ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
ஆயுதங்களால் வெற்றிகொண்ட “பனங்காட்டை” புத்திக்கூர்மையால் தமதாக்கும்படையினர்… ‘பனங்காட்டில் புத்திக்கூர்மை’ எனும் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இராணுவத்தினரின் கண்டுபிடிப்புக்களை வடக்கு மக்களுக்கு பயன்பெற வைக்கும் நோக்கில் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்தக் கண்காட்சி இன்றும் நாளையும் நடாத்தப்படுகின்றது. யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்துள்ளார். இளைஞர்,யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் …
-
- 0 replies
- 331 views
-
-
இரணைதீவில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் கடற்படையினர் வசமில்லை எனினும் நில அளவை செய்யப்படும் என்கிறார் காணி அமைச்சர் (எம்.எம். மின்ஹாஜ், ஆர்.யசி) இரணைதீவு பகுதியில் 6 ஏக்கர் காணியை கடற்படையினர் உபயோகம் செய்கின்றனர். இந்த நிலப்பரப்பில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் எதுவும் கிடையாது. எனினும் இங்கு பொது மக்ககளின் காணிகள் உள்ளதா என்பது குறித்து நில அளவை செய்யுமாறு மாவட்ட செயலாளருக்கு ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அளவையின் போது பொது மக்களின் காணிகள் இருக்கும் பட்சத்தில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்வது குறித்து பரசீலனை செய்யப்படும் என அரசாங்கம் நேற்று…
-
- 1 reply
- 377 views
-
-
பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு கவலையளிக்கிறது – முதலமைச்சர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு மன வருத்தத்தைத் தருகின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று (புதன்கிழமை) கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துக்களை வழங்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்புவிடுத்திருந்தார். எனினும் முதலமைச்சரின் அழைப்பை ஏற்பதில்லை எனவும் கலந்துரையாடலில் பங்கேற்பதில்லை எனவும் யாழ்ப்பாண பல்…
-
- 3 replies
- 864 views
-
-
பாடசாலை வரலாற்றுப் பாட நூல்களில் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு பாடசாலை மாணவ, மாணவியருக்கான வரலாற்றுப் பாடம் முழுமையற்றதாக, நாட்டின் பண்டைய உண்மை வரலாறுகள் மறைக்கப்பட்டதாக, திரிவுபடுத்தப்பட்டதாகக் காணப்படுகின்றது. இது தொடர்பாகப் பலமுறை சுட்டிக்காட்டியதன் விளைவாக பாராளுமன்றத்தில் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கல்வியமைச்சரிடம் இது தொடர்பில் வினா எழுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அவற்றில் கல்வி அமைச்சு அதிகாரிகள், தேசிய கல்வி நிறுவக உயர் அதிகாரிகள், கல்வி வெளியீட்டுத் திணைக்க…
-
- 1 reply
- 1k views
-
-
மந்தகதியில் தொடருகிறது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ; அரசாங்கம் உடனடியாக விழித்துக்கொள்வது அவசியம் கடந்த 2017 ஆம் ஆண்டில் நாட்டில் நிலவிய காலநிலை மாற்றங்கள் பொருளாதாரத்தில் பாரிய அளவிலான பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக நாட்டின் ஒருபகுதியில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டதுடன் வேறு சில பகுதிகளில் கடுமையான வரட்சி நிலவியது. இதனால் நாட்டில் விவசாயத்துறையானது பாரிய பாதகமான நிலையை எதிர்கொண்டிருந்ததுடன் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டது. 2017ஆம் ஆண்டின் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்துறையானது வெறுமனே 7.7 வீதமான பங்களிப்பையே செய்திருக்கின்றது.…
-
- 0 replies
- 573 views
-
-
ஞானசார தேரருக்கு அமைச்சர்களை விடவும் கூடுதலான பாதுகாப்பு வழங்கிய ஸ்ரீலங்கா அரசு! அநுராதபுரம் மாவட்டத்தின் இபலோகம பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விஜிதபுர எனும் இடம் எல்லாளன்-துட்டகைமுனு இருவருக்குமிடையே போர் நடைபெற்ற பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகள் அப்பிரதேசத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமொன்றை துப்புரவு செய்து வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அங்கிருந்த புராதன சின்னங்கள் பலவும் சேதமடைந்திருந்தன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று மாலை கலகொட அத்தே ஞானசார தேரர் அப்பிரதேசத்துக்கு…
