ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
கறுப்பு ஜூலை நினைவேந்தல் – இரங்கல் தெரிவித்தார் கனேடியப் பிரதமர் சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் கடைப்பிடிக்கும், கனேடிய மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் இணைந்து கொள்வதாக, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “ 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களை இந்த நாளில், நாம் நினைவு கூருகிறோம். அப்போது ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. பலர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர். கறுப்பு ஜூலையில் தமது குடும்பங்கள் மற்றும் நண்பர்களை இழந்தவர்களை நினைவு கூரும், தமிழ…
-
- 0 replies
- 224 views
-
-
எதிர் மனுக்களைத் தாக்கல் செய்ய முதலமைச்சருக்கு கால அவகாசம் வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் தம்மை நீக்கியதற்கு எதிராக, டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனு மீது, அளிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு, ஓகஸ்ட் 8ஆம் நாள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, முதலமைச்சர் தரப்புக்கு இந்த கால அவகாசத்தை அளித்து நீதியரசர்கள் உத்தரவிட்டனர். அத்துடன், டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உத்தரவை இடைநிறுத்திப் பிறப்பித்த உத்தரவையும், ஓகஸ்ட் 8ஆம் நாள் வரை நீதியரசர்கள் நீடித்துள்ளனர். அதேவேளை, நேற்றைய விசாரண…
-
- 0 replies
- 236 views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறுவர் வைத்தியசாலை- விரைவில் நடவடிக்கை!! யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் வைத்தியசாலை அமைக்க தேவையான நிதியை நெதர்லாந்து நாட்டின் நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள், கொழும்பு சுகாதார அமைச்சின் ஊடாக எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்ட்ம் யாழ்ப்பாண மாவடடச் செயலகத்தின் கேட்ப்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூடடத்திலே சுகாதாரத்துறை சார்ந்த விடயம் பேசப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் …
-
- 0 replies
- 282 views
-
-
விடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில் வவுனியா பூம்புகார் பிரதான வீதியில் ஒன்றில் இனந்தெரியாதவர்களினால் விடுதலைப்புலிகளின் பாடல் வரிகள் சில எழுதியிருந்தமையால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை நிலவி வருகின்றது. இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் இரவு பூம்புகார் பிரதான வீதியில் வர்ணப்பபூச்சினால் சில விசமிகளினால் விடுதலைப்புலிகளின் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அவ்விடத்தை சுற்றிவளைத்த பொலிசார் பலரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தற்போது அப்பகுதியில் புலனாய்வுப்பிரிவினர் பூரண கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விடுதலை…
-
- 1 reply
- 718 views
-
-
தமிழர் வாழ்வில்- குருதித்துயர் படிந்த கறுப்பு ஜூலை இன்று!! இலங்கைத் தமிழர் வாழ்வைப் புரட்டிப் போட்ட, மறக்கவோ -– மன்னிக்கவோ முடியாத கொடுந்துயர் நாள் இன்றாகும். வரலாற்றில் ‘ஆடிக் கலவரமாக’ அடையாளப்படுத்தப்பட்ட கறுப்பு நாள் இன்றாகும். 35 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களப் பேரினவாதிகள் ஆடிய கோரத் தாண்டவத்தில் சிக்குண்டு தமிழினம் சின்னாபின்னமாகிய நாள் இன்று. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருநெல்வேலியில் சிங்கள இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிரடித் தாக்குதல் நடத்தப்…
-
- 9 replies
- 1.7k views
-
-
முன்னாள் போராளியான பிரபாகரன், யாழ் சிறையில் மோசமாக நடத்தப்பட்டார்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கிளிநொச்சி நீதவான் நீதி மன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்ட முள்ளம்தண்டு வடம் ( இடுப்புக்கு கீழ் இயங்காத) பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியான ஒருவர் யாழ்சிறைச்சாலையில் மிக மோசமாக நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். அடிதடி பிரச்சினை ஒன்றுக்காக தர்மபுரம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட குமாரசாமி பிரபாகரன் என்பவரே தான் யாழ் சிறைச்சாலையில் மாற்றுத்திறனாளிக்குரிய எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி மிகவும் சிரப்பட்டதாகவும் தன்னை இடுப்புக்கு கீழ் இயங்காத ஒரு மனிதன் என்ற மனிதாபிமானம் இன்றி நடத்…
