ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
விஜயகலா புலம்பெயர் புலிகளின், நெருப்புக் கிடங்கில் பெற்றோல் ஊற்றியுள்ளார்… இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வது குறித்த பிரச்சினைக்கு தீர்வாக அமையப்போவதில்லை. அந்த விவகாரத்தை மூடி மறைப்பதற்கான நடவடிக்கையாகவே இராஜினாமா கலாசாரத்தை அரசாங்கம் முன்னெடுக்கிறது. எனினும் அவருக்கு எதிராக ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து கூட்டு எதிர்க்கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளரர் சந்திப்பு பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதன…
-
- 0 replies
- 221 views
-
-
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்த திடீர் முடிவு சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சுப் பதவியை இன்று இராஜினாமாச் செய்யவுள்ளார் என்று தெரிய வருகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பெரும் பரபரப்பையும் தீவிர எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேற்றைய தினம் தலைமைஅமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுடன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் விஜயகலா மகேஸ்வரன் இன்று தனது அமைச்சுப…
-
- 9 replies
- 1.2k views
-
-
யாழ். நாடக விழாவுக்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு யாழ்ப்பாண பல்கலைக்கழக்தின் நுண்கலைத் துறையும், “வெறுவெளி அரங்கக் குழுவும்” இணைந்து ஏற்பாடு செய்யும் நாடக விழாவுக்கான செலவினை பெற்றுத்தருமாறு நுண்கலைத்துறை மாணவர்கள் ஜனாதிபதி கோரியதன் பேரில் அந்நிதியினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அன்பளிப்பு செய்தார். இதற்கான காசோலையினை கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நுண்கலைத் துறையின் வெறுவெளி அரங்கக் குழுவின் தலைவரும் நுண்கலைத் துறையின் மாணவனுமாகிய ச. சுஜீவனிடம் இதற்கான காசோலையினை ஜனாதிபதி வழங்கி வைத்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக்தின் நுண்கலைத் துறையின் விரிவுரையாளர் கலாநிதி க.ர…
-
- 0 replies
- 228 views
-
-
ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பு தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிப்பதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சட்ட அணுகுமுறைகளின் அடிப்படையில் இடம்பெறுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில், அவரின் விடுதலையை வலியுறுத்தி பொதுமக்களின் கையெழுத்துக்கள் அடங்கிய மனுவொன்று வட மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரனினால் ஜனாதிபதியிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் லக்ஷ்மி ஜயவிக்ரமவின் கையெழுத்துடன், வட மாகாண …
-
- 0 replies
- 221 views
-
-
இவ்வருடத்திற்குள் தீர்வை பெற்றுக்கொடுப்பதில் அமெரிக்கா உறுதி! – சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா.வுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இவ்வருடத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எமது ஆதவன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வந்த அதுல் கெஷாப், தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை இன்று (வியாழக்கிழமை) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதோடு, புதிய உயர்ஸ்தானிகரையும் அறிமுகப்படுத்தினார். குறித்த சந்திப்பைத…
-
- 7 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் கரும்புலி நாள் நினைவு கூரப்பட்டுள்ளது தமிழிழ விடுதலைப் புலிகளினால் வருடாந்தம் யூலை ஐந்தாம்திகதி அனுஷ்டிக்கப்பட்டு வந்த கரும்புலி நாள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில்நினைவுகூறப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து 2009 ஆம்ஆண்டுக்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்முதற் கரும்புலியான மில்லரின் வீர மரணத்தை நினைவகூறும் நிகழ்வுகள் பகிரங்கமாகஇடம்பெற்றிருக்கவில்லை. எனினும் இம்முறை யாழ்ப்பாணத்திலுள்ள கரும்புலி மில்லரின் நினைவுஇடத்தில் இன்றைய தினம் கரும்புலி நாள்நினைவுகூறப்பட்டுள்ளது. மில்லர் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த யாழ்ப்பாணம் நெல்லியடியில் இன்றுமதியம் இந…
-
- 2 replies
- 657 views
-
-
அமைச்சர்களின் நியமனப் பிரச்சினையை சர்ச்சைக்குரிய விடயமாக்கியது முதல்வரே-வடக்கு மாகாண அவைத்தலைவர்!! வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் நியமனங்களில் ஏற்பட்ட பிரச்சினையை மிக இலகுவாக தீர்த்து இருக்கலாம். ஆனால் அதனை சர்ச்சைக்குரிய விடயமாக்கியது வடக்கு மாகாண முதல்வர் சி.சி.விக்னேஸ்வரன். அவர் மிகப் பெரும் தவறு செய்து விட்டார் என்று வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண அவைத்தலைவரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தா…
-
- 0 replies
- 369 views
-
-
அக்கராயனை ஆண்ட ஈழக் குறுநில மன்னன் அக்கிராசனுக்கு பிரமிப்பான சிலை : ஈழத்தில் 13ஆம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்த அக்கிராசன் என்ற குறுநில மன்னனுக்கு இன்று சிலை திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியிலேயே இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. அக்கிராசன் மன்னன் கிளிநொச்சியின் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்துள்ளதுடன் அக்கராயன் குளத்தையும் கட்டுவித்துள்ளார். இவரது பெயரால் அழைக்கப்பட்ட இந்தப் பிரதேசம் அக்கிராசன் என்பது மருவி அக்கராயன் என காலப்போக்கில் அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்க…