-
- 2 replies
- 338 views
-
-
பி.பி.சி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பு!!! ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த புதிய கொள்கை முறைகள் தொடர்பான பதிவிற்கு அஸ்ஸாம் அமீன், “நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆனால் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்! செயலில் காட்டுங்கள்” என்று ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் விதத்தில் பதிவிட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அதனைத் தொடர்…
-
- 1 reply
- 498 views
-
-
முறைப்பாட்டாளரை புலிகளின் உளவுத்துறை உறுப்பினர் எனக் கூறி தேடி வந்த நபர் கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணை (எம்.எப்.எம்.பஸீர்) கந்தளாய் சீனி தொழிற்சாலையில் உள்ள இயந்திர உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதியைப் பெற்றுத்தர ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி மஹநாம மற்றும் மரக் கூட்டுத்தாபன தலைவர் திஸாநாயக்க ஆகியோர் 10 கோடி ரூபா இலஞ்சம் கோரி அதில் 2 கோடி ரூபாவைப் பெற்றுக்கொள்ளும் போது அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த இலஞ்ச ஊழல் விவகாரத்தில் முறைப்பாட்டாளரான எம்.ஜி.சுகர் எனும் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே.ஆர்.கே.டி. நடராஜாவை தேடி வந்ததாக கூறப்படும்…
-
- 0 replies
- 412 views
-
-
பல்கலைக்கழக மாணவர்கள் தனித்து அஞ்சலிக்க முடிவு!! பல்கலைக்கழக மாணவர்கள் தனித்து அஞ்சலிக்க முடிவு!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவது என்று நாம் திட்டமிட்டதன் பிரகாரம் மக்கள் கனவை நிறைவேற்றியே தீருவோம். இதற்கான கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும். பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் மாணவர் பிரதிநிதிகள், சி…
-
- 0 replies
- 244 views
-
-
20 ஆவது அரசமைப்புத் திருத்தமும் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பும்!! 20 ஆவது அரசமைப்புத் திருத்தமும் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பும்!! அரசமைப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் 20 ஆவது திருத்தத்தை பௌத்த பிக்குமார் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தத் திருத்தம் நாடு பிளவுபடுவதற்கு வழி வகுத்து விடுமெனக் கூறியே இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தலைவரின் நிறைவேற்று அதி…
-
- 0 replies
- 218 views
-
-
மைத்திரியின் கொள்கை விளக்க உரை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி!! மைத்திரியின் கொள்கை விளக்க உரை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி!! அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் நிகழ்த்திய கொள்கை விளக்க உரை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது. தமிழ் மக்களின் நீண்டகால மற்றும் உடனடிப் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வை வழங்கப் போகின்றார் என்ற வரைபடமோ அவரது பேச்சில் தொனிக்கவில…
-
- 0 replies
- 198 views
-
-
சட்டங்கள் தாமதமாகுவதால் குற்றவாளிகள் தப்புகின்றனர்; நாடாளுமன்றில் சுமந்திரன்! குற்றவியல் வழக்குகளில் தாமதம் என்பதே பெரும் பிரச்சினையாக உள்ளது. சட்டங்கள் தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக்கொள்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது…
-
- 0 replies
- 227 views
-
-
சீனத் திட்டங்கள் தொடர்பில் கெட்ட நோக்கங்களுக்காக வதந்திகள் - சீன தூதுவருடனான சந்திப்பில் சபாநாயகர் கெட்ட நோக்கங்களுக்காக இலங்கையில் மேற்கொள்ளப்படும் சீன திட்டங்கள் தொடர்பில் வதந்திகள் பரப்பப்படுவதாக சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்தார். தீவிரவாதிகள் எல்லா நாடுகளிலும் உள்ளனர். இலங்கையில் சீன நிதி வசதியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றி வதந்திகள் பரப்பப்படுவதாக சபாநாயகர் கருஜெயசூரிய இலங்கைக்கான சீன தூதுவர் செங் சூயுவானை சந்தித்த போது தெரிவித்தார். இருவரும் பொருளாதார உலகமயமாதல் மற்றும் சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் பற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். சீனா மற்றும் இலங்கை உட்பட முழு உலகிற்கும் பொருளாதார உலகமயமாதல் பயன் விளைவிக்கும்…
