Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் சிலரின் செயற்பாடு கிறிஸ்தவ மக்களின் மனங்களை நோகடிக்கும் செயல் - தேசிய மற்றும் கத்தோலிக்க கல்விப் பணிப்பாளர் கொழும்பு றோயல் கல்லூரி அதிபருக்கு கடிதம் 07 Mar, 2025 | 01:08 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவர்களில் சிலர் கிறிஸ்தவ மதத்தின் புனித சின்னமான சிலுவையை அகெளரவப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டுள்ள சம்பவம் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களை மனங்களை நோகடிக்கச் செய்துள்ளதாக தேசிய மற்றும் கத்தோலிக்க கல்விப் பணிப்பாளரும் கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளருமான அருட் தந்தை கெமுனு டயஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அருட் தந்தை கெமுனு டயஸ் அடிகளார் கொழும்பு றோயல் கல்லூரி அதிபரு…

      • Haha
    • 3 replies
    • 328 views
  2. 07 Mar, 2025 | 04:44 PM யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் குழு இன்று வெள்ளிக்கிழமை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகிய அமைச்சர் குழுவினரே சீமெந்து தொழிற்சாலையை பார்வையிடனர். இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா , யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டன…

  3. பாடசாலை மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார். பருவச்சீட்டுடன்(Season Ticket) சென்ற குறித்த மாணவர்களை பேருந்து நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பேசுபொருளான காணொளி குறித்த நடத்துனர் மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கியது மட்டுமில்லாமல் இது என்னுடைய பேருந்து என்று கடுந்தொனியில் கூறுகின்றார். இந்த விடயம் தற்போது முக்கிய பேசுபொருளாகவும் மாறியுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க, குறித்த பேருந்து நடத்துநர…

  4. மத்தள விமான நிலையம் தொடர்பாக அரசாங்கத்தின் தீர்மானம்! மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், மத்தள விமான நிலையத்தை பொருத்தமான வெளிநாட்டு பங்காளியுடன் இலாபம் ஈட்டும் முயற்சியாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மத்தள விமான நிலையம் 36.5 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஐந்து வருடங்களில் 38.5 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் இதன்…

  5. வாகன இறக்குமதியாளர்களுக்கான நிபந்தனைகள் இறக்குமதியாளர் ஒருவரால் 6 மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 25% சதவீதத்தை பதிவு செய்யத் தவறினால், குறித்த இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி இரத்துச் செய்யப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாக்கவும், அதிகப்படியான வாகனங்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கவும், தேவையற்ற முறையில் வாகனங்களின் சேமிப்பைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தனிப்பட்ட ரீதியாக வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்றும், மேலே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் அதற்குப் பொருந்தாது என்று…

  6. இலங்கையில் எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்று உத்தரவாதம் இல்லை சத்தாதிஸ்ஸ தேரர் பரப்புரை நாட்டில் எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, படைக்குறைப்புச் செய்யும் நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்று ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் மேலும் தெரிவித்ததாவது: தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு பெண்களே பெரும் பங்களிப்பு வழங்கினர். வீடு வீடாக சென்று அந்தக் கட்சியின் பெண்கள் பொய்யுரைத்தனர். எனவே, அதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு எமது அணியிலுள்ள பெண்களுக்கு உள்ளது. மக்கள் மனம் அறிந்து சேவையாற்றுவதே சிறந்தது. நுகேகொடையில் இருந்து கொழும்புவரை …

  7. யுத்தத்தின் போது கைவிடப்பட்ட ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு March 7, 2025 11:07 am யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இன்று மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக பிரதிய அமைச்சர் சத்துரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய தலைவர் ஒருவரின் வழிநடத்தலுடன் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதுடன் 150 பேருக்கு அதன் மூலம் தொழில் வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று செல்வம் அடைக்கலநாதன் எம். பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மேற்படி ஓ…

  8. சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய் - இனியபாரதி குற்றச்சாட்டு செய்திகள் பாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள் எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட ஊடக மையத்தில் இன்று (06) மாலை சாணக்கியன் எம்.பி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி விசேட ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கிய…

