ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
யாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி யாழ்ப்பாணத்தில் வருடாந்தம் இடம்பெறும் பட்டம் விடும் போட்டி, இம்முறையும் கண்கவர் நிற பட்டங்களுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. யாழ்.அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. சரஸ்வதி சனசமூக விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் இப்போட்டி இடம்பெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த பலர், பல வடிவங்களில் கட்டப்பட்ட பட்டங்களுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர். http://athavannews.com/?p=704362-யாழில்-கோலாகலமாக-நடைபெற்ற-பட்டம்-விடும்-போட்டி
-
- 1 reply
- 850 views
-
-
‘இராணுவம் குறித்துத் தீர்மானிக்க இந்தியாவசமாவது பாரதூரமானது’ -க.கமல் ஹம்பாந்தோட்டை - மத்தள விமான நிலையம், இந்தியா வசமாவதானது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக அமையுமெனத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் இது பாரதூரமான நிலைமையைத் தோற்றுவிக்குமென்று குறிப்பிட்டார். மத்தள விமான நிலையம், இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிட்டு, விமல் எம்.பியினால் நேற்று (15) விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது, இரு பிரதான காரணிகளை முன்னிலைப்படுத்தியே, …
-
- 0 replies
- 297 views
-
-
ஆளுநர், அவைத் தலைவருடன் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்திப்பு – விக்கியின் உரைக்கு எதிர்க்கட்சி தலைவரும் இன்று பதிலடி வடக்கு மாகாண சபையின் இன்றைய சிறப்பு அமர்வு தொடர்பாக, ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஆளுநருடனும், அவைத் தலைவருடனும் சந்திப்பு நடத்தியுள்ளனர். வடக்கு மாகாண முதலமைச்சர் கடந்த அமர்வில் ஆற்றிய உரைக்கு, வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் இன்று பதிலடி கொடுக்கவுள்ளார். வடக்கு மாகாண சபையில் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் இன்று சிறப்பு அமர்வு நடைபெறவ…
-
- 0 replies
- 212 views
-
-
இன்றைய விவாதம் தேவையற்றதாம் – சிறப்பு அமர்வில் ரெலோ பங்கேற்காது வடக்கு மாகாண சபையில், டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் இன்று நடைபெறும் சிறப்பு அமர்வில் பங்கேற்பதில்லை என்று ரெலோ முடிவு செய்துள்ளது. இன்றைய சிறப்பு அமர்வு தேவை யற்ற ஒன்று என்றும், இந்த அமர்வில் பங்கேற்பதானது, அமர்வை ஏற்றுக் கொள்வதாக அமைந்து விடும் என்பதால், சிறப்பு அறிக்கையைச் சமர்பித்து வெளியேறுவதற்கு அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது. ரெலோவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. உயர்ம…
-
- 0 replies
- 425 views
-
-
புதிய அரசமைப்பு வரைவு புதனன்று சமர்ப்பிக்கப்படும் புதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் உப பிரிவு 6இன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, மேற்படி புதிய அரசமைப்பின் வரைவு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக, அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில், பல்வேறு கட்சியினர் வழங்கிய யோசனைகள் அடங்கிய குறிப்பொன்றும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, அவர் க…
-
- 0 replies
- 324 views
-
-
விஜயகலா விவகாரம்; பிரசன்ன, விமலிடம் இன்று விசாரணை ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீர ஆகிய இருவரையும், இன்றைய தினம் (16), நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து குறித்து, இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற குழப்பம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 295 views
-
-
’’வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது’’ வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்கத் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் சில பணிகள் தொடர்பிலும் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களிலும் பிழையான செய்திகள் வெளியிடப்படுவதாகவும், இதனால் நாட்டு மக்கள் மத்தியில், இராணுவம் தொடர்பிலான தவரான அபிப்ராயம் ஏற்படுவதாகவும் அவர் ஊடகங்ளுக்கு இன்று (15) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். "யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் இராணுவம் நிர்வாகக் கடமைகளுக்கு அப்பால் பல்வேறு அபிவிருத்தி மற்று…