-
- 0 replies
- 138 views
-
-
தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து கட்சிகளும் தங்களுக்கு கிடைத்துள்ள இறுதி வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு,ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முனவர வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்கவுரையாற்றும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பூசல்கள் களையப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போதும் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilm…
-
- 3 replies
- 548 views
-
-
உலகின் தலை சிறந்த ரயில் வழித்தடங்களில் யாழ்தேவி மற்றும் நீலகிரி மலை ரயில்கள் இடம் பிடித்துள்ளன. லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற `கார்டியன் ' பத்திரிகை உலகின் தலைசிறந்த 18 ரயில் வழித்தடங்களை வகைப்படுத்தியுள்ளது. அதில், யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புக்குச் செல்லும் யாழ்தேவி இடம் பெற்றுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தவுடன் யாழ்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீண்டும் இந்தச் சேவை 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களையும் இணைக்கும் இந்த பாதை 314 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இலங்கையின் கலாசாரம் மற்றும் பண்பாட்டு அடையாளமாகவும் இது ரயில் பார்க்கப்படுகிறது. …
-
- 4 replies
- 955 views
-
-
கோட்டாபாய கைது?- தயாராகும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இராணுவப் புலனாய்வு அதிகாரிகளைக் கொண்டு கைதுசெய்யும் சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாபயவின் விசுவாசியான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார். இதற்காகவே ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மஹிந்த அணியைச் சேர்ந்த …
-
- 0 replies
- 450 views
-
-
வேஸ்டியை மடிச்சுக் கட்டி புல்லு வெட்டிய கஜேந்திரனும் – கஜேந்திர குமார் பொன்னம்பலமும்… இரணைதீவுக்கு இன்று பயணித்த தமிழத் தேசிய மக்கள் முன்னணி அங்குள்ள மக்களுடன் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அவர்களுக்கான உலர் உணவுப் பொருள்களையும் வழங்கி வைத்துள்ளனர். கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் செயற்பாட்டாளர்கள் சென்ற குழுவில், வேட்டியை மடிச்சுக் கட்டிய கஜேந்திரன், புல்லுவெட்டிய கஜேந்திரகுமார் என்ற கருத்துக்களுடன் சமூக வலைத்தளங்களில் ஒளிப்படங்களுடன் வெளிவந்துள்ளன. http://globaltamilnews.net/2018/78393/
-
- 0 replies
- 369 views
-
-
தியாகி திலீபனின் சிலை மட்டக்களப்பில் மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட வீதி சுற்று வட்டங்களில் தமிழர்கள் மரபை நிலை நிறுத்தும் வகையில் அன்னை பூபதி, தியாக திலீபன், ஜோசப்பரராசசிங்கம் ஆகியோர் சிலைகளை நிறுவுவதற்கு முன்வருமாறு கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு, சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமது கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட கிரான் சுற்று வட்டம், கும்புறுமூலை சுற்று வட்ட…
-
- 1 reply
- 413 views
-
-
ஈபிடிபி-ஸ்ரீதர் திரையரங்க விவகாரம்: அடுத்த மாதம் விசாரணை! ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்க கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு, எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. இராட்ணசபாபதி ஸ்ரீறிதர் உள்ளிட்ட 6 பேர் மனுதாரர்களாகவும், ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை எதிர்மனு தாரராகவும் குறிப்பிட்டு சட்டத்தரணி கேசவன் சயந்தன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். "1996ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி அனுமதி எதுவுமின்றி சட்டவிரோதமாக…
-
- 1 reply
- 356 views
-
-
