ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட தீர்மானம் adminMarch 2, 2025 இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் இத்தேர்தலை அணுக முடியும் என்றும்,தேர்தலின் பின்னர் வெவ்வேறு அணிகளாக போட்டியிட்டாலும் ஆட்சி நிர்வாகங்களை அமைக்கின்ற போது சேர்ந்து அமைக்கக்கூடிய வகையில்,தேர்தலுக்கு முன்னர் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இடம் பெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் சகல மாவட்ட கிளைகளையும் சந்தித்து வரும் நிலையில் இலங்க…
-
- 1 reply
- 391 views
-
-
உள்ளூராட்சி தேர்தலில் மான் தனி வழியே .. adminMarch 2, 2025 எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து தனது மான் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். சங்கு சின்னத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் கட்சிகளின் பேச்சில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்நிலையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டு சேர்வதற்கு அழைப்பு வந்தால் , தாம் அது தொடர்பில…
-
- 0 replies
- 162 views
-
-
கீத் நொயார் கடத்தல் - முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவர் கைது ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (01) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் இருவர் ஆவர். பத்திரிகையொன்றின் ஆசிரியராக பணியாற்றி வந்த ஊடகவியலாளர் கீத் நொயார், 2008 மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இராணுவ வீரர்கள் உட்பட சந்தேக நபர்கள் சிலர் முன்னர் கைது செய்யப்பட்டிருந்…
-
- 0 replies
- 209 views
-
-
ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின! முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்தவகையில் மஹிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டு முதல் 2014 வரை – 3,572 மில்லியன் ரூபாயினையும், மைத்திரிபால சிறிசேன – 2015 ஆம் ஆண்டு முதல் 2019 வரை 384 மில்லியன் ரூபாயினையும், கோட்டாபய ராஜபக்ச – 2020 ஆம் ஆண்டு முதல் 2022 வரை 126 மில்லியன் ரூபாயினையும், ரணில் விக்ரமசிங்க – 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் 533 மில்லியன் ரூபாயினையும், அநுர குமார திசாநாயக்க கடந்த செப்டம்பர் மாதம…
-
-
- 6 replies
- 448 views
- 1 follower
-
-
முப்படைகளுக்குச் சொந்தமான 3, 400 வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வி! நாட்டில் முப்படைகளின் முகாம்களில் ஆய்வு செய்யப்பட்ட ஆறாயிரம் வாகனங்களில், ஆயிரத்து 400 வாகனங்கள் முதல் சுற்று சோதனையில் தோல்வியடைந்ததாக மோட்டார் வாகனத் துறையின் வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியத்தின் இயக்குனரும் பொறியியலாளருமான தாசுன் கமகே தெரிவித்துள்ளார். கரும்புகையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் நோக்கில் Clean srilanka திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், முப்படை வாகன ஆய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியத்திலிருந்து பத்து தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் இத் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்ப…
-
- 0 replies
- 185 views
-
-
02 MAR, 2025 | 09:15 AM (லியோ நிரோஷ தர்ஷன்) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உட்பட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இம் மாதம் 22 ஆம் திகதி அளவில் இடம்பெறவுள்ள இந்த விஜயத்தின் போது இருநாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது. இதேவேளை, வெளியுறவுத் துறைக்கான ஜப்பான் பாராளுமன்ற துணை அமைச்சர் இகுய்னா அகிகோவை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடி இருந்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வின் பக்க நிகழ்வாக இடம்பெற்…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
02 MAR, 2025 | 09:53 AM நீண்டாகாலமாக விடுதலையின்றி சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல்கைதிகளை உடனடியாக விடுதலைசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் பலரும் விடுதலையின்றி நீண்டகாலமாக சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி, மருதநகரை சேர்ந்த ஆனந்தசுதாகர் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செ…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
01 MAR, 2025 | 08:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுங்கள். ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பொய்யாக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் …
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
02 MAR, 2025 | 09:39 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வட, கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நாங்கள் நன்கு அறிவோம். சிறந்த திட்டமிடலுடன் புதிய அரசியலமைப்பு வெகுவிரைவில் உருவாக்கப்படும். தமிழ் மக்கள் வழங்கியுள்ள ஆணையை பாதுகாப்போம். வங்குரோத்து அரசியலுக்காக இனவாதம், மதவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க போவதில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (01) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் …
-
- 0 replies
- 111 views
- 1 follower
-
-
26 Feb, 2025 | 05:34 PM (எம்.மனோசித்ரா) 'உலகலாவிய விசேட முன்னேற்றங்கள்' குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (27) இந்தியா செல்லவுள்ளார். உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நாளை வெள்ளிக்கிழமை புதுடில்லியில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ள இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹாபர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி எபொட் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன் போது தென்னாசியா தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையாற்றவுள்ளார். அத்தோடு இவ்விஜயத்தின் போது இந்தி…
-
- 1 reply
- 235 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 01 MAR, 2025 | 03:59 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோருக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், நடைபெற உள்ள உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பாக தங்கள் மூவருடனும் கலந்துரையாடியது. இக்கலந்துரையாடல் ஏற்கனவே தமிழ்த் தே…
-
-
- 8 replies
- 399 views
- 1 follower
-
-
அதானி நிறுவனத்தின் எதிர்கால நிலைப்பாட்டை எழுத்துபூர்வமாக கோரியுள்ள அரசாங்கம். மன்னாரில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் அறிவித்த போதிலும், மேற்கோள் காட்டப்பட்ட கட்டணங்களில் இத்திட்டத்தை தொடர பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்த நிலையில், இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு எரிசக்தி அமைச்சு அதானி நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான அதானி கிரீன் எனர்ஜி, மன்னார் மற்றும் பூனரியில் உள்ள இரண்டு 484 மெகாவாட் (MW) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலைகளை …
-
-
- 1 reply
- 206 views
-
-
Published By: DIGITAL DESK 2 01 MAR, 2025 | 03:42 PM யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக பெருமளவான காடு அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட நிலப்பகுதியை தனிப்பட்ட தேவைகளுக்காக குத்தகை அடிப்படையில் பெற, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக ஆவன செய்துள்ளார். ஆவண கடிதத்தை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரிடம் கையளித்தவுடன் காடுகள் நிறைந்த சம்பந்தப்பட்ட பெருமளவான நிலப்பகுதியை அனுமதியின்றி இயந்திரம் கொண்டு இரவோடு இரவாக முற்றாக அழித்துள்ளார். சம்பவம் அறிந்து அப்பகுதி மக்கள்…
-
-
- 2 replies
- 311 views
- 1 follower
-
-
யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள் வழமைக்கு செய்திகள் யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள் வழமைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் (01) மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கி இருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் வைத்தியர்கள் சேவைக்கு திரும்பியுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடந்த வியாழக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் பலரும் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியாமல் பல்வே…
-
- 0 replies
- 129 views
-
-
கிளிநொச்சியின் மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் இரணைமடு குளத்துக்கு வந்து கொண்டிருக்கிறமையால் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலதிக நீர் வெளியிடப்படுகின்றமையால் குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=198798
-
- 3 replies
- 283 views
- 1 follower
-
-
நீதிமன்றங்களில் 1,131,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதால், சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், மேல் நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல்நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும்,மேல்நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 262,665 வழக்குகளும், சிறுவர் நீதவான் நீதிமன்றங்களில் 1260 வழக்குகளுமாக ஒட்டுமொத்தமாக தீர்க்கப்பட வேண்டிய 1,131,818 வழக்க…
-
- 4 replies
- 468 views
- 1 follower
-
-
Published By: VISHNU 01 MAR, 2025 | 02:44 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை இன்று…
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் தயார் – ஜனாதிபதி. இனவாதம் அல்லது தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். தற்போதுள்ள சட்டங்கள் அதற்குப் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இரண்டு வழிமுறைகள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். இனவெறி அல்லது தீவிரவாதம் அவற்றில் ஒன்று என்றும், இந்த நாட்டில் நடந்த ஈஸ்டர் தாக்குதல்கள் போன்ற தேசிய பாதுகாப்புக்கு அ…
-
- 1 reply
- 420 views
- 1 follower
-
-
கல் ஓயாவில் தடரம் புரண்ட ரயில்; 5 யானைகள் உயிரிழப்பு! கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இன்று (20) அதிகாகாலை யானைக் கூட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் பரிதாபகரமாக ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த புலத்திசை ரயில் சேவையையயும் இரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்…
-
- 4 replies
- 383 views
-
-
8 Feb, 2025 | 04:40 PM யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் நேற்று வியாழக்கிழமை (27) மாலை மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ள நிலையில் குறித்த முச்சக்கரவண்டியானது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மோதியுள்ளது. இந்த விபத்தில் பாரிய சேதங்கள் இல்லாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். மேலும், குறித்த சந்தியில் நாளாந்தம் தொடர்ச்சியாக வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது, ஆகையினால் குறித்த சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட வேண்டுமென தொடர்ச்சியாக அப…
-
- 1 reply
- 333 views
-
-
சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் February 26, 2025 06. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ளது. எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ’33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் அவர் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள ஆலயத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்’ என்று குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த …
-
- 2 replies
- 311 views
-
-
27 Feb, 2025 | 05:00 PM (எம்.மனோசித்ரா) சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். எனது உடல் நிலையைக் கருத்திற் கொண்டு தினமும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வைத்தியர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் சிறை…
-
-
- 1 reply
- 221 views
-
-
கிளிநொச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பார்வையிட்டார் வடக்கு ஆளுநர் கிளிநொச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பார்வையிட்டார் வடக்கு ஆளுநர் 28 Feb, 2025 | 06:23 PM யாழ்ப்பாணம் - கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக சுத்திகரிக்கும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வெள்ளிக்கிழமை (28) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது திட்டப் பணிப்பாளரும் பொறியியலாளருமான எஸ்.மாலதி மற்றும் பொறியியலாளர் விஜயகாந் தலைமையிலான குழுவினர் ஆளுநரை வரவேற்றனர். அதனை தொடர்ந்து, குடிநீர் விநியோகத் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார். அதன் பின்னர், கடல் நீரை உள்ளெடுக்கும் நிலையம், சுத்…
-
- 0 replies
- 124 views
-
-
28 Feb, 2025 | 05:02 PM (நமது நிருபர்) தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாகச் செயற்படுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றுபட்டு ஒன்றினைந்து செயற்படுதல் விடயத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் அறிந்து தெளிந்து உணர்ந்து பொதுவான விடயங்களில் ஒன்றுபட்டு செயற்படுவது சாலச்சிறந்தது. இந்த குழுவை நம்மத்தியில் உருவாக்கி செயற்பட தங்கள் ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பின…
-
- 0 replies
- 123 views
-
-
28 FEB, 2025 | 03:21 PM மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும் என்றும், அடுத்த ஐந்து வருடங்களுக்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரித்து அனைத்து இலங்கையர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதே எமது நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (27) கொழும்பு சினமன…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-