-
- 0 replies
- 685 views
-
-
இலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐநா கடும் அறிக்கை இலங்கையில் சித்திரவதை பரவலாக நடைமுறையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் அமைப்பு நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்த சீர்திருத்த நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் பென் எமேர்சன் இலங்கைக்கான தனது விஜயத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தனது நிலைமாற்றுக்கால நீதி குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் எவையும் உண்மையான முன்னேற்றத்தை அடைவதற்கு போதுமானவையாக காணப்படவில்லை என அவர் தெரிவி…
-
- 2 replies
- 351 views
-
-
யாழ்ப்பாண மாநகர சபை கூட்டணியின் புதிய உறுப்பினர் தெரிவு (எம். நியூட்டன்) யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் சுந்தர்சிங் விஜயகாந்தின் பதவி தானாக செயலிழந்த நிலையில் அந்த இடத்துக்கு அவரது மனைவி நர்மதா ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அரச அச்சகத் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் சுந்தர்சிங் விஜயகாந்த் போட்டியிட்டார். அவரது வட்டாரத்தில் வெற்றிபெற்ற அவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். எனினும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினராக விஜயகாந்த் பதவி ஏ…
-
- 0 replies
- 293 views
-
-
சிறிலங்கா அதிபர் பங்கேற்ற நிகழ்வில் சீன தேசிய கீதத்துக்கு முதலிடம் – வெடித்தது சர்ச்சை சிறிலங்காவில் அரச நிகழ்வு ஒன்றில் முதலில் சீனாவின் தேசிய கீதம் பாடப்பட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. அரசாங்க நிகழ்வுகளில் முதலில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். அதன் பின்னரே, ஏனைய நாட்டின் தேசிய கீதம் பாடப்படும். எனினும், கடந்த சனிக்கிழமை பொலன்னறுவவில், நடந்த நிகழ்வு ஒன்றில் இந்த நடைமுறைக்கு மாறான வகையில், முதலில் சீனாவின் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்விலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சீனாவின் உதவியுடன், அமைக்கப்படவுள்ள 200 படுக்கைகளைக் கொண்ட சிறுநீரக நோய் சிகிச்சைக்…
-
- 6 replies
- 723 views
-
-
கொழும்பில் இப்படியொரு இருப்பிடமா ? அடையாளமே இல்லாத மக்கள் கூட்டம் ! “நான் (தனது ஊரைக் குறிப்பிட்டாள்) இருந்து வேலை தேடி வந்தன். சரியான வேலை கிடைக்கல. அப்பிடியும் இப்பிடியுமா சாப்பாடில்லாம தங்க இடமில்லாம கடைசியா இங்க வந்துசேந்தன். என்னை ஏண்ட நண்பிதான் இங்க கூட்டியாந்தா......”என்று கூறும் அந்தப் பெண் கறுத்து மெலிந்து நோய்வாய்ப்பட்டதுபோல் காட்சியளித்தாள். அவளிடம் அடையாள அட்டையோ, வயதைக்காட்டும் பிறப்புச்சான்றிதழோ எதுவும் இல்லை. 65 வயது மதிக்கத்தக்க அவளுக்கு வயது 45 என்ற கூறினாள். “இப்ப என்ன வேலை செய்யிறீங்க?” எம்மை வெறித்துப் பார்த்த அவள் ‘உடம்பை விக்கிறன்’ என்றாள் சிங்களத்தில். சரளமாக தமிழும் சிங்களமும் பேசக்கூடியவ…
-
- 1 reply
- 406 views
-
-
மன்னாரில் நவீன பேருந்து நிலையம்- நிதி ஒதுக்கீட்டில் தில்லுமுல்லு!! Get real time updates directly on you device, subscribe now. Subscribe மன்னாரில் அமைக்கப்படவுள்ள மன்னார் நவீன பேருந்து நிலையத்துக்கு, 180 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 113 மில்லியன் ரூபாவுக்கே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார். மன்னார் நகர சபையின் 5 ஆவது அமர்வு, மன்னார் நகர சபையின் தலை…
-
- 0 replies
- 298 views
-
-
அனந்தியின் பிரேரணையை சபையில் அனுமதிக்க மறுப்பு! வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் கருத்து தனது சிறப்புரிமையை மீறும் செயல் என்ற வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் பிரேரணையை சபையில் அனுமதிக்கப் போவதில்லை என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அமைச்சர் அனந்தியின் கோரிக்கை கடிதத்திற்கு அவைத் தலைவர் எழுதியுள்ள பதில் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி குறித்து விவாதிக்கப்பட்ட வடமாகாண சபையின் விசேட அமர்வின்போது, அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக அஸ்மின் குறிப்பிட்டிருந்தார். இதற்கு யாழில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி பதிலளித்த அனந்தி, அஸ்மின் சபைய…
-
- 0 replies
- 631 views
-
-
யாழ்.கோட்டையை இராணுவத்துக்கு வழங்க கூடாது: ஒருங்கிணைப்புக்குழு தீர்மானம் யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாதென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இடம்பெற்ற தொல்லியல் விடயம் மீதான விவாதத்தின்போது, யாழ் …
