ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு நல்லதல்ல!! அம்பாறை மற்றும் கண்டியில் இடம்பெற்ற இன வன்முறைகளைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவது குறித்த கதையாடல்கள் எழுந்துள்ளன. வழக்கம் போலவே அதிகார வர்க்கம் இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றது. முகநூலைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று அமைச்சர் மகிந்த அமரவீர கடைசியாகத் தெரிவித்திருக்கிறார். கண்டி மாவட்டம் திகனவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து இலங்கை அரசு சமூக ஊடகங்களான வட்ஸ்அப், வைபர், பேஸ்புக் என்பவற்றை ஏற்கனவே முடக்கி வைத்துள்ளது. மூன்று நாள்களுக்கு மட்டுமே இந்த முடக…
-
- 0 replies
- 252 views
-
-
யாழில் மூன்று ஆழ்கடல் படகுகள் – அடுத்த மாதம் பணிக்கு!! யாழில் மூன்று ஆழ்கடல் படகுகள் – அடுத்த மாதம் பணிக்கு!! தலா 10 மில்லியனில் அமைக்கப்பட்டவை ஆழ் கடலில் ஒரு மாதம் வரையில் தங்கிநின்று மீன்பிடிக்கக்கூடிய 3 ஆழ்கடல் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக ஒரு தடவையில் சுமார் 20 இலட்சம் ரூபா வரையில் இலாபமீட்ட முடியும். அவை ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறைத் திணைக்கள உதவ…
-
- 1 reply
- 428 views
-
-
நடேஸ்வர கல்லூரி கிணற்றையும் , கட்டடத்தையும் காவல்துறையினர் ஆக்கிரமித்து உள்ளனர். – கஜதீபன் குற்றசாட்டு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் காவல்துறையினரிடம் முறையிட செல்வோம் இங்கே பொலிசாரே பிரச்சனை என்றால் யாரிடம் முறையிடுவது என தெரியாமல் உள்ளது என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இராணுவ ஆக்கிரமிப்பில் 26 வருடங்களாக காணப்பட்ட காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி இராணுவத்தினரால் 2016…
-
- 0 replies
- 233 views
-
-
1983ல் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும் தானே? அது தான் இன்று எங்களுக்கு நடக்கின்றது என பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கண்டி, அக்குறனையில் நிகழ்ந்துள்ள வன்முறைச் சம்பவங்களை அடுத்து அக்குறனை, 8ம் கட்டையிலுள்ள முஸ்லிம் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ”அக்குறனைப் பிரதான சந்தியில் உள்ள கடைத் தொகுதித் தொடர் நெருப்பூட்டபட்டதை ஆயுதம் தரத்தவர்கள் பாரத்துக்கொண்டிருந்தனர். அதனையடுத்து சில முஸ்லிம் இளைஞர்கள் கற்களை வீசத் தொடங்கியதுடன் அவ்வாயுதம் தரித்தவர்கள் நெருப்பூட்டியவர்களை நோக்கி ” அவர்கள் தாக்குகின்றார்கள், நீங்களும் ஆயுதங்களை எடுத்து வாருங்கள்” என துவேசமூட்டுகின்றனர். இது தான இந்த…
-
- 9 replies
- 1.2k views
-
-
முடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்!! முடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்!! எமது நாட்டின் உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று, முடிவுகள் வெளியாகி, ஆட்சி அமைப்பது தொடர்பாக கட்சிகள் தீவி ரமாக ஆலோசித்து வரும் இன்றைய நிலையில், வவுனியா நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை பெற்றுத் திகழ்வதும், சகலரும் அறி்ந்ததொன்றே. இந்த நிலையில் நகர சபையின் நிர்வாகப் பிரதேசத்தில் இயங்கி வந்த பழைய பஸ் நிலைய…
-
- 0 replies
- 486 views
-
-
ஜப்பானிலுள்ள இலங்கை பௌத்த விகாரைகளின் தலைமை தேரர்களை சந்தித்தார் ஜனாதிபதி ஜப்பானிற்கு அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானில் அமைந்துள்ள இலங்கை பௌத்த விகாரை தலைமை தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) டோக்கியோ நகரில் இடம்பெற்றது. பௌத்த மதத்தின் மேம்பாட்டிற்காக ஜப்பானிலிருந்து குறித்த தேரர்கள் ஆற்றிவரும் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதியை சந்திக்க கிடைத்தமைக்கு மகிழ்ச்சியையும் தெரிவித்தார். இளம் தலைமுறையினருக்கு எமது கலாசார விழுமியங்களை தெளிவுபடுத்தி அவர்களை சிறந்த விழுமியப் பண்புகளையுடைய தலைமுறையாக கட்டியெழுப்ப வேண்டியதன் தேவை குறித்து இதன்போது தெளிவுபடுத்தி…
-
- 2 replies
- 320 views
-
-
