ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
பட மூலாதாரம்,SAJITH PREMADASA'S MEDIA UNIT கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஒற்றை கண் பார்வை இழந்த பெண் சிறுத்தை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததுடன், நரேந்திர மோதிக்கு நினைவு பரிசொன்றையும் அவர் வழங்கியிருந்தார். முன்னோக்கி செல்லும் பெண் சிறுத்தையொன்று பின்னோக்கி திரும்பி பார்க்கும் வகையிலான புகைப்படமொன்றையே சஜித் பிரேமதாஸ, நரேந்திர மோதிக்கு வழ…
-
- 1 reply
- 303 views
- 1 follower
-
-
நவக்கிரி சித்த வைத்தியசாலை காணி விடுவிப்பு யாழ்ப்பாணம், அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியை இராணுவத்தினர் மீள கையளித்துள்ளனர். நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியையும் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் கையகப்படுத்தி நிலை கொண்டிருந்தனர். அந்நிலையில் நேற்று (10) குறித்த காணியை மீள கையளித்துள்ளனர். சித்த மருத்துவமனைக்கு தேவையான மூலிகைகளை பயிரிடும் காணியாக குறித்த காணி காணப்பட்ட நிலையில் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினர் காணியை கையகப்படுத்தி கடந்த 30 ஆண்டு காலமாக நிலை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cm9c9bqma007mhyg3qjup5zps
-
- 0 replies
- 144 views
-
-
50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் ஆலய மகா கும்பாபிசேகம்-பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு! யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர் இன்னிலையில் ஆலயத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரியர் வருகை தரவுள்ளதாக தெரிவித்து, ஆலய சூழலில் பெருமளவான பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிபடையினர், பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு பாத…
-
- 0 replies
- 129 views
-
-
3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதே இலக்கு – சுற்றுலாப் பிரதி அமைச்சர். சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) நடைபெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். சுற்றுலாக் கைத்தொழில் நாட்டில் முதன்மைக் கைத்தொழில் என்றும் இவ்வாண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் நிலைபேறான சுற்றுலாப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக சுற்றுலா அமைச்சு ச…
-
- 0 replies
- 166 views
-
-
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் பலவற்றின் பணிகள் இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட உள்ளன. செயற்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகளை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காக அந்த திணைக்களத்தின் மாதிரிக்கு அமைவாக முன்மொழிவுகளை தயாரிப்பது தொடர்பில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்கான ஒரு நாள் செயலமர்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற நிலையில் இவ்வாறு அறிவிக்கப்…
-
- 0 replies
- 107 views
-
-
10 APR, 2025 | 09:08 PM யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்று வியாழக்கிழமை (10) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி மற்றும் அதனுள் இருந்த கட்டடம் என்பவற்றை வலி கிழக்கு பிரதேச செயலரிடம் இராணுவத்தினர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளித்த நிலையில், பிரதேச செயலரினால் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது . இதுவரை காலமும் மாற்றிடம் ஒன்றில் தலைமை காரியாலயம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211736
-
-
- 3 replies
- 290 views
- 1 follower
-
-
கொள்ளையர்களைப் பிடிப்பதாக பெருமை பேசினாலும், மஹிந்த ராஜபக்ஷ அல்லது ரணில் விக்கிரமசிங்க மீது இந்த அரசாங்கம் கை வைக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பெரிய மீன்களுக்குப் பதிலாக சில சிறிய மீன்களை மட்டுமே நீங்கள் பிடிப்பீர்கள். தற்போதைய அரசாங்கம் கைது செய்த ஒரே எம்.பி நான்தான்" என்று தசநாயக்க மேலும் கூறினார். பெரகல தடுப்பு முகாம் மிகவும் ஆபத்தானது, இருப்பினும் அரசாங்கம் பட்டலந்தவை மட்டுமே குறிவைக்கிறது என்று அவர் கூறினார். Tamilmirror Online || ”ரணில் ராஜபக்சவின் முடியையும் அரசாங்கம் தொடாது”
-
- 1 reply
- 216 views
-
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்தார். புதிய வரித்திருத்தத்தினால் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய வழிமுறைகள், அரசாங்கம் என்ற அடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் போன்றன இந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த வரியைக் குறைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்த கடிதம் ஊடாக கோரிக்க…
-
-
- 19 replies
- 932 views
-
-
Published By: VISHNU 10 APR, 2025 | 08:06 PM ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒரே நாள் மற்றும் பொது சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வியாழக்கிழமை (10) அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, குறித்த நாட்களில் மதியம் 12 மணி வரை மட்டுமே டோக்கன் அட்டைகள் வழங்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு நாள் சேவைக்காக சேவை, 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இயங்காது என்று அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211755
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