-
- 1 reply
- 260 views
-
-
அமெரிக்கா புறப்பட்டார் அதுல் கெசாப் – வழியனுப்ப குவிந்த அமைச்சர்கள், இராஜதந்திரிகள் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சிறிலங்காவில் தனது பணிகளை முடித்துக் கொண்டு நேற்றிரவு – தனது குடும்பத்தினருடன் கொழும்பில் இருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார். மூன்று ஆண்டுகள் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்த நிலையில், அதுல் கெசாப் அமெரிக்கா திரும்பியுள்ளார். இதனை முன்னிட்டு, அவரை வழியனுப்புவதற்காக, நேற்று அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில், சிறிலங்காவின் அமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கூடியிருந்தனர். சிறிலங்காவின் நிதியமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம், …
-
- 0 replies
- 355 views
-
-
சிறிலங்காவில் மரண தண்டனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஐரோப்பிய நாடுகள் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர எடுத்துள்ள முடிவு குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது அதிருப்தியை வெளியிடவுள்ளனர். உலகளாவிய ரீதியாக மரண தண்டனைக்கு எதிராக கடைப்பிடிக்கும் பொதுவான நிலைப்பாட்டுக்கு அமைய, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதரகங்கள் இந்த அதிருப்தியை வெளிப்படுத்தவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எங்கெல்லாம், மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதனை நிறுத்துமாறு அரசாங்கத்தை கோருவோம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. “உலகளாவிய ரீதியாக மரண தண்டனைக்கு எதிரா…
-
- 0 replies
- 108 views
-
-
கொழும்பில் கடலை நிரப்பி 85 ஏக்கரில் கடற்கரைப் பூங்கா கொழும்பு நகரில், கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெகிவளை வரை, கடலை நிரப்பி, கடற்கரைப் பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது. 300 மில்லியன் டொலர் செலவில் இந்தத் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது கொழும்பில் காலிமுகத்திடலை ஒட்டியதாக – கடலை நிரப்பி உருவாக்கப்பட்டு வரும், கொழும்பு துறைமுக நகரப் பணிகள் முடிவடைந்ததும், கடற்கரைப் பூங்காவை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்தவாரம் இணக்கம் தெரிவித்ததாக, சிறிலங்காவின் பெருநகர , மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ரூபசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெகி…
-
- 0 replies
- 176 views
-
-
நல்லூர் கோவிலுக்கு, இராணுவம் வரலாம், போலீசார் வரலாம், வெள்ளைக்காரன் வரலாம்.... ஆனால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டும் தமது வேண்டுதல்களுக்காக வரக்கூடாது. கதவடைக்கும் நல்லூர் கோவில் நிர்வாகம். இவர்களின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
-
- 13 replies
- 1.2k views
-
-
காலத்தை இழுத்தடிக்காமல் தீர்வை முன்வையுங்கள் -இந்திய வெளியுறவு செயலர் ஜனாதிபதியிடம் வலியுறுத்து தேசிய பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகவே தீர்வைக் காண வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் மக்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வலியுறுத்துகின்றனர்.எனவே, இலங்கை அரசு தீர்வு விடயத்துக்கு முதலிடம் கொடுத்து அதனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்திய வெளிவிவகார செயலர் விஜய் கோகலே வலியுறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார செயலர் விஜய் கோகலே- ஜனாதிபதி, பிரதமர், …
-
- 2 replies
- 572 views
-
-
வடக்கில் இராணுவ முகாம் அகற்றுவதாக தொடர்பான அறிக்கை ஒன்று இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு, இலங்கை இராணுவம் அனைத்து நேரங்களிலும் நாட்டில் இடம்பெறும் பாதுகாப்பு தேவைகளுக்கு தயாராகவுள்ளது. யுத்த காலத்தினுள் நாட்டிற்காக சிறந்த சேவையாற்றி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவம் தற்பொழுது அரசினால் ஆரம்பித்திருக்கும் இனத்தை கட்டியெழுப்பும் திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ளுகின்றன. இருந்த போதிலும் இராணுவத்தினால் நாட்டின் எதிர்காலத்தின் நிமித்தம் மேற்கொள்ளும் பணிகளுக்கு அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களில் தவறான முறைகளில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அகையால் இந்நாட்டு மக்களின் மனத்தினுள் இராணுவம் தொடர்பான தவரான …