-
- 0 replies
- 364 views
-
-
நீதிமன்றம் சென்றால் தாமதமாகுமாம்! முன்னாள் நீதியரசர் விக்கியின் விசித்திர பதில் மந்திகை ஆதார வைத்தியசாலை காணி விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் சென்றால் கால தாமதம் ஏற்படும் என முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று யாழில் இடம்பெற்றது. இதன்போது மந்திகை ஆதார வைத்தியசாலை காணி பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மந்திகை ஆதார வைத்தியசாலைக்கான நிர்மாணப்பணிகள் அனைத்தும் தயாராக இருக்கும் நிலையில் அதற்கான காணியை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படுகின்றது. வைத்த…
-
- 0 replies
- 421 views
-
-
விஸ்தீரணம் பெறும் பலாலி விமான நிலையம் வடக்கு மாகாணத்தின் பிரதான விமான நிலையமான பலாலி விமானநிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு, இலங்கை - இந்திய பிரதானிகளிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (22) இடம்பெற்ற இருநாட்டு உயர்மட்டச் சந்திப்புத் தொடர்பில், தமிழ்மிரருக்குக் கூறுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்தோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்ற…
-
- 4 replies
- 1.1k views
-
-
கறுப்பு ஜூலை- யாழ்.பல்கலைக்கழத்தில் நினைவேந்தல்!! யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் ஏற்பாட்டில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பல்கலைகழக கையிலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைகழக மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். http://newuthayan.com/story/14/கறுப்பு-ஜூலை-யாழ்-பல்கலைக்கழத்தில்-நினைவேந்தல்.html
-
- 0 replies
- 190 views
-
-
யாழில்.திடீரென மயங்கி விழுந்த மூவர் உயிரிழந்துள்ளனர். குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. கொக்குவில், பலாலி, சங்கானை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். கொக்குவில் கிழக்கை சேர்ந்த 60 வயதுடைய கார்த்திகேசு கதிர்காமத்தம்பி என்பவர் வீட்டில் பாக்கு இடித்துக்கொண்டு இருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் அவரை உடனே யாழ்.போதனா வைத்திய சாலைக்கு எடுத்து சென்றனர். இருந்த போதிலும் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். பலாலியை சேர்ந்த 30 வயதுடைய குணசீலன் குயின்சன் எனும் இளைஞன் வீட்டில் நேற்றுக்காலை பிட்டு சாப்பிட்டுக்கொண்ட…
-
- 0 replies
- 452 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வாழைச்சேனை, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆனந்தசங்கரி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுமென அக்கட்சியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார். எந்தக் கட்சியும் தம்முடன் இணைந்துகொள்ள முடியும் எனவும் அவர் கூறினார். மட்டக்களப்பு, கல்குடா தொகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கட்சி அங்குரார்ப்பண கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தலை…
-
- 0 replies
- 508 views
-
-
இலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி. இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளதாக தான் கருதுவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஜெனீவாவில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை சமர்ப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார். இதன்போது, இலங்கை விவகாரம் தொடர்பான தென்னிந்திய கட்சிகள…
-
- 0 replies
- 384 views
-
-
வடக்கு வங்கிகளில் நூறு பில்லியனுக்கும் அதிகமான பணம் சேமிப்பில் உள்ளதாக ஸ்ரீ லங்கா பிரதமர் தெரிவித்து உள்ளார். அதே நேரம் இங்கே போரால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ வருமானம் இல்லாமல் நுண்கடன் போன்ற வழிகளை நாடி பின்னர் தற்கொலை செய்யும் நிலைக்கும் போகிறார்கள். இந்த வங்கியில் உள்ள பணத்தை எப்படி இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தலாம்? பெருமளவு இலாபத்தை குறைந்த அளவு ஆபத்தான முதலீட்டில் இடும் சாத்தியம் இருந்தாலே சேமிப்பில் வைத்தவர்கள் பணத்தை எடுத்து தருவார்கள். ஆகவே இவ்வாறாக, பெருமளவு இலாபத்தை குறைந்த அளவு ஆபத்தான முதலீட்டின் மூலம் தரும், பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறத்தக்க பொருளாதார செயற்பாடுகள் எவை என்று அடையாளம் காண யாழ் களம் உதவுமா?