10 APR, 2025 | 11:04 AM தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்? யாழ் பலாலி வீதி திறந்துவிடப்பட்டுள்ளமை குறித்த தனது சமூக ஊடக பதிவில் இந்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கட்டுப்பாடுகளுடன் பலாலி வீதி திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா? இந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக சட்டபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில்லை. மாலை ஆறு மணியிலிருந்து காலை 5 மணிவரை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த சட்டம் உங்களிற்கு அனுமதிவழங்கியது. ஏன் பாதசாரிகள் இந்த வீதியை பயன்பட…
-
-
- 5 replies
- 406 views
- 1 follower
-
-
08 Apr, 2025 | 05:23 PM 1988-89ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டி பாடசாலையொன்றில் இயங்கிய வதை முகாமிலிருந்து இளைஞர்களை டிரக்கில் கொண்டு சென்று வழியில் அவர்களை கீழே தள்ளிவிட்டு அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த பின்னர் அவர்கள் பெட்ரோலை ஊற்றி கொலை செய்தனர் என காணாமல்போனவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயலாளர் எம்சி இக்பால் தெரிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம் உட்பட பல சர்வதேச அமைப்புகளும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். எம்சிஎம் இக்பால் இந்த வீடியோவில் மேலும் தெரிவித்துள்ளதாவது. எனது மனதில் நினைவில் இருக்கும் விடயங்களில் ஒன்று க…
-
-
- 3 replies
- 258 views
-
-
08 Apr, 2025 | 03:23 PM "கலிப்சோ" எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட தொடருந்து சேவையானது நானுஓயா மற்றும் தெமோதரை புகையிரத நிலையங்களுக்கு இடையே இன்று (08) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த தொடருந்து அதன் பயணத்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு நானுஓயா புகையிரத நிலைய வளாகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நானுஓயாவிலிருந்து தெமோதரை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படுவதுடன் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் …
-
- 4 replies
- 291 views
-
-
ரவீந்திரநாத் பிள்ளையான் கும்பலால் எப்படி கடத்தப்பட்டார்! Vhg ஏப்ரல் 10, 2025 துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்கள் மார்கழி 15, 2006 அன்று "Triploli Platoon-பிள்ளையான்" கூட்டு கும்பலால் கடத்தி காணாமலாக்கப்பட்டார் புரட்டாதி 20, 2006 முதல் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பல்வேறு வழிகளில் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டார் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கிழக்கு பல்கலை கழக துணைவேந்தராக இருக்க முடியாது என்கின்ற தோரணையில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது தொலைபேசி வழியில் தொடங்கிய அச்சுறுத்தல்கள் ஒரு கட்டத்தில் கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பால சுகுமாரை கடத்திச் சென்று பேராசிரியர் சிவசுப்…
-
- 1 reply
- 239 views
-
-
10 APR, 2025 | 10:51 AM வடக்கில் சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ள நிலையில் அதனை கூடுதல் அபிவிருத்தி செய்யவேண்டும் எனவும், உலக வங்கியும் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதையும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கவனத்துக்கு கொண்டு சென்றதோடு விவசாயம், மீன்பிடி துறைகளின் பெறுமதி சேர் ஏற்றுமதிக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பினர்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றது. இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் த…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 APR, 2025 | 09:43 AM தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் படிப்படியாக பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய கடல் பகுதிகளில் தற்காலிகமாக மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், அதனுடன் பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்புடன் இருக்கும். இது தொடர்பாக திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கவனமாகக் கவனிக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங…
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியானது எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்புதான் நிராகரிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் 19 தமிழ் உறுப்பினர்கள் உள்ள போதும் 10 உறுப்பினர்களைக்கொண்ட அறுதிப்பெரும்பாண்மை ஒருவருக்கும் இல்லை. தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை. தமிழரசு பதில் தலைவர் சீ.வி.கே. சிவஞானத்துடன் பேசிய போது தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு குழு அமைப்பதாக சொல்லியிருந்தார். அதன் பின்பு எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்பு குழு அமைக்கும் விடயம் தேவையில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. தற்போது தமிழரசுக்கட்சி ஆட்சி செய்பவர்கள் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை கொண்டு…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
10 APR, 2025 | 11:46 AM காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதையே எதிர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் வனவள, வனஜீவராசிகள் திணைக்களங்கள் என்பனவற்றால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (09) இடம்பெற்றது. சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி மற்றும் காணி, நீர்ப்பாசனத்துறை பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள…
