுகள்-!! தென்மராட்சியின் பல்வேறு பிரதேசங்களை யும் சேர்ந்த 7 இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்று சுமார் 40 இற்கும் மேற்பட்டோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதைபதைப்புடன் திரண்டனர். வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் 7 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். …

    • 5 replies
    • 1k views
  2. நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி உத்தரவு திருகோணமலை, சம்பூர், பாட்டளிபுரத்தில் ஆசிரியர் ஒருவரை கொலை செய்த இருவருக்கு நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். திருகோணமலை சம்பூர் பாட்டாளிபுத்தை அண்டிய பகுதியில் 33 வயதான குருகுலசிங்கம் ஸ்ரீவதனி என்ற ஆசிரியை கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந் நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் மீது முன்வை…

  3. நாடு திரும்பினர் 27 இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து 27 இலங்கை அகதிகள் விமானம் மூலம் இன்று நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். கடந்த யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற 27 பேரே இவ்வாறு இன்று நாடு திரும்பியுள்ளனர். குறித்த 27 பேரும் 3 விமானங்கள் மூலம் இன்று கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு இலங்கை வந்த அகதிகளிடம் குடிவரவு மற்றும் குடியல்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/37979

  4. கண்டி பெண்கள் உயர் கல்லூரியின் பழைய மாணவியான கரீமா மரிக்கார் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறியை பூர்த்தி செய்தவர். 1990ஆம் ஆண்டி திருமண பந்தத்தில் இணைந்ததையடுத்து அவர் இலண்டனுக்குச் சென்றார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கரீமா மரிக்கார், இலண்டனின் ஹரோவ் கவுன்சிலின் உறுப்பினராக 2010ஆம் ஆண்டில் முதன் முறையாக தெரிவு செய்யப்பட்டார். 2017 – 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில், பிரதி மேயராக பதவி வகித்த அவர், 2018 – 2019ஆம் ஆண்டிற்கான மேயராக கடந்த மே மாதம் தெரிவானார். லண்டனின் ஹரோவ் கவுன்சிலின் முதலாவது பெண் முஸ்லிம் மேயரான இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கரீமா மரிக்காரை வரவேற்கும் நிகழ்வு கண்டியில் இன்று நடைபெற்றது. ஒரு காலத்தில் …

  5. வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? – சுமந்திரன் தகவல் வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் சி.வி.விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எமது ஆதவன் செய்திச் சேவை வினவியபோது அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனக் குறிப்பிட்டார். அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கு…

  6. சிங்­கப்பூர் போன்று முன்­னே­ற­வேண்­டு­மாயின் அனை­வரும் ஒற்­று­மை­யுடன் பய­ணிக்­க­வேண்டும் (எம்.எம்.மின்ஹாஜ்) எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் வலி­யு­றுத்தல் சட்டம் அனைத்து இனத்­த­வர்கள் மீதும் சம­மாக பிர­யோ­கிக்­கப்­பட வேண்டும். இந்த விட­யத்தில் ஒரு தலை­பட்­ச­மாக நடந்து கொண்டால் பெரும்­பான்­மை­யா­னாலும் சிறு­பான்­மை­யா­னாலும் நாட்டின் மீது அதி­ருப்­தியே ஏற்­படும் என எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். அத்­துடன் சிங்­கப்­பூரை போன்று நாமும் முன்­னேற வேண்­டு­மாயின் அனைத்து இனத்­த­வர்­களும் ஒன்­று­பட்டு இலங்­கை­ய­ராக வாழ வேண்டும். அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட்டால் சர்­வ­தே­சத்தை எம்மால் வெற்­றிக்­கொள்ள முடி…

  7. மணிவண்ணனுக்கு – நீதிமன்றால் பிணை!! தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் தாக்கல் செய்த வழக்கில் மணிவண்ணனுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது. உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் ஆணைக்குழு உறுப்பினர் என்ற வகையில் மேற்கொண்ட பணிக்காக தேர்தலின் பின்னர் தாக்குதல் தொடரும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த வி.மணிவண்ணன் அச்சுறுத்தும் வகையிலான கருத்தை வெளயிட்டார் என ஆணைக்குழு உறுப்பினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முறையீட்டின் மீதான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது குறித்த…

