ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
மானிப்பாயில் வயோதிபப்பெண் கழுத்தறுத்து கொலை (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தம்பையா லீலாதேவி என்ற வயோதிபப் பெண்ணெருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மானிப்பாய் கல்லூரி ஒழுங்கையில் வசித்து வரும் வயோதிபர் ஒருவரை பராமரித்து வருபவர். லீலாதேவி, அவர் நேற்றுக்காலை பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் ஊன்றுகோலின் உதவியுடன் பிச்சை கேட்டு வந்துள்ளார். இதன்போது லீலாதேவியும் அந்த நபருக்கு உதவி செய்துள்ளார். இதன் பின்னர் வீட்டுப் பணிகளைச் செய்துகொண்டிருந்தபோது மீண்டும் குறித்த பிச்சைக்காரர் வீட்டினுல் நுழைந்து வீட்டின் சமயலறைக்குல் வைத்து லீலாதேவியை …
-
- 5 replies
- 1k views
-
-
பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி’! - பிபிசி ஆனந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்து விட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னைத் தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள். அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறுமி படுகொலைக்கு நீதி கோரி வடக்கில் இன்று கடையடைப்பு! யாழ், சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜினாவிற்கு நீதிகோரி வடக்கு மாகாணம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று வடக்கு மாகாணம் முழுவதும் சிறுமியின் படுகொலையை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிந்தனர். இந்நிலையில் குறித்த கடையடைப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வடக்கின் சில பகுதிகளில் இன்னும் கடையடைப்பு போராட்டம் முழுமை பெறவில்லையென எமது பிராந்திய ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கடையடை…
-
- 0 replies
- 486 views
-
-
பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்டவர்களே ஆரம்ப பிரிவு மாணவர்களை அழைத்து செல்ல முடியும்: வடக்கில் வருகிறது புதிய நடைமுறை! June 28, 2018 வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்டவர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார். மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் படுகொலை தொடர்பாக அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று…
-
- 1 reply
- 714 views
-
-
சீனாவிடம் மகிந்த பெற்ற தேர்தல் நிதி ஐக்கிய அரபு எமிரேட்சில் – திலக் மாரப்பன விசாரணை கடந்த அதிபர் தேர்தலின் போது சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நிதியை, மகிந்த ராஜபக்ச ஐக்கிய அரபு எமிரேட்சில் வைப்பில் இட்டுள்ளாரா என்று, அந்த நாட்டு அரசாங்கத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திடம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று அதிகாரபூர்வமாக விசாரித்துள்ளார் என்று, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தகவல் வெளியிட்டுள்ளார். “நம்பகமான தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை சிறிலங்கா எழுப்பியுள்ளது. ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் இருந்து 7.6 மில்லியன் டொலர் கிடைத்ததாக நியூயோ…
-
- 0 replies
- 167 views
-
-
இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டை சிறிலங்கா பொதுஜன முன்னணி தளர்த்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணிக்கும், சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் நேற்று நடந்த பேச்சுக்களின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. நெலும் மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் செயலகத்தில் நேற்று நடந்த சந்திப்பில் 16 பேர் அணியின் சார்பில், 12 உறுப்பினர்கள் பங்கேற்றனர். எஸ்.பி.திசாநயக்க, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, சுமேதா ஜெயசேன ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை. சி…
-
- 0 replies
- 148 views
-
-
இழப்பீட்டுப் பணியக சட்டமூலம் அரசிதழில் வெளியீடு இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம், சிறிலங்கா அரசாங்கத்தினால் அரசிதழ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு .இழப்பீடுகளை வழங்குவதற்கான இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் கீழ், இழப்பீடுகளை வழங்குவதற்கான சட்டமூலம், அரசிதழ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அரசிதழ் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த சட்டமூலம், விரைவில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முதலாவது வாசிப்ப…