-
- 0 replies
- 633 views
-
-
விஜயகலா குறித்து கொந்தளிப்பவர்கள் ஹிட்டலர் விடயத்தில் அமைதிகாப்பது ஏன்? (ரொபட் அன்டனி) புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை அரசாங்கத்தினால் எடுக்கப்படும். இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட பின்னரே தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து யாரும் அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நாங்கள் ஹிட்லரை ஊக்குவிப்பதையும் நிராகரிக்கின்றோம்.பிரபாகரனை ஊக்குவிப்பதையும் நிராகரிக்கின்றோம். ஆனால் தென்னிலங்கையில் சிலர் ப…
-
- 2 replies
- 445 views
-
-
வடக்கில் பாதாள உலகத்தவர்களின் செயற்பாடுகள் அதிகம்- ருவான் வடக்கில் பாதாள உலகத்தவர்களின் செயற்பாடுகள் அதிகமாக உள்ளன என தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவது முற்றிலும் பொய் என குறிப்பிட்டுள்ளார் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் தேசிய பாதுகாப்பு குறித்து மக்கள் கவலையடைந்துள்ளனர் என நான் நினைக்கவில்லை. தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் தெரிவிப்பதன் மூலம் எதிர்கட்சியை சேர்ந்த சிலர் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயல்கின்…
-
- 1 reply
- 725 views
-
-
விடுதலைப்புலிகளை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும். நாங்கள் உயிரோட வாழ வேண்டுமானால், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடமாட வேண்டுமாக இருந்தால், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலை க்குச் சென்று (பாதுகாப்பாக) வீடு திரும்ப வேண்டுமாக இருந்தால், வடக்குக் கிழக்கிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும். அதற்கு அப்பால் எதையுமே இந்த அரசாங்கம் செய்யவில்லை” என்று பெரியதொரு “குண்டை” எறிந்திருக்கிறார் விஜயகலா மகேஸ்வரன். இந்தக் “குண்டு” மறுநாள் (03.07.2018) பாராளுமன்றத்தில் பெரிதாக வெடித்திருக்கிறது. சபையைத் தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்குப் பாராளுமன்றத்தில் கடுமையான விவாதங்களும் எதிர்ப்புக் கூச்சல்களும் இடம்பெற்றுள்ளன. “அரசாங்கத்தரப்பிலுள்ள அமைச்சர் ஒருவர் எ…
-
- 1 reply
- 795 views
-
-
தொழிற்நுட்ப துறையில் வவுனியா இளைஞன் கின்னஸ் சாதனை வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மல்ரி பிளக் (நீள் மின் இணைப்பு பொருத்தி) ஒன்றை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 28 வயதுடைய இயந்திரவியல் பொறியிலாளரான இளைஞனே மேற்படி கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார். அந்தவகையில் 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை தயாரித்து கின்னஸ் சாதனையாளர் என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார். க.கணேஸ்வரன் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபர், மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கி…
-
- 3 replies
- 850 views
-
-
கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து கைக்குண்டுகள் மீட்பு மட்டக்களப்பு லவ் லேனில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து இன்று இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஆளுனரின் விடுதிக் கட்டிடத்திற்கு அருகாமையிலுள்ள வாகனத்தரிப்பிட வளவினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மேற்படி கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மட்டக்களப்பு காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து , காவல்துறையினரும் குண்டு செயலிழக்கச் செய்யும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குண்டுகளை மீட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மட…
-
- 0 replies
- 218 views
-
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதி உணவகம் திறந்து வைப்பு (படங்கள்இணைப்பு ) சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியின் கீழ் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ விடுதி,வைத்திய நிபுணர்களுக்கான தங்குமிட விடுதி மற்றும் அமுதம் ஆரோக்கிய உணவகம் ஆகியவை இன்று வியாழக்கிழமை (5) மதியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. -மன்னார் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.என்.கில்றோய் பீரிஸ் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகிய…
-
- 2 replies
- 472 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதில் பாதிப்பில்லை - பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் போது எமக்கு சீனாவிடமிருந்து எந்தவொரு அழுத்தமும் வரவில்லை. அவ்வாறு அழுத்தம் வந்திருந்தால் மத்தள விமான நிலையத்தை நாம் இந்தியாவுக்கு வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அம்பாந்தோட்டை துறைமுகம் முன்னைய ஆட்சியின்போது 1320 மில்லியன் டொலர் கடன் பெற்றே நிர்மாணிக்கப்பட்ட…
-
- 0 replies
- 274 views
-
-
பதவி விலகினார் ஜனாதிபதி செயலாளர் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒஸ்டின் பெர்ணான்டோவிற்கு பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு எனினும் அவர் பதவியை இராஜினாமா செய்தமைக்கான காரணத்தை வெளியிடவில்லை. 2015 இல் சிறிசேன ஜனாதிபதியான பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/36081