காணாமல் போனோர் அலுவலகம் துரித செயற்பாடுகளை முன்னெடுக்கும் : ஜெப்ரி பெல்ட்மன் நம்பிக்கை காணாமல் போனோர் அலுவலகத்திற்கு பொறுப்பான ஆணையாளர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, விரைவில் காணாமல்போனோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் என நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுடனான ஐக்கிய நாடுகள் சபையின் உறவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந…
-
- 0 replies
- 242 views
-
-
வடமாகாண அமைச்சின் மீது உறுப்பினர்கள் பாய்ச்சல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண கல்வி அமைச்சின் மீதான குற்றசாட்டுகள் உடன் இன்றைய வடமாகாண சபை அமர்வு நிறைவுக்கு வந்தது. வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது வடமாகாண கல்வி அமைச்சு வினைத்திறனாக செயற்படவில்லை , ஆசிரியர்கள் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய வில்லை , கல்வி திணைக்களங்கள் , வலயங்களில் அதிகாரிகள் அசமந்தமாக செயற்படுகின்றார்கள் என பல்வேறு குற்ற சாட்டுக்களை மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரசாரமாக சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் முன் வைத்து கருத்து தெரிவித…
-
- 2 replies
- 469 views
-
-
அரண்மனை சந்திப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பான் பேரரசர் மற்றும் மகாராணியை இன்று (13) டோக்கியோ நகரில் உள்ள அரண்மனையில் வைத்து சந்தித்தார். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/அரண்மனை-சந்திப்பு/46-212605 ஜனாதிபதி மைத்திரிபால ஜப்பானிய சக்கரவர்த்தியை சந்தித்தார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானிய சக்கரவர்த்தி அகிதோவை சந்தித்தார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ …
-
- 0 replies
- 198 views
-
-
தூக்கில் தொங்கிய நிலையில் கனேடிய பிரஜை சடலமாக மீட்பு!!! வவுனியா - கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கனடா குடியுரிமை கொண்ட 83வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழில் உள்ள கோவில் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார். இதேவேளை வவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். நேற்றைய தினம் குறித்த நபரின் துணைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மகன் மற்றும் மருமகள் யாழில் உறவினரது மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ் சென்றிருந்த வேளையில் தனிமைய…
-
- 2 replies
- 512 views
-
-
ஜெனீவாவில் சிறிலங்காவை கேள்விக்குட்படுத்திய அமெரிக்காவின் தூதர்! போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஸ்ரீபன் ஜெ ரப் கலந்து கொண்ட சிறிலங்கா தொடர்பிலான பக்க நிகழ்வொன்று ஐ.நா மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலங்கையில் இடம்பெற்ற பாரிய படுகொலைகளுக்கான பொறுப்புக்கூறலில் அனைத்துலக சமூகம் எவ்வாறு தோற்றுப் போனது எனும் தொனிபொருளில் இந்த பக்க நிகழ்வு இடம்பெற்றது. 25ம் அறையில் இடம்பெற்றிருந்த இப்பக நிகழ்வினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிறிலங்காவின் நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கம்போடிய கலப்பு நீ…
-
- 0 replies
- 325 views
-
-
வடமாகாண சபை அமர்வு நாளில் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தினால் போராடுவேன் – சிவாஜி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சபை அமர்வு நாட்களில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடமாகாண சபை அமர்வு இன்று நடைபெறும் என தெரிந்தும் கரவெட்டி பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுகின்றது. மாகாண…
-
- 0 replies
- 176 views
-
-
வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் இலங்கை குறித்த முதலாவது விவாதம் சர்வதேச நாடுகள் கேள்வி எழுப்பும்; இலங்கை தூதுவர் பதிலளிப்பார் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவா வில் நடைபெற்றுவருகின்ற நிலையில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவரம் குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் நடைபெறவுள்ளது. ஜெனிவாவில் இம்முறை இரண்டு விவாதங்கள் இலங்கை தொடர்பில் நடைபெறவுள்ள நிலையில் முதலாவது விவாதமே எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்புக்கு உட்பட்ட இலங்கை …
