ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
2020: கண்ணிவெடியற்ற நாடாக இலங்கை பிரகடனம் 2020ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் கண்ணிவெடி அபாயம் இன்றி தமது சொந்த இடங்களில் மீள்குடியமர முடியும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கையை 2020ல் பிரகடனப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டிபியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்க…
-
- 0 replies
- 369 views
-
-
இராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை மீண்டும் கொண்டுவர மறைமுக சதித்திட்டம் மஹிந்த, மொட்டு தரப்பில் இணைந்து செயல்படும் முன்னாள் படைவீரர்களுக்கு சதியில் தொடர்பு நாட்டில் மீண்டும் இராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை கொண்டுவர மறைமுகமான சதித்திட்டமொன்று வகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில ஊடகங்கள் அதற்குத் துணை போய்க் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுடனும் மொட்டுத் தரப்பிலும் இணைந்திர…
-
- 0 replies
- 209 views
-
-
சிறிலங்காவில் 6000 சீனப் பணியாளர்கள் சிறிலங்காவில் 6000 இற்கும் அதிகமான சீனர்கள் பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருவதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக விவகாரங்களைக் கையாளும், அதிகாரியான யாங் சூயுவான், இதுபற்றித் தகவல் வெளியிடுகையில், “சிறிலங்கா – சீன கூட்டுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதிலேயே பெரும்பாலான சீனர்கள், ஈடுபட்டுள்ளனர். கொழும்பு துறைமுக நகரத் திட்டம், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், நெடுஞ்சாலைத் திட்டங்கள், மற்றும் வானுயர்ந்த கட்டடங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகளிலேயே பெரும்பாலும் சீனப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.…
-
- 0 replies
- 323 views
-
-
அரநாயக்க, தெபத்கம பிரதேசத்தில் மனைவியின் தாக்குதலில் கணவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்று இரவு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மனைவி மீது எசிட் வீச முற்பட்ட போது அந்த எசிட் அவரின் உடலில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து கூரிய ஆயுதத்தால் கணவன் மீது மனைவி திருப்பி தாக்குதல் நடத்தியுள்ளார்.சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வந்த பொலிஸார் படுகாயமடைந்திருந்த கணவனை, திப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.அரநாயக்க, தெபத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். https://…
-
- 1 reply
- 858 views
-
-
அரசியல் அமைப்புக்கான முன்மொழிவு : சுமந்திரன் மீது நிபுணர்கள் பாய்ச்சல்! புதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு அரசியல் அமைப்பு சார் நிபுணர்களினால் மேலும் ஒரு மாதகால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்புக்கான வழிநடத்தல் இன்று (வியாழக்கிழமை) கூடியநிலையில் மேற்படி கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. அதேவேளை இன்றைய கூட்டத்தின் போது குறித்த முன்மொழிவுகள் வெளியிடப்படும் என கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்படமை தொடர்பில் கேள்வியெழுப்பிய நிபுணர்கள் இவ்வாறான கருத்துக்கள் மூலம் சுமந்திரன் நாட்டுக்கு தவறான செய்திகளை கொண்டு செல்வதாக குற்றம் சாட்…
-
- 0 replies
- 554 views
-
-
நல்லாட்சியிலும் தொடரும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்! பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் படையினர் தொடர்ச்சியாக கையடக்க தொலைபேசி மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளனர் என ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் இன்று பாராளுமன்ற உறுப்பனர் சாந்தி சிறிஸ்காந்தராஜா இராணுவ அதிகாரியுடன் பேசுவதற்காக இராணுவ முகாமிற்கு சென்றிருந்தார். அப்போது குறித்த முகாமிற்கு பொறுப்பாக இருந்த …
-
- 0 replies
- 262 views
-
-
மாற்றலாகிச் செல்லும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அரச சட்டவாதிகள் நாகரட்னம் நிஷாந்த், திருமதி பிரிந்தா ரெஜிந்தன்…
-
- 3 replies
- 530 views
-
-
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் குற்றவாளி… காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவிலாளர் பிரகீத் எக்னெலியகொடவின் மனைவி சந்தியா எக்னெலியகொடவுக்கு ஹோமாகம நீதிமன்றில் வைத்து மிரட்டியதாகக் கூறும் சம்பவம் தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் குற்றவாளி என நீதிமன்று தீர்பளித்துள்ளது. இந்த வழக்கு ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் உதேஸ் ரணதுங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார். இதற்கமைவாக கைவிரல் அடையாளத்தை பெற்றுக்கொள்ளவும், அடையாளப்படுத்தவும், எதிர்வரும் யூன் மாதம் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டதோடு, அன்றைய தினம் மற்றும் தண்டனை குறித்து தீர்ப்பு வழங்கப்படுவதாகவ…
-
- 0 replies
- 375 views
-
-
சிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உதவிகள் – முக்கிய ஆவணங்களை அழித்தது பிரித்தானியா சிறிலங்காவின் தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1970களின் இறுதிக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் புலனாய்வு அமைப்புகள் சிறிலங்கா படையினருக்கு அளித்த உதவிகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ நாளிதழ் இதுபற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், சிறிலங்காவின் நடந்த கொடூரமான போரின் ஆரம்ப காலத்தில், பிரித்தானிய அரசு சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியமை தொடர்பான, எந்தப் பதிவுகளும் இல்லாமல் போயுள்ளதாக கூறப்பட்…