உலகலாவிய ரீதியில் யாழ் தேவிக்கு கிடைத்த கௌரவம் உலகின் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கை காட்சிகளை இரசிக்கக்கூடிய ரயில் சேவைகள் பட்டியலை தி கார்டியன் (The Guardian) இணையதளம் வெளியிட்டுள்ளது. மிகச் சிறந்த 18 ரயில் சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி ரயில் சேவையும் இடம்பெற்றுள்ளது. ரயில் பயணத்தின்போது பயணிகளின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய இயற்கை காட்சிகள், பல்வேறு கலாசாரங்களை பிரதிபலிக்கும் கட்டடங்கள் என பயணத்தை இனிமையாக்கும் அனுபவத்தை வைத்து இந்தத் தரப்படுத்தல் வெளியாகியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உலகலாவிய-ரீதியில்-யாழ்-தேவிக்கு-கிடைத்த-கௌரவம்/175-215437 …
-
- 1 reply
- 988 views
-
-
ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் பெண்கள் இருவர் கைது (எம்.எப்.எம்.பஸீர்) சிங்கப்பூரிலிருந்து வருகை தந்தபோது சிக்கினர் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும் பிய இரு யாழ். பெண்கள் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் , விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.349 எனும் விமானத்தில் வந்த 50, 56 வயதுகளை உடைய இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் நிறை கொண்ட தங்க நகைகள் மீட்கப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் மே…
-
- 0 replies
- 357 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையாடல் ஆரம்பம் - எஸ்.நிதர்ஷன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையானலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இக்கலந்துரையாடலில் மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னரும் முதலமைச்சர் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மாகாண சபையின் ஏற்பாட்டில் நடத்துவதென தீர்மா…
-
- 0 replies
- 249 views
-
-
ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் பொன்சேகா நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக்கோரியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பகல் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பு நிறைவுற்றதன் பின்னர் அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் சிலர் சென்று இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. அமைச்சர் சரத் பொன்சேகா கடந்த 3ஆம் திகதி தனது புதிய அமைச்சினை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதியை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனையடுத்த…
-
- 0 replies
- 230 views
-
-
புலிகளை தோற்கடித்த போதிலும் அவர்களின் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியவில்லை…. பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை (புலிகளை) தோற்கடிக்க முடிந்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோற்கடிப்பதற்கு இன்னும் முடியாதுள்ளதாக, இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற, சிறப்பு கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். தொடர்ந்து கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்திய அவர், “கடந்த மூன்றரை வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பை பெற்று புலிகளின் அந்தக் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கு நான் முயற்சித்தேன் எனினும் யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை கையாள்வது என்பது மிகுந்த சவாலாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டு…
-
- 3 replies
- 563 views
-
-
சு.கவின் 16 பேரும் ஆரவாரத்துடன் அமர்ந்தனர் - மஹிந்தவைக் காணவில்லை -வி. நிரோஷினி அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் நேற்று (08), எதிரணி ஆசனங்களில், ஒன்றிணைந்த எதிரணியினரின் ஆரவாரத்துடன் அமர்ந்தனர். ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்ட 8ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர், நேற்று (08), வைபவ ரீதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிற்பகல் 2.15க்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்மிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களித்த சு.க உறுப்பினர்கள் 16 பேரும், …
-
- 0 replies
- 374 views
-