ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
அடுத்த சில நாட்களில் கைதாகிறார் சிறிலங்காவின் உயர்மட்டப் படைத் தளபதி? கொழும்பில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய, குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் உயர்மட்டப் படை அதிகாரி ஒருவர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளார். சிறிலங்கா காவல்துறை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபரான, லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியைக் கைது செய்வதற்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவருக்கு உதவிய சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு, கோட்டே நீதிவான் லங்கா …
-
- 0 replies
- 294 views
-
-
சீனப் படை அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சந்திப்பு தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் நிதியில் கட்டப்படவுள்ள அரங்க வளாகத்துக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சீன படை அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது. சீன இராணுவத்தின் கேணல் சாங் லூஹூவா தலைமையிலான இந்தக் குழுவினர், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் கடந்த புதன்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது, சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் தொடர்பாகவும், ஏனைய தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 309 views
-
-
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட அதிகாரிகள் சிறிலங்காவில் கள ஆய்வு அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த கப்டன் ஜெப்ரி பென்டன் தலைமையிலான நான்கு படை அதிகாரிகளைக் கொண்ட குழு, சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது. சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் சிவில்- இராணுவ ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே அமெரிக்க படை அதிகாரிகள் குழு கொழும்பு வந்துள்ளது. தெற்காசியப் பிராந்திய சிவில் விவகார கருத்தரங்கிற்கு முன்னதாக இந்தக் குழு சிறிலங்கா வந்துள்ளது. அமெரிக்க படை அதிகாரிகளின் இந்தக் குழு, நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியது. இதன்போது, 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு…
-
- 0 replies
- 326 views
-
-
(கவிஞர்/நடிகர் ஜெயபாலன்) முன்னைநாள் தமிழரசுக் கட்ச்சி பிரமுகரும், தீவிர காந்தியவாதியும் ஐநா அலுவலரும் பின்னர் காந்தளகம் பதிப்பகத்தை நிறுவி பணியாற்ற்யவருமான மறவன்புலவு சச்சிதானந்தம், இளமையில் தான் மூன்னெடுத்த தமிழ் பேசும் மக்களின் சமாதான சகவாழ்வு கொள்கைகளுக்கு எதிராக மாட்டிறைச்சியைத் தடைசெய் என்கிற போர்வையில் தீவிரமான மதவெறியை தூண்டும் செயல்களில் இறங்கியிருப்பது அதிற்ச்சி தருகிறது. சச்சி அண்ணா என தமிழர்களாலும், முஸ்லிம்களாலும் அன்பாக அழைக்கபட்ட ஒருவர், கிறிஸ்துவரான தந்தை செல்வாவின் தலைமையைல் தீரமாகவும் சிறப்பாகவும் செயல்பட்ட ஒருவர் இவ்வளவுதூரம் கீழிறங்கிப்போய் இந்து மத அடிப்படைவாதியாகச் சீரழியமுடியுமென என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு ஆபத்தின் அறிகுறிய…
-
- 28 replies
- 2.9k views
-
-
பொருளாதாரக் கொள்கை இன்றியே ஒரு ஆட்சியா? வடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் எதிர்வரும் ஐப்பசி மாதத்துடன் முடிவடைகின்றது. சரியாக இன்னும் 5 மாதங்களே இருக்கின்றன. இதற்கிடையில் 300க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அதன்போதான விவாதத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையும் ஆச்சரியத்தையும் விசனத்தையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. யாழ்ப்பாணத்தில் தொழில்நுட்பப் பூங்கா ஒன்று அமைக்கப்படவேண்டும் என்கிற தீர்மான வரைவு ஒன்றை சபை உறுப்ப…
-
- 0 replies
- 855 views
-
-
பிரிட்டன் ரக்பி அணி வீரர் இலங்கையில் மர்ம மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட இலங்கை வந்த பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணியின் வீரர் ஒருவர் இலங்கையில் உயிரிழந்தார். அதே அணியைச் சேர்ந்த இன்னுமொரு வீரர் சுகவீனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். படத்தின் இலங்கை வந்த பிரித்தா…
-
- 5 replies
- 1.3k views
-
-
வெளியானது மைத்திரியின் போலி வேடம்! – ஒட்டு மொத்த மக்களும் முட்டாள்களா? முறையான தலைமைத்தும் அமையவில்லை என்ற குற்றச்சாட்டுகள், விமர்சனங்களைத் தொடர்ந்து புதிய மாற்றம், புதிய அரசியல் திருப்பம் என்ற வகையில் மஹிந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்து, நல்லாட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் அமர்ந்தார். எனினும் தற்போதும் நாட்டிற்கு முறையான தலைமைத்துவம் அமைந்து விட்டதா? என்ற பல்வேறுபட்ட கேள்விகள் அரசியல் அவதானிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உட்பூசல்கள் அதிகார போட்டிகள் காரணமாக பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றார்களா, அல்லது முட்டாளாக்கப்படுகின்றார்களா என்ற விமர்சனங்களே தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரம…
-
- 0 replies
- 495 views
-
-
நல்லூருக்கு அருகில் மிக விரைவில் விகாரை கட்டப்படும் நிலை உருவாகும்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்.. நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , முல்லைத்தீவு மாவட்ட கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அடாத்தாக வாடிகள் அமைத்து தங்கி இருந்து , சட்டவிரோதமான மீன் பிடிமுறமைகள் மூலம்…