-
- 0 replies
- 383 views
-
-
சிறுத்தை விவகாரம்: பத்து பேரும் பிணையில் விடுதலை அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை கொன்ற வழக்கில் கைதான 10 பேரும் பிணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.. கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றின்மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கை எடுத்துக்கொண்ட கிளிநொச்சி நீதவான் சந்தேகநபர்கள் 10 பேரையும் தலா ஐந்தாயிரம் ரூபா காசு பிணையிலும் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/36065
-
- 0 replies
- 268 views
-
-
நோக்கன் திருவிளையாடல் புராணத்தில் நாரதரின் பங்கு அளப்பரியது. கலகத்தை உண்டாக்கி அதனூடாக தமது நோக்கத்தை நிறைவேற்றவென சிவபெருமான் நாரதரைப் படைத்திருந்தார். கலகங்களின் மூலம் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் நடைபெறுவதாகக் கணக்கெடுப்பு ஒன்று உண்டு. இது ஒரு புராணக் கதையாக இருந்தாலும் தற்போதைய நடைமுறைகளுக்கும் அது பொருந்தக்கூடியதே. தேவலோகத்தில் கலகம் என்றால் நாரத முனி போல பூலோகத்தில் இருப்பவர் சுமந்திர முனி. அதுவும் அவர் ஒருவரால் எய்யப்பட்ட அம்பு என்பது தற்போது உலகறிந்த விடயம். எய்தவன் என்ன நோக்கத்தோடு எய்தானோ? அந்த அளப்பரிய பணியை அம்பாகிய சுமந்திர முனி செய்து முடித்திருக்கிறார். இதற்குப் பலிக்கடாவாகிப் போனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஒழிய தமிழ் மக்கள் அல்ல என்பதையும் அனை…
-
- 0 replies
- 407 views
-
-
விஜயகலா விவகாரம்- புலிகளின் என்றவுடன் கூச்சலிட்ட உத்தியோகத்தர்கள்- – விசாரணை தீவிரம்!! உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர், என்.வேதநாயகன் கடிதம் மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார் என்று அறியமுடிடகிறது. ‘அரச தலைவர் மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் 8 ஆவது நிகழ்வு கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெ…
-
- 2 replies
- 579 views
-
-
விக்கி , விஜயகலா , சிவாஜிலிங்கத்தை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்ப வேண்டும் : என்கிறார் ரஞ்சன் விஜயகலா மகேஸ்வரன் , விக்னேஸ்வரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் புனர்வாழ்வு முகாமிலிருந்து இடமாற்றம் பெற்று சென்ற இராணுவ அதிகாரியொருவரை அங்குள்ளவர்கள் எந்தளவுக்கு கௌரவமளித்துள்ளனர். ஆனால் விஜயகலா போன்றோர் மீண்டும் விடுதலை புலிகள் உருவாக வேண்டுமென கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் மாத்திரமன்றி விக்னேஸ்வரன் மற்றும் சிவாஜி ல…
-
- 3 replies
- 762 views
-
-
புலிகளின் சீருடைகள், ஆயுதங்கள் மீட்பு மெதிரிகிரிய பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடையது என சந்தேகிக்கப்படும் சீருடைகள் மூன்று, ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ஒருதொகை ரவைகள், சிறிய ரக குண்டுகள் மூன்று, ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/புலிகளின்-சீருடைகள்-ஆயுதங்கள்-மீட்பு/150-218485
-
- 2 replies
- 564 views
-
-
’மாவையையே முதலமைச்சராக நியமிக்க வேண்டும்’ -டி.விஜிதா வடமாகாண முதலமைச்சராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், இது எனது தனிப்பட்ட விருப்பம் எனவும் குறிப்பிட்டார். வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் வீட்டில் இன்று (04) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளை கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலின் போது, …
-
- 2 replies
- 588 views
-
-
வவுனியா, மன்னாரில் இருந்து குடாநாட்டில் குவிக்கப்படும் சிறிலங்கா காவல்துறையினர் யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக காவல்துறையினர், அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ். குடாநாட்டில் அண்மைய நாட்களாக வாள்வெட்டுகள், பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், கொள்ளைகள் போன்ற சமூக குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால் குடாநாட்டில் பொதுமக்கள் மத்தியில் அச்சமும், சிறிலங்கா அரச தரப்பின் மீது கடும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறி விட்டதாக, தமிழ் அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், நேற்று திடீரென, யாழ். ம…
-
- 2 replies
- 521 views
-
-
விஜயகலா குறித்து வாய்திறந்தார் கோத்தா (எம்.சி.நஜிமுதீன்) சர்வதேச ரீதியில் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருக்கும் கருத்து அரசியலமைப்பை மீறும் செயற்பாடாகும். எனவே அரசியலமைப்பை மீறியவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மாகாண சபை உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமை பெறும் வைபவம் நேற்று பத்தரமுல்லையிலுள்ள அ…
-
- 1 reply
- 630 views
-
-
டெனீஸ்வரன் விவகாரம்: வடக்கு ஆளுநர் மற்றும் முதல்வருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!! மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை இதுவரை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண அமைச்சராக இருந்த பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதாக கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தா…
-
- 1 reply
- 356 views
-