-
- 0 replies
- 580 views
-
-
தமிழ் திரைப்படங்களை சாடுகின்றார் சட்டமொழுங்கு அமைச்சர் தமிழ் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைகளே ஆவா குழுவினரின் வன்முறைக்கு காரணம் என இலங்கையின் சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். தமிழ்திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைகளில் பின்பற்றுவதன் மூலம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் ஆவா குழுவினர் பின்னர் கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் அங்குள்ள நிலைமை குறித்து தனக்கு எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஆவா குழுவினர் வாள்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். …
-
- 4 replies
- 1.1k views
-
-
வடக்கில் திருடர்களையும்– ஆவாக்களையும் ஊக்குவிக்கும் காவற்துறை– தவிக்கும் மக்கள்… முறிகண்டி – அக்கராயன் வீதியில் திருடர்களை மடக்கிப் பிடித்த போதும் நடவடிக்கை எடுக்காத காவற்துறை…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் இன்று மாலை பெண் ஒருவருடைய தாலி கொடியை அறுக்க முயன்றவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் கொள்ளையர்களை காவற்துறை நிலையத்தில் ஒப்படைத்தபோதும் காவற்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முறிகண்டி அக்கராயன் வீதியில் தொடர்ச்சியாக பெண்களின் நகைகள் அறுத்து செல்லப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இம்மாதம…
-
- 6 replies
- 2k views
-
-
என் எண்ணம் தவறானது! சி.வி. விக்னேஸ்வரன் என்னுடைய எண்ணம் தவறாகிவிட்டது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “வடக்கை வந்து பார்த்து மக்களின் கருத்துக்களை அறிந்து செல்லுமாறு நீங்கள் விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒத்துக்கொண்டுள்ளாரே. இதுபற்றி?” உங்களுடைய எண்ணப்பாடு என்னவென்ற வாராந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆம். அவர் தனி சிங்களத்தில் கடிதங்கள் அனுப்பியுள்ளார். அவற்றை மொழிபெயர்க்கக் கொடுத்துள்ளேன். தொடக்கமே பிழைபோலத் தெரிகிறது. மேலும் நான் அவருக்கு வடக்குக்கு வந்து செல்லுமாறு கூறியதன் பின்னரே அவர் விஜயகலா சம்…
-
- 1 reply
- 879 views
-
-
வடக்கில் சர்வாதிகாரியை கோருகின்றனர். தெற்கில் ஹிட்லரை கோருகின்றனர்….. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… நாட்டின் தெற்கில் ஹிட்லர் ஒருவர் ஆட்சிக்கு வந்தால், நாடு எந்த திசையை நோக்கி செல்லும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மகிந்த ராஜபக்ஸவின் நம்பிக்கை வட்டத்துள் இருப்பவருமான குமார வெல்கம கேள்வி எழுப்பியுள்ளார். களுத்துறையில் நேற்று கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். விஜயகலா வடக்கிற்கு சென்று எமக்கு பிரபாகரன் தேவை என்கிறார். பிரபாகரன் ஜனநாயக தலைவரா?. பிரபாகரன் என்பவர் சர்வாதிகாரி. அதேபோல் தெற்கில் உள்ள தமக்கு ஹிட்லர் ஒருவர் வே…
-
- 0 replies
- 201 views
-
-
காணாமல்போனோர் அலுவலகத்தை முற்றாக புறக்கணித்த உறவினர்கள் கிளிநொச்சியில் காணாமல்போனோர் அலுவலகம் நடத்திய கலந்துரையாடலை புறக்கணித்த காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காணால்போனோர் அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தினர். அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட காணாமல்போனர் அலுவலக அதிகாரிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெறவிருந்தது. இதன்போதே குறித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகாரிகளுடனான சந்திப்பினை புறக்கணித்து கூட்டுறவு சபை மண்டபத்திற்கு வெளியில் காணாமல்போனோரது புகைப்படங்களை கையில் ஏந்தியவாற…
-
- 1 reply
- 490 views
-
-
யாழ்.குடாநாட்டில் மேலும் 522 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம் யாழ்.குடாநாட்டில் மேலும் 522 ஏக்கர் காணிகளை சிறிலங்கா இராணுவம் உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக, மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார். யாழ். குடாநாட்டில் இன்னமும், 3100 ஏக்கர் தனியார் காணிகள் மாத்திரம், சிறிலங்கா இராணுவத்தினரின் வசம் உள்ளதாகவும், ஏற்கனவே, 3800 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். ”தனியார் காணிகளில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு, 880 மில்லியன் ரூபாவை, புனர்வாழ்வு புன…