-
- 4 replies
- 946 views
-
-
தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போராட்டம் நடத்தியவர்களை படம் எடுத்து மிரட்டல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை யாழ். காவல்துறையினர்; மற்றும் இந்திய துணைத்தூதரக பாதகாப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் அதிகாரிகள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்தனர். தூத்துக்குடி படுகொலையை கண்டித்தும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க கோரியும் யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது இந்திய துணைத்தூதரகத்திற்கு வெ…
-
- 1 reply
- 299 views
-
-
யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையை பாதுகாக்க நெதர்லாந்து உதவி யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை பாதுகாப்பதற்கும், வடமாகாண அபிவிருத்திக்கும் நெதர்லாந்து நாட்டு அரசாங்கம் உதவி செய்யுமென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்னிவார்ட் உறுதியளித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்வார்ட் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 01 மணித்தியாலத்துக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் நெதர்லாந்து தூதுவர் ஆராய்ந்துள்ளார். சந்திப்பின் நிற…
-
- 3 replies
- 585 views
-
-
மன்னாரில் 5 ஆவது நாளாகவும் மனித எலும்புகளை தேடி அகழ்வு மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள மண் குவியல் போன்ற இரு இடங்களிலும் 5 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை(1) காலை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில மனித எலும்புகள் மீட்கும் பணிகள் இடம் பெற்று வருகின்றது. கடந்த திங்கட்கிழமை காலை ஆரம்பிக்ப்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் 5 ஆவது நாளாகவும் காலை முதல் மாலை வரை தொடர்ந்து செல்கின்றது. மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுண…
-
- 0 replies
- 350 views
-
-
யாழில் தொழில்நுட்ப பூங்கா : இந்தியா, அமெரிக்க உதவ வேண்டும் வடக்கில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுமாறு வடமாகாண சபை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டுவந்த பிரேரணையைசபை ஏற்றுக்கொண்டுள்ளது. வடமாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டிய தேவையுள்ளது அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டும் என வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அதிகளவு தனியார் துறை முதலீடும் அவசியம் மேலும் தனியார் துறையினர் அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஊக்கு…
-
- 0 replies
- 313 views
-
-
தெற்காசியாவில் இலங்கைக்கு 2 ஆவது இடம் ! தெற்காசிய பிராந்தியத்தில் சிறுவர்கள் வாழக்கூடிய சிறப்பான நாடுகள் பட்டியலில் இலங்கை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. இதேவேளை, உலக அளவில் சிறுவர்கள் வாழக்கூடிய சிறப்பான நாடுகள் பட்டியலில் இலங்கை 60 ஆவது இடத்திலுள்ளதாக அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சேவ் த சில்ரன் அமைப்பு தொகுத்த பட்டியலில், பிராந்தியத்தின் ஏனைய நாடுகளை விட இலங்கை சிறப்பான நிலையில் இருக்கிறது. இந்தியா 113 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 130 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 149 ஆவது இடத்திலும் உள்ளன. இளம் பராய திருமணம், வளரிளம் பருவ கர்ப்பம், சிற…
-
- 0 replies
- 245 views
-
-
மகிந்தவிற்கு ஹெலிக்கொப்டர் வழங்கியது யார்? 2015 ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் அவர் அம்பாந்தோட்டைக்கு செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹெலிக்கொப்டர் ஏற்பாடு செய்து கொடுத்தார் என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்திருப்பது உண்மையில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது: தேர்தலில் தோற்ற பின்னர் அம்பாந்தோட்டைக்கு செல்வதற்கு மகிந்த ராஜபக்சவே ஹெலிக்கொப்டரை கோரினார் என அவரின் குடும்பத்தவர்களிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிசேன 9 ம் திகதி மாலையே சத்தியப்பிரமாணம் செய்தார் அத…
-
- 0 replies
- 302 views
-
-
கிழக்கு ஆளுநரின் மகள், மனைவி கைதுசெய்ய உத்தரவு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகொல்லாகமவின் மனைவி மற்றும் அவரது மகளை கைதுசெய்ய நிதிமன்று உத்தரவிட்டது. கொழும்பு நீதவான் நீதிமன்றமே இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது. பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/11/கிழக்கு-ஆளுநரின்-மகள்-மனைவி-கைதுசெய்ய-உத்தரவு.html
-
- 0 replies
- 428 views
-
-
யாழ்ப்பாணம் யமுனா ஏரியில் மீண்டும் சடலம்!! – இன்று காலை பரபரப்பு!! சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் உள்ள யமுனா ஏரியில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, அண்மையில் தவில் வித்துவான் ஒருவர் யமுனா ஏரியி…
-
- 0 replies
- 465 views
-
-
நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள் இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தை இன வன்முறையாளர்கள் 1981 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி திட்டமிட்டு எரித்தனர். இதில் 97 ஆயிரம் அரிய புத்தகங்கள், பல நூற்றாண்டு பழமைவாய்ந்த ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் பண்டைய நூல்கள், பல அரிய பண்டைய தமிழ் நூல்கள், ஈழத் தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என்று பல்வேறு வகைப்பட்ட அரிய ஆவணங்கள் அழிக்கப்பட்டன. http://newuthayan.com/story/09/நூலகம்-எரிக்கப்பட்ட-கறுப்பு-நாள்-இன்று.html