  9. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை எனக்கு தெரியும் – ஞானசார தேரர் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் எனவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (6) மல்வத்து – அஸ்கிரிய பீடாதிபதிகளை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நான் இதை பொறுப்புடன் சொல்கிறேன். மூளையாகச் செயல்பட்டவர் யார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் அதை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த மாட்டேன். ஜனாதிபதிக்கும் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களுக்கும் அறிவிப்பேன்…

  10. சுற்றுலா பயணிடம் இலஞ்சம் கோரிய மூன்று பொலிஸார் கைது! ஆஸ்திரிய சுற்றுலாப் பெண் பயணி ஒருவரிடம் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னிடமிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 50,000 ரூபா பணம் வழங்குமாறு சந்தேகநபர்கள் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி காவற்துறையில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரும் இரண்டு கான்ஸ்டபிள்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1424346

  11. Published By: Vishnu 07 Mar, 2025 | 03:45 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்-தையிட்டி பகுதியில் தனியார் காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? தங்களது காணியினை தங்களிடம் கையளிக்குமாறு போராடி வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதை அமைச்சர் அறியத்தருவாரா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27 /2 பிரகாரம் ''திஸ்ஸ ராஜமகா விகாரை''தொடர்பில் கேள்விகளை ம…

  12. Published By: Digital Desk 2 06 Mar, 2025 | 09:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விநியோகம், பாவனைகளில் இராணுவத்தினர்,பொலிஸாருக்கு நேரடித்தொடர்புகள் உண்டு. அவர்கள் தான் போதைப் பொருளுக்கு முழுக் காரணம் என்பதனை புரிந்துகொள்ளாமல் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாதென தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்கள் அரசுக்கு சுட்டிக்காட்டினர். வடக்கில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை தடுப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட எம்.பி. ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக்கட்சிகளின் எம்.பி.க்கள் இவ்வாறுசுட…

  13. 06 Mar, 2025 | 05:45 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைந்து ஏனைய போதைப்பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. எனவே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட மத்திய நிலையத்தை வடக்கில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) மாலை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய த…

  14. யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுக்க சுற்றாடல் அமைச்சர் மற்றும் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடக் கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜாவினால் தாக்கல் செய்த மனு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லபார் தாஹிர் மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்றின் தரம் குறித்து ஒரு மாத காலத்திற்கு ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும…

    • 1 reply
    • 113 views
  15. 06 Mar, 2025 | 03:47 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மடக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூகத்தை குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் நடக்கின்றன. ஆவா குழுவென்று ஒரு குழுவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். கிரீஸ் மனிதர்களையும் உருவாக்கியிருந்தனர். இதனை உருவாக்கியவர்கள் யாரென மக்களுக்கு தெரியும். இப்போது மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாசாரத்தை உருவாக்குகின்றனர். ஜனாதிபதியும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற 2025 ஆம் ஆண்…

  16. யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு , பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சந்தேக நபர் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். சந்தேக நபர் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் , வரணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்று , வெளிநாட்டு பணத்தினை உள்ளூர் பெறுமதிக்கு மாற்ற வங்கியில் கால தாமதம் ஏற்பட்டதாக நேரலையில் காணொளி பதிவிட்டு, வங்கியின் முகாமையாளர் , உத்தியோகஸ்தர்க…

  17. 06 Mar, 2025 | 03:12 PM கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் வேகமாகப் பரவி பன்றி வளர்ப்புப் பண்ணைகளில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இந்த ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி - பளை மற்றும் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த 5 பன்றிப்பண்ணைகளிலும் பரவி பன்றிகளுக்கு பல இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெரிவித்தார். வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேற்படி ஐந்து பண்…