-
- 0 replies
- 195 views
-
-
அதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடு பெரிதாக இருக்காது – மகிந்த நம்பிக்கை சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என்று எதிர்வு கூறியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பதவிக்கு வந்த பின்னர் அமெரிக்காவின் கொள்கைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. அவர்களின் வெளிவிவகாரக் கொள்கைகள் சற்று கூடியதாக, குறைந்ததாக அல்லது சமமானதாகவே உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அண்மையில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புடனான சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள…
-
- 0 replies
- 152 views
-
-
சிறுமி கொலை; யாழில் வீதிமறியல் போராட்டம் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்திலிருந்து காரை நகர் செல்லும் வீதியை மறித்து சுழிபுரம் காளுவன் சந்தியில் பொதுமக்கள், பெற்றோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீதி மறியில் போராட்டமானது இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இதனால் அப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/35657
-
- 6 replies
- 1.6k views
-
-
மாண்புமிக்க இனமொன்றை அரசாங்கம் மௌனமாகக் கொல்கின்றது – பல்கலை மாணவர் ஒன்றியம் மாண்புமிக்க இனமொன்றை இராணுவ இயந்திரத்தின் துணையோடு இலங்கையின் பேரினவாத அரசாங்கம் மௌனமாகக் கொலைசெய்கின்றது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எங்கள் தேசத்தாய் துடிக்கத் துடிக்க நஞ்சூட்டப்படுகிறாள். எங்கள் தமிழ்த்தாய் வெட்கித் தலைகுனிந்து அவமானத்தில் அழுது புரள்கிறாள். எங்கள் தமிழீழத்தாய் இரத்தக்காட்டேறிகளின் கோரப்பற்களால் குதறப்பட்டுக் குருதி மழையில் நனைந்துகிடக்கிறாள். அந்தத்தாயின் பிள்ளைகளாகிய நாம், எங்க…
-
- 0 replies
- 784 views
-
-
மாகாணசபை தேர்தல் விடயத்தில் அனைத்து கட்சிகளும் பொதுவான தீர்மானத்துக்கு வரவேண்டும் தேர்தல்கள் என்பது ஒரு நாட்டின் ஜனநாயக கட்டமைப்பின் முக்கியமானதொரு அம்சமாக காணப்படுகிறது. ஜனநாயக நாடொன்றின் மக்களின் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டுமென்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான ஒரு விடயமாகும். தமக்கான பிரதிநிதிகளை மக்கள் தெரிவுசெய்துகொள்வதற்கு முறையான வகையில் ஜனநாயகக் கட்டமைப்பில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டியது அவசியமாகிறது. அதனூடாகவே ஜனநாயகத்தின் விழுமியங்களையும் பண்புகளையும் பாதுகாக்க முடியும். எனவே மக்களின் ஜன…
-
- 0 replies
- 448 views
-
-
இந்தியப் படகுகளை மீட்க வருகிறது அதிகாரிகள் குழு!! இந்திய மீனவர் அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் இன்று தமிழகத்தில் இருந்து கொழும்பு வரவுள்ளனர். எல்லை தாண்டிய மீன்பிடி யில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்க ளின் படகுகளில் 10 படகுகளை விடுவிக்கும் உத்தரவு கடந்த 15ஆம் திகதி அரசு விடுவித்தது. விடுவிக்கப் பட்ட தமிழக விசைப்படகுக ளில் பயன்படுத்தும் நிலையிலுள்ள படகுகளைத் தேர்வ…
-
- 0 replies
- 234 views
-
-
கோத்தாவை களமிறக்குவது குறித்து கூட்டு எதிரணி இதுவரை ஆராயவில்லை (ரொபட் அன்டனி) அது தொடர்பில் ஒரு பேச்சுவார்த்தைகூட நடத்தப்படவில்லை என்கிறார் தினேஷ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் இதுவரை கூட்டு எதிர ணியினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலந்துரையாட வில்லை. நாம் தற்போது எதிர்வரும் மாகாண சபைத் தேர் தல் குறித்தே ஆராய்ந்து வருகின்றோம் என்று கூட்டு எதிர ணியின் பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குண வர்தன தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் அல்ல. ஜனாதிபதி தேர்தல் குறித்து கூட இன்னும் நாம் ஆராயவில்லை. ஜனா திபதித் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கின்றது. அத…
-
- 0 replies
- 227 views
-
-