-
- 1 reply
- 433 views
-
-
யாழில் பதற்றம் : பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி, செருப்பு, உள்ளாடை போன்றனவே மீட்கப்பட்டுள்ளன. இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய சோக்கோ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்தில் தடயவியல் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குறித்த மாணவி கடத்தப்பட்டுள்ளாரா? அல்லது வேறெதும் சம்பவங்கள் இடம்பெற்றதா? என்பது தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார…
-
- 2 replies
- 1k views
-
-
அனைத்து செலவும் மாகாண சபையினுடையது திடீரென்று வந்த சிலர் மைக்கை பறித்து நிகழ்வை நடத்தினார்கள்.. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கான அனைத்து ஏற்பாட்டையும் , செலவுகளையும் வடமாகாண சபையே செய்தது என அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கு என மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்ப தருமாறு கோரி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தெரிவிக்கையிலையே அவைத்தலைவ…
-
- 5 replies
- 567 views
-
-
வாள்வெட்டு குழுக்களுக்காக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது வாள்வெட்டுக் குழுக்களுக்காக நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஆஜராகாது புறக்கணிக்க வேண்டுமென வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா சட்டத்தரணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து நேற்று (30) யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் …
-
- 0 replies
- 322 views
-
-
நீதித்துறையினர் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் நிலை ஏற்படக் கூடாது – ஜனாதிபதி சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையில் நீதித்துறையில் செயலாற்றுவார்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் நாட்டில் உருவாகுதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். வத்தளையில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். நீதித்துறையினர் மட்டுமன்றி சகல துறையினரும் திருப்தியாகவும் சுதந்திரமான சூழலிலும் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று குறி…
-
- 0 replies
- 446 views
-
-
புதிய அரசியலமைப்பு சகல மக்களினதும் அங்கீகாரத்துடன் உருவாக்கப்படவேண்டும் (ஆர்.யசி) சுதந்திரக் கட்சியின் மாற்று அணியினரிடம் சம்பந்தன் வலியுறுத்தினார் நாட்டின் நீண்டகால அரசியல் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால இலக்குகளை அடைவதில் சகல தரப்புக்களும் இணைந்து பயணிக்க வேண்டும். இதில் தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஐக்கியமான பயணத்தை அனைவருமாக உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட் டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுயாதீன அணியினரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்வதில் சிறுபான்மை மக…
-
- 0 replies
- 217 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டியது கட்டாயமாகும் (ஆர்.யசி) பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு மாற்றீடாக மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அதேபோல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். கடந்த காலங்களில் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்ற பேரில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள் இடம்பெற்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்தார். காணாமல் போனோர் ஆணைக்குழு உருவாக்கப்பட்டதின் பின்னர் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று மனித ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம தெரிவித்தார். இலங்க…
-
- 0 replies
- 817 views
-
-
லசந்த படுகொலை குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரி மூன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி, நேற்று நீதிமன்றத்தில் மூன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் வழங்கினார். கல்கிசை காவல் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியாக இருந்த உதவி ஆய்வாளர் திஸ்ஸ சிறி சுகதபால, நேற்று மாலை கல்கிசை நீதிமன்ற பிரதம நீதிவான் மொகமட் மிஹால் முன்னிலையில், நிறுத்தப்பட்டு இரகசிய வாக்குமூலம் அளித்தார். லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் இரண்டாவது சந்தேக நபராக இவர் கைது செய்யப்பட்டிருந்தார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட இவர், நீதிவான் முன்னிலையில் மூன்றர…
-
- 0 replies
- 183 views
-
-
நேவி சம்பத் தப்பிக்க உதவினார் – அட்மிரல் குணரத்ன மீது நீதிமன்றில் குற்றச்சாட்டு கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான, சிறிலங்கா கடற்படை அதிகாரி நேவி சம்பத் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு, கூட்டுப்படைகளின தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உடந்தையாக இருந்தார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நேற்று கொழும்பு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கை விசாரித்து வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் ச…
-
- 0 replies
- 429 views
-