-
- 0 replies
- 99 views
- 1 follower
-
-
நாவற்குழியில் பாலியல் விடுதி; மூன்று பெண்கள் கைது யாழ்ப்பாணம் - நாவற்குழிப் பகுதியில் இயங்கிவந்த விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே, மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 40, 42 மற்றும் 53 வயதுடையவர்கள் என்றும், விடுதியை நடத்திவந்த உரிமையாளர் 68 வயதுடையவர் என்றும் பொலிஸார் தமது விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. https://newuthayan.com/article/நாவற்குழியில்_பாலியல்_விடுதி;_மூன்று_பெண்கள்_கைது
-
- 1 reply
- 213 views
-
-
யாழ் – கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்! April 10, 2025 ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 30 ஆம் தேதி ஆரம்பமாகிறது. யாழ்.செல்வச்சந்நதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் ஜெயா வேல்சாமி தலைமையிலான மிக நீண்ட 59 நாள் பாதயாத்திரை யூலை மாதம் 26ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடையும். அதற்கான முன் ஏற்பாடு ஒழுங்கு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப் புனித பாதயாத்திரைக் குழுவில் பக்திபூர்வமான முறையில் பங்குபெறவிரும்பும் அடியவர்கள் ( 0763084791 ) குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார். மகிமைகள் பொருந்திய இவ்வருட 2025 கத…
-
- 0 replies
- 93 views
-
-
09 APR, 2025 | 03:58 PM 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை உண்மைக்கு புறம்பான முறையில் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் 2 பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் …
-
- 1 reply
- 305 views
- 1 follower
-
-
சி.ஐ.டி.யில் ஆஜரான கெஹெலிய! முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார். தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது. இரண்டு மூத்த அரச அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்கி 22,500 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை ஒரு மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடி வ…
-
- 0 replies
- 174 views
-
-
Published By: VISHNU 09 APR, 2025 | 07:24 PM இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில் சரியான பாதைக்கு திரும்ப வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அதற்காக இதுவரையான 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதிகாரிகளின் பொறிமுறை சரியாகாத பட்சத்தில், எதிர்வரும் மே மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பின்வாங்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற "தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்ற…
-
-
- 5 replies
- 338 views
- 1 follower
-
-
யாழில் கடற்றொழில் அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்த மீனவர்களுக்கு ஏமாற்றம்! யாழ், சுழிபுரத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவரது வருகைக்காக வெகுநேரம் காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று முன் தினம் சுழிபுரம் காட்டுப்புலம் மீனவர்களை காலை 10 மணியளவில் கடற்தொழிலாளர் மண்டபத்தில் ஒன்று கூடுமாறும், கடற்றொழில் அமைச்சர் உட்பட்ட குழு மூன்று வாகனங்களில் வருகை தரவுள்ளனர் எனவும், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு பிரதேச கடற்றொழில் பரிசோதகர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சரின் வருகைக்காக காலை 10 மணியிலிருந்…
-
- 0 replies
- 100 views
-
-
ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் 44% அமெரிக்க வரியை ஒரே நாளில் நீக்கியிருப்பார் – ராஜித ரணில் விக்ரமசிங்க இன்னும் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இலங்கை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 44% வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். யூடியூப் அலைவரிசை ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போது பேசிய அவர், பில்லியனர் தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் ஆலோசனையின் பேரில் ட்ரம்ப் நிர்வாகத்தின் போது இந்த வரி விதிக்கப்பட்டதாகக் கூறினார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர்களில் எலோன் மஸ்க் ஒருவர் என்றும், அந்த வலுவான நட்பைப் பயன்படுத்தி இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு…
-
- 0 replies
- 100 views
-
-
09 APR, 2025 | 02:08 PM இந்தியாவுடன் பல உடன்படிக்கைகளில் கைசாத்திட்டுள்ளதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டிற்கு துரோகமிழைத்துள்ளது என சில எதிர்கட்சி அரசியல்வாதிகள் தெரிவித்திருப்பதை ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா நிராகரித்துள்ளார். இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் விதத்தில் ஏதாவது உடன்படிக்கையில் அரசாங்கம் கைசாத்திட்டுள்ளதா என்பதை எதிர்கட்சிகள் நிரூபிக்கவேண்டும் என அவர் சவால் விடுத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்தைய விஜயத்தின் போது செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை உடனடியாக பொதுமக்களிற்கு அரசாங்கம் பகிரங்கப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள அவர் இந்த உடன்படிக்கைகள் இரண்டு நாட்டிற்கும் நன்மை பயக்ககூடியவை என தெரிவித்துள்ளார். கடந்த காலங்கள…
-
-
- 4 replies
- 592 views
- 1 follower
-