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் (ரொபட் அன்டனி) மஹிந்த சம்பந்தனுடன் பேச்சுநடத்துவார் என்கிறார் கெஹெலிய மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வடக்கு கிழக்கு அரசியல் பிரச்சினைக்கு தீர்வைக்காண நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தப் பிரச்சினையை எப்படியாவது தீர்த்துவிடவேண்டும் என்ற நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக் ஷ இருக்கின்றார் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே இந்த நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்க்க முடியும். 2010…
-
- 0 replies
- 191 views
-
-
கோத்தபாய ராஜபக் ஷவை வேட்பாளராக ஏற்கத்தயார் : ஜனாதிபதி சிறிசேனவின் அணியை ஏற்க முடியாது என்கிறார் அனுர பிரியதர்ஷன யாப்பா (ஆர்.யசி) மஹிந்த ராஜபக் ஷ யாரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குகின்றாரோ அவரை ஆதரிக்க தயாராக உள்ளோம்.கோத்தபாய ராஜபக் ஷவாக இருந்தாலும் அவரை ஏற்றுக்கொள்வோம். நாம் அனைவரும் மஹிந்த ராஜபக் ஷவின் அணியாக மாறிய பின்னர் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவின் அணியை ஏற்கத் தயாராக இல்லை என்பதே எமது நிலைப்பாடு என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுயாதீன அணியின் உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுயாதீன அணியினர் அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கும் நகர்வுகள் குறித்து வினவிய போதே …
-
- 0 replies
- 210 views
-
-
மனித எழும்பு கூடு அகழ்வு பணிகள் தாமதம் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 23ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில் இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை தாங்கிவருகின்றார். அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றார். மேற்படி அகழ்வு ஆரம்ப பணிகளின் போது மனித வள பற்றாக்குறை அதிகமாக காணப்பட்டதால் அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் பாரிய சிக்கல் தோற்றம் பெற்றது…
-
- 0 replies
- 252 views
-
-
கிளிநொச்சியில் கொல்லப்பட்ட சிறுத்தை இராணுவம் வளர்த்தது: அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்! June 26, 2018 கிளிநொச்சியில் கொல்லப்பட்ட சிறுத்தை இராணுவத்தினர் வளர்த்த சிறுத்தையென்பதை தமிழ்பக்கம் உறுதிசெய்துள்ளது. வன ஜீவராசிகள் திணைக்களமும் அதை உறுதிசெய்கின்ற போதும், இது குறித்து இதுவரை தகவலெதையும் வெளியடாமல் மூடிமறைத்து வருகிறது. எனனும், எந்த இராணுவ முகாமில் அதை வளர்த்தார்கள் என்ற தகவலை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அம்பாள்குளத்தை அண்டிய பிரதேசத்தை சேர்ந்த முகாமொன்றில் வளர்க்கப்பட்டிருக்கலாமென தெரிகிறது. இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தமிழ்பக்கத்திடம் பல விடயங்களை பகிர்ந்துள்ளார். சிறுத்தையின் புகைப்படத்தை பார்த்ததுமே,…
-
- 5 replies
- 1.6k views
-
-
மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம் சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவை கடன்பொறியில் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறு தன்வசப்படுத்தியது என்பதை விரிவாக ஆய்வு செய்து விவரித்துள்ளது இந்தக் கட்டுரை. ‘சீனாவுடன் மகிந்த ராஜபக்ச மிகநெருக்கமான உறவுகளை வைத்திருந்தார். 2015 அதிபர் தேர்தல் நெருங்கி வந்த போது,மகிந்த ராஜபக்ச வட்டத்தை நோக்கி பெருமளவு நிதி சீனாவினால் பாய்ச்சப்பட்டது. குறைந்தபட்சம் 7.6 மில்லியன் டொலர் நிதி, சீனாவின் துறைமுக பொறி…
-
- 2 replies
- 555 views
-
-
யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்! அதிகாலையில் அட்டூழியம் செய்த வாள்வெட்டுக் குழு யாழ்ப்பாணம் - மானிப்பாய், லோட்டன் வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீட்டுக்குள் புகுந்த கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் வாள்வெட்டு என பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். வாள்வெட்டுக் கும்பலால் அந்த வீட்டின் மீது நடத்தப்படும் இரண்டாவது பெரும் தாக்குதல் இதுவாகும். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 10 பேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வந்து, அந்த வீட்டில் பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டது. அதனால் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டா…