-
- 2 replies
- 442 views
-
-
கண்டி கலவரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம் கண்டி கலவரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டித்து யாழில் கண்டன போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. யாழ்.பிரதான பேருந்து நிலையத்துக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் சமூக மேம்பாட்டு இணையம், பெண் விடுதலைச் சிந்தனை அ…
-
- 1 reply
- 360 views
-
-
தாயகத்தில் தமிழர் பெரும்பான்மையை இழப்பதற்கான காரணங்களும், விளைவுகளும். தமிழர்கள் மரபு வழியாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் சனத்தொகை திட்டமிட்டு குறைக்கப்படுகிறது. 1901-ம் ஆண்டு இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பில் மொத்த மக்கள் தொகையில் 26.69 சதவீதமாக இருந்த தமிழர், 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில், 11.15 சதவீதமாக குறைந்துள்ளனர். அத்துடன் தமிழரின் இனப்பெருக்க வீதம் 1.5 இருக்கும் அதேவேளை, முஸ்லிம்களின் இனப்பெருக்க வீதம் 12 ஆகவும், சிங்களவர்களின் இனப்பெருக்க வீதம் 5.7%ஆகவும் இருக்கிறது. இவ்வாறு தமிழர் எண்ணிக்கை தமிழர் தாயகப் பகுதிகளில் குறைவடைந்து செல்வதற்கான காரணங்கள் என்ன ?அவற்றின் விளைவுகள் என்ன ? என்பவை பற்றி பார்க்கலாம். திட்டமிட்ட …
-
- 0 replies
- 622 views
-
-
மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை மீது அதிருப்தி (இராஜதுரை ஹஷான்) தமிழர்கள் மீது 1983ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதல்கள் தொடர்பில் அப்போதைய அரசாங்கம் மௌனம் காத்தது. இதன் தொடர்ச்சியை நல்லாட்சி அரசாங்கமும் பின்பற்றி வருகின்றது. 2015 தொடக்கம் இடம்பெற்றுள்ள வன்முறை சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பிணர் பந்துல குணவர்தன குற்றம்சுமத்தியுள்ளார் கண்டியில் கடந்த தினங்களில் இடம் பெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக நாட்டின் அந்நிய செலாவணி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய இலங்கைக…
-
- 0 replies
- 285 views
-
-
முஸ்லிம் மக்கள் அரசின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு (எம்.ஆர்.எம்.வஸீம்) முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர். அதனால்தான் கண்டி பிரச்சினையை கட்டுப்படுத்த மஹிந்த ராஜபக் ஷ்வை தலை யிடுமாறு முஸ்லிம் மதத் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர் என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நா…
-
- 0 replies
- 283 views
-
-
இலங்கை அரசிற்கு காத்திருக்கும் நெருக்கடி நல்லிணக்க நகர்வுகளில் சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை செயற்பாடுகள் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். இம்முறை ஜெனிவாவில் இதற்கான பிரதிபலிப்புகள் வெளிப்படும் என கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார். அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளே பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை விவகாரம் அடுத்த வாரம் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில் நாட்டில் சிறுபான்மை மக்களுக…
-
- 0 replies
- 155 views
-
-
மெதுவான முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சர் கவலை வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார். வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான போல் கொட்பிறி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தாம் மீண்டும் சந்தித்த போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார் என்று கீச்சகப் பதிவு ஒன்றில், போல் கொட்பிறி குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, வடக்கிற்கான தனது பயணத்தின் போது மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரையும் சந்தித்துப் …
-
- 0 replies
- 475 views
-
-