  18. உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்! விசா இல்லாத பயண அணுகலின் அடிப்படையில் உலகளாவிய கடவுச்சீட்டு வலிமையை மதிப்பிடும் அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டானது குறித்த தரவரிசையில் கடந்த ஆண்டு 96 ஆவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு தரவரிசையில் ஐந்து இடங்களுக்கு இலங்கையின் கடவுச்சீட்டு முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 42 நாடுகளுக்கு பயணிக்க முடியும். மொத்தம் 99 தரவரிசைகளைக் கொண்ட பட்டியலில் ஈரான் மற்றும் சூடானுடன் இலங்கை 91 ஆவது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. சிங்க…

  19. Published By: Rajeeban 06 Mar, 2025 | 03:06 PM யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனினும் இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார் அல்ஜசீராவிற்கான பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் 2009ம் ஆண்டு முடிவிற்கு வந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற் நீதி வழங்கப்பட்டுவிட்டதா என மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரணில்விக்கிரமசிங்க எந்த சமூகத்திற்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் சிக்குண்டிருந்தவர்களிற்கான மனிதாபிமான உதவி தடுக்கப்பட்டது, மருத்…

  20. Published By: Digital Desk 3 06 Mar, 2025 | 01:41 PM வடகிழக்கு மக்களுக்கு அன்று முதல் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது. எனவே நியாயமில்லாத இந்த முறையை மாற்றுவதற்காகவும் உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும் நாங்கள் தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர் அருட்தந்தை ஜீவநந்த பீரிஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரையும் இன்று வியாழக்கிழமை (06) நீதிக்கான நடை பயணத்தின் 1030 வது நாள் போராட்டத்தில் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர்கள் பௌத்த தேரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதன்…

  21. போலியான விளம்பரங்கள்; மத்திய வங்கியின் எச்சரிக்கை! சிறிய முதலீடுகளுக்கு கணிசமான நிதி வருமானத்தை வங்கி வழங்குவதாக பொய்யாகக் கூறும் மோசடி விளம்பரங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி (CBSL) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஏமாற்று விளம்பரங்கள், பொதுமக்களைத் தவறாக வழிநடத்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் படங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன என்பதை CBSL எடுத்துக்காட்டியது. டிஜிட்டல் தளங்களில் தோன்றும் இந்த பொய்யான விளம்பரங்கள், மத்திய வங்கி ஒரு சிறிய தொகையை முதலீடு செய்யும் நபர்களுக்கு பெரிய தொகையை செலுத்துவதாக தவறாகக் கூறுகின்றன. எனவே, இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு CBSL பொது மக்களை எச்சரித…

  22. 2025 ஆம் ஆண்டில் இதுவரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு! இந்த ஆண்டு இதுவரையிலான காலப்பகுதியில், அண்மைய குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட 13 T-56 துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தகவலை இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் இதுவரை 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் சம்பந்தப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள ஏழு சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகளின் விளைவாக மேற்கொள்ளப்பட்டவை. இந்த சம்பவங்கள் தொடர்பாக 68 சந்தேக நபர்கள் கைது செய…

  23. நெடுந்தீவு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கிய ஆளுநர் வேதநாயகன் March 6, 2025 10:46 am நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சில விடயங்களுக்கு உடனடியாகத் தீர்வை வழங்கியதுடன் வேறு சில விடயங்கள் நீண்ட கால அடிப்படையில் தீர்வை வழங்குவதாகத் தெரிவித்தார். நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று புதன்கிழமை மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலர், அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், மத்திய அரசின் திணைக்களத் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். நெடுந்தீவு துறைமுகம், கடல்போக்குவரத்து, வீதிப்போக்குவரத்து என்பனவற்றில் எதிர்கொ…

  24. யாழ் – திருச்சி விமான சேவை எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பம்! யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான சேவை அறிவித்துள்ளது. அந்தவகையில் திருச்சியில் இருந்து நண்பகல் 01.25க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மாலை 02.25 மணியளவில் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 03.10 மணிக்கு புறப்படும் விமானம், திருச்சி விமான நிலையத்தை மாலை 04.05 மணிக்கு சென்றடையும் எனவும் இண்டிகோ விமான சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424211

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.