-
- 1 reply
- 483 views
-
-
தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா இராணுவம் செய்யும் உதவிகள்; பட்டியலிட்ட ஆளுநர்! தமிழ் மக்களின் நலன் கருதியே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலும் இராணுவம் உள்ளிட்ட சிறிலங்கா அரச படையினர் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருப்பதற்கு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே புதிய விளக்கமமொன்றை வழங்கியுள்ளார். தமிழர் தாயகமான வட கிழக்கில் அதிகளவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் உள்ளிட்ட சிறிலங்கா அரச படையினரை வெளியேற்றுமாறு தமிழர் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவரும் நிலையில் மைத்ரி – ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தேசிய அரசாங்கம் அதனை முழுமையாக நிராகரித்து வருகின்றது. இந்த நிலையில் இந்த தக…
-
- 0 replies
- 284 views
-
-
வில்பத்துவின் உண்மை நிலையினை அறிந்து கொண்டுள்ளோம்; ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கு தேரர்கள் பதில்! வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கும் கண்டி அஸ்கிரிய மல்வத்த பீடாதிபதிகளிடமும் உண்மை நிலையை தெளிவுபடுத்துமாறு வட மாகாண பௌத்த தேரர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கேட்டுக்கொண்டுள்ளார். அதேவேளை வில்பத்து தொடர்பான உண்மை நிலைகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வடமாகாண பெளத்த மத குருமார்கள் அடங்கிய அமைப்பொன்று அவசியம் எனவும் வடமாகாணத்தை சேர்ந்த பெளத்த மத குருமார்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா ஸ்ரீபோதி தக்ஷினாராமய விகாரையில் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் வட மாகாணத்தை சேர…
-
- 0 replies
- 266 views
-
-
எனக்கும் கோத்தாவுக்குமிடையில் எவ்வித பிரச்சினையுமில்லை - பஷில் (ரொபட் அன்டனி) எனக்கும் எனது சகோதரர் கோத்தபாய ராஜபக் ஷவுக்குமிடை யில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. நாங்கள் இருவரும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கும் எனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையில் நெருக்கடி நிலவி வருவதாக பிரசாரம் செய்துவருகின்றனர். ஆனால் எனக்கும் எனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. நாங்கள் இருவரும் புரிந்துணர்வுடன் செயற்பட்…
-
- 0 replies
- 202 views
-
-
குதிரைகளுடன் சிறிலங்கா வந்த பாகிஸ்தான் கூட்டுப்படைத் தளபதி பாகிஸ்தானின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சுபைர் மஹ்மூட் ஹயட், நான்கு நாட்கள் பயணமாக, நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார். அவரை சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோர் வரவேற்றனர். இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். அத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து, முக்கியமாக, பயிற்சி மற்றும் இர…
-
- 0 replies
- 269 views
-
-
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 158 மில்லியன் டொலர் கடனுதவி பெறப்படவுள்ளது. இந்த நிதியைக் கொண்டு,யாழ். மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறையிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசாலையிலும், இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. மண்டைதீவில் படகுகள் நங்கூரம் பாய்ச்சும் தரிப்பிடம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. மேலும், யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் தலா 8 மீன்பிடித் துறைமுகங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 மீன்ப…
-
- 0 replies
- 453 views
-
-
கொழும்பு துறைமுக நகர நிலப்பரப்பை உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தில் கொழும்பு துறைமுக நகருக்கான நிலப்பகுதியை, கடலில் இருந்து உருவாக்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, துறைமுக நகரக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது முழு வீச்சில் நிலத்தை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று சீன நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.puthinappalakai.net/2018/06/28/news/31629
-
- 0 replies
- 380 views
-