ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
இலங்கை பிரதமர் ரணில் அமைச்சரவை மாற்ற முடிவு? YouTube இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், இந்த இரு கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசுக்கு எதிராக ராஜபக்ச தலைமையிலான எஸ்எல்பிபி கட்சி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 122 எம்.பி.க்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராகவும் 76 எம்.பி.…
-
- 0 replies
- 507 views
-
-
தீவகத்திலிருந்து படகு மூலம் யாழ். நகருக்கு மாடு கடத்தல்!! தீவகத்திலிருந்து படகு மூலம் யாழ். நகருக்கு மாடு கடத்தல்!! தீவகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வீதி ஊடாக மாடு கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், படகுமூலம் மாடுகளை கடத்தும் புதிய யுக்தியை கடத்தல்காரர்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். புங்குடுதீவிலிருந்து 5 மாட…
-
- 0 replies
- 533 views
-
-
EUவிடம் அதிருப்தி வெளியிட்ட சம்பந்தனும், வாக்குறுதி அளித்த இலங்கை அரசாங்கமும்….. பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் நீக்குவதற்கு; நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளதாக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கை தொடர்ந்தும் சீர்திருத்த பாதையில் பயணிக்குமென தாம் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் நாளை வெள்ளிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்…
-
- 1 reply
- 327 views
-
-
ரஷ்யாவுடன் இராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு – சிறிலங்கா அமைச்சரவை அனுமதி ரஷ்யாவுடனான இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான உடன்பாட்டில் கையெழுத்திடும் யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், இந்த இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு உடன்பாட்டு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்த செவ்வாய்கிழமை அனுமதி அளித்துள்ளது. http://www.puthinappalakai.net/2018/04/06/news/…
-
- 0 replies
- 122 views
-
-
சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் பதவி விலகலை நிராகரித்தார் சிறிலங்கா அதிபர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை, தொடர்ந்து பதவியில் இருக்குமாறு சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்திருந்தனர். இவர்களில் 6 அமைச்சர்களும் அடங்கியுள்ளனர். இவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஐதேக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனினும், தாம் பதவி விலகத் தயாராகவே இருந்தாலும், சிறிலங்கா அதிபரே தம்மிடம் அதனைக் கூற வேண்டும் …
-
- 0 replies
- 112 views
-
-
தேர்தல்களுக்கு தயாராகுமாறு ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டு எதிரணியின் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், ஐதேக தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்றுக்காலை காலை விருந்து இடம்பெற்றது. இதில் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர், தனக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிக்க துணை நின்ற கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார். ‘என்னைப் பதவி கவிழ்ப்பதன் மூலம், சிறிலங்கா அதிபரின் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தைப் பதவி கவிழ்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளா…
-
- 0 replies
- 90 views
-
-
‘குடியேற்றங்கள் தொடர்ந்தால் தமிழீழம் மலரும்’ “சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும்” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று (05) வடமாகாண சபையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக நாங்கள் வடமாகாண சபையில் ஒரு நாள் அமர்வு நடாத்தி, கத்துவதன் மூலம் தடுத்து விட முடியாது. அது தொடர்பில் நாடாளுமன்ற…
-
- 7 replies
- 746 views
-
-
தியாகி திலீபனிடம் ஆசி வாங்கிய சிறுவன்…. யாழில். சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாள் அன்று தியாகி திலீபன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சாதுரியன் எனும் சிறுவன் தன்னுடைய 7ஆவது பிறந்த தினத்தில் வேஷ்டி கட்டி திலீபனின் நினைவிடத்திற்கு சென்று தேங்காய், பூ, பழம், பத்தி, பட்டு என்பவற்றை வைத்து கற்பூரம் கொளுத்தி வணங்கினான். http://globaltamilnews.net/2018/73855/
-
- 0 replies
- 269 views
-
-
மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு கடூழிய சிறை வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில்; மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார். வவுனியா நெடுங்கேணியில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த சிறுமி 2014ஆம் ஆண்டளவில் சாதாரண தர பரீட்சைக்காக பரீட்சை வினாத்தாள்களைக் கோரியுள்ளார். இந்நிலையில், குறித்த சிறுமியை வீட்டுக்கு வரவழைத்த 39 வயதுடைய ஆசிரியர், சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபரைக் கைது செய்து வவுனியா ந…
-
- 0 replies
- 290 views
-
-