-
- 3 replies
- 594 views
-
-
யாழ் நகரப் பகுதியில் மோட்டார் சைக்கில் திருத்தும் இடத்தில் பதுக்கி வைத்து மாவா பாக்கு விற்பனை செய்த இருவர் கைது குளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ்ப்பாண நகரப் பகுதியில் இயங்கிவந்த மோட்டார் சைக்கில் திருத்தும் இடத்தில் (கராச்) பதுக்கி வைத்து மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை செய்த இருவர் விசேட காவல்துறைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையமான பொருளியல் கல்லூரிக்கு அருகில் உள்ள மோட்டார் சைக்கில் உரிமையாளரான மாணிக்கம் வசந்தகுமார் மற்றும் ஜெயசீலன் துசிலன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்வர்கள் ஆவர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- யா…
-
- 0 replies
- 355 views
-
-
முல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்!!! முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநிசன் ஆவார். நேற்று மாலை முதல் மகனை காணாத குறித்த இளைஞரது தந்தை பல இடங்களிலும் தேடித் திரிந்துள்ளார். இந் நிலையில் செல்வபுரம் - கள்ளுத்தவறணை பகுதியில் உள்ள பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று நெடு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த சிலர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த ப…
-
- 0 replies
- 432 views
-
-
யாழ் இந்துவில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி (Water purification System) திறந்து வைப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 1986ஆம் ஆண்டு க.பொ.த(உ/த) பிரிவினரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இரண்டு பாரிய நவீன குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறப்பு விழா இன்று கல்லூரி அதிபர் சதா நிமலன் தலைமையில் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியது. மேற்படி நிகழ்வுக்கு அன்பளிப்புச் செய்த மாணவர்களின் புகழ் பூத்த முன்னை நாள் கணித ஆசான் முத்து நடராஜாவும் அவரது பாரியாரும் கலந்து சிறப்பித்தனர். 1986 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் சார்பில் வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் மற்றும் வைத்திய கலாநிதி ஸ்ரீ P.கோணேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 1986 ஆம் ஆண்டு …
-
- 0 replies
- 480 views
-
-
மாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – பொலிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்!! வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர், பாடசாலை மாணவிகளுக்கு கடந்த 6 மாத காலமாக தொந்தரவு -– சேட்டைவிட்டு வந்ததாக எழுப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து தெல்லிப்பழைப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது, கொழும்பிலுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பெற்றோர் சிலர் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கு அமைவாக, எமக்கு முறைப…
-
- 0 replies
- 533 views
-
-
பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜனின் பெயர் பரிந்துரை சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பெயர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடந்த கட்சித் தலைவர்களின். கூட்டத்தில், சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். பிரதி சபாநாயகராக இருந்த திலங்க சுமதிபால, அந்தப் பதவியை விட்டு விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டதை அடுத்து, பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது. இந்த நிலையிலேயே, அங்கஜன் இராமநாதனின் பெயரை சிறிலங்கா அதிபர் பரிந்துரைத்துள்ளார்…
-
- 6 replies
- 1.1k views
-
-
யாழில் இடியுடன் கூடிய மழை- நகுலேஸ்வரம் மீது விழுந்தது இடி- கோபுரத்தின் ஒரு பகுதி சேதம்!! யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் மின்னல்,இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. எனினும் ஆங்காங்கே மின்னல், இடித் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் கோபுரம் மீது இடி விழுந்தது எனக் கூறப்படுகிறது. இதன் போது கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. ஏனைய சேதவிவரங்கள் வெளியா…
-
- 2 replies
- 1k views
-
-
இவர்கள் ராஜதுரோகிகள்! குமுறுகிறார் கோத்தா!! – அப்படி என்னதான் நடந்தது? இது மிகவும் ஆச்சரியமான விசாரணை. பொலிஸாருக்கு பயிற்சி வழங்கியது யார் என்று தெரியவில்லை. இவர்கள் எனக்கு கீழும் பணியாற்றியவர்கள் என்பது கவலைக்குரியது என்று அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொயார் கடத்திச் சென்று தாக்கப்பட்டமை, பிரகீத் எக்னேலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, வெலிகடை கைதிகள் படுகொலை உட்பட குற்றச் செயல்கள் சம்பந்தமாக எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இவை குறித்து பேசும் மற்றும் விசாரிக்கும் அனைவரு…
-
- 0 replies
- 244 views
-
-
யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் காற்றுடன் மழை!! நேற்றும் கடும் இடி மின்னலுடன் வடக்கில் பல பாகங்களில் கடும் மழை பெய்திருந்தது. யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. கடும் காற்று, மற்றும் இடியுடன் கடும் மழை பெய்கின்றது. நேற்றும் கடும் இடி மின்னலுடன் வடக்கில் பல பாகங்களில் கடும் மழை பெய்திருந்தது. பல இடங்களில் மின்னல் தாக்கம் ஏற்பட்டிருந்தது. பருத்தித்துறையில் பெண் ஒருவர் காயங்களுக்குள்ளாகியிருந்தார். http://newuthayan.com/story/02/யாழ்ப்பாணத்தில்-தற்போது-கடும்-காற்றுடன்-மழை.h…
-
- 0 replies
- 330 views
-
-
16 பேர் அணி மகிந்தவின் தலைமையை ஏற்க இணக்கம் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர். கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று மாலை கொழும்பில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள தாம் இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கிறார்.…
-
- 0 replies
- 228 views
-
-
அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா? சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷூ மாரசிங்க கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “அமெரிக்காவில் குடியுரிமையை ரத்துச் செய்யும் முறை சிக்கலானது. அதற்கு ஆறு மாதங்கள் தொடக்கம் இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்படும். பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் வருங்காலத் தேர்தல்களில் போட்டியிடுவது பற்றிய நம்பிக்கைகளை அளிப்பதற்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வ…
-
- 0 replies
- 145 views
-
-
சிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் வலயம் என்ற பெயரில், சீனா இராணுவத் தளத்தை அமைத்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீனத் தூதுவர் செங் ஷியுவான் நிராகரித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “சிறிலங்காவில் சீனாவின் திட்டங்கள் தொடர்பாக பெருமளவில் ஊகங்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் உண்மையில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும், உள்ளூர் அதிகாரிகளினாலேயே கையாளப்படும் என்று உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஒரு கூட்டு முயற்சி. சிறிலங்கா துறைமுக அதிகாரச…
-
- 0 replies
- 206 views
-
-
மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து இந்த வாரம் முடிவு மாகாணசபைகளுக்குத் தேர்தலை நடத்துவது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கவுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இந்த தகவலை வெளியிட்டார் சபாநாயகர் கரு ஜெயசூரிய. ஏற்கனவே மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் மூன்று சபைகளின் பதவிக்காலம் அடுத்த சில மாதங்களில் முடிவடையவுள்ளது. இந்த நிலையில், மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு, தொகுதிகளின் எல்லை நிர்ணய அறிக்கையை அரசாங்கம் பயன்படுத்துகிறதா என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும சந்தேகம் வெளியிட்டார். இதற்…
-
- 0 replies
- 351 views
-
-
சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு (எம்.மனாசித்ரா) நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அமலநாதன் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 19 மாவட்டங்கள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 10 ஆக உயர்வடைந்துள்ளது. இந் நிலையில் 14432 குடும்பங்களைச் சேர்ந்த…
-
- 4 replies
- 695 views
-
-
முரசுமோட்டையிலும் வீட்டு முற்றத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி ரவைப் பெட்டிகள் மீட்பு முரசுமோட்டை முருகானதா கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாற்பது ரவைப் பெட்டிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர் வீட்டின் முற்றத்தில் தகரம் ஒன்று இருப்பதனை அவதானித்து அகற்ற முயன்ற பொழுது ரவைப் பெட்டி ஒன்று இருப்பதனை அவதானித்த அவர் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார். கிராமசேவையாளர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து காவல்துறையினரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிராம சேவையாளர் முன்னில…
-
- 0 replies
- 472 views
-
-
மில்லியன் கணக்கில் ஏன் செலவிடுகிறார் கோத்தா? – மங்கள கேள்வி தம்மைக் கைது செய்வதைத் தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்ச எதற்காக சட்டவாளர்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிடுகிறார் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார். ‘கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் உள்ளன. தாம் தவறு செய்யவில்லை என்றால், நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு முறையற்ற விதத்தில் இராஜதந்திரக் கடவுச்சீட்டை பெற்றுக் கொடுத்தமை, நேசன் இதழின் ஆசிரியர் கீத் நொயார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, ரிவிர ஆசிரியர் …
-
- 2 replies
- 683 views
-
-
வடக்கு- கிழக்குக்கு பொருத்து வீடு இல்லை – 50 ஆயிரம் நிரந்தர வீடு – அமைச்சரவை தீர்மானம் !! வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செங்கல் மற்றும் சிமெந்து உடனான பாரம்பரிய நிரந்தர வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தையே முன்னெடுக்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காகஒப்பந்தக்காரர்களிடம் கேள்வி மனு கோரப்பட்டுள்ளது. முதற்கட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களி…
-
- 1 reply
- 362 views
-