-
- 1 reply
- 685 views
-
-
பகிரங்கமாக பல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் முன்னாள் அரசியல் கைதி!! ...... ஜெயராம் ராம்நாத்
-
- 2 replies
- 376 views
-
-
விக்னேஸ்வரனிடம் தகவல் பெறவேண்டிய அவசியமில்லை - இராணுவ பேச்சாளர் (நா.தனுஜா) வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தகவல் பெற வேண்டிய அவசியம் இராணுவத்தினருக்கு இல்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை உரிய விதத்தில் செயற்படுத்துவோம் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வடமாகாண அரச அதிகாரிகள் இராணுவத்தினருக்கு எவ்விதமான தகவல்களையும் வழங்கக் கூடாது எனவும், அவ்வாறு வழங்க வேண்டிய அவசியம் ஏற்படுமாயின் தன்னிடம் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடு…
-
- 1 reply
- 494 views
-
-
கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவதில் தவறில்லை: அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள் அறிவிப்பு (ஆர்.யசி) நாட்டு மக்களின் பொது நலனுக்காக குற்றங்களை தடுக்கவும் சமூகத்தை நல்வழிப்படுத்தவும் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவதில் தவறில்லை என இலங்கையின் பிரதான பெளத்த பீடங்களான அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடங்கள் தெரிவித்துள்ளன. பெளத்த கொள்கையின் மேலாதிக்கம் இருந்த போதிலும் சமூக சிந்தனைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்கட்டியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் கூடிய பாரிய குற்றங்களை செய்யும் சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது குறித்து சமூ…
-
- 1 reply
- 339 views
-
-
வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துள்ளோம்..... எம்.ஏ.சுமந்திரன் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் தாமதம், வடக்கின் அசாதாரண சூழ்நிலை,70 ஆண்டுகால தமிழரின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையினால் மக்கள் அதிருப் டையடைந்துள்ளனர். அரசாங்கத்தை சார்ந்தேனும் நலன்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ள காரணத்தினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளனர். நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படக் கூடாதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே இது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.அதேபோல் வடமாகாண சபையை பலப்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது.…
-
- 2 replies
- 876 views
-
-
கோத்தபாய அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிக்கு பொருத்தமானவர்! பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த… முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிக்கே மிகவும் பொருத்தமானவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார். பெல்மதுளை, ரில்லேன பௌத்த விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் ஜனாதிபதி கதிரையில் அமரவேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ஸ அடம்பிடித்து வருவதாக தெரிவித்த அவர் இலங்கையில் ஜனாதிபதியை தெரிவு செய்வது மஹிந்த ராஜபக்ஸ அல்ல என்றும் நாட்டு மக்களே தெரிவு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 606 views
-
-
‘கூட்டமைப்பு நடிக்கின்றது’ யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடித்து வருவதாக, யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் கே.எம்.நிலாம் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், “வீட்டுத் திட்டம் வடக்கு மாகாண செயலணி ஊடாக செயற்படுத்தப்படவுள்ள நிலையில், அத்திட்டம் மத்திய அரசாங்கத்தால் வழங்க முடியாது எனவும் ஆனால், குறித்த வீட்டுத் திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே வழங்க முடியும் எனவும், வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார். “இவர், யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம் உள்ளிட்…
-
- 1 reply
- 244 views
-