-
- 6 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் கொழும்பின் காலனித்துவப் பகுதி அல்ல : காணாமல் போனோர் விவகாரத்தில் யாருக்கு தண்டனை வழங்குவது; யாழில் பிரதமர் கேள்வி (ரி.விரூஷன், இ.சதீஸ்) இராணுவம் படிப்படியாக வெளியேறும் அதனை வெளிப்படையாகவே செய்வோம் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை நாட்டில் இனவாதத்தை பரப்பவேண்டாம் அனைவரும் இணைந்து பயணிப்போம் நாட்டு நிலைமை முன்னேற்றமடையும்போது இராணுவம் படிப்படியாக வெளியேறும். அவற்றை நாம் மறைத்து செய்யமாட்டோம். வெளிப்படை யாகவே செய்வோம். பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இவையும் படிப்படியாக இடம்பெற வேண்டும். தெற்கிலும் இந்த நிலை இருந்தது. யாழ்ப்பாணம் என்பது கொழும்பின் காலனித்துவப் …
-
- 0 replies
- 194 views
-
-
யாழில் பெண்கள் மகாநாடு நாளை ஆரம்பம் யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு நாளை 21 ஆம் திகதியும் நாளை மறுதினம் 22 திகதியும் யாழ்ப்பாண பொது நூலகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் பெண்கள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பிற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவுள்ளன. யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுனங்களின் இணையம் இந்த ஆய்வு மகாநாட்டை ஒழுங்கு செய்து நடத்துகிறது. முப்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பல்வேறு நாடுக…
-
- 3 replies
- 402 views
-
-
ஆசிரியர் யார்? மாணவர் யார்? -கண்டறிவதே பெரும் சிக்கல் -வடக்கு முதல்வர் கவலை!! வீதியில் ஒரு ஆசிரியர் செல்லும் போது அவரின் உடையலங்காரத்திலிருந்து ஒரு ஆசிரியர் என்பதனை முன்பு இலகுவில் அடையாளம் காணமுடியுமாக இருந்தது. ஆனால் இன்று நிலமை அவ்வாறில்லை. ஆசிரியர் யார்? மாணவர் யார்? என்று ஆராயவேண்டியுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந…
-
- 0 replies
- 403 views
-
-
‘முகாம்களும் இல்லாதுபோகும்’ வடக்கு மாகாணத்திலுள்ள முகாம்களை அகற்ற, இப்போதைக்கு எந்தவோர் அபிப்பிராயமும் இல்லை. இருப்பினும், அனைவரும் ஒன்றிணையும் நேரத்தில், அவை இயல்பாகவே இல்லாமல் போய்விடுமெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு என்பது, இலங்கையின் ஒரு பகுதியென்றும் இங்கு பயங்கரவாதம் காணப்பட்ட போதிலும், படிப்படியாகப் பயங்கரவாதம் இல்லாமல் போகும்போது, முகாம்களும் இல்லாமல் போகவேண்டுமெனக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் நேற்று (22) ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர் கூறியதாவது, “யுத்தத்துக்கு முன்பு அதிகம் சிறந்த தியாக மனப்பா…
-
- 1 reply
- 391 views
-
-
கோத்தாவுக்கோ சஜித்திற்கோ ஆட்சியை கொடுத்தால் போராட தயாராகுங்கள் - அநுரகுமார (ஆர்.யசி) மக்கள் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற மக்கள் போராட்டத்தையே நாமும் முன்னெடுத்து வருகின்றோம். இப்போது இடம்பெறும் ஊழல் ஆட்சியை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு மக்கள் அனைவருக்கும் உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ஷவுக்கோ சஜித் பிரேமதாஸவிற்கோ கொடுத்துவிட்டு மீண்டும் மக்கள் நெருக்கடியை சந்திக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு நேற்று முன்தினம் அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இதில…
-
- 2 replies
- 428 views
-