சலுகையா உரிமையா? எதைக் கேட்கிறது கூட்டமைப்பு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 நிபந்தனைகள் என்று சொல்லப்படும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி அந்தப் பத்துக் கோரிக்கைகளும் வருமாறு 1.தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, – அரசமைப்பு மறுசீரமைப்பு (கவனிக்க, புதிய அரசமைப்பு அல்ல) தொடரவேண்டும்் விரைவாக முடிவுறுத்தப்படவேண்டும். 2.தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். 3.காணாமற்போ…
-
- 0 replies
- 232 views
-
-
அடாத்தாக வீடுகளில் குடியிருப்போர் மீதான சட்ட நடவடிக்கைக்கான காலக்கெடு. சாதாரண சட்டத்தின்படி வாடகை செலுத்தாமல், அல்லது கோரப்படாமல், ஒரு வீட்டில் அல்லது ஆதனத்தில் குடியிருக்கும் ஒருவர், 10 ஆண்டுகளின் பின்னர் அந்த ஆதனத்தின் 'ஆட்சி உரித்து' மூலமான உரிமையாளர் ஆகின்றார். அதன் பின்னர் ஒரிஜினல் உரிமையாளர் உரிமை கோர முடியாது. இலங்கையின் வடக்கு கிழக்கு யுத்தத்தின் காரணமாக, இந்த 10 ஆண்டுகள் காலப்பகுதி, 30 ஆண்டுகள் என விசேட வர்த்தமானி அறிவிப்பினை அரசு வெளியிட்டிருந்தது. வடக்கு கிழக்கில், யுத்த காலத்தில் உங்கள் வீடுகளில் குடியிருந்தோரை எழுப்பி வீட்டினைப் மீள பெறும் சட்ட நடவடிக்கைக்கான காலக்கெடு இம்மாதம் 30ம் திகதி என அறிவிக்கப் பட்டுள்ளது என தெரிய வருகிறது. அதாவது இந்…
-
- 0 replies
- 397 views
-
-
பதவி விலகினார் கபீர் காசிம் – சிறிகொத்தாவில் கொண்டாட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, விலகுவதற்கு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் கபீர் காசிம் அறிவித்துள்ளார். ஐதேகவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம் இன்று பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐதேகவில் மேற்கொள்ளப்படவுள்ள உள்ளக மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே தாம் பதவி விலகியிருப்பதாகவும் கபீர் காசிம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கூட்டு எதிரணியின் நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்த, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு இன்று தேக தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது…
-
- 0 replies
- 442 views
-
-
மட்டக்களப்பு மாநகர முதல்வரானார் சரவணபவன் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் தியாகராஜா சரவணபவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சலீம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, மாநகர முதல்வர் பதவிக்கு தியாகராஜா சரவணபவனின் பெயரை முன்மொழிந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி, சார்பில் சிவலிங்கம் சோமசுந்தரம் முன்னிறுத்தப்பட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 25 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட, தியாகராஜா சரவணபவன் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐதேக, ஈபிடிபி …
-
- 0 replies
- 328 views
-
-
சாவகச்சேரி பிரதேச சபையையும் தமிழ்க் கூட்டமைப்பு கைப்பற்றியது!! சாவகச்சேரி பிரதேச சபையையும் தமிழ்க் கூட்டமைப்பு கைப்பற்றியது!! சாவகச்சேரி பிரதேச சபையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமானது. புதிய தவிசாளராகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கந்தையா வாமதேவன் 23 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னனியைச் சேர்ந்த கந்தையா சதீஸ்வரன் 6 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். …
-
- 1 reply
- 385 views
-
-
வடமாகாண சபை விஷேட அமர்வில் மாயமான உறுப்பினர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பிலான விஷேட அமர்வில் தேநீர் இடைவேளையின் பின்னர் பல உறுப்பினர்கள் மாயமாகி இருந்தனர். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது. சபையில் உறுப்பினர்கள் பலரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எதிர்த்து கருத்து தெரிவித்தனர். முன்னதாக காலை வடமாகாண முதலமைச்சர் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் தொடர்பில் உரையாற்றினார். அதன் …
-
- 0 replies
- 277 views
-
-
இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் வேனொன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடமிருந்து 220 கிலோ கிராம் நிறையுடைய கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. https://www.newsfirst.lk/tamil/2018/04/இ…
-
- 0 replies
- 178 views
-
-
வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்!! வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்!! வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளது. அங்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள், முகாம்கள் என்பவற்றை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என அறியமுடிகிறது. பலாலி, வறுத்தலைவிளான், கட்டுவன் சந்தி அச்சுவேலி வீதி, கட்டுவ…
-
- 0 replies
- 490 views
-
-
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை கூட்டமைப்பிடம்!! கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வசமாகியுள்ளது. பச்சிலைப் பள்ளி பிரதேச சபை மண்டபத்தில் வட மாகாண உள்ளுராட்சி சபை ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் முதலாவது சபை அமர்வு நடைபெற்றது. அதில் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈ.பி.டி.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சி உறுப்பினர்களும் தவிசாளர் தெரிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத காரணத்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சுப்பிரமணியம் சுரேன் பச்சிலைப் பள்ளி பிரதேச சபை…
-
- 0 replies
- 311 views
-
-
530 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம், 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ளது - எஸ்.நிதர்ஷன் வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள 530 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுக்கு 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ள நிலையில், அதனைக் கொடுத்து அக் காணிகளை மீட்பதுக்கு அமைச்சரவைப்; பத்திரங்களை தமது அமைச்சு தயாரித்து வருவதாக மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மீளக் குடியேறிய கடற்தொழிலாளர்களுக்கு உதவித் திட்டங்கள் இன்று (05) வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேல…
-
- 0 replies
- 514 views
-
-
வறுத்தலைவிளான் கிராமத்தில் 30 வீடுகள் கையளிப்பு!! வறுத்தலைவிளான் கிராமத்தில் 30 வீடுகள் கையளிப்பு!! நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கான காணியுடன் கூடிய வீடுகள், வலி.வடக்கு வறுத்தலைவிளான் கிராமத்தில் இன்று கையளிக்கப்பட்டன. இதில் 30 பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன. மீள்குடியேற்ற அமைச்சினால் இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை ச…
-
- 0 replies
- 368 views
-
-
ஜனாதிபதி மீண்டும் துரோகமிழைத்துவிட்டார் : நாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் துரோகமிழைத்துவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது சிறிசேனவின் துரோகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேன ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு உற்சாகப்படுத்தினார் எனினும் இறுதிநேரத்தில் அவர் பின்வாங்கினார். இதன் மூலம் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் த…
-
- 0 replies
- 209 views
-
-
மஹிந்தவின் அப்பமும், ரணிலின் தேநீர் விருந்தும்;புகைப்படம் அம்பலம்! நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் பிரதமர் தலைமையில் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள அமைச்சர்களும், உறுப்பினர்களும் நேற்று இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டிருந்தனர். இதன்படி அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரஞ்ஜித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள, நளின் பண்டார, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பலரும் அதில் கலந்துகொண்டிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது இராஜதந்திர செயற்பாடுகள…
-
- 0 replies
- 306 views
-
-
தோல்வியும் வெற்றி தான் – என்கிறார் மகிந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தாலும், தமக்கு வெற்றியே என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு முடிந்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, “சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், முடிவு மாறியிருக்கும். முதலில் எமக்கு 54 வாக்குகள் தான் இருந்தன. இப்போது, 76 வாக்குகளாக அதிகரித்துள்ளது. இது எமக்கு வெற்றி தான்” என்று அவர் தெரிவித்தார். http://www.puthinappalakai.net/2018/04/05/news/30…
-
- 1 reply
- 364 views
-
-
மீளவும் அதே வடிவத்தில்! அதே இடத்தில்! திலீபனது நினைவிடம்! அகிம்ஷை வழியில் உண்ணா நோன்பிருந்து தன்னையே ஆகுதியாக்கிய திலீபனது நினைவிடம் மீளவும் அதே வடிவத்தில் அதே இடத்தில் ஜனநாயகபோராளிகள் கட்சியால் மீள்கட்டுமானம் செய்யப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அதியுச்ச அரசியல் வடிவமாக தமிழர்களின் கௌரவமான அரசியல் விடுதலையினை பெற்றுக்கொள்வதற்காக அகிம்ஷை வழியில் உண்ணா நோன்பிருந்து தன்னையே ஆகுதியாக்கிய திலீபன் அவர்களது நினைவிடம் மீளவும் அதே வடிவத்தில் அதே இடத்தில் மீள்கட்டுமானம் மேற்கொள்வதற்கான பூர்வாங்க பணிகள் யாழ் மாநகரசபையினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாநகரசபையின் ஆட்சியதிகாரம் தமிழ்த் தேசியகூட்டமைப்பினரால் நிறுவப்பட்டிரு…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை செய்திகள் பாராளுமன்றத்துக்கு வந்தார் ரணில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க காலை 8.59 இற்கு பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய காலை 8.30 இற்கு பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 9.30 க்கு ஆரம்பமாகவுள்ள விவதாம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளது. மேலும், விவாதத்தினை தொடர்ந்து இரவு 9.30 க்கு வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/32194
-
- 22 replies
- 2.1k views
-