  8. ஒரு பிசாசை அடித்­துக் கலைப்­ப­தற்­காக ஒரு பேயை ஆத­ரித்­தோம்;சிவமோகன் எம்பி கடந்­த­கால ஆட்­சியை மாற்றி புதிய அர­சைக் கொண்டு வந்­தது அவ­ர்க­ளி­டம் பிச்சை எடுப்­ப­தற்கு அல்ல. எமது உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்கு அதற்க்காகவே ஒரு பிசாசை அடித்­துக் கலைப்­ப­தற்­காக ஒரு பேயை ஆத­ரித்­தோம். என வன்னி நாடா­ளு­மன்ற உறு­பப்­பி­னர் வைத்தியக்கலாநிதி சி. சிவ­மோ­கன் தெரி­வித்­தார். முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்டான் பிர­தே­சத்­திற்கு உட்­பட்ட கரிப்­பட்­ட­மு­றிப்பு புதி­ய­ந­கர் பகு­தி­யில் நேற்று இடம்­பெற்ற நூலகத் திறப்பு விழா­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: எல்­லோ­ரி­ட­மும் ஒரு…

  9. ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இருந்து வட மாகாண அமைச்சர்கள் இருவர் வெளிநடப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை (6.08.18) மதியம் 1.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடாத்தில் இடம் பெற்ற போது வடமாகாண அமைச்சர்கள் இருவர் குறித்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஏற்பாட்டில் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிஸாட் பதியுதீன், பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஆகியோரின் இணைத…

  10. யாழில் விரைவில் புதிய வர்த்தகதொகுதி யாழ்ப்பாணம் – பழைய சத்திர சந்தை பகுதியில் புதிய வர்த்தக தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் புதிய வர்த்தக தொகுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அதனை கட்ட முயாத நிலையில், குறித்த நிதி மீளப்பெறப்பட்டது. இந்தநிலையில் இதனை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம். …

  11. பாத்தீனிய ஒழிப்பில் வலி கிழக்கு பிரதேச சபையும் யாழ். பல்கலையும் இணைவு வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் பாத்தீனிய ஒழிப்பு முயற்சிகளுக்காக பிரதேச சபையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக திட்டமிடல் சமூகமும் இணைந்து செயலாற்ற ஆரம்பித்துள்ளன. இதன் முயற்கட்ட முயற்சியாக இன்று புத்தூர் நிலாவரைப் பகுதியிலுள்ள ஏராளமான பாத்தினியச் செடிகள் பக்குவமாக அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் பெரும்பாலான பொது இடங்களில் பாத்தீனிய செடியின் பரம்பல் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில் இதனை அகற்றுவதற்கான முயற்சியாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல்…

  12. எதிர்க்கட்சி தலைவர் யார் ? - இன்று தீர்மானம் (ஆர்.யசி) எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கான பதிலை இன்று சபாநாயகர் அறி விக்கவுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை சம்பந்தன் வகிப்பாரா அல்லது அது பொது எதிரணி வசமாகுமா என்பது குறித்த நிலைப் பாட்டை இன்று பாராளுமன்றத்தில் சபாநாய கர் கரு ஜயசூரிய தெரிவிப்பார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆளும் தரப்பில் இருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களில் 15 பேர் பொது எதிரணியுடன் இணைந்து கொண்டனர். இதனையடுத்து தாம் 70 பேர் எதிரணியில் அங்கம் வகிப்பதாகவும் ஆகவே தமக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக…

  13. ஆட்சியைக் கைப்பற்ற – புதிய அர­ச­மைப்பை பயன்­ப­டுத்­த ­வேண்­டாம்!! சிங்­கள மக்­கள் மத்­தி­யில் பெரும் செல்­வாக்­கைக் கொண்ட முக்­கி­ய­ மான அர­சி­யல் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. மீண்­டும் ஆட்சி அதி­கா­ரத்­தைப் பிடிப்­ப­தற்­காக புதிய அர­ச­மைப்பைப் பயன்­ப­டுத்­த­வேண்­டாம் என்று அவ­ரி­டம் நான் நேரில் கூறி­யுள்­ளேன். இந்த வேண்­டு­ கோளை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யின் சகல நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் முன்­வைக்­கின்­றேன். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­…

  14. அர­சி­யல்­வா­தி­களால் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு -மதத் தலை­வர்­கள் சுட்டிக்காட்டு!! அர­சி­யல்­வா­தி­க­ளின் சந்­தர்ப்­ப­வா­தக் கருத்­து­க­ளால்­தான் நல்­லி­ணக்­கத்­துக்­குப் பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது. மிக­வும் உணர்ச்­சி­பூர்­வ­மான கருத்­துக்­க­ளும் இன நல்­லி­ணக்­க­தைப் பாதிக்­கும் முதன்மை கார­ணி­யா­கும். இவ்­வாறு அஸ்­கி­ரிய மற்­றும் மல்­வத்து பீடத்­தின் தேரர்­கள் உட்­பட மதத் தலை­வர்­கள் தெரி­வித்­த­னர். இன, மத சக­வாழ்­வின் ஊடாக நிலை­யான நாடு என்ற தொனிப்­பொ­ரு­ளின் கீழ் சிறப்பு மாநா­டொன்று நேற்­றுக் காலை கண்­டி­யில் சபா­நா­ய­கர்…

  15. பலாலியில் நினை­வுத் தூபி -சிதைத்து அழிப்பு!! கடந்­த­கா­லப் போரா­லும், இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பா­லும் அழி­வ­டை­யாது, அழிக்­கப்­ப­டாது பாது­காக்­க­பப்­பட்ட புலி­கள், மற்­றும் பொது­மக்­க­ளின் நினை­வாக மக்­க­ளால் அமைக்­க­பப்­பட்ட நினை­வுத் தூபி 28 ஆண்­டு­க­ளின் பின்­னர் நேற்று அடித்து நொறுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் சம்­ப­வம் மக்­கள் மத்­தி­யில் பெரும் விச­னத்­தை­யும், கோபத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 1989ஆம் ஆண்டு இந்­திய இரா­ணு­வத்­தின் காலத்­தில் பலாலி வீதி­யில் ஆல­டிச் சந்­தி­யில் இடம்­பெற்ற வெடி விபத்­தில் வீரச்­சா­வ­டைந்த 4 புலி­கள் மற…

  16. பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளோம்: பிரதமர் Colombo (News 1st) பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு நிலம் ஒன்றைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தற்போதுள்ள காணிகளில் பணிகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கம் இரண்டு கட்டங்களாக உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதேபோன்று, காங்கேசன்துறை அபிவிருத்தி செய்யப்பட்டு துறைமுகமாக விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் காங்கேசன்துறை சீமேந்து ஆலையை அகற்றி, அந்த பகுதியில் சிறு கைத்தொழிலை விஸ்தரித்து, தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த எதிர்பார்த்…

  17. வடக்கு முதலமைச்சின் மீது- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!! வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் உள்ளிட்ட அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார். அந்த வழக்கை விசா­ர­ணைக்கு ஏற்­றுக் கொள்­வது என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்று முடி­வெ­டுத்­தது. இதை­ய­டுத்து நாளைய தினம் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. வடக்கு மாகாண மீன்­பிடி மற்­றும் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­ச­ராக இருந்­த­வர் பா.டெனீஸ்­வ­ரன். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி…

  18. அராலியில் குள்ளமனிதர் என்பது கட்டுக்கதை- வடக்கு மாகாண சபை உறுப்பினர்!! அராலி, மூளாய் போன்ற பகு­தி­க­ளில் குள்ள மனி­தர் அட்­ட­கா­சம் என்­பது கட்­டுக்­கதை. அங்கு என்ன நடக்­கின்­றது என்­பதை விசா­ரிக்க வேண்­டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஒருவர் தெரி­வித்­தார்.யாழ்ப்­பா­ணம் மாவட்ட செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்ற சிவில் பாது­காப்­புக் குழுக் கூட்­டத்­தி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரிவித்ததாவது, மக்­கள் எவ­ரும் குள்ள மனி­தர்­க­ளைக் காண­வில்லை. ஆனால் ஊட­கங்கள் மட்­டும் அவ்­வாறு கூறு­கின்­ற­னர். எனவே அது வெறும் க…

  19. இந்­தி­யப் பட­கு­களை விடு­விக்­கக் கூடாது -வடக்கு முத­ல­மைச்­சர்!! வடக்­குக் கடற்­ப­ரப்­பில் மீன்­பி­டி­யில் ஈடு­ப­டும் இந்­திய மீன­வர்­க­ளின் பட­கு­கள், மீன்­பிடி உப­க­ர­ணங்­களை மீள ஒப்­ப­டைக்­கக் கூடாது என்று தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். மன்­னார் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-, இந்­திய இழு­வைப் பட­கு­கள் அத்­து­மீறி எமது கடற்­ப­ரப்­புக்­குள் நுழைந்து நவீன முறை­க­ள…

  20. கடற்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்போம் ; செல்வம் அடைக்கலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தக் கோரியும் கடல் வளத்தை அழிக்கும் சுருக்கு வலை அனுமதியை இரத்து செய்யகோரியும் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் இன்று ஜந்தாவது நாளாக தொடர்ந்தவண்ணமுள்ளது. இந்நிலையில் இன்று இரவு போராட்டம் மேற்கொண்டுவரும் மக்களை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மீனவ உஅமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் உடன் இருந்து மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் தெரிவித்துள்ளார்கள். தா…

  21. பயணிகளின் உயிருடன் ஓட்டப் பந்தயம் நடத்திய தனியார், இ.போ.ச பஸ்கள் வவுனியா மன்னார் பிரதான வீதி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு முன்பாக நேற்று 06 மாலை 5.15 மணியளவில் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் போட்டித்தன்மை காரணமாக பயணிகள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். திருகோணமலையிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்றும் வவுனியாவிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பட்டானீச்சூர் பகுதியிலிருந்து வேப்பங்குளம் 6 ம் ஒழுங்கை வரை போட்டி போட்டுக்கொண்டு வீதியில் சமமாக சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸ…

  22. டெலோ மூத்த உறுப்பினர் எடுத்த திடீர் முடிவு! டெலோ கட்சியில் இருந்து விலகியுள்ள கட் சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கணேஷ்வேலாயுதம் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கூறியுள்ளார். மேற்படி விடயம் குறித்து யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில், கடந்த 02.08.2018ம் திகதி டெலோ கட்சியில் இருந்து விலகுவதா கட்சியின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தாவிடம் கடிதம்கொடுத்துள்ளேன். டெலோ அமைப்புக்குள் பிளவு என செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் உண்மை அதுவல்ல. நான் மட்டும் விலகி இருக்கிறேன். அதற்கான காரணம் மக்களுடைய அபிவிருத்தி, கல்வ…

    • 3 replies
    • 954 views
  23. மன்னார் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகள் எவ்வித தடையுமின்றி தங்களுடைய தேவைக்கேற்ப செயற்படுவதால் மீண்டும் விடுதலைப் புலிகள் தலை தூக்கியுள்ளதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ் சாட்டியுள்ளார். கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கான மீன்பிடி ஆராய்ச்சி திணைக்களம் மன்னார் பிரதேசத்தில் இருக்கின்றது. அதில் தமிழர்களே சேவையாற்றுகின்றனர். ஆனால், அந்தப் பிரதேசத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்டுள்…

  24. ஜனாதிபதி தேர்தலில் கோட்டா இல்லை: அமெரிக்க தூதுவருடனான சந்திப்பில் முக்கிய முடிவு! 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிட மாட்டார் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபர்ட் ஹில்டன், மற்றும் டேவிட் மெக்கின்னன், ஜோரென் ரோட் மற்றும் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைக்காலமாக ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த தரப்பில் இருந்து யார் போட்டியிடப் போகின்றார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. …

  25. வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழில் முக்கிய கலந்துரையாடல்! யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை முதல் இந்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட செயலாளர், யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், யாழ் பொலிஸ் நிலையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் விவாத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.