தடையை நீக்குமாறு சிறிலங்காவுக்கு அழுத்தம் அதிகரிப்பு சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் மீதான கட்டுப்பாட்டை நீக்குமாறு அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகமும், சிவில் அமைப்புகளும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. கடந்தவாரம் கண்டியில் வெடித்தன இனவன்முறைகளை அடுத்து. சமூக ஊடகங்களை அரசாங்கம் தடை செய்திருந்தது. வன்முறைகள் தற்போது கட்டுக்குள் வந்துள்ள போதிலும், சமூக ஊடகங்கள் மீதான தடையை அரசாங்கம் நீக்குவதற்கு இழுத்தடித்து வருகிறது. இந்தநிலையில், அனைத்துலக சமூகமும், சிவில் அமைப்புகளும் சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தியுள்ள சிறிலங்கா அரசாங்கத்தின்…
-
- 0 replies
- 147 views
-
-
அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படாது அவசரகாலச்சட்டம் வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகி விடும் என்றும் அதனை நீடிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும், சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ”கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, 10 நாளுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் கடந்த 6ஆம் நாள் அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகிறது. நாடு முற்றிலும் வழமைக்குத் திரும்பியுள்ளது எனவே, அவசரகாலச்சட்டத்தை நீடிக்கப்படாது. இனிமேல் அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன். காவல்துறை மா அதிபர் மற்றும மூத்த காவல்துறை அதிகாரிகளு…
-
- 0 replies
- 140 views
-
-
ஐதேகவினர் காலை வாரியதால் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இழுபறி சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி அறிவித்திருந்தது. கண்டியில் வெடித்த வன்முறைகளை அடுத்து, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்பதை கூட்டு எதிரணி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால்,…
-
- 0 replies
- 141 views
-
-
மக்களைப் பாதுகாக்க பலசேனாக்களோ, பலகாயக்களோ தேவையில்லை – மல்வத்த மகாநாயக்கர் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஆயுதப்படைகளும், காவல்துறையும் இருக்கும் போது, எந்தவொரு பலசேனாக்களோ பலகாயக்களோ தேவையில்லை என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். ‘தீவிரவாத அமைப்புகள் தீவிரவாதத்தைப் பரப்புகின்றனர். பகிரங்கமாக பணியகங்களை திறந்து வைத்து நாட்டின் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இவை குறித்து அரசாங்கம் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையர்கள் பொதுவாகவே குறுகிய நினைவாற்றலைக் கொண்டவர்கள். அண்மைய வன்முறைகள் கூட அவர்களால் விரைவாக மறக்கப்பட்டு விடக் கூடும். எனினும், 30 ஆ…
-
- 0 replies
- 151 views
-
-
சமூக ஊடகப் பயன்பாட்டு தடைக்கு நட்டஈடு கோரும் சட்டத்தரணிகள் ஒன்றியம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமூக ஊடக பயன்பாட்டு தடைக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணிகள் அமைப்பின் தேசிய ஒன்றியம் கோரியுள்ளது. தொடர்பாடல் வழிமுறைகள் முடக்கப்பட்டதனால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி சட்டத்தரணிகள் ஒன்றியம் இன்று மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. அடிப்படை உரிமை மீறப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக சமூக ஊடக வலையமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 3ம் சரத்தின் 14(1)(அ) பிரி…
-
- 0 replies
- 158 views
-
-
என்னதான் நடக்கும்? உள்ளூராட்சித் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் புதிய அரசமைப்பு முயற்சிகள் கிடப்பில் போடப்படும் அபாயத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மனின் கொழும்புப் பயணம் உணர்த்திச் சென்றிருக்கின்றது. பெல்ட்மன் தனது பதவிக் காலத்தில் இலங்கைக்கு வருகை தருவது இது 5ஆவது தடவை. நான்கு தடவைகள் அவர் தனியே தனது உத்தியோகபூர்வத் தேவைக்காக இலங்கை வந்திருக்கிறார். ஒரு தடவை ஐ.நா. செயலாளர் நாயகமாக இருந்தவரான பான் கீ மூன் இலங்கை வந்தபோது அவருடன் கூட வந்திருக்கிறார். இலங்கையின் அரசியல் குறித்து அவருக்கு ஆழமான அறிவு இருக்கிறது. அரசியல…
-
- 0 